வெள்ளி, 30 டிசம்பர், 2011

நைட் சஃபாரி - சிங்கப்பூர் பயணம் (9) - நிறைவுப் பாகம்

# 1. நீரைக் குடித்து நெருப்பாய்க் கக்கு
காணும் கனவைக் காரியம் ஆக்கு


ருட்டத் தொடங்கும் ஏழுமணிக்கே ஆரம்பமாகிறது காட்டுக்குள் பயணம். அதற்கொரு அரை மணி முன்னதாகவே ஆங்காங்கே தீப்பந்தங்கள் ஏற்றத் தொடங்கி விடுகிறார்கள். காத்திருக்கும் வேளையில் மீன் தொட்டிகளுக்குள் கால்களைக் கொடுத்து ஃபிஷ் ஸ்பா செய்தபடி சிலர், சுற்றியிருக்கும் கடைகளில் நினைவுப் பொருட்கள் வாங்கியபடி சிலர், மலைப்பாம்புகளை வாங்கிக் கழுத்தில் இட்டுப் படமெடுத்தபடி சிலர் எனக் கலகலப்பாக இருக்கிறது இடம். பாம்புகளைத் தோளில் போட்டுக் கொள்வது அதிர்ஷ்டத்தைக் கொடுக்குமென்கிற நம்பிக்கை அங்கே உள்ளது. ஜூராங் பூங்கா, மக்கள் நடமாட்டமுள்ள மெர்லயன் என எல்லா இடங்களிலுமே இதற்கென்றே பாம்புகளை வைத்திருந்தது குறித்து பாகம் இரண்டில் படங்களுடன் பகிர்ந்திருந்தேன். கையிலெடுக்க நடுக்கம், ஆனால் வேண்டும் அதிர்ஷ்டம் என்போருக்கு இங்கே அட்டை வீரன் பாம்பை ஏந்திக் காத்திருக்கிறான். முகத்தை உள்ளே விட்டுப் படமெடுத்துக் கொண்டு திருப்தியாக நடையைக் கட்டுகிறார்கள் வரப்போகும் அதிர்ஷ்டத்தை எண்ணிக் கனவு கண்டபடி.

# 2. முகப்பில் வரவேற்கும் பழங்குடியினர் சிலைகள்

# 3. பக்கத்தில் (சிரித்த முகத்துடன்?)‘நல்வரவு’ எனக் கூவும் முதலைசமீபத்தில் தன் அமெரிக்கப் பயணத்தில் அச்சு அசல் இதே போன்ற ஒரு முதலைச் சிலையின் வாயினுள் தன் ஒற்றைக் காலைக் கொடுத்து இரண்டு கைகளையும் தூக்கி அலறுவது போன்ற முகபாவத்துடன் ஒரு தோழி தன் படத்தைப் பகிர்ந்திருந்தார்:)! யோசனையும் ரசனையும் இணைந்த காட்சியாக இருந்தது அது.

# 4. நிகழ்வு மேடைஇரவு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் வரை தைரியசாலிகள் பாம்புமாலை அணிந்து காட்சி கொடுத்தபடி இருந்த மேடை.

# 5. தீப்பந்தங்கள்


# 6. அந்தநாள் உணர்வுக்கு.. மின்விளக்காய் லாந்தர்

# 7. ஃபிஷ் ஸ்பா

# 8. ‘இன்னும் 2 நிமிடத்தில் ட்ராம் வந்திடுமாம்’காத்திருப்பைக் கலகலப்பாக்கிய குழந்தைகளில் இவரும் ஒருவர்.

ஜுராங் பார்க் போலவே இங்கும் மூன்று நிறுத்தங்களில் நிற்கிற ட்ராமில் பயணம். படத்தாலன்றி எழுத்தால் விலங்குகளைக் காட்டப் போகிறேன் என்பதையும் சொல்லி விடுகிறேன். இருளில் ஃப்ளாஷ் மட்டுமின்றி சிறுபுள்ளி கேமரா வெளிச்சமும் விலங்குகளை மருள வைக்குமெனப் படம் எடுக்கத் தடை விதிக்கிறார்கள். ஆயிரம் வன விலங்குகளை, எட்டு வெவ்வேறு விதமான பூகோளப் பகுதிகளாகப் பிரித்துப் பரமாரித்து வருகிறார்கள். நைட் சஃபாரியை அடுத்துதான் மிருகக்காட்சி சாலை உள்ளது. நேரக் குறைவு.., ஏதேனும் ஒன்றிற்கே செல்ல இயலுமெனில் ஜூவை உங்கள் திட்டத்திலிருந்து பேனாவால் ‘சரக்’ என அடித்து விடப் பரிந்துரைக்கிறேன். அந்த நேரத்தை நைட் சஃபாரிக்கே வழங்குங்கள். காலைநேரத்தில் மிருகங்களை பெங்களூர் பனர்கட்டா, மைசூர் ஜூ போன்ற பல இடங்களில் நான் பார்த்திருப்பது போலவே நீங்களும் எங்கேனும் பார்த்திருக்கக் கூடுமே. இங்கே இருண்ட வானம் குடை பிடிக்க, நிலவொளியை ஒத்ததான விளக்குகளின் வெளிச்சத்தில், அடர்ந்த மழைக்காட்டுக்குள், மிருகங்களை அவற்றின் இயல்பான சூழலில் காண்பது நிச்சயம் வித்தியாசமான சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருக்கும்.

அதுவும் நிறுத்தங்களில் இறங்கி வரைபட உதவியோடு நடந்து மிக அருகாமையில் கண்ணாடித் தடுப்புக்கு அந்தப்பக்கத்தில் மரக்கிளைகளில் அரைகுறைத் தூக்கத்திலிருந்து விழித்து நம்மைப் பார்க்கும் சிறுத்தைகள், தொட்டு விடும் தொலைவில் முள்ளம்பன்றிகள், சலசலக்கும் சிற்றோடையில் துள்ளிக் குதித்து மீன் பிடிக்கிற ஃபிஷிங் பூனைகள்.. எவற்றையெனப் பட்டியலிட? காட்டுக்குள் நிலவொளி விளக்கில் நிச்சலனமாக விரிந்து கிடந்த ஏரியை விட்டு நகர மனமில்லை. எனினும் அடுத்த நிறுத்தத்துக்கு செல்ல வேண்டுமே. பார்த்தவற்றில் மனதில் பதிந்த சிலவற்றைப் பகிர்கிறேன்.

ட்ராமில் செல்லுகையில் இருபதடி தொலைவிலிருக்கும் மேடுகளில் நரிக் கூட்டம், அச்சுறுத்தும் ஹயனாக்கள், ஓநாய்கள், கம்பீரமாக உலாத்தும் புலிகள், சொகுசாய் தூங்கும் காட்டுராஜாக்கள், விழித்துக் காவலிருக்கும் பெண்சிங்கங்கள், நமைப் பார்த்து உறுமும் கரடிகள், காட்டெருமைகள், மான்கள், நீர்யானைகள், காண்டாமிருகம் முத்தாய்ப்பாக மூச்சை அடக்கிப் பார்த்த அழகுக்காட்சியாக ட்ராமின் வலப்பக்கம் கம்பீரமாக நின்றிருந்த முப்பது வயது ஆண்யானை. இடப்பக்கம் பத்து பனிரெண்டு வயது நிரம்பிய மூன்று பெண் யானைகள். சின்னக்குட்டி ஒன்று மல்லாக்கப் படுத்துக் கிடந்தது ஸோ ஸ்வீட்டாக. ஒரு பெண் யானை கால்மாற்றி மாற்றி ஒரே ரிதத்தில் நடனமாடிக் கொண்டிருந்தது. அங்கே இந்தக் காட்சிகளை ரசிக்கவென்றே சில நிமிடங்கள் நிறுத்திப் போட்டிருந்தார்கள். திடீரென புலி, ஹயனா போன்ற மிருகங்கள் பாய்ந்து வந்து விடுமோ எனும் கிலியான தோற்றத்தைத் தந்தாலும், கூர்ந்து கவனித்ததில் மேடுகளுக்கும் ட்ராம் ஓடும் பாதைக்கும் நடுவே, எளிதில் நம் கண்ணுக்குப் புலப்படாத வகையில் செங்குத்தான அகழிகள் இருப்பது புரிந்தது.

மிருகங்கள் இயற்கையான சூழலில் தம்மை எப்படிப் பாதுகாத்துக் கொள்கின்றன என்பதைப் பற்றிய காட்சியும் உண்டு. ஜூராங் பூங்காவில் சென்றது போலவே இங்கும் காட்டுக்குள் நடந்து விலங்குகளைப் பார்ப்பதிலேயே விருப்பம் அதிகமாக இருந்தது. அதனால் அந்த நிகழ்ச்சிக்குச் செல்லவில்லை. அப்படியும் முழுக்காட்டையும் சுற்றிவர நேரம் போதவில்லை. ஜுராங் பூங்கா, சஃபாரி எல்லா இடங்களிலுமே பல கிலோ மீட்டர் நடைக்குத் தயாராக இருந்து கொள்ள வேண்டும். நைட் சஃபாரியின் ஹைலைட்டாகக் கருதப்படும் பழங்குடியினர் நடனமும், நெருப்பை ஊதும் விளையாட்டும் பிரமிப்பைத் தரக்கூடியவை. அவற்றைத் தவறவிடவில்லை. முதல் படம் போக மேலும் சில பார்வைக்கு:

# 9. ஊதி ஊதி.. தீ.. தீ..

# 10. திகு திகு

ரு பகுதியில் பல்லாண்டுகளுக்கு முன் பயன்பாடிலிருந்த பழம்பொருட்களைக் காட்சிக்கு வைத்திருந்தார்கள். வெளியேறும் சமயத்தில் P&S-ல் அவசரமாக க்ளிக்கிய சிலவும் பார்வைக்கு:

# 11. பழம் பொருட்கள்

# 12. மெகா சக்கரம்

# 13. துருவேறினாலும் பொக்கிஷமாய்..

# 14. கண் அகலக் கவனித்ததுமைக்ரோஸ்கோப், பூதக்கண்ணாடி, நீண்ட குடுவையுடனான சிம்னி, டிரங்குப் பெட்டி போன்ற பலவற்றில் நான் கண் அகலக் கவனித்தது எதை என்பதைச் சொல்லவே வேண்டாம்தானே?
# 15. மழைக்காடு

மொத்தத்தில் இப்பயண அனுபவத்தில்.., மழைக்காட்டின் அடர்ந்த மரங்களும், சென்டோசா தீவின் கடல்வாழ் உயிரினங்களும், வன விலங்குகளும், வகைவகையான பறவைகளும் எல்லோருக்குமானதாகிய உலகினை மனிதன் எப்படி ஆக்ரமித்தும் அழித்தும் வருகிறான் என்பதை உணர்த்தின. ஒரு சுழற்சியாய் இயற்கையும்,பிற உயிரினங்களும் வாழ்ந்து தழைத்தாலே மனிதனின் வாழ்வும் சிறக்கும் என்பதைச் சொல்லாமல் சொல்லின. இப்படிப் பராமரிக்கப்படும் இடங்களில் மட்டுமே அவை உயிர் பிழைத்துக் கிடப்பனவாக அவை ஆகிவிடக் கூடாதென மனம் வேண்டிக் கொண்டது.
***

(தொடர் நிறைவுறுகிறது.)

பி.கு: கூடவே பொறுமையாக வந்த அனைவருக்கும் நன்றி!தொடர்புடைய முந்தைய பதிவுகள்:46 கருத்துகள்:

 1. super !!!!!
  சிங்கப்பூர் பயணம் மேற்கொள்ள ஆர்வத்தைத் தூண்டுகிறது....

  பதிலளிநீக்கு
 2. சுவாரசியமான பயணத்தொடர்.பகிர்வு அருமை.விரைவில் முடிந்தது போல் இருக்கு.

  பதிலளிநீக்கு
 3. அழகான புகைப்படங்களுடன் அருமையான பயண தொடர் முடிவுற்றது வருத்தமே.

  பதிலளிநீக்கு
 4. //காலைநேரத்தில் மிருகங்களை பெங்களூர் பனர்கட்டா, மைசூர் ஜூ போன்ற பல இடங்களில் நான் பார்த்திருப்பது போலவே நீங்களும் எங்கேனும் பார்த்திருக்கக் கூடுமே.
  //
  நான் பார்த்த வரையில் , பகல் ஜூவே பெட்டர். இரவில் விலங்குகள் மூலையில் ஒளிந்து கொள்கின்றன, அங்கே இங்கே என்று வெறும் இருட்டை துலாவியதுதான் மிச்சம். சிங்கை பகல் ஜூவில் சுத்தமான சுகாதாரமான விலங்குகள் , பார்க்க மிகவும் அருமை.

  பதிலளிநீக்கு
 5. மழைக்காடு படம் சூப்பர்ப்...!!!

  என்னாது முதலை வெல்கம் சொல்லுதா அவ்வ்வ்வ்வ்....

  பதிலளிநீக்கு
 6. சிங்கையை வேங்கையாக சுற்றி காட்டியமைக்கு நன்றி...!!!

  பதிலளிநீக்கு
 7. நெருப்பு உள்ள படங்கள் அருமை.

  என்னென்ன வாங்குனீங்க என சொல்லவே இல்லையே ?

  பதிலளிநீக்கு
 8. மழைக்காடு படம் அற்புதம். 'எங்களு'க்கு உங்கள் இன்றைய பதிவு அப்டேட்டே வரவில்லையே...!

  பதிலளிநீக்கு
 9. முதலை வணக்கம் கூறினாலும் பயமா இருக்கே!!...

  மழைக்காடு ரொம்ப பிடித்தது...

  //அதுவும் நிறுத்தங்களில் இறங்கி வரைபட உதவியோடு நடந்து மிக அருகாமையில் கண்ணாடித் தடுப்புக்கு அந்தப்பக்கத்தில் மரக்கிளைகளில் அரைகுறைத் தூக்கத்திலிருந்து விழித்து நம்மைப் பார்க்கும் சிறுத்தைகள், தொட்டு விடும் தொலைவில் முள்ளம்பன்றிகள், சலசலக்கும் சிற்றோடையில் துள்ளிக் குதித்து மீன் பிடிக்கிற ஃபிஷிங் பூனைகள்.. எவற்றையெனப் பட்டியலிட? ///

  :)

  நன்றி.

  பதிலளிநீக்கு
 10. சுவாரசியமான பயணத்தொடர்.அருமை.

  பதிலளிநீக்கு
 11. ஒரு சுழற்சியாய் இயற்கையும்,பிற உயிரினங்களும் வாழ்ந்து தழைத்தாலே மனிதனின் வாழ்வும் சிறக்கும் //

  நிச்சியம். நீங்கள் சொல்வது உண்மை ராமலக்ஷ்மி.

  பயணம் மிகவும் சிறப்பாய் இருந்தது.

  பதிலளிநீக்கு
 12. //ஒரு சுழற்சியாய் இயற்கையும்,பிற உயிரினங்களும் வாழ்ந்து தழைத்தாலே மனிதனின் வாழ்வும் சிறக்கும் என்பதைச் சொல்லாமல் சொல்லின. இப்படிப் பராமரிக்கப்படும் இடங்களில் மட்டுமே அவை உயிர் பிழைத்துக் கிடப்பனவாக அவை ஆகிவிடக் கூடாதென மனம் வேண்டிக் கொண்டது.//

  உங்களோட சேர்ந்து நாங்களும் வேண்டிக்கிறோம். ஏன்னா, சில மிருகக் காட்சி சாலைகள்ல மிருகங்கள் இருக்கும் நிலையை பார்க்கிறப்ப, அதுங்க வதைபடுதோங்கற தோணலை தடுக்க முடியலை.

  பதிலளிநீக்கு
 13. அக்கா...முதளை சிரிக்குதா !

  பழைய அரிக்கேன் லாம்பு அழகாயிருக்கு !

  பதிலளிநீக்கு
 14. இனிமையான பயணமாய் அமைந்தது உங்களுடன் வந்தது. படங்கள் வாயிலாக நானே நேரில் சென்று அனுபவித்த உணர்வைத் தந்தீர்கள் நன்றி. உங்களுக்கு என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. பயண அனுபவமும் புகைப்படங்களும் அழகு!

  பதிலளிநீக்கு
 16. நல்ல காட்சிகள்... நல்லதோர் பயண அனுபவத்தை அளிப்பவை...

  பதிலளிநீக்கு
 17. வெற்றிகரமாக பயணத் தொடரை முடித்து விட்டீங்க :-)

  எனக்கு இங்கே உள்ள டிரைபல் டேன்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஒரு முறை கிளம்பி செல்லவே மனம் இல்லாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன். ஆட்டம்னா ஆட்டம் அப்படி ஒரு ஆட்டம். இசையும் எனக்கு பிடித்த ஒன்று :-)

  உங்கள் சிங்கப்பூர் இனிதாக முடிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 18. முதல் படம் செம , ஊதீ தீ யும் ..

  முதலை வாயில் கால் .. ஆதிமூலமே! ன்னு கத்தவும் செய்தோம் ல..:))

  அகழிக்கு எல்லாம் எந்தமட்டுக்குன்னு ஒரு வித பயம் உள்ளுக்குள்ள உதரல் தான்..

  பதிலளிநீக்கு
 19. அந்த கால கட்டுமான பொருட்களின் நடுவே தெரியாமல் புது ஸ்டாண்ட் வைத்திருக்கிறார்கள்??
  Top View மரம் சூப்பர்.

  பதிலளிநீக்கு
 20. செலவில்லாமல் சிங்கப்பூரை சுற்றிக் காண்பித்து விட்டீர்கள். மிக்க நன்றி.


  இதன் பின்னே உள்ள தங்களின் உழைப்பு, தங்களுடன் வந்தவர்களின் பொறுமை(நீங்கள் படமெடுத்து முடிக்கும் வரை அவர்களும் நிற்கவேண்டுமே!) என்று அனைத்தும் சேர்ந்ததால்தான், எங்களுக்கு இப்படி ஒர் அற்புதமான படங்களுடன் கூடிய பயணக் கட்டுரை கிடைத்தது. அதற்காக உங்களுடன் வந்தவர்களுக்கும் நன்றி.

  இத் தொடர் விரைவில் முடிந்துவிட்டதாகவே தோன்றுகிறது.

  விரைவில் வேறொரு நாட்டிற்கு சென்று வந்து,அந்தப் பயணக் கட்டுரையும் எழுத வேண்டும் என்பதே எங்களின் ஆசை!

  பதிலளிநீக்கு
 21. சசிகுமார் said...
  //அருமை.....//

  நன்றி சசிகுமார்.

  பதிலளிநீக்கு
 22. MangaiMano said...
  //super !!!!!
  சிங்கப்பூர் பயணம் மேற்கொள்ள ஆர்வத்தைத் தூண்டுகிறது....//

  நன்றி மங்கை.

  பதிலளிநீக்கு
 23. asiya omar said...
  //சுவாரசியமான பயணத்தொடர்.பகிர்வு அருமை.விரைவில் முடிந்தது போல் இருக்கு.//

  நன்றி ஆசியா.

  பதிலளிநீக்கு
 24. தமிழ் உதயம் said...
  //அழகான புகைப்படங்களுடன் அருமையான பயண தொடர் முடிவுற்றது வருத்தமே.//

  நன்றி ரமேஷ்.

  பதிலளிநீக்கு
 25. IlayaDhasan said...
  ***//காலைநேரத்தில் மிருகங்களை பெங்களூர் பனர்கட்டா, மைசூர் ஜூ போன்ற பல இடங்களில் நான் பார்த்திருப்பது போலவே நீங்களும் எங்கேனும் பார்த்திருக்கக் கூடுமே.
  //
  நான் பார்த்த வரையில் , பகல் ஜூவே பெட்டர். இரவில் விலங்குகள் மூலையில் ஒளிந்து கொள்கின்றன, அங்கே இங்கே என்று வெறும் இருட்டை துலாவியதுதான் மிச்சம். சிங்கை பகல் ஜூவில் சுத்தமான சுகாதாரமான விலங்குகள் , பார்க்க மிகவும் அருமை.//***

  ஆண் சிங்கங்கள், சிறுத்தைகளைத் தவிர மற்ற மிருகங்கள் விழித்திருந்தன. பல ஆக்டிவாகவும் இருந்தன. பகலில் இன்னும் நன்றாகப் பார்க்க இயலும்தான். நான் கூட நிறையப் படங்கள் எடுத்திருந்திருக்கலாம்:)! ஆனாலும் இரவில் காணும் அனுபவம் பிற இடங்களில் கிடைக்காதென்பதால் என் சாய்ஸ் அதுவே. நேரமிருப்பவர் இரண்டையும் பார்க்கட்டுமே!!

  கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 26. MANO நாஞ்சில் மனோ said...
  //மழைக்காடு படம் சூப்பர்ப்...!!! சிங்கையை வேங்கையாக சுற்றி காட்டியமைக்கு நன்றி...!!!

  என்னாது முதலை வெல்கம் சொல்லுதா அவ்வ்வ்வ்வ்....//

  நன்றி மனோ:)!

  பதிலளிநீக்கு
 27. மோகன் குமார் said...
  //நெருப்பு உள்ள படங்கள் அருமை.

  என்னென்ன வாங்குனீங்க என சொல்லவே இல்லையே ?//

  நம் நாட்டில் கிடைக்காததென்று எதுவுமில்லையே:)? நன்றி மோகன் குமார்.

  பதிலளிநீக்கு
 28. ஸ்ரீராம். said...
  //மழைக்காடு படம் அற்புதம். 'எங்களு'க்கு உங்கள் இன்றைய பதிவு அப்டேட்டே வரவில்லையே...!//

  நன்றி ஸ்ரீராம். நான் பார்த்த வேளையில் வந்து விட்டிருந்தது. திரும்பவும் அதே பிரச்சனை இருக்குமாயின் தெரிவியுங்கள்.

  பதிலளிநீக்கு
 29. Shakthiprabha said...
  //முதலை வணக்கம் கூறினாலும் பயமா இருக்கே!!...

  மழைக்காடு ரொம்ப பிடித்தது...

  //....மீன் பிடிக்கிற ஃபிஷிங் பூனைகள்.. எவற்றையெனப் பட்டியலிட? ///

  :)

  நன்றி.//

  ரசித்தமைக்கு நன்றி ஷக்தி:)!

  பதிலளிநீக்கு
 30. Kanchana Radhakrishnan said...
  //சுவாரசியமான பயணத்தொடர்.அருமை.//

  மிக்க நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
 31. கோமதி அரசு said...
  ***/ஒரு சுழற்சியாய் இயற்கையும்,பிற உயிரினங்களும் வாழ்ந்து தழைத்தாலே மனிதனின் வாழ்வும் சிறக்கும் //

  நிச்சியம். நீங்கள் சொல்வது உண்மை ராமலக்ஷ்மி.

  பயணம் மிகவும் சிறப்பாய் இருந்தது./

  நன்றி கோமதிம்மா.

  பதிலளிநீக்கு
 32. அமைதிச்சாரல் said...
  ***
  //ஒரு சுழற்சியாய் இயற்கையும்,பிற உயிரினங்களும் வாழ்ந்து தழைத்தாலே மனிதனின் வாழ்வும் சிறக்கும் என்பதைச் சொல்லாமல் சொல்லின. இப்படிப் பராமரிக்கப்படும் இடங்களில் மட்டுமே அவை உயிர் பிழைத்துக் கிடப்பனவாக அவை ஆகிவிடக் கூடாதென மனம் வேண்டிக் கொண்டது.//

  உங்களோட சேர்ந்து நாங்களும் வேண்டிக்கிறோம். ஏன்னா, சில மிருகக் காட்சி சாலைகள்ல மிருகங்கள் இருக்கும் நிலையை பார்க்கிறப்ப, அதுங்க வதைபடுதோங்கற தோணலை தடுக்க முடியலை.//

  ***

  உண்மைதான் சாரல். மனிதர் காடுகளை அழிக்காமலிருந்தாலே போதும்.

  வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 33. ஹேமா said...
  //அக்கா...முதலை சிரிக்குதா !

  பழைய அரிக்கேன் லாம்பு அழகாயிருக்கு !//

  நன்றி ஹேமா.

  பதிலளிநீக்கு
 34. கணேஷ் said...
  //இனிமையான பயணமாய் அமைந்தது உங்களுடன் வந்தது. படங்கள் வாயிலாக நானே நேரில் சென்று அனுபவித்த உணர்வைத் தந்தீர்கள் நன்றி. உங்களுக்கு என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 35. மனோ சாமிநாதன் said...
  //பயண அனுபவமும் புகைப்படங்களும் அழகு!//

  நன்றிங்க மனோ சாமிநாதன்.

  பதிலளிநீக்கு
 36. அப்பாதுரை said...
  //[புத்தாண்டு வாழ்த்துக்கள்]//

  நன்றியும் இனிய புத்தாண்டு வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 37. குமரி எஸ். நீலகண்டன் said...
  //நல்ல காட்சிகள்... நல்லதோர் பயண அனுபவத்தை அளிப்பவை...//

  மகிழ்ச்சி. நன்றி நீலகண்டன்.

  பதிலளிநீக்கு
 38. கிரி said...
  //வெற்றிகரமாக பயணத் தொடரை முடித்து விட்டீங்க :-)//

  ஒருவாறாக:)!

  //எனக்கு இங்கே உள்ள டிரைபல் டேன்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஒரு முறை கிளம்பி செல்லவே மனம் இல்லாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன். ஆட்டம்னா ஆட்டம் அப்படி ஒரு ஆட்டம். இசையும் எனக்கு பிடித்த ஒன்று :-)

  உங்கள் சிங்கப்பூர் இனிதாக முடிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.//

  ஆம் நல்ல அனுபவமாக அமைந்தது:)! நன்றி கிரி.

  பதிலளிநீக்கு
 39. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //முதல் படம் செம , ஊதீ தீ யும் ..

  முதலை வாயில் கால் .. ஆதிமூலமே! ன்னு கத்தவும் செய்தோம் ல..:))

  அகழிக்கு எல்லாம் எந்தமட்டுக்குன்னு ஒரு வித பயம் உள்ளுக்குள்ள உதரல் தான்..//

  அதுசரி:)! நன்றி முத்துலெட்சுமி.

  பதிலளிநீக்கு
 40. வடுவூர் குமார் said...
  //அந்த கால கட்டுமான பொருட்களின் நடுவே தெரியாமல் புது ஸ்டாண்ட் வைத்திருக்கிறார்கள்??
  Top View மரம் சூப்பர்.//

  அப்படிதான் போலும். மரம் பலரைக் கவர்ந்து விட்டுள்ளது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 41. அமைதி அப்பா said...
  //செலவில்லாமல் சிங்கப்பூரை சுற்றிக் காண்பித்து விட்டீர்கள். மிக்க நன்றி.

  இதன் பின்னே உள்ள தங்களின் உழைப்பு, தங்களுடன் வந்தவர்களின் பொறுமை(நீங்கள் படமெடுத்து முடிக்கும் வரை அவர்களும் நிற்கவேண்டுமே!) என்று அனைத்தும் சேர்ந்ததால்தான், எங்களுக்கு இப்படி ஒர் அற்புதமான படங்களுடன் கூடிய பயணக் கட்டுரை கிடைத்தது. அதற்காக உங்களுடன் வந்தவர்களுக்கும் நன்றி. //

  ஆம், அவர்களின் ஒத்துழைப்பும் இதில் உள்ளது:)!

  //இத் தொடர் விரைவில் முடிந்துவிட்டதாகவே தோன்றுகிறது.

  விரைவில் வேறொரு நாட்டிற்கு சென்று வந்து,அந்தப் பயணக் கட்டுரையும் எழுத வேண்டும் என்பதே எங்களின் ஆசை!//

  இப்போதைக்கு திட்டம் இல்லை. தொடரை நீட்டித்து விட்டேன் என்பது என் எண்ணம்:)! படங்களைப் பகிர வேண்டியிருந்ததாலும் பாகங்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.

  நன்றி அமைதி அப்பா.

  பதிலளிநீக்கு
 42. திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கு என் நன்றி.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin