திங்கள், 26 டிசம்பர், 2011

சீனக் கோவில், ஒரு சித்திரக் கூடம் - சிங்கப்பூர் பயணம் (பாகம் 8)லகின் எந்தப் பாகமானாலும் இறையும் கலையும் இணைந்தே இருப்பதொரு அற்புதம். சிங்கப்பூரின் முக்கியமான, மிகப் பழமை வாய்ந்த வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றான தியான் ஹாக் கெங் (‘சொர்கத்தின் மகிழ்ச்சி’ என்பது பொருளாம்) சீனக்கோவிலிலும் அதைக் காண முடிந்தது. இந்தக் கோவில் தெற்குச் சீனப் பாரம்பரியக் கட்டிடக்கலையின் வழி வந்தது.

சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் இக்கோவில் கடற்கரையில் இருந்ததென்றால் நம்புவது கடினமே. இப்போது சிங்கப்பூரின் வியாபார மையத்தில் வான் தொடும் கட்டிடங்கள் சூழ பொலிவுடன் திகழ்கிறது.

# 2.
1821-ல் (ஜாஸ் ஹவுஸ்) மரத்தாலான வழிபாட்டுக் கூடமாக எழும்பியது. 1830-ல் சீனர்களின் நிதியுதவியுடன் தரமான மரங்கள், கிரானைட் கற்களுடன் கைதேர்ந்த வல்லுநர்களும் சீனாவிலிருந்தே வரவழைக்கப்பட்டனர். விளைவாக உருவானது தெற்குச் சீனப் பாரம்பரியக் கட்டிடக் கலையை உலகுக்கு காட்டும் விதமாக அமைந்த அழகுக் கோவில்.

# 3. வாயிற்கூரை அகலத் திரையில்..
[நுழையும் போதும் திரும்பும் போதும் இரண்டு பக்கமும் வாகனங்கள் நின்றபடியே இருந்ததால் முழுக்கோவிலைத் தனியாக எடுக்க இயலவில்லை.]

# 4. முற்றத்தில் பத்தி மாடம்
சொந்த நாட்டை விட்டு இங்கு குடியேறிவிட்ட சீனர்கள் நன்றியுடன் இங்கு பத்திகளை ஏற்றி வழிபடுகிறார்கள்.

# 5. முற்றம் தாண்டி உள்ளிருக்கும் பிரதானக் கூடத்தின் கூரை இரண்டடுக்குகளில்..
ட்ராகன், ஃபொனிக்ஸ் பறவை கூரைகளில் இடம் பெற, மரச்சட்டம், டைல்கள், நுண்ணிய வேலைப்பாடுகள், சிற்பங்கள், நிமிர்ந்த தூண்கள் என எங்கும் எதிலுமே ஆணிகள் பயன்படுத்தப் படவில்லை என்பது ஆச்சரியமான விஷயம்.

கூடத்திலிருந்த மூன்று சன்னதிகளும் முதல் படத்தில்.

நடுநாயகமாக..

# 6. மீனவர்களின் காவல் தெய்வம் மாஜூ மாதா


# 7. இடப்பக்கம் கருணை பொங்கும் முகத்துடன் இன்னொரு சீனத் தெய்வம்


[பயணக்கட்டுரை எழுதும் எண்ணமும் அப்போது இருக்கவில்லை. இருந்திருப்பின் சரியான பெயர்களைக் குறித்துக் கொண்டு வந்திருக்கலாம்.]

# 8. வலப்பக்கம்
கடுகடுவென இருக்கிறார். நமது ஊர் காவல் தெய்வங்களைப் போல் தீய சக்திகளுக்கு சிம்ம சொப்பனமோ?

# 9. உத்திரத்தில் மெகா மத்தளம்


இந்தக் கோவிலுக்குச் சிறுவர்களை அழைத்து வந்து வணங்க வைத்தால் அவர்களுக்குக் கல்வி அறிவு சிறக்குமென்றொரு நம்பிக்கை இருக்கிறதாம். நாங்கள் வெளியேறும் சமயத்தில் ஆறேழு வயதான சிறுவனுக்கு அவன் தந்தை பத்திகள் ஏற்ற உதவிக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.

# 10. ‘இந்தப் பரிச்சையில நல்ல மார்க் வாங்கணும்..’

துதிப்பதோடு படிக்கவும் செய்யணும்!


முற்றத்தின் இடப்பக்கமிருக்கு ஒரு வாயில் வழியாக கோவிலின் இன்னொரு பகுதியைச் சென்றடையலாம். இங்கு சீனத் தெய்வம், போதித்துவக் கொள்கையினைப் பரப்பிய அரசர் மற்றும் புத்தரின் சன்னதிகள் உள்ளன.

# 11. சீனத் தெய்வம் பரிவாரங்களுடன்


# 12.போதித்வர்
இவரைப் பற்றி அங்கிருந்த குறிப்புகளை வாசிக்கையில் நம்ம ஊர் அசோக மன்னரைப் போல் எனத் தோன்றியது. இங்கும் ஒரு பெரிய பத்தி மாடம் உள்ளது.

இவர் முன்னும் பத்திகள் ஏற்ற ஒரு மாடம் உள்ளது.

# 13. அழகு மாடம்


# 14. புத்தம் சரணம்


சிட்டி டூரின் போது சென்றிருந்த ஒரு சித்திரக் கூடம் (Art Gallery of Jems and Jade Factory) இது.

# 15. சித்திரக் கூடம்
ஒரேயொரு கூடத்தில் மட்டுமே படமெடுக்க அனுமதி இருந்தது. இன்னும் சில அறைகள் இருந்தன. சிறியபடங்களின் விலை சில ஆயிரங்களில் எனில் பெரிய அளவிலானவை சுமார் ஐம்பது ஆயிரத்திலிந்து ஒன்றரை இலட்சம் வரையில். மாதிரிக்கு இரண்டு இங்கே பார்வைக்கு:

# 16. இரு பறவைகள்# 17. அழகு மயில்

உள்ளே நுழையும் போதே கீழ்தளத்தில் வரவேற்ற இக்கற்களைக் கொண்டே இத்தனை நுண்ணிய வேலைப்பாடுடைய கைவினைச் சித்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

# 18.‘எங்கள வச்சுதான் எல்லாமே..’சீனக் கட்டிடக் கலை பரவலாக அவர்கள் வசிக்குமிடங்களிலும் விரவி இருப்பதைக் காண முடிந்தது.

# 19. லிட்டில் இண்டியா பகுதியில் பல வீடுகளின் மாடிசன்னல்கள் வரிசையாக இந்த அமைப்பில் இருந்தன:
‘ஆதவன் எழுந்து விட்டான்’
அறிவிக்கிறது திறந்த கதவு
மூடிய கதவுகளுக்கு.
***

# 20. திறந்திருந்த வீடு. வெளிச்சம் காற்று வேண்டி அமைந்த சன்னல்கள். நடுவில் ஃப்ரென்ச் வின்டோ போன்ற அமைப்புடன்:


# 21. இரவில் ஒளியில் குளிக்கும் கதவுகள்
***


(அடுத்த பாகத்துடன் நிறைவுறும்)தொடர்புடைய முந்தைய பதிவுகள்:


47 கருத்துகள்:

 1. உலகின் எந்தப் பாகமானாலும் இறையும் கலையும் இணைந்தே இருப்பதொரு அற்புதம்./

  (‘சொர்கத்தின் மகிழ்ச்சி’ நிறைவான கண்களையும் கருத்தையும் கவரும் அருமையான பகிர்வு.. பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 2. இரு பறவைகள்[Image]

  # . அழகு மயில்

  மிக அழகாய் மனம் கவர்ந்தது.. அனைத்துப்படங்களும் அருமை..

  பதிலளிநீக்கு
 3. படங்கள் வழக்கம் போல பிரமிப்பை உண்டு செய்கிறது! விளக்கங்களும் நன்று.

  அடுத்தப் பாகத்துடன் முடிவடையும் என்பதுதான் வருத்தமளிக்கிறது!

  பதிலளிநீக்கு
 4. ட்ராகன், ஃபொனிக்ஸ் பறவை கூரைகளில் இடம் பெற, மரச்சட்டம், டைல்கள், நுண்ணிய வேலைப்பாடுகள், சிற்பங்கள், நிமிர்ந்த தூண்கள் என எங்கும் எதிலுமே ஆணிகள் பயன்படுத்தப் படவில்லை என்பது ஆச்சரியமான விஷயம்.

  பதிலளிநீக்கு
 5. எல்லாமே அழகு. படங்களை தொகுக்கும் விதமே பயணத்தை எவவளவு தூரம் ரசித்திருப்பீர்கள் என்பதை உணர வைக்கிறது.

  பதிலளிநீக்கு
 6. இந்தக் கோவிலுக்குச் சிறுவர்களை அழைத்து வந்து வணங்க வைத்தால் அவர்களுக்குக் கல்வி அறிவு சிறக்குமென்றொரு நம்பிக்கை இருக்கிறதாம். நாங்கள் வெளியேறும் சமயத்தில் ஆறேழு வயதான சிறுவனுக்கு அவன் தந்தை பத்திகள் ஏற்ற உதவிக் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.//

  இறை நம்பிக்கைகள் ஊட்டி வளர்க்கப்படும் குழந்தை நன்கு படிப்பான்.

  கலை வேலைப்பாடுகள் உங்கள் போட்டோவில் துல்லியமாக தெரிகிறது ராமலக்ஷ்மி. எல்லாம் அழகு.

  பதிலளிநீக்கு
 7. சீனக் கடவுள் என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கும் படத்துக்கு அடுத்து தாடியுடன் இருப்பது கன்பியூசியஸ் என்று தோன்றுகிறது. படங்கள் அருமை. அதிலும் குறிப்பாக கடைசிப் படம்... பிரமாதம். உங்களுக்கு என் மனமார்ந்த அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. அருமையான பகிர்வு!..பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோ ..

  பதிலளிநீக்கு
 9. அருமையான பதிவு.
  அற்புதமான படங்கள்.
  படங்கள் பேசுகின்றன.
  வாழ்த்துகள் அம்மா.

  பதிலளிநீக்கு
 10. எத்தனை அற்புதமான கலைவண்ணம்.ரசனையின் உச்சம்.அழகு உங்களுக்காகவே முத்தக்கா !

  பதிலளிநீக்கு
 11. படங்களுடன் அழகிய விவரணை. மயில் படம் மிக ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 12. நினைத்தாலே இனிக்கும் படத்தில் சில இடங்களைக் காட்டினார்கள். உங்கள் பதிவில் ஏராள படங்கள், விவரங்கள்.

  "துதிப்பதொடு படிக்கவும் செய்யணும்"
  ஆமாம்...உண்மைதான். நம்மூரு பசங்க பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது போல!

  ஓவியங்கள் அழகு.

  லிட்டில் இந்தியாவில் உள்ள வீடு படங்கள் ஒரே இடம் இரவிலும் பகலிலும் எடுக்கப் பட்டவையா!

  பதிலளிநீக்கு
 13. சசிகுமார் said...
  //போட்டோக்கள் பிரமாதம்...//

  நன்றி சசிகுமார்.

  பதிலளிநீக்கு
 14. இராஜராஜேஸ்வரி said...

  //(‘சொர்கத்தின் மகிழ்ச்சி’ நிறைவான கண்களையும் கருத்தையும் கவரும் அருமையான பகிர்வு.. பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..

  இரு பறவைகள்

  # . அழகு மயில்

  மிக அழகாய் மனம் கவர்ந்தது.. அனைத்துப்படங்களும் அருமை..//

  மகிழ்ச்சி. விரிவான கருத்துகளுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. அமைதி அப்பா said...
  //படங்கள் வழக்கம் போல பிரமிப்பை உண்டு செய்கிறது! விளக்கங்களும் நன்று.

  அடுத்தப் பாகத்துடன் முடிவடையும் என்பதுதான் வருத்தமளிக்கிறது!//

  நன்றி, பாகங்கள் அதிகமாகி விட்டதே என்கிற எண்ணம் எனக்கு:)!

  பதிலளிநீக்கு
 16. தமிழ் உதயம் said...
  //எல்லாமே அழகு. படங்களை தொகுக்கும் விதமே பயணத்தை எவவளவு தூரம் ரசித்திருப்பீர்கள் என்பதை உணர வைக்கிறது.//

  மிக்க நன்றி ரமேஷ்.

  பதிலளிநீக்கு
 17. சமுத்ரா said...
  //படங்கள் அருமை//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சமுத்ரா.

  பதிலளிநீக்கு
 18. கோமதி அரசு said...

  //இறை நம்பிக்கைகள் ஊட்டி வளர்க்கப்படும் குழந்தை நன்கு படிப்பான்.

  கலை வேலைப்பாடுகள் உங்கள் போட்டோவில் துல்லியமாக தெரிகிறது ராமலக்ஷ்மி. எல்லாம் அழகு.//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமதிம்மா.

  பதிலளிநீக்கு
 19. சீனக்கட்டிடக் கலையே தனி அழகுதான்,இந்தக் கோவிலும் அதன் கலை நுணுக்கங்களையும் அழகாக படமாக்கி இருக்கீங்க ராமலஷ்மி.உத்திரத்தில் மகா மத்தளம் அழகு.அப்புறம் அந்த போதித்வர் வேறா?நம்ம ஊர் போதிதர்மர் பற்றிய குறிப்புக்கள் உங்கள் கண்ணில் பட்டதா?பகிர்வுக்கு மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 20. கணேஷ் said...
  //சீனக் கடவுள் என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கும் படத்துக்கு அடுத்து தாடியுடன் இருப்பது கன்பியூசியஸ் என்று தோன்றுகிறது.//

  நானும் அப்படியிருக்குமோ எனும் சந்தேகத்தில் இணையத்தில் உறுதி செய்யத் தேடினேன். கன்ஃப்யூஷியஸ் சாந்தமாக உள்ளார். இதே கோவிலில் கன்ஃப்யூஷியஸ் வெண் சிலையாகக் காட்டியிருக்கிறார்கள் சிலர். நான் கவனிக்கத் தவறியிருக்கலாம்.

  //படங்கள் அருமை. அதிலும் குறிப்பாக கடைசிப் படம்... பிரமாதம். உங்களுக்கு என் மனமார்ந்த அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

  நன்றி, தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 21. Kanchana Radhakrishnan said...
  //அனைத்துப்படங்களும் அருமை.//

  மிக்க நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
 22. அம்பாளடியாள் said...
  //அருமையான பகிர்வு!..பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோ.//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 23. Rathnavel said...
  //அருமையான பதிவு.
  அற்புதமான படங்கள்.
  படங்கள் பேசுகின்றன.
  வாழ்த்துகள் அம்மா.//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 24. Shan said...
  //Great shots and information. Stirred our Singapore memories :)//

  மகிழ்ச்சியும் நன்றியும் சதங்கா:)!

  பதிலளிநீக்கு
 25. ஹேமா said...
  //எத்தனை அற்புதமான கலைவண்ணம்.ரசனையின் உச்சம்.அழகு உங்களுக்காகவே முத்தக்கா !//

  நன்றி ஹேமா:)!

  பதிலளிநீக்கு
 26. மோகன் குமார் said...
  //படங்களுடன் அழகிய விவரணை. மயில் படம் மிக ரசித்தேன்//

  ஆம் நுண்ணிய வேலைப்பாடு. நன்றி மோகன்குமார்.

  பதிலளிநீக்கு
 27. ஸ்ரீராம். said...
  //நினைத்தாலே இனிக்கும் படத்தில் சில இடங்களைக் காட்டினார்கள். உங்கள் பதிவில் ஏராள படங்கள், விவரங்கள்.

  "துதிப்பதொடு படிக்கவும் செய்யணும்"
  ஆமாம்...உண்மைதான். நம்மூரு பசங்க பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது போல!

  ஓவியங்கள் அழகு.

  லிட்டில் இந்தியாவில் உள்ள வீடு படங்கள் ஒரே இடம் இரவிலும் பகலிலும் எடுக்கப் பட்டவையா!//

  நன்றி ஸ்ரீராம். ஒரே தெரு. ஆனால் ஒரே இடம் அல்ல. காலையில் எடுத்தவை அடுத்தடுத்த வீடுகள். இரவு எடுத்ததும் அதே வரிசையில் சில வீடுகள் தள்ளி.

  பதிலளிநீக்கு
 28. asiya omar said...
  //அப்புறம் அந்த போதித்வர் வேறா?நம்ம ஊர் போதிதர்மர் பற்றிய குறிப்புக்கள் உங்கள் கண்ணில் பட்டதா?பகிர்வுக்கு மகிழ்ச்சி.//

  குறிப்பிலிருந்த விவரங்கள் ஒத்துப் போயிருந்தன.

  //சீனக்கட்டிடக் கலையே தனி அழகுதான்,இந்தக் கோவிலும் அதன் கலை நுணுக்கங்களையும் அழகாக படமாக்கி இருக்கீங்க ராமலஷ்மி.உத்திரத்தில் மகா மத்தளம் அழகு.//

  மிக்க நன்றி ஆசியா.

  பதிலளிநீக்கு
 29. திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 30. அற்புதமான படங்கள் அக்கா. பகிர்வுக்கு ரொம்ப நன்றி :)

  பதிலளிநீக்கு
 31. விவரங்களும் படங்களும் ஒண்ணையொண்ணு மிஞ்சுது.. அத்தனையும் அசத்தல். அதுவும் அந்த ஒளிரும் கதவுகள் கண்ணுக்குள்ளயே நிக்குது :-)

  பதிலளிநீக்கு
 32. படங்கள் எல்லா ரொம்ப சூப்பராக இருக்கு

  பதிலளிநீக்கு
 33. சுசி said...
  //அற்புதமான படங்கள் அக்கா. பகிர்வுக்கு ரொம்ப நன்றி :)//

  மகிழ்ச்சி சுசி:)!

  பதிலளிநீக்கு
 34. அமைதிச்சாரல் said...
  //விவரங்களும் படங்களும் ஒண்ணையொண்ணு மிஞ்சுது.. அத்தனையும் அசத்தல். அதுவும் அந்த ஒளிரும் கதவுகள் கண்ணுக்குள்ளயே நிக்குது :-)//

  நன்றி சாந்தி:)!

  பதிலளிநீக்கு
 35. Jaleela Kamal said...
  //படங்கள் எல்லா ரொம்ப சூப்பராக இருக்கு//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜலீலா.

  பதிலளிநீக்கு
 36. அருமையாக உள்ளது படங்களும் செய்திகளும்
  உங்களுக்கு கோடி புண்ணியம்
  செல்வில்லாமலே எங்களை உலகில் உள்ள பல இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றீர்கள்

  பதிலளிநீக்கு
 37. சா.கி.நடராஜன். said...
  //அருமையாக உள்ளது படங்களும் செய்திகளும்..//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 38. அற்புதமான படங்களும் விளக்கங்களும் அருமையாக இருக்கிறது...!!!

  பதிலளிநீக்கு
 39. excellent! நேர்ல இன்னும் கேட்டுக்கறேன்..

  பதிலளிநீக்கு
 40. MANO நாஞ்சில் மனோ said...
  //அற்புதமான படங்களும் விளக்கங்களும் அருமையாக இருக்கிறது...!!!//

  மிக்க நன்றி மனோ.

  பதிலளிநீக்கு
 41. ஷைலஜா said...
  //excellent! நேர்ல இன்னும் கேட்டுக்கறேன்..//

  நல்லது ஷைலஜா:)! நன்றி.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin