செவ்வாய், 17 ஜூன், 2025

கோல்கொண்டா கோட்டை ( ii ) - ஹைதராபாத் (5)

காலத்தைக் கடந்த கோட்டை – கோல்கொண்டா ( i ) - “இங்கே

நான்கு நூற்றாண்டுகளைக் கடந்து விட்டிருந்த போதிலும், ஆங்காங்கே சிதைந்து போயிருப்பினும், கட்டுமானக் கலையின் அற்புதமான அழகும் பழங்காலத்தைய பொறியியல் திறனும்  ஒவ்வொரு இடத்திலும் வெளிப்படவே செய்கிறது. 

#1

வெற்றி நுழைவாயிலின் வெளிப்புறம்..

#2

இடப்புறச் சுவர்..

#3

வலப்புறச் சுவர்

#4 
கோட்டையின் சுற்றுச் சுவர்

#5
கோட்டையை நோக்கி..

#6
கோட்டைக்கு இட்டுச் செல்லும் 
மற்றுமோர் பாதை..
#7
கோட்டையின் ஒரு பகுதி..

#8
கோட்டைக்கு எதிரே இருந்த பரந்த தோட்டம்.
தொலைவில் தெரிவது சுற்றுச் சுவர்.

#9
சென்ற பதிவில் பார்த்த 
பாதுகாப்புப் பாதையின்
எதிர்த் திசை..

#10
பாதுகாப்புப் பாதைக்குள் நுழைவதற்கான வாயில்..
புரிதலுக்காக தொலைவில் இருந்து (long shot) எடுத்தது..

#11
எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க கோட்டையின்
சுற்றுச் சுவரையொட்டி முதல் தளத்தில் அமைந்த மாடங்கள்

#12


#13
பல அறைகளையும், சன்னல்களையும் கொண்ட ஆயுதக் கிடங்கு  

#14

வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மற்றும் கோட்டைகளைப் பார்வையிடுவது அரசர்களின் வாழ்க்கை, கட்டிடக்கலை மற்றும் அவர்களது போர் உத்திகளை அறிந்து கொள்ள உதவுகின்றன. முன்னோர்களின் சாதனைகள் மற்றும் தியாகங்களை நினைவூட்டுகின்றன.  ஹைதராபாத் பயணப் பதிவுகள் வரிசையில் அடுத்ததாக செளமஹல்லா மாளிகை இடம் பெறும்.

***

7 கருத்துகள்:

  1. இப்போது நாம் கட்டும்  கட்டுமானங்கள் இந்த மாதிரி காலத்தைக் கடந்து நிற்குமா என்பது சந்தேகம்தான்.  முன்னோர் இந்த மாதிரி விஷயங்களிலாவது ஊழல் இல்லாமல் இருந்திருப்பார்கள்.  அழகிய படங்கள்.  கட்டப்பட்ட புதிதில் அது வண்ணமயமானதாக இருந்திருக்கலாம்.  அறைகளும், ஜன்னல்களும் பார்க்க ரம்யமாக இருந்திருக்கலாம்.  அழகிய மலர்த் தோட்டங்கள் சுற்றிலும் அமைந்திருந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், அவர்கள் கட்டுமானத்தின் சிறப்பு அம்சங்கள் யாவும் வியக்க வைப்பதாக இருக்கிறது. கருத்துகளுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. சென்ற பதில் பாதுகாப்புப் பாதை நினைவிருக்கிறது. எதிர்த்திசை படம் அட்டகாசம். ரொம்ப அழகாக இருக்கிறது,

    அதோடு அடுத்த லாங்க் ஷாட்டும்! மாடங்கள், முதல் படம் வெளிப்புறம் எல்லாமே செமையா இருக்கு

    பல அறைகளையும் சன்னல்களையும் கொண்டிருக்கும் கட்டிடம் பிரம்மாண்டம். எப்படிப் பராமரித்திருப்பார்கள் என்ற கேள்வியும். இப்போது வரை இவ்வளவு வலிமையாக இருக்கின்றன இல்லையா?

    உங்களது மற்றொரு தளமான, புகைப்படக் கலை பற்றி தமிழ் தளத்தையும் வாசிக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துகளுக்கு நன்றி கீதா. அந்தப் பிரமாண்டக் கட்டிடம் ஆயுதக் களஞ்சியமாக இருந்திருக்கிறது என்பதை அறிந்து பதிவிலும் தகவலை சேர்த்துள்ளேன்.

      நீக்கு
  3. தமிழில் புகைப்படக் கலை பற்றிய தளம், நீங்கள் கொடுத்திருப்பது என்று வந்திருக்க வேண்டும். உங்கள் தளம் னு சொல்லிவிட்டேன். நீங்களும் எழுதுகிறீர்களா அதில்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒளிப்படக் கலைஞர்கள் சிலர் ஒன்றாக இணைந்து நடத்திய தளம். தமிழ்மணம் காலத்தில் பலருக்கும் இக்கலையில் ஆர்வம் ஏற்பட உந்துதலாகப் பல பாடங்களையும் போட்டிகளையும் நடத்திய தளம். பின்னர் நானும் அதில் ஆசிரியராக இணைந்தேன். அந்தத் தளத்தைப் பற்றி விரிவாக அறிந்திட கீழ் வரும் இந்தப் பதிவு உங்களுக்கு உதவக் கூடும்:

      https://tamilamudam.blogspot.com/2012/08/pit.html

      நீக்கு
  4. கோல்கொண்டா கோட்டை படங்கள் அனைத்தும் மிக அருமை.
    பழைய கோட்டைகள் பார்வையியும் போது நீங்கள் சொல்வது போல கட்டிடகலை, வாழ்வியல் முறைகள், மற்றும்
    அரசர்களின் போர் திறமை, மற்றும் அவருக்கு உண்மையாக உழைத்த போர் வீரர்கள் தியாகத்தை பறைசாற்றிக் கொண்டே இருக்கும் என்பது உண்மை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin