வியாழன், 1 டிசம்பர், 2011

உன்னைப் போல் ஒருவன் - PiT - டிசம்பர் 2011 போட்டி

இரட்டை. ஆனால் ஒரே மாதிரியான இரண்டு.

ட்வின்ஸ். ஆமாம், ஒன்றைப் போல ஒன்று.

புரிந்திருக்குமே இப்போது தலைப்பு? ‘உன்னைப் போல் ஒருவன்’:)!

மூன்று வருடங்கள் முன்னர் ‘ஜோடி’ என ஒரு தலைப்பு தரப்பட்டது ஒரு சிலரின் நினைவுக்கு வரலாம். இரண்டு வேறு வேறு விஷயங்கள் ஜோடி போட்டு ஜாலியாகக் கை கோர்த்துக் கொள்ளலாம். இந்தத் தலைப்புக்கு அது கூடாது. அச்சிலே வார்த்த மாதிரி இல்லையானாலும் ‘அட ஆமா அவனைப் போலவே இவன்’ என சொல்லும்படியாக இருக்க வேண்டும்.

படத்தில் இரட்டையரே பிரதானமாகத் தெரிய வேண்டும்.

ஃபோட்டோஷாப் மிரரிங் உதவியோடு சப்ஜெக்ட் டபுளேக்ட் (டபுள் ரோல்) செய்யாமல் இயல்பான இரட்டையராக இருக்க வேண்டியதும் அவசியம்.

சில மாதிரிப் படங்களைப் பார்க்கலாமா?

# 1) “நான் அவனில்லை”


# 2) 24 + 24 கேரட்


# 3) பூக்குட்டிகள்


# 4) பல்லவ ராஜாவின் பரிவார யானைகள்


# 5) “ஆறு வித்தியாசமா.. சான்ஸே இல்லை..”


# 6) கல் இருக்கு, ஆள் இல்லை..


# 7) ஒரு கொடியில்..


# 8) ஒன்றைப் போல் ஒன்று


# 9)‘என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்...?’


# 10) யாரைப் போல யாரு?


இத்துடன் கீழ்வரும் ஜீவ்ஸ், கருவாயன், சர்வேசன் ஆகியோரது அழகான படங்களையும் மாதிரிக்கு முன்வைத்து, நடுவராக PiT தளத்தில் வெளியிட்ட அறிவிப்புப் பதிவையே இங்கும் பகிர்ந்துள்ளேன்:

கோதாவில் குதிக்கப் போகும் இரட்டையரை இங்கே வரவேற்கக் காத்திருக்கிறது PiT.

படங்கள் வந்து சேரவேண்டியக் கடைசித் தேதி 15 டிசம்பர் 2011.


29 நவம்பர் 2011 ஃப்ளிக்கர் தளத்தில் பகிர்ந்திருந்த தங்க மீன்களை தன் Explore பக்கத்தில் ஃப்ளிக்கர் தேர்ந்தெடுத்து வெளியிட்டிருந்ததை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி:
*****

32 கருத்துகள்:

 1. படங்கள் கொள்ளை அழகு! ஆயிரம் வார்த்தைகள் சொல்லுவதை விட அதிகம் சொல்கின்றன!!

  பதிலளிநீக்கு
 2. கண்களில் ஒத்திக்கொள்ளலாம் போல அழகுப் படங்கள்..

  பதிலளிநீக்கு
 3. படங்கள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. முயற்சி பண்ணிப் பார்க்கலாம் என்று யோசனை...!!

  பதிலளிநீக்கு
 5. இரட்டையர்களைப் பார்ப்பதே அழகுதான். நிறைய எதிர்பார்ப்பை உண்டு பண்ணி விட்டீர்கள்.இங்கே பகிர்ந்துள்ள படங்கள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. முத்தக்கா...ஏதாச்சும் ஒண்ணு அழகாயில்லன்னு சொலணும்ன்னுதான் பாக்கிறேன் முடியல.எல்லாமே கொள்ளை அழகு !

  பதிலளிநீக்கு
 7. படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு!!

  பதிலளிநீக்கு
 8. சூப்பர் எதுக்கு அனுப்பணும்.. எங்க அனுப்பணும்.

  பதிலளிநீக்கு
 9. ஓசூர் ராஜன் said...
  //படங்கள் கொள்ளை அழகு! ஆயிரம் வார்த்தைகள் சொல்லுவதை விட அதிகம் சொல்கின்றன!!//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 10. asiya omar said...
  //கண்களில் ஒத்திக்கொள்ளலாம் போல அழகுப் படங்கள்..//

  நன்றி ஆசியா.

  பதிலளிநீக்கு
 11. Lakshmi said...
  //படங்கள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.//

  நன்றி லக்ஷ்மிம்மா.

  பதிலளிநீக்கு
 12. ஸ்ரீராம். said...
  //முயற்சி பண்ணிப் பார்க்கலாம் என்று யோசனை...!!//

  யோசிக்காதீர்கள்:)! கலந்து கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
 13. Kanchana Radhakrishnan said...
  //படங்கள் அழகு.//

  நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
 14. அமைதி அப்பா said...
  //இரட்டையர்களைப் பார்ப்பதே அழகுதான். நிறைய எதிர்பார்ப்பை உண்டு பண்ணி விட்டீர்கள்.இங்கே பகிர்ந்துள்ள படங்கள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்.//

  நன்றி அமைதி அப்பா. பிட் பதிவில் சொன்னது போல் கலந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்:)!

  பதிலளிநீக்கு
 15. ஹேமா said...
  //ஏதாச்சும் ஒண்ணு அழகாயில்லன்னு சொலணும்ன்னுதான் பாக்கிறேன் முடியல.எல்லாமே கொள்ளை அழகு !//

  நன்றி ஹேமா:)!

  பதிலளிநீக்கு
 16. S.Menaga said...
  //படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு!!//

  நன்றி மேனகா.

  பதிலளிநீக்கு
 17. இராஜராஜேஸ்வரி said...
  //அழகான பகிர்வு..//

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 18. அமைதிச்சாரல் said...
  //எல்லாமே கொள்ளையழகுப் படங்கள்..//

  நன்றி சாந்தி:)!

  பதிலளிநீக்கு
 19. அட அருமையான படங்கள்.பகிர்வுக்கும் தகவலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 20. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  //சூப்பர் எதுக்கு அனுப்பணும்.. எங்க அனுப்பணும்.//

  வழக்கமான விதிமுறைகள்தான். பிட் பதிவில் விவரமாக உள்ளது. உங்கள் படத்தையும் எதிர்பார்க்கலாம்தானே? நன்றி தேனம்மை:)!

  பதிலளிநீக்கு
 21. ஸாதிகா said...
  //அட அருமையான படங்கள்.பகிர்வுக்கும் தகவலுக்கு நன்றி.//

  நன்றி ஸாதிகா:)!

  பதிலளிநீக்கு
 22. அழகான படங்கள் ...பொருத்தமான தலைப்புகள்.....வாழ்த்துகள் ராமலக்ஷ்மி..அந்தப் பூக்கள் மிக அழகு...

  பதிலளிநீக்கு
 23. "ஆறு வித்தியாசமா, சான்ஸே இல்லை"
  அருமையான caption.
  உங்கள் படங்களைப் பார்த்ததும் நாமும் இப்படி எடுக்க முடியுமா? என்று நினைத்தேன்.
  சான்ஸே இல்லை.

  பதிலளிநீக்கு
 24. சகாதேவன் said...
  /"ஆறு வித்தியாசமா, சான்ஸே இல்லை"
  அருமையான caption. /

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. சான்ஸே இல்லையென நீங்கள் சொல்லலாமா:)?

  பதிலளிநீக்கு
 25. வியத்தகு அழகிய படங்கள்....

  பேட்டிக்கு வரும் படங்களையும் பார்க்களாம் எப்படியென்று.

  பதிலளிநீக்கு
 26. சி.கருணாகரசு said...
  //வியத்தகு அழகிய படங்கள்....

  போட்டிக்கு வரும் படங்களையும் பார்க்கலாம் எப்படியென்று.//

  போட்டிக்கு 70-க்கும் மேலான படங்கள் வந்து சேர்ந்துள்ளன. அவசியம் கண்டு ரசியுங்கள்:)! நன்றி கருணாகரசு.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin