'கனவுடன் விரியக் காத்திருக்கும் ஒரு சிறிய ரோஜாவால், உலகை நம்பிக்கையின் நிறங்களால் வண்ணமயமாக்கிட முடியும்.'
#2
'ஒருவருக்கு களையாகத் தோன்றுவது மற்றொருவருக்கு அழகிய காட்டுப்பூவாகக் காட்சி தரும்.'
#3
#4
'முழு மலர்ச்சி என்பது ஆரம்பமோ அல்லது முடிவோ அன்று. அது அனைத்து வளர்ச்சியும் ஒன்றாக வெளிப்படும் தருணம்.'
#5
'வேரூன்றி நில்லுங்கள். வலிமையுடன் வளருங்கள். உங்கள் அடிப்படை இயல்புகளை உலகத்துடன் பகிர்ந்திடுங்கள்.'
சென்ற ஞாயிறு பதிவில் பிரம்மக் கமலத்தின் மொக்குகளையும், பூத்த முதல் மலரின் படங்களையும் பகிர்ந்திருந்தேன். அடுத்தடுத்த தினங்களில் மற்ற மொக்குகளும் மலர்ந்தன. ஃபேஸ்புக் மற்றும் ஃப்ளிக்கரில் பகிர்ந்த அப்படங்களும் சேமிப்பிற்காகவும் உங்கள் பார்வைக்கும் இங்கே:
நாள்: 2
#6
#7
***
*
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 212
*
மலர்களின் படங்கள் அருமை. வரிகள் ஊக்கமளிக்கின்றன. பிரம்ம கமலம் வளர, மலர இயற்கை வரமளித்திருக்க வேண்டும்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குநம்பிக்கையின் நிறங்கள் எல்லாம் அழகு.இயற்கையின் பிரார்த்தனை அற்புதம்.
பதிலளிநீக்குநன்றி கோமதிம்மா.
நீக்குபடங்கள் அத்தனையும் என்ன சொல்ல என்று தெரியவில்லை. அவ்வளவு அழகு.
பதிலளிநீக்குஒருவருக்குக் களை என்று தோன்றுவது மற்றொருவருக்கு அழகு என்று தோன்றலாம். // உண்மை.
என் கண்களுக்கும் எதைப் பார்த்தாலும் அழகாகத் தெரிகிறதே!!!!! பூங்காவில் இருக்கும் ஒரு சின்ன பாறைக் கல்லும் அதன் அருகில் இருக்கும் ஒற்றைச் செடியும் கூட அழகாகத் தெரிகிறது!!!!!
பிரம்ம கமலம் இரட்டை இளவரசிகள் அழகு! இயற்கையின் அற்புதம்! இயற்கையில் எதுதான் அற்புதம் இல்லை?!
படங்கள் அனைத்தையும் ரசித்துப் பார்த்தேன். நீங்கள் எடுத்திருக்கும் விதத்தையும்!
கீதா