Wednesday, May 23, 2012

பத்து பிரம்மக் கமலங்கள் - அபூர்வமாய்ப் பூத்த அதிசய மலர்கள்

#1 ‘பிரம்மக் கமலம்’
ண்டுக்கொரு முறை இரவில் மட்டுமே பூக்கிற, பூத்ததும் ஒருசில மணிகளில் மூடிக் கொண்டு விடுகிற அதிசய மலர்களான பிரம்மக் கமலங்கள் அபூர்வமாகவே ஒரு செடியில் பல மொட்டுகள் விட்டு விரிந்து மலரும். அப்படியான அதிசயம் சென்ற ஞாயிறு, அமாவாசையும் சூரியக் கிரகணமும் சேர்ந்த நாளின் நள்ளிரவில் எங்கள் வீட்டுக்கு கீழ்தளத்தில் வசிப்பவர்கள் வீட்டில் நிகழ்ந்தது.

பிரம்மனின் நாடிக் கொடி என வர்ணிக்கப்படும் இம்மலரின் தாவரயியல் பெயர் Epiphyllum oxypetalum. இமய மலை, வடக்கு பர்மா மற்றும் தென்மேற்கு சைனாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இமய மலைப் பிரதேசங்களில் சுமார் 4500 மீட்டர் உயரத்தில் காணக் கிடைக்கின்றன.

உத்தர்காண்டின் மாநில மலராக இருப்பதுடன், 1982 ஆம் ஆண்டு இந்திய தபால் துறையால் ‘ஹிமாலயன் மலர்கள்’ வரிசையில் தபால்தலையாகவும் வெளியிடப் பட்டிருக்கிறது பிரம்மக் கமலம்.
#2 தெய்வீக மலராகக் கொண்டாடப் படும் இவை மருத்துவக் குணங்கள் நிறைந்தவை. வளைந்த தடிமனான இதன் தண்டுகள் வெட்டுக் காயங்களுக்கு மருந்தாகிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் தடைபடுகிற cerebral ischemia மற்றும் பக்கவாதத்தைக் குணமாக்கவும் பயனாகிறது.திபெத்தியர் இதை மூலிகையாகக் கருதுகிறார்கள்.

சிலருக்கு வளர்க்க ஆரம்பித்து இரண்டு, மூன்று ஆண்டுகளிலே பூப்பது உண்டு. தோழி லதா இந்தச் செடியை ஐந்து ஆண்டுகளாகப் பராமரித்து வளர்த்து வருகிறார். முதன் முறையாக சென்ற வருடம் ஒரே ஒரு மலர் பூத்த போது அந்த இரவிலும் குடியிருப்பிலிருந்த பலரும் கூடி இரசித்துச் சென்றனர். இந்த ஆண்டோ பத்து மொட்டுகள் விடவும் அவரது பரவசத்துக்கு அளவேயில்லை.
#3

முதலில் சிறிதாக இருக்கும் மொட்டுகள் பூக்கவிருக்கும் நாளில் இப்படிப் பெரிதாகி விடுகின்றன.
#4

இரவு ஒன்பது மணி அளவில் இப்படிப் பாதியாக மலர்ந்து, பின் நள்ளிரவை நெருங்கும் சமயத்தில் முற்றிலுமாக முகிழ்ந்து மிக இரம்மியமான மணத்தையும் எழுப்பியன.
#5 இரவில் வேறு விளக்கு வெளிச்சம் இல்லாத சூழலில் ஃப்ளாஷ் உபயோகித்தே படங்களை எடுக்க வேண்டியதாயிற்று.

#6 பூத்த பத்து மலர்களையும் பூரிப்புடனும் பார்த்து ரசிக்கிறார் லதா.அபூர்வமாய் மலருவதால் மட்டுமின்றி, பூக்கும் வேளையில் அதன் அருகிலிருப்பவர்கள் ஆசிர்வதிக்கப்படுவதாகவும் அதிர்ஷ்டம் ஏற்படுமென்றும் ஒரு நம்பிக்கை பரவலாக இருந்து வருவதால் அக்கம்பக்கம் உள்ளவர்களுக்குத் தெரியப்படுத்துவது ஒரு வழக்கமாகவே இருந்து வருகிறது நாடெங்கிலுமே. விரும்பியவர்கள் இரசித்து படமெடுத்துச் சென்றபின் செடியில் வாடவிட வேண்டாமென அவற்றைக் கொய்து பூஜைக்கு வைத்து விட்டார் லதா.

தே நாளில் பெங்களூரின் வேறு சில இடங்களிலும் பிரம்மக் கமலங்கள் பூத்த விவரம் பின்னர் அறிய வந்த போது அமாவாசைக்கும் இதற்கும் தொடர்புண்டோ எனும் எண்ணம் ஏற்பட்டது. தெரிந்தவர் சொல்லலாம். இளவேனிற் காலத்திலேயே பூக்கும் என அறியப்பட்டாலும் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை பூக்கிறது என்றும் சிலர் சொல்கிறார்கள்.

அபூர்வ நிகழ்வின் அழகிய தருணங்களைக் காண அழைத்த தோழிக்கு நன்றி. அவற்றை உங்களுடன் பகிர்வதில் எனக்கு மகிழ்ச்சி:)!
***

53 comments:

 1. அமாவாசைக்கும் இதற்கும் நிச்சயமாகத் தொடர்பில்லை. நட்டு வெச்ச நாலஞ்சு வருஷம் கழிச்சுத்தான் பூக்க ஆரம்பிக்கும்ன்னு சொல்லுவாங்க. ஆனா, இங்கேருந்து பெங்களூருல இருக்கும் தம்பி வீட்டுக்குக் கொண்டு போயி நட்டு வெச்ச செடி ஒரு வருஷத்துலயே பூக்க ஆரம்பிச்சுருச்சு. அதுவும் ஒரு செடியிலேயே பதினஞ்சு பூக்கள்.

  எங்கூட்டுச் செடியில் பூத்ததைத்தான் என்னோட முதல் பதிவா போட்டேன் :-))

  http://amaithicchaaral.blogspot.com/2009/12/aio-aaau.html

  ReplyDelete
 2. nalla thakavalkal...nalla pahirvu... pahirvukku nanri

  ReplyDelete
 3. இங்கே உள்ளவர்கள் அதை தெய்வீக மலரா வழிபடறதுண்டு. அதனால அதைப் பறிக்க மாட்டார்கள். எங்கூட்டுலயும் வருஷா வருஷம் பூக்கும் முதல் பூவுக்கு தூப தீபம் காட்டறதுண்டு.

  ReplyDelete
 4. பதிவுக்கு நன்றி தெய்வீக மலர் நல்லா இருக்கு.

  ReplyDelete
 5. அறிந்திராத மலர்கள்.அபூர்வ படங்கள் கண்கொள்ளா காட்சி.பகிர்தலுக்கு நன்றி.

  ReplyDelete
 6. தெய்வீகத் தன்மை பொருந்திய இந்த மலர்களைப் பத்தி இப்பத்தான் நான் கேள்விப்படறேன். நீங்க எடுத்த அழகான படங்கள் நேர்ல பாக்க முடியலையேங்கற குறையப் போக்கிடுச்சு. சூப்பரோ சூப்பர்.

  ReplyDelete
 7. ஹை நான் அறியாத அபூர்வமான பூ, நன்றி....!!!

  ReplyDelete
 8. அச்சோ என்ன அழகு.
  மலரே தெய்வம் தான்.
  அந்த அம்மா உட்கார்ந்து ரசிப்பதே இன்னும் அழகு.
  ஸ்டெப் பை ஸ்டெப் படம் எடுத்திருக்கும் உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 9. அழகான தெளிவான படங்களோட குடுத்ததுக்கு முதல்ல தாங்க்ஸ். இதுவரைக்கும் நான் தெரிஞ்சிருக்காத இந்தப் பூவைப் பத்தி இப்ப தெரிஞ்சுக்கிட்டேன். அதோட ஸ்மெல் நல்லாயிருக்கும்னு சொல்லியிருக்கீங்களே... நாம அனுபவிக்கலையேங்கற ஒரு குறை தவிர, உங்களின் பதிவு ரொம்ப நல்லா அதை அனுபவிச்ச உணர்வு தந்துச்சு. பிரமாதம்.

  ReplyDelete
 10. சுவாரஸ்யமான தகவல்கள். ஆமா, பூவை டாப் ஆங்கிளில் படம் பிடிக்கவில்லையே ஏன்? (ஹி..ஹி.. நாங்களும் டெக்னிக்கலாப் பேசுவோம்ல...#பூவோட சேர்ந்த நார்!!)

  ReplyDelete
 11. இயற்கையின் அதிசயம் .. :)

  ReplyDelete
 12. அட! என்ன ஒரு அழகு!!!!!!!!

  அருமையான படங்கள். ரசித்தேன்!!!!

  ReplyDelete
 13. அறியாத மலர்கள்,.அபூர்வ படங்கள்.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 14. @ அமைதிச்சாரல்,

  தகவல்களுக்கு நன்றி சாந்தி. ஒரே வருடத்தில் பூத்தது ஆச்சரியம்தான். என் வீட்டில் இருக்கும் செடிக்கு வயது மூன்று மாதம்:)! பார்க்கலாம்.

  / ஒரு செடியிலேயே பதினஞ்சு பூக்கள்/

  பத்துக்கு மேல் பூத்தாலே செய்தியாகி விடுகின்றன நாளேடுகளில். இணையத்திலும் கூட.

  இங்கே கமலங்களை சிவனுக்குப் படைத்தால் விசேஷம் எனக் கருதுகிறார்கள்.

  அட, உங்க முதல் பதிவில் நான்தான் இரண்டாவது நபராக வரவேற்“பூ” கொடுத்திருக்கிறேன்:)!

  ReplyDelete
 15. அமுதா said...
  //nalla thakavalkal...nalla pahirvu... pahirvukku nanri//

  நன்றி அமுதா:)!

  ReplyDelete
 16. Lakshmi said...
  //பதிவுக்கு நன்றி தெய்வீக மலர் நல்லா இருக்கு.//

  நன்றி லக்ஷ்மிம்மா.

  ReplyDelete
 17. ஸாதிகா said...
  //அறிந்திராத மலர்கள்.அபூர்வ படங்கள் கண்கொள்ளா காட்சி.பகிர்தலுக்கு நன்றி.//

  நன்றி ஸாதிகா.

  சென்ற வருடம் இவர்கள் வீட்டில் பூத்தபோதுதான் இந்த மலர் பற்றி முதன்முறையாக நானும் அறிய வந்தேன்.

  ReplyDelete
 18. கணேஷ் said...
  /நீங்க எடுத்த அழகான படங்கள் நேர்ல பாக்க முடியலையேங்கற குறையப் போக்கிடுச்சு. சூப்பரோ சூப்பர்./

  நன்றி கணேஷ்:).

  ReplyDelete
 19. MANO நாஞ்சில் மனோ said...
  //ஹை நான் அறியாத அபூர்வமான பூ, நன்றி....!!!//

  நன்றி மனோ.

  ReplyDelete
 20. வல்லிசிம்ஹன் said...
  //ஸ்டெப் பை ஸ்டெப் படம் எடுத்திருக்கும் உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//

  நன்றி வல்லிம்மா:)!

  ReplyDelete
 21. நிரஞ்சனா said...
  // இதுவரைக்கும் நான் தெரிஞ்சிருக்காத இந்தப் பூவைப் பத்தி இப்ப தெரிஞ்சுக்கிட்டேன். ... நாம அனுபவிக்கலையேங்கற ஒரு குறை தவிர, உங்களின் பதிவு ரொம்ப நல்லா அதை அனுபவிச்ச உணர்வு தந்துச்சு.//

  மகிழ்ச்சி நிரஞ்சனா. நன்றி:)!

  ReplyDelete
 22. ஹுஸைனம்மா said...
  //சுவாரஸ்யமான தகவல்கள். ஆமா, பூவை டாப் ஆங்கிளில் படம் பிடிக்கவில்லையே ஏன்?//

  ரொம்ப மென்மை என்பதால் யாரும் தொட அனுமதியில்லை:)! எடையினால் சரிந்தே பூக்கின்றன. மொட்டுகள், மற்றும் பாதிமலர்ந்த காட்சி எல்லாம் எங்கள் மற்றும் அவர்களின் வீட்டு சன்னல் வழியே எடுத்தவை. முழுதாக மலர்ந்த பின்னர் உதிர்ந்திடுமோ எனப் பயந்தபடியேதான் உட்பக்கமாகத் திருப்பி விட்டார்கள். என் வீட்டில் பூக்கும் போது தூக்கிப் பிடித்து டாப் ஆங்கிளில் எடுத்துப் பகிர்கிறேன். அதுவரைப் பொறுத்திருக்க:)!

  ReplyDelete
 23. வரலாற்று சுவடுகள் said...
  //இயற்கையின் அதிசயம் .. :)//

  வருகைக்கு நன்றி:)!

  ReplyDelete
 24. துளசி கோபால் said...
  //அட! என்ன ஒரு அழகு!!!!!!!!

  அருமையான படங்கள். ரசித்தேன்!!!!//

  மகிழ்ச்சியும் நன்றியும்:)!

  ReplyDelete
 25. Kanchana Radhakrishnan said...
  //அறியாத மலர்கள்,.அபூர்வ படங்கள்.
  பகிர்வுக்கு நன்றி.//

  மகிழ்ச்சியும் நன்றியும்.

  ReplyDelete
 26. அருமையான புகைப்படங்கள். அதுவும் பிரம்மக்கமலப்பூவின் தகவல்களுடன் சூப்பர்.

  ReplyDelete
 27. அன்பின் ராமலஷ்மி,

  அருமையான பதிவு. அழகான மலர்கள். பல புதிய தகவல்கள். வாழ்த்துகள்.

  அன்புடன்
  பவள சங்கரி.

  ReplyDelete
 28. அறியாத தகவல்...அருமையான பகிர்வு...நன்றி!!!

  ReplyDelete
 29. பிரம்மக் கமலப் பூ - ஆச்சர்யமான தகவல். சென்ற வருடமும் பூக்கள் பற்றிப் பதிவிட்டீர்களோ...(பின்னூட்டம் படித்தபின் எழுந்த சந்தேகம்) அழகிய பகிர்வு.

  ReplyDelete
 30. இதுவரை அறிந்திராத தகவல் + படங்கள்.. நன்றி.

  ReplyDelete
 31. beautiful photos.. time lapse விடியோ எடுத்துப் போட்டிருக்கலாமே?
  G.M.Balasubramaniam தன்னுடைய பதிவில் இந்தப்பூவைப் பற்றி எழுதியிருந்தார்.

  ReplyDelete
 32. இந்த பூவைபற்றி இப்பதான் கேள்விபடுகிறேன்...தகவலுக்கும்,அழகான புகைப்படங்களுக்கும் மிக்க நன்றிக்கா!!

  ReplyDelete
 33. இயற்கையின் நிகழ்வை, அழகாக புகைப்படங்களுடனும், தேவையான தகவல்களுடனும், தேடல்களுக்கான கேள்விகளுடனும் தொகுத்து வெளியிட்ட விதம் அருமை.

  ReplyDelete
 34. பிரம்மக் கமலப் பூ பற்றி இப்போதுதான் அறிகிறேன். அழகழகான படங்களோடு விளக்கமானப் பதிவிட்டமைக்கு மிகவும் நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 35. அபூர்வ மலர் உங்கள் பகிர்வில் நிறைவைத் தருகின்றது.

  ReplyDelete
 36. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
  நன்றி

  வலையகம்

  ReplyDelete
 37. விச்சு said...
  //அருமையான புகைப்படங்கள். அதுவும் பிரம்மக்கமலப்பூவின் தகவல்களுடன் சூப்பர்.//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 38. நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

  //அருமையான பதிவு. அழகான மலர்கள். பல புதிய தகவல்கள். வாழ்த்துகள்.//

  நன்றி பவளா.

  ReplyDelete
 39. Nithi Clicks said...
  //அறியாத தகவல்...அருமையான பகிர்வு...நன்றி!!!//

  நன்றி நித்தி.

  ReplyDelete
 40. ஸ்ரீராம். said...
  //பிரம்மக் கமலப் பூ - ஆச்சர்யமான தகவல். சென்ற வருடமும் பூக்கள் பற்றிப் பதிவிட்டீர்களோ...(பின்னூட்டம் படித்தபின் எழுந்த சந்தேகம்) அழகிய பகிர்வு.//

  பூக்களைப் பற்றிதான் அடிக்கடி பதிவுகள் இட்ட வண்ணமாய் உள்ளேனே:)), லால்பாக் கண்காட்சி பதிவுகள் உட்பட. இரண்டு வருடம் முன் P&S-ல் மொட்டு ஒண்ணு மெல்ல மெல்ல.. விரிவதையும் பதிந்திருந்தேன். ஆனால் பிரம்மக் கமலம் பற்றி இதுதான் முதல் பதிவு. நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 41. ரிஷபன் said...
  //இதுவரை அறிந்திராத தகவல் + படங்கள்.. நன்றி.//

  நன்றி ரிஷபன்.

  ReplyDelete
 42. அப்பாதுரை said...
  //beautiful photos.. time lapse விடியோ எடுத்துப் போட்டிருக்கலாமே?//

  செய்திருக்கலாம்! தோன்றவில்லை! இன்னொருவர் இல்லம் என்பதால் இடைஞ்சலாகவும் இருக்கக் கூடாது. என் வீட்டு செடி எப்போது பூக்கிறது பார்க்கலாம்:)! நன்றி.

  //G.M.Balasubramaniam தன்னுடைய பதிவில் இந்தப்பூவைப் பற்றி எழுதியிருந்தார்.//

  பெங்களூரைச் சேர்ந்த பெரியவரா? தோழி ஷைலஜா சமீபத்தில் இவரைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள். வலைப்பூ பெயர் தர இயலுமா?

  ReplyDelete
 43. S.Menaga said...
  //இந்த பூவைபற்றி இப்பதான் கேள்விபடுகிறேன்...தகவலுக்கும்,அழகான புகைப்படங்களுக்கும் மிக்க நன்றிக்கா!!//

  நன்றி மேனகா.

  ReplyDelete
 44. T.N.Elangovan said...
  //இயற்கையின் நிகழ்வை, அழகாக புகைப்படங்களுடனும், தேவையான தகவல்களுடனும், தேடல்களுக்கான கேள்விகளுடனும் தொகுத்து வெளியிட்ட விதம் அருமை.//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 45. கீதமஞ்சரி said...
  //பிரம்மக் கமலப் பூ பற்றி இப்போதுதான் அறிகிறேன். அழகழகான படங்களோடு விளக்கமானப் பதிவிட்டமைக்கு மிகவும் நன்றி ராமலக்ஷ்மி.//

  வாங்க மஞ்சரி. மகிழ்ச்சியும் நன்றியும்.

  ReplyDelete
 46. மாதேவி said...
  //அபூர்வ மலர் உங்கள் பகிர்வில் நிறைவைத் தருகின்றது.//

  நன்றி மாதேவி.

  ReplyDelete
 47. @ வலைஞன்,

  தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 48. படமும் தகவலும் நன்று!

  ReplyDelete
 49. @ அமைதி அப்பா,

  நன்றி.

  ReplyDelete
 50. எங்கள் இல்லத்திலும் அன்று பதினைந்து பிரம்ம கமல்ப்பூக்கள் பூத்தன.

  அயல் நாட்டிலிருக்கும் மகன்களுக்கு ஸ்கைப்பில் காட்டி மகிழ்ந்தோம்..

  பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 51. @ இராஜராஜேஸ்வரி,

  அதே நாளில் பல இடங்களில் பூத்ததும் ஆச்சரியமான ஒன்றே. 15 மலர்ந்ததில் மகிழ்ச்சி:)! நன்றி இராஜராஜேஸ்வரி.

  ReplyDelete
 52. தங்களின் பிரம்மக்கமலம் பற்றிய கட்டுரை மற்றும் வண்ணப் படங்கள் மூலம் நான் அறிந்திடாத பல செய்திகளைத் தெரிந்து கொண்டேன். ஒரு சின்ன வேண்டுகோள்! மலர்களைப் பற்றிய தகவல் தெரிவிக்கும் போது அதன் செடி, கொடி அல்லது மரத்தோடு ஒரு படம் தாருங்கள். அப்போதுதான் அவைகளை சுலபமாக அடையாளம் காண இயலும். நன்றி!

  ReplyDelete
 53. It's like any other flower,not noticed commonly,it's circadian rhythm nocturnal flowering.Other natural environmental factors decides it's survival and propagation.Due to rarity the spiritual attachment with the maker adds sanctity to this species..It's wonder post for awareness.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin