அபூர்வமாக பூக்கும் பிரம்மக் கமல மலர்களைப் பற்றித் தகவல்களுடன் முன்னரும் பலமுறை பகிர்ந்திருக்கிறேன். அவற்றின் இணைப்புகள் பதிவின் இறுதியில்..
இந்த முறை முழுதாக மூன்றாண்டு காலக் காத்திருப்பிற்குப் பிறகு தோட்டத்தின் ஒருபக்கச் செடியில் இரண்டும் மறுபக்கத்தில் நாலுமாக ஆறு மொட்டுகளைக் கண்டதும் அளவற்ற மகிழ்ச்சி :).
#2
#3 இரட்டையர்:
அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்திருந்த செடியை ஒன்பது ஆண்டுகளுக்கு முன் இங்கு கொண்டு வந்து நட்டு வைத்த போது, இரண்டு முறைகள் பூத்துக் குலுங்கி அருள் பாலித்தது. ஒருமுறை தோட்டக் காரர் செடிகளைக் கத்திரிக்கும் போது தவறுதலாக அதை வெட்டி விட்டார். பின் குடியிருப்பின் தோழி ஒருவர் வீட்டிலிருந்து கொண்டு வந்து நட்டு வைத்த செடிகள் ஆளுயரத்திற்கு வளர்ந்தும் மொட்டுகள் விடாதிருந்தன. நான்கு நாட்களுக்கு முன்னர் மொட்டுகளைப் பார்த்ததும் அவை மலரக் காத்திருந்தேன். இன்று முதல் மொட்டு மலர்ந்து தோட்டமெங்கும் மணம் பரப்பியது.
மெல்ல மெல்ல விரிந்த பூ:
#4
#5
#6
#8
*பத்து பிரம்மக் கமலங்கள் (2012)
*பவுர்ணமி நிலவைப் போல் பிரகாசித்த பிரம்மக் கமலம்! (2016)
*ஆண்டுக்கு ஒருமுறை மலரும் அபூர்வ மலர் - தினமலர் பட்டம் (2016)
ஆஹா பிரம்மக் கமலம் உங்க தோட்டத்தில் இருக்கிறதா!!
பதிலளிநீக்குபடங்கள் அட்டகாசம். ரசித்துப் பார்த்தேன்.
திருவனந்தபுரத்தில் இருந்த போது பக்கத்து வீட்டு ஆன்டி மொட்டைமாடியில் வைச்சிருந்தாங்க. நட்டு ஐந்து வருடங்கள் கழித்துப் மொட்டுவிட்டுப் பூத்தன. நள்ளிரவு தாண்டி மலர்ந்தன. கொஞ்சமே நேரம் தான் இருக்கும் நீங்க சொன்னது போன்று. அவங்க படம் எடுத்து வைச்சிருந்தாங்க. எனக்கும் ஒரு காப்பி கொடுத்தாங்க எங்க இருக்கு என்று பார்க்க வேண்டும்.
நேரிலும் பார்த்திருக்கிறேன். நிஜமாகவே மணமும் அதன் நிறமும். இயற்கையின் அற்புதங்களில் ஒன்று. அவங்க பறிக்கலை. தெய்வீகப் பூ என்று. நிஷாகந்தி என்றும் சொல்வதுண்டு. அவங்க நிஷாகந்தி என்றுதான் சொல்லிக் காட்டினார்க்ள். அதன் பின் பிரம்மகமலம்னும் சொல்வாங்க என்று தெரிந்து கொண்டேன்,
கீதா
ஆம், நிஷாகந்தி என்றும் சொல்வார்கள். இந்த செடிகள் முதன் முறை பூக்க காலம் எடுக்கும். ஒரு முறை பூத்து விட்டால் அடுத்தடுத்த வருடங்களில் ஆண்டுக்கு ஒருமுறை பூத்து விடும். இந்த அபூர்வ மலர் உலகின் வெவ்வேறு பாகங்களில் ஒரே நாளில் பூப்பதும் அதிசயமான நிகழ்வே. மலேசியாவில் இருக்கும் தோழி இதே நாளில் தன் வீட்டில் பூத்த பிரம்மக் கமலங்களைப் படங்களுடன் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். கருத்துகளுக்கு நன்றி கீதா.
நீக்குபிரம்ம கமலம் பூ மிக அழகு. அதன் மணம் மனதை மகிழ்விக்கும்.
பதிலளிநீக்குஆம். தோட்டம் முழுக்க அதன் நறுமணம் வெகுநேரத்திற்கு இருக்கும். ஆனால் என்னவோ இந்தமுறை பூத்தவற்றில் மணமே இல்லை.
நீக்குநன்றி கோமதிம்மா.
அழகிய பூ. இது என்ன வாசனை என்று நான் அறியேன். கொஞ்சம் அதன் வாசனையை கூரியரில் அனுப்புங்களேன்.
பதிலளிநீக்குஆகா :). நன்றி ஸ்ரீராம்.
நீக்கு