Monday, May 16, 2011

பக் பக் புறாக்களும்.. கீச் கீச் மைனாக்களும்..

தினெட்டு வருடம் முன்னே பெங்களூர் மல்லேஷ்வரத்தில் ஏழடுக்கு குடியிருப்பின் மேல்தளத்தில் வசித்திருந்தோம் மூன்று ஆண்டுகள். அதிகாலை சரியாக ஏழுமணிக்கு ஆரம்பித்து அடுத்த அரை மணிக்கு கூட்டம் கூட்டமாக நூற்றுக்கணக்கில் பச்சைக் கிளிகள் மேற்கிலிருந்து கிழக்கு திசை நோக்கிச் சென்றபடி இருக்கும். ஒரு (flock)குழுவில் 25,30 கிளிகளாவது இருக்கும். சரியாக மாலை ஐந்தரை மணிக்கு மறுபடி மேற்கிலிருந்து கிழக்காக வழியெங்கும் இருப்போரைக் குசலம் விசாரித்தபடியே வீடு திரும்பும். இந்தக் காட்சியை ரசிக்க எனக்கும் இரண்டு வயது பாலகனாயிருந்த மகனுக்கும் மிகப் பிடிக்கும்.

இப்போது வானில் கிளிகளைக் காணவே இல்லை:(! அபூர்வமாக சில மாதம் முன்னே ஓரிரு கிளிகள் குடியிருப்பு சுற்றுச்சுவரையொட்டிய மரமொன்றில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கக் கண்டேன். (சோனிW80 ஜூமுக்கு அவை அத்தனை தெளிவாகப் பதிவாகவில்லை. எனவே இங்கு பதியவில்லை.)

அதே போல நம் ஊர்ப்பக்கம் தினம் தினம் சிறுவயதில் பார்க்கக் கிடைத்த சாம்பல் நிற கொழுக் மொழுக் குண்டு சிட்டுக்குருவியும் மும்பையில் இருந்த போதும் சரி பெங்களூரிலும் சரி கண்டதே இல்லை. எங்கள் திண்ணை வீட்டில்(அப்பதிவில் படம்.3) தாத்தா அமர்ந்து செய்தித்தாள் வாசிக்கும் நாற்காலியை ஒட்டிய தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையே, உச்சியில் குருவிகள் குடியிருக்க ஒரு பரண் அமைத்து வைத்திருந்தார்கள். குருவிகள் வைக்கோலைக் கொண்டு வந்து கூடமைத்து முட்டையிட்டு குஞ்சு பொரித்து வாழ்ந்தன. முற்றம் குருவிகளின் இன்னிசையால் நிரம்பியிருக்கும். தாய்ப்பறவை வெளியேறக் காத்திருந்து நாற்காலி கைப்பிடியில் ஏறி தூணைப் பிடித்து எம்பி எம்பி குஞ்சுகளைப் பார்த்து ரசிப்போம்.

அப்போதெல்லாம் காலை வேளைகளில் தொடர்ச்சியாக அடுத்த வீட்டு வேப்பமரம் அல்லது வீட்டுக்குப் பின்புறமிருந்த அரசமரத்திலிருந்து ‘அக்கூ... அக்கூ’ எனக் குரல் வந்தபடி இருக்கும். குரலெழுப்பும் பறவையை குறிப்பாகப் பார்க்க முடிந்ததில்லை. அதற்கு ஒரு கதை சொல்வார்கள். அது தங்கைக் குருவி என்றும், அக்காவுடன் சேர்ந்து ஆற்றுக்கு குளிக்கப் போயிருந்ததென்றும், அக்கா ஆற்று வெள்ளத்தோடு போய்விட தங்கை தினம் தினம் அக்காவைத் தேடி ஏங்கிக் குரல் கொடுக்கிறது என்றும் சொல்வார்கள். கதையின் தாக்கம் அந்த வயதில் ஆழமானதாய் இருந்தது. ‘அக்கூ அக்கூ’ கேட்க ஆரம்பித்தாலே அப்படியொரு அய்யோ பாவமாக இருக்கும். ‘குருவிக்கு அக்காவைத் தேடிக் கொடுத்திடு சாமீ..’ன்னு அரசமர புள்ளையாரை சுற்றி வந்த நினைவும் உள்ளது. அக்கூ குருவி இன்னும் நம்மூர் பக்கம் இருக்கா சொல்லுங்க.

ஆனந்த ராகம்.. கேட்கும் காலம்
:

லைபேசிக் கோபுரங்களால் அழிந்து வரும் இனங்களாக குருவிகளும் கிளிகளும் ஆகிவரும் வேளையில், அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகளை ஆனந்தப் படுத்துபவையாக உள்ளன மாடப் புறாக்களும், பாடும் மைனாக்களும், நீளவால் கருஞ்சிட்டுக் குருவிகளும். அதுவும் கோடை வந்தால் புறாக்களின் பக்கூம் பக்கூம் கொக்கரிப்பும், மைனாக்களின் ஆனந்த ராகங்களும் அதிகாலை ஐந்தரைக்கு எல்லாம் ஆரம்பமாகி விடுகின்றன.

சில பறவைகள் தோழமையாய் பார்க்கும். சில கண்டு கொள்ளவே செய்யாது. சிலது பயந்து படபடத்துப் பறந்து விடும். பல்வேறு சமயங்களில் எடுத்த படங்களின் தொகுப்பு:1. இங்கும் அங்கும் யார் வரவைத் தேடுது?


சின்ன சின்னக் கண்ணிலே
வண்ண வண்ண ஓவியம்..

2. சாது மிரண்டால்..

அமைதிப் புறாவின்
ஆத்திரப் பார்வை


3. ‘நான் சொல்லல.. அம்மாதான் ஆட்சியைப் புடிப்பாங்கன்னு..’

அரசியல் பேசும் புறாக்கள்
(அதிக தொலைவில் நின்றவை)


4. வெள்ளைப் புறா ஒன்று
இந்தப் புறா எங்கள் தளத்துக்கு நேர்மேல் அமைந்த மாடத்தில் குடியிருக்கிறது. ஒருநாள் தொடர்ந்து ஒருமணிக்கு மேலாக குறிப்பிட்ட மரத்துக்கு சென்று சென்று குச்சி குச்சியாக ஒடித்துக் கொண்டு வந்தபடியே இருந்தது, வாயிலே அழகாகக் கவ்வியபடி. காமிராவில் சரியாகக் கவ்வ முடியவில்லை என்னால்:)! MQN எடுத்த இப்படத்தைப் போல ஓர் நாள் எடுக்க ஆசை. பேராசை:)?

5. வழி மேல் விழி வைத்து..

பாட்டுக்குப் பாட்டு:

ரண்டு நாள் முன்னே காலை நேரம் வீட்டுக்குள் பிஸியாக நான் இருந்த நேரம். ஆரம்பித்தது பாருங்க ஒரு பாட்டுக்குப் பாட்டு. தொடர்ந்து பத்து நிமிடமாய் மாற்றி மாற்றிப் பாடிக் கொண்டேயிருந்தன இரண்டு மைனாக்கள். மெதுவாக காமிராவுடன் நான் அருகில் செல்லவும் ஒன்று விர்ரெனப் பறந்து விட்டது.

ற்றதோ ‘அட, ஒண்ணும் செஞ்சுட மாட்டாங்க. என்னைப் பாரு எப்படி பயப்படாம நிற்கிறேன்’ என்றது.
6. தோரணைபிறகு ‘பாடவா என் பாடலை..’ என ஓரிரு நிமிடங்கள் எனக்காகத் தொடர்ந்து பாடியது:
7. தனி ஆவர்த்தனம்


மீண்டும் திரும்பித் துணையைக் கூப்பிட்டது சேர்ந்து பாட வருமாறு:
8. வா வா அன்பே அன்பே..


து அடுத்த கட்டிடத்தில் அமர்ந்தபடி ‘ஊஹூம்’னு சொல்ல இது என்னைப் பார்த்து..,
9. ‘வரட்டுமா..’

அது சரியான பயந்தாங்குளி. ரொம்ப வெட்கமும். கண்டுக்காதீங்க’ என்று சொல்லிவிட்டு சிறகை விரித்துப் பறந்து போய்விட்டது:)!

[ஆனந்த ராகத்தை என் ஃப்ளிக்கர் தளத்தில் ரசித்தவர்கள்].

எடுத்த படங்களை கணினியில் ஏற்றிய பிறகே கவனித்தேன், அன்பாய் பார்த்த, பேசிய அந்த மைனா ஒரு மாற்றுத் திறனாளி என்பதை. மனது கனத்தது. ஆயினும் ஒன்று புரிந்தது. ஆம், அந்த மைனாவின் உற்சாக கானம். அது வாழ்க்கைக்கான நம்பிக்கை கீதம்.
***

பறவை பார்ப்போம் (1)

71 comments:

 1. //எடுத்த படங்களை கணினியில் ஏற்றிய பிறகே கவனித்தேன், அன்பாய் பார்த்த, பேசிய அந்த மைனா ஒரு மாற்றுத் திறனாளி என்பதை. மனது கனத்தது. ஆயினும் ஒன்று புரிந்தது. ஆம், அந்த மைனாவின் உற்சாக கானம். அது வாழ்க்கைக்கான நம்பிக்கை கீதம்.//

  மனதில் பாரம்.....

  ReplyDelete
 2. அட்டகாசமான படங்கள் சூ சூ சூ சூப்பருங்கோ....

  ReplyDelete
 3. புகைப்படங்களும் உங்களின் அனுபவ உணர்வுகளும் ரசிக்க வைக்கிறது .இயற்கையும் , எதார்தங்களும் எப்பொழுதுமே ஒரு புதுமைதான்

  ReplyDelete
 4. பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்...

  ReplyDelete
 5. கவித்துவமான படங்கள். அந்த ஒற்றை கால் பறவையின் படம் - பாராட்ட வார்த்தைகளே இல்லை.

  ReplyDelete
 6. Hard work but marred by a single political statement imagining the pair of pigeons coo-cooing a political statement.

  Nature shd b enjoyed innocently.

  We must keep poltics, religion and nature as different water-tight compartments. No seepages pl.

  Good photos with good text. In this age and time, u hve time to stand and stare at the birds, havnt u?

  Lit pg from sara tucker, rnt u?

  Ur post reminds me of this poem:

  WHAT is this life if, full of care,
  We have no time to stand and stare?

  No time to stand beneath the boughs,
  And stare as long as sheep and cows:

  No time to see, when woods we pass,
  Where squirrels hide their nuts in grass:

  No time to see, in broad daylight,
  Streams full of stars, like skies at night:

  No time to turn at Beauty's glance,
  And watch her feet, how they can dance:

  No time to wait till her mouth can
  Enrich that smile her eyes began?

  A poor life this if, full of care,
  We have no time to stand and stare.

  U hav time. :-)

  W.H.Davies will b happy with u. Eveyone else, too !

  ReplyDelete
 7. பறவைகளின் பேச்சு.. என்ன ஒரு சுவாரசியம்..
  படங்களும் வர்ணனைகளும் அழகு.

  ReplyDelete
 8. படங்களும் படங்களுக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் பாடல் வரித் தலைப்புகளும் அழகு. மாற்றுத் திறனாளி! நாம்தான் அனுதாபப் படுகிறோம். அந்தப் பறவைக்கு அது ஒரு குறையே அல்ல போலும்!

  ReplyDelete
 9. எடுத்த படங்களை கணினியில் ஏற்றிய பிறகே கவனித்தேன், அன்பாய் பார்த்த, பேசிய அந்த மைனா ஒரு மாற்றுத் திறனாளி என்பதை. மனது கனத்தது. ஆயினும் ஒன்று புரிந்தது. ஆம், அந்த மைனாவின் உற்சாக கானம். அது வாழ்க்கைக்கான நம்பிக்கை கீதம்.

  அருமையான பக் பக் பதிவு
  மாற்றுத்திறனாளி மனதை கலக்கி விட்டது.

  ReplyDelete
 10. படமும் பதிவும் அருமை
  நானும் கிராமத்தில் இதையெல்லாம்
  ரசித்தபடி வாழ்ந்தவன் என்பதால்
  இப்போது நகரில் இந்த சுகத்தை எல்லாம்
  இழந்து வாழ்வது என்னுள் ஒரு
  வெறுமையை உண்டாக்கி இருப்பது நிஜம்
  தங்கள் பதிவு கொஞ்சம் ஆறுதல் தந்து போகிறது
  நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. சென்னையில் நான் இருப்பது நான்காவது மாடி. எங்கள் குடியிருப்பிலும் எங்களுக்கு ஈடாக ஏராளமாய் புறாக்கள். அதில் இரண்டு புறாக்கள் நேற்று பேசுவதைக் கேட்டேன். அதில் ஒரு புறா பெங்களூரிலிருந்து அந்த புறாவின் வீட்டிற்கு விருந்தாளியாக வந்ததாகத் தெரிந்து கொண்டேன்.அந்த புறா இன்னொன்றிடம் பெருமையாகச் சொன்னது.. என்னையும் என்னுடைய தோழர்களையும் ராமலக்ஷ்மி அக்கா விதம் விதமா படம் எடுத்திருக்காங்க.. எல்லாம் முத்துச்சரத்திலே வரும் பாரு... உலகம் முழுக்கப் பார்க்கலாம்... என்று பெருமை அடித்தது. இப்போது முத்துச்சரத்தில் இந்தப் புகைப்படங்களைப் பார்க்கும் போதுதான் அந்தப் புறா சொன்னது உண்மையென்று புரிந்தது.

  ReplyDelete
 12. //3. ‘நான் சொல்லல.. அம்மாதான் ஆட்சியைப் புடிப்பாங்கன்னு..’//

  இது புறா ஜோசியமா?
  படங்களும் விளக்கங்களும் அருமை.

  ReplyDelete
 13. அருமையான படங்கள். அற்புதமான வர்ணனைகள். பறவைகள் அழகோ அழகு தான்.

  பெங்களூரில் புறாக்களுக்குப் பஞ்சமே இல்லை. அடுக்கு மாடிக்குடியிருப்புகளில் உள்ளோர், ஒரு வாரம் வீட்டைப்பூட்டிவிட்டு ஊருக்குப்போய் விட்டு திரும்பி வந்தால், பால்கனியில் முட்டையிட்டு அடைகாத்து, குஞ்சு பொரித்து, குஞ்சுகளுக்கு இரை கொண்டுவந்து கூடுகட்டி, ஏதேதோ சப்தமிட்டுக்கொண்டே இருக்கும்.

  //எடுத்த படங்களை கணினியில் ஏற்றிய பிறகே கவனித்தேன், அன்பாய் பார்த்த, பேசிய அந்த மைனா ஒரு மாற்றுத் திறனாளி என்பதை. மனது கனத்தது. ஆயினும் ஒன்று புரிந்தது. ஆம், அந்த மைனாவின் உற்சாக கானம். அது வாழ்க்கைக்கான நம்பிக்கை கீதம்.//

  படித்த எனக்கும் மனதை என்னவோ செய்தது. பாவம் அந்த ஒரு கால் இல்லாத பறவை.

  நல்லதொரு பதிவு தந்ததற்கு என் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 14. பதிவு பாதித்தாலும் படங்களையே ரசித்தேன்.காற்றில் கை கொடுங்கள் அக்கா.அவ்ளோ தெளிவான படங்கள் !

  ReplyDelete
 15. மைனா :((

  அத்தனை படங்களும் அற்புதமா இருக்கு அக்கா.

  ஊரிக்குருவி நினைவு வந்து போகிறது :((((

  ReplyDelete
 16. முதல் கமண்ட்ல ஊர்க்குருவின்னு வந்திருக்கணும் :)

  ReplyDelete
 17. மனதளவில் அமைதியாக இருக்கிறீர்கள் என்பதையே உங்கள் புகைப்படங்கள் சுட்டிக் காட்டுகின்றன.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. நல்ல படங்கள் அருமை இருக்கிறது.
  சூர்யா

  ReplyDelete
 19. மையால் எழுதிய வரிகளும்
  மைனாகளின் படங்களும்
  மெய்யாகவே
  மெய் சிலிர்க்க வைக்கிறது

  வாழ்த்துகள்

  ReplyDelete
 20. அட்டகாசமான படங்கள் .

  ReplyDelete
 21. ஆனந்தமாய் பற்க்கும் பறவைக்குக் கால் எதற்கு??
  ப்றவைகளேடே மனமும் பறந்துபோய்விட்டது. அருமையான படங்கள். அனுபவங்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
  ஈட்டின் அருகிலகீருக்கும் அரசமரத்தில் கிளிகளையும் ,குயில்களையும், மைனாக்களையும், சிட்டுக்குருவிகளையும் தினமும் தரிசிக்கிறேன்.

  ReplyDelete
 22. //ராஜ நடராஜன் said...
  மனதளவில் அமைதியாக இருக்கிறீர்கள் என்பதையே உங்கள் புகைப்படங்கள் சுட்டிக் காட்டுகின்றன.வாழ்த்துக்கள்.//

  சார் சொல்வதுதான் சரி.

  மகிழ்ச்சியும் அமைதியும் என்றென்றும் உங்களுடன் இருக்க வாழ்த்துக்கள் மேடம்.

  ReplyDelete
 23. மிக அருமை .. அழகு மைனா.. படங்கள் ரொம்ப பளிச்.. ரொம்ப சிறப்பா ஃபோட்டோக்கள் பகிர்கிறீர்கள் ராமலெக்ஷ்மி.:))

  ReplyDelete
 24. அழகான படங்களையும் அதற்கேற்ற உங்கள் விவரிப்பையும் மிகமிக
  ரசித்தேன் அக்கா.

  ReplyDelete
 25. Such a lovely post & beautiful photos.... Vaazthukkal !

  ReplyDelete
 26. அற்புதமான பதிவு. பதிவுக்கு அழகூட்டும் புகைப்படங்கள். அருமை.

  ReplyDelete
 27. உங்கள் திண்ணை பதிவு என் சிறுவயது திண்ணை நினைவுகளை நினைவூட்டியது... பதிவு முடிந்து விட்டதேனு வருத்தப்பட வெச்சது.... கிரேட் write up ... தேங்க்ஸ்.....:)

  இந்த பதிவில் உள்ள படங்கள் அற்புதம்...

  ReplyDelete
 28. ‘நான் சொல்லல.. அம்மாதான் ஆட்சியைப் புடிப்பாங்கன்னு..’
  -- என் காதில் விழுந்தது:"நான் சொல்லல.. இந்த அம்மாதான் நல்லா போட்டோ பிடிப்பாங்கன்னு.."
  சகாதேவன்

  ReplyDelete
 29. மைனா புறா படங்கள் அழகு...அதோடு நீங்கள் சொன்ன செய்தியும்தான்

  ReplyDelete
 30. உங்கள் பதிவு இனிய இளமைக்காலத்தை மீட்கச்செய்கிறது.

  எங்கள் வீட்டிலும் இதேபோல் ஒரு காக்கா வரும் (மாற்றுத்திறனாளி) சிறுவயதில் பார்த்துப் பரிதாபப் பட்டிருக்கோம்.

  ReplyDelete
 31. மிக அழகான படங்கள். பதிவும் கூட. விலங்குகளைப் புகைப்படமெடுக்க மிகுந்த பொறுமையும், அழகுணர்ச்சியும் தேவை. அது உங்களிடமிருக்கிறது சகோதரி.. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 32. MANO நாஞ்சில் மனோ said...
  ***//மனதில் பாரம்.....

  அட்டகாசமான படங்கள் சூ சூ சூ சூப்பருங்கோ....//***

  நன்றி மனோ.

  ReplyDelete
 33. ! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...
  //புகைப்படங்களும் உங்களின் அனுபவ உணர்வுகளும் ரசிக்க வைக்கிறது .இயற்கையும் , எதார்தங்களும் எப்பொழுதுமே ஒரு புதுமைதான்//

  கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சங்கர்.

  ReplyDelete
 34. தமிழ் உதயம் said...
  //பறவைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்...//

  ஆம்:)! மிக்க நன்றி தமிழ் உதயம்.

  ReplyDelete
 35. Jeeves said...
  //Superb ! kudo's//

  நன்றி ஜீவ்ஸ்:)!

  ReplyDelete
 36. Chitra said...
  //கவித்துவமான படங்கள். அந்த ஒற்றை கால் பறவையின் படம் - பாராட்ட வார்த்தைகளே இல்லை.//

  மிக்க நன்றி சித்ரா.

  ReplyDelete
 37. simmakkal said...
  //We must keep poltics, religion and nature as different water-tight compartments...

  Good photos with good text...

  W.H.Davies will b happy with u. Eveyone else, too !//

  தங்கள் கருத்துக்களுக்கும் பகிர்ந்து கொண்ட கவிதை வரிகளுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 38. மோகன் குமார் said...
  //Excellent photos as usual//

  நன்றி மோகன் குமார்.

  ReplyDelete
 39. ரிஷபன் said...
  //பறவைகளின் பேச்சு.. என்ன ஒரு சுவாரசியம்..
  படங்களும் வர்ணனைகளும் அழகு.//

  மகிழ்ச்சியும் நன்றியும் ரிஷபன்.

  ReplyDelete
 40. ஸ்ரீராம். said...
  //படங்களும் படங்களுக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் பாடல் வரித் தலைப்புகளும் அழகு. மாற்றுத் திறனாளி! நாம்தான் அனுதாபப் படுகிறோம். அந்தப் பறவைக்கு அது ஒரு குறையே அல்ல போலும்!//

  அப்படிதான் எனக்கும் தோன்றியது. உற்சாகமாய் வாழ்க்கையை எதிர் கொள்கிறது. நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 41. goma said...
  //எடுத்த படங்களை கணினியில் ஏற்றிய பிறகே கவனித்தேன், அன்பாய் பார்த்த, பேசிய அந்த மைனா ஒரு மாற்றுத் திறனாளி என்பதை. மனது கனத்தது. ஆயினும் ஒன்று புரிந்தது. ஆம், அந்த மைனாவின் உற்சாக கானம். அது வாழ்க்கைக்கான நம்பிக்கை கீதம்.

  அருமையான பக் பக் பதிவு
  மாற்றுத்திறனாளி மனதை கலக்கி விட்டது.//

  மிக்க நன்றி கோமா.

  ReplyDelete
 42. Ramani said...
  //படமும் பதிவும் அருமை
  நானும் கிராமத்தில் இதையெல்லாம்
  ரசித்தபடி வாழ்ந்தவன் என்பதால்
  ......தங்கள் பதிவு கொஞ்சம் ஆறுதல் தந்து போகிறது. நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்//

  கருத்துக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 43. குமரி எஸ். நீலகண்டன் said...
  //சென்னையில் நான் இருப்பது நான்காவது மாடி. எங்கள் குடியிருப்பிலும் எங்களுக்கு ஈடாக ஏராளமாய் புறாக்கள். அதில் இரண்டு புறாக்கள் நேற்று பேசுவதைக் கேட்டேன். அதில் ஒரு புறா பெங்களூரிலிருந்து அந்த புறாவின் வீட்டிற்கு விருந்தாளியாக வந்ததாகத் தெரிந்து கொண்டேன்.அந்த புறா இன்னொன்றிடம் பெருமையாகச் சொன்னது.. என்னையும் என்னுடைய தோழர்களையும் ராமலக்ஷ்மி அக்கா விதம் விதமா படம் எடுத்திருக்காங்க.. எல்லாம் முத்துச்சரத்திலே வரும் பாரு... உலகம் முழுக்கப் பார்க்கலாம்... என்று பெருமை அடித்தது. இப்போது முத்துச்சரத்தில் இந்தப் புகைப்படங்களைப் பார்க்கும் போதுதான் அந்தப் புறா சொன்னது உண்மையென்று புரிந்தது.//

  தாங்களும் பறவைகளின் பேச்சை நின்று கவனிப்பது அறிந்து மிக்க சந்தோஷம்:)! நன்றி நீலகண்டன்.

  ReplyDelete
 44. Rathnavel said...
  //அருமை.//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 45. "உழவன்" "Uzhavan" said...
  ***//3. ‘நான் சொல்லல.. அம்மாதான் ஆட்சியைப் புடிப்பாங்கன்னு..’//

  இது புறா ஜோசியமா?
  படங்களும் விளக்கங்களும் அருமை.//***

  கிளிகள்தான் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றனவே:))!

  நன்றி உழவன்:)!

  ReplyDelete
 46. வை.கோபாலகிருஷ்ணன் said...
  //அருமையான படங்கள். அற்புதமான வர்ணனைகள். பறவைகள் அழகோ அழகு தான்.

  .........

  நல்லதொரு பதிவு தந்ததற்கு என் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 47. ஹேமா said...
  //பதிவு பாதித்தாலும் படங்களையே ரசித்தேன்.காற்றில் கை கொடுங்கள் அக்கா.அவ்ளோ தெளிவான படங்கள் !//

  ரொம்ப நன்றி ஹேமா:)!

  ReplyDelete
 48. சுசி said...
  //மைனா :((

  அத்தனை படங்களும் அற்புதமா இருக்கு அக்கா.

  ஊர்க்குருவி நினைவு வந்து போகிறது :((((//

  அதன் அழகே தனிதான் இல்லையா? நன்றி சுசி.

  ReplyDelete
 49. ராஜ நடராஜன் said...
  //மனதளவில் அமைதியாக இருக்கிறீர்கள் என்பதையே உங்கள் புகைப்படங்கள் சுட்டிக் காட்டுகின்றன.வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றிங்க:)!

  ReplyDelete
 50. soorya said...
  //நல்ல படங்கள் அருமை இருக்கிறது.//

  நீங்கள் ரசித்ததில் எனக்கு மகிழ்ச்சி. நன்றி சூர்யா:)!

  ReplyDelete
 51. திகழ் said...
  //மையால் எழுதிய வரிகளும்
  மைனாகளின் படங்களும்
  மெய்யாகவே
  மெய் சிலிர்க்க வைக்கிறது

  வாழ்த்துகள்//

  தங்கள் வாழ்த்தும் வரிகளும் என்னை மகிழ்வித்தது:)! நன்றி திகழ்.

  ReplyDelete
 52. பா.சதீஸ் முத்து கோபால் said...
  //Excellent..!!!//

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 53. Kanchana Radhakrishnan said...

  //அட்டகாசமான படங்கள் .//

  மிக்க நன்றி மேடம்:)!

  ReplyDelete
 54. இராஜராஜேஸ்வரி said...
  //ஆனந்தமாய் பறக்கும் பறவைக்குக் கால் எதற்கு??//

  அப்படி சொல்லிவிட முடியாதே? கால்களின் தேவையும் உள்ளனவே அவற்றிற்கு.

  //பறவைகளேடே மனமும் பறந்துபோய்விட்டது. அருமையான படங்கள். அனுபவங்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  வீட்டின் அருகிலகீருக்கும் அரசமரத்தில் கிளிகளையும் ,குயில்களையும், மைனாக்களையும், சிட்டுக்குருவிகளையும் தினமும் தரிசிக்கிறேன்.//

  பறவைகளின் கானம் தினம் கேட்பது அறிந்து சந்தோஷம்:)! நன்றி இராஜராஜேஸ்வரி.

  ReplyDelete
 55. அமைதி அப்பா said...
  ***//சார் சொல்வதுதான் சரி.

  மகிழ்ச்சியும் அமைதியும் என்றென்றும் உங்களுடன் இருக்க வாழ்த்துக்கள் மேடம்.//***

  நன்றி அமைதி அப்பா:)!

  ReplyDelete
 56. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  //மிக அருமை .. அழகு மைனா.. படங்கள் ரொம்ப பளிச்.. ரொம்ப சிறப்பா ஃபோட்டோக்கள் பகிர்கிறீர்கள் ராமலெக்ஷ்மி.:))//

  மிக்க நன்றி தேனம்மை:)!

  ReplyDelete
 57. சுந்தரா said...
  //அழகான படங்களையும் அதற்கேற்ற உங்கள் விவரிப்பையும் மிகமிக
  ரசித்தேன் அக்கா.//

  மிக்க நன்றி சுந்தரா:)!

  ReplyDelete
 58. சதங்கா (Sathanga) said...
  //Such a lovely post & beautiful photos.... Vaazthukkal !//

  மிக்க நன்றி சதங்கா:)! நீங்கள் fb-யில் பகிர்ந்து வரும் பறவை படங்களை ரசித்து வருகிறேன்:)!

  ReplyDelete
 59. கீதா said...
  //அற்புதமான பதிவு. பதிவுக்கு அழகூட்டும் புகைப்படங்கள். அருமை.//

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கீதா.

  ReplyDelete
 60. அப்பாவி தங்கமணி said...
  //உங்கள் திண்ணை பதிவு என் சிறுவயது திண்ணை நினைவுகளை நினைவூட்டியது... பதிவு முடிந்து விட்டதேனு வருத்தப்பட வெச்சது.... கிரேட் write up ... தேங்க்ஸ்.....:)//

  மிக்க மகிழ்ச்சி புவனா:)!

  //இந்த பதிவில் உள்ள படங்கள் அற்புதம்...//

  நன்றியும்:)!

  ReplyDelete
 61. சகாதேவன் said...
  //‘நான் சொல்லல.. அம்மாதான் ஆட்சியைப் புடிப்பாங்கன்னு..’
  -- என் காதில் விழுந்தது:"நான் சொல்லல.. இந்த அம்மாதான் நல்லா போட்டோ பிடிப்பாங்கன்னு.."//

  நன்றி:))!

  ReplyDelete
 62. பாச மலர் / Paasa Malar said...
  //மைனா புறா படங்கள் அழகு...அதோடு நீங்கள் சொன்ன செய்தியும்தான்//

  மிக்க நன்றி மலர்.

  ReplyDelete
 63. மாதேவி said...
  //உங்கள் பதிவு இனிய இளமைக்காலத்தை மீட்கச்செய்கிறது.

  எங்கள் வீட்டிலும் இதேபோல் ஒரு காக்கா வரும் (மாற்றுத்திறனாளி) சிறுவயதில் பார்த்துப் பரிதாபப் பட்டிருக்கோம்.//

  நன்றி மாதேவி. பறவை, விலங்குகளும் இதற்கு விதிவிலக்கல்லவே போலும்.

  ReplyDelete
 64. எம்.ரிஷான் ஷெரீப் said...
  //மிக அழகான படங்கள். பதிவும் கூட. விலங்குகளைப் புகைப்படமெடுக்க மிகுந்த பொறுமையும், அழகுணர்ச்சியும் தேவை. அது உங்களிடமிருக்கிறது சகோதரி.. வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி ரிஷான்:)!

  ReplyDelete
 65. தேவராஜ் விட்டலன் said...
  //அருமையான படங்கள் ..//

  மிக்க நன்றி தேவராஜ் விட்டலன்.

  ReplyDelete
 66. தமிழ்மணம் மற்றும் இன்ட்லியில் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றி.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin