ஞாயிறு, 4 ஜனவரி, 2026

ஆண்டின் முதல் பெருமுழுநிலவு.. ஓநாய் நிலவு.. - 3 ஜனவரி 2026

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நிலவைப் படமாக்கினேன், புதிய நிகான் Z5 II-வை பரிசோதிக்கும் ஆர்வத்தினாலும். நேற்றைய தினம் வானில் தோன்றிய முதல் முழு நிலவானது பெரு நிலவும் (supermoon)  ஆகும். 

Exif: 1/100s,f/13, ISO1000
Focal length: 300mm
Nikon Z5 II
Nikkor 70-300mm f/4.5-5.6G AF-S VR IF-ED
03-01-2026 21:14:06

சென்ற சில தடவைகளைப் போலவே நேற்றும் ட்ரைபாட் இல்லாமல் கையில் பிடித்தே படமாக்கினேன்.

ண்டின் முதல் முழுநிலவு ‘ஓநாய் நிலவு’ (wolf moon) என்றும் அறியப்படுகிறது. ஃபார்மர்ஸ் அல்மனாக்  (The Old Farmers Almanac)  குறிப்பேட்டில் அந்தந்த மாதத்தின் நிலவுக்கென ஒரு பெயரும் அதற்கென ஒரு காரணக் கதையும் இருக்கும். உலகளாவிய அளவில்  அந்தப் பெயராலேயே ஒவ்வொரு மாத நிலவும் அழைக்கப்படுகின்றன. இது குறித்து விரிவாக முன்னரும் சில பதிவுகளில் விளக்கியுள்ளேன். ஜனவரி மாத நிலவு ஓநாய் நிலவென அழைக்கப்படுவதற்கான காரணம், குளிர் காலத்தின் உச்சத்தில் சரியாக உணவு கிடைக்காமல் ஓநாய்கள் பசியில் ஊளையிட்டபடி இருக்குமாம். அதனாலேயே ஆண்டின் முதல் முழு நிலவுக்கு ‘ஓநாய் நிலவு’ எனப் பெயர் வந்திருக்கிறது.

ந்த வருட முதல் முழுநிலவு பெருநிலவாகவும் (supermoon) அமைந்தது கூடுதல் சிறப்பானது. சூப்பர் மூன் என்றால் என்ன என்பது குறித்த விளக்கத்தை படங்களுடன் எனது இந்தப் பதிவில் https://tamilamudam.blogspot.com/2013/06/super-moon-2013.html ஏற்கனவே பகிர்ந்துள்ளேன் என்றாலும் மீண்டும் சுருக்கமாக:

பூமியை நிலவு வட்டப் பாதையில் அன்றி, நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இதனால் பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரம் அவ்வப்போது மாறுபடுகிறது. பெரிஜி (Perigee) என்பது நிலவு பூமிக்கு மிக அருகில் வரும் புள்ளி, அப்போஜி (Apogee) என்பது நிலவு பூமியை விட்டு மிகத் தொலைவில் இருக்கும் புள்ளி. நிலவு பூமிக்கு மிக அருகில் வருகையில் வழக்கத்தை விடவும் 14% பெரிதாகவும், 30% கூடுதல் வெளிச்சத்துடனும் காட்சி தரும். அவ்வாறாக நேற்றைய நிலவு பூமிக்கு அருகாமையில் (Perigee)   சுமார் 3,62,312 கிலோமீட்டர் தொலைவில் வந்திருக்கிறது. அதே நேரத்தில் முழு நிலவாகவும் இருந்ததால் பெருநிலவும் (supermoon) ஆனது. 

ந்த வருடத்தில் அடுத்து வரவிருக்கும் இரு பெருநிலவுகள்: 

24 நவம்பர்: 3,60,768 கிலோமீட்டரில்..
24 டிசம்பர்: 3,56,740 கிலோமீட்டரில்..

நேரமும் வாய்ப்பும் கூடி வருமாயின் அவற்றைப் படமாக்குவேன் :).

**

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
***

9 கருத்துகள்:

  1. படமும் தகவல்களும் நன்று. முழு நிலவன்று மாலை நேரத்தில் நானும் மகளும் கண்டு ரசித்தோம்.

    மகள் முழு நிலவை மிகவும் ரசித்தாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளைஞர்களுக்கு வானியலில் ஆர்வத்தை ஏற்படுத்துவது நன்று. மகிழ்ச்சி. நன்றி வெங்கட்.

      நீக்கு
  2. புதிய கேமிராவுக்கும், அதில் எடுத்த அருமையான படத்துக்கும் வாழ்த்துகள்.  நேற்று வானத்தில் முழு நிலவை மிஸ் செய்தேன்.  காலை பால் எடுக்கச் செல்கையில் தரிசனம் காட்டியது!

    பதிலளிநீக்கு
  3. இந்த வருடத்தில் அடுத்து இரு முழு நிலவுகள், அதுவும் அடுத்தடுத்த மாதத்தில் என்பது செய்தி.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கும் நான் எடுத்த நேரத்தில் மேக மூட்டமாகவே இருந்தது. காத்திருந்து எடுக்க வேண்டியிருந்தது.

      ஆம், அடுத்தடுத்து வருகின்றன அடுத்த இரு பெருநிலவுகள்.

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. கேமரா தகவல்களுடன் டெக்னிக்கல் தகவல்களுடனும் முழுநிலவின் படத்தைப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி. முழு நிலவு படம் வெகு அருமை.

    நேரிலும் நிலவை இங்கு ரசித்தேன். ஆமாம் சற்று பெரிதாகவே இருந்தது. அடுத்த பெரு நிலவுகளுக்கான நாட்களையும் சொல்லியிருக்கீங்க இரு மாதங்கள் அடுத்தடுத்து. நோட் செய்துகொண்டேன்.

    தகவல்கள் சிறப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உதிக்கும் வேளையில் மிகப் பெரிதாக இருக்கும். கருத்துகளுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  5. ஓநாய் நிலவின் விவரமும் முழு நிலா படமும் அருமை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin