வெள்ளி, 22 ஜூன், 2018

இன்று பூத்த பிரம்மக் கமலம் - இயற்கையின் அதிசயம்

இப்போது பூத்து நிற்கும் பிரம்மக் கமலம் 
#1

பிரம்மக் கமலம் ஆண்டுக்கு ஒரு முறையே மலருமெனக் கூறப்படுகிறது. என் வீட்டில் அவ்வாறே பூக்கிறது. 2016_ல்
எடுத்த படங்களுடனான பதிவு தகவல்களுடன் இங்கே.

சென்ற ஆண்டு அருகிலிருக்கும் செம்பருத்தி மரத்துக்குப் பின் பக்கமாக மொட்டு விட்டதைக் கவனிக்க முடியாமல், பூத்து மறுநாள் மூடிக் கொண்ட பின்னரே பார்க்க நேர்ந்தது. ஆனால் இந்த வருடம் ஓரிரு நாட்களாகவே இரண்டு மொக்குகள் செம்பருத்தி மரத்தைத் தாண்டி தலையை நீட்டி ‘எங்களைப் பார்.. எங்களைப் பார்’ எனக் காற்றிலாடிக் கொண்டிருந்தன. அதிலொன்று நேற்றிரவு பதினொரு மணியளவில் பூக்கவும் பரவியது தோட்டம் முழுக்க நறுமணம்.

#2
நேற்று பூத்த மலரும்.. இன்றைய மலரின் மொக்கும்


#3


#4

அருகிலிருந்த மொட்டு, இன்று மாலையே மெல்ல விரியத் தொடங்கி முன்னிரவில், ஒன்பது மணியளவிலே பிரகாசமாக மலர்ந்து விட்டிருந்தது  (முதல் படம்).

எத்தனை அழகு! இரவில் மட்டுமே பூக்கும் இயற்கையின் இந்த அதிசயம் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத அனுபவம்.
***

என் வீட்டுத் தோட்டத்தில்.. - (பாகம் 30)

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
*பத்து பிரம்மக் கமலங்கள் (2012)
*பவுர்ணமி நிலவைப் போல் பிரகாசித்த பிரம்மக் கமலம்! (2016)
*ஆண்டுக்கு ஒருமுறை மலரும் அபூர்வ மலர் - தினமலர் பட்டம் (2016)

13 கருத்துகள்:

 1. ​மிகவும் அழகாய் இருக்கிறது. இரவில்தான் மலருமா? இதுவரை இந்த மலரை நான் பார்த்ததில்லை. மணமும் தெரியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். இரவில் மலர்ந்து காலையில் மூடிக் கொண்டு விடும்.

   நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. அபூர்வ மலர் ராமலக்ஷ்மியின் கை வண்ணத்தில் மிக அழகாய் காட்சி அளிக்குது.
  பிரம்மக் கமலம் பேரும் அழகு. உங்களுக்காக பிரம்மன் படைத்தானோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கோமதிம்மா. இறைவனின் படைப்புகள் எல்லாம் அதிசயமே.

   நீக்கு
 3. விருப்பம், தேடல், முயற்சி, சிரத்தை, கவனம் மற்றும் மதிப்பு அறிந்த இடத்தில்தான் அழகிய மலர்கள் நறுமணம் வீசி மலர்கின்றன.மிகவும் அழகாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 4. அழகான மலர். படம் எடுத்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. முதல் படம் வெகு அழகு.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin