புதன், 20 ஜூலை, 2016

பவுர்ணமி நிலவைப் போல் பிரகாசித்த பிரம்மக் கமலம்!

#1
பிரம்மக் கமலம் ( Epiphyllum oxypetalum) மலரைக் குறித்து ஏற்கனவே 2012 ஆம் ஆண்டில் விரிவாக இங்கே.. “பத்து பிரம்மக் கமலங்கள் -  அபூர்வமாய்ப் பூத்த அதிசய மலர்கள்” பகிர்ந்திருக்கிறேன். அதைத் தொடர்ந்து சில வாரங்களில் என் வீட்டிலும் ஒரு தொட்டியில் ஓர் இலையை நட்டு வைத்தேன். இலையின் விளிம்புகளிலிருந்து மேலும் இலைகளும், தண்டுகளுமாய் துளிர்த்தன. அதில் ஒரு தண்டு மட்டும் சற்று தடிமனாக, மெல்ல மெல்ல உயரமாக, சுமார் எட்டடி அடி உயரத்துக்கு வளர்ந்து, வளைந்து வீட்டு சன்னல் வழியாக எட்டிப் பார்த்து  ‘நான் இங்கு நலமே.. நீ அங்கு நலமா..’ என விசாரித்தபடியே இருந்ததே தவிர ஒரு மொட்டு கூட விடவில்லை நான்கு வருடங்களாக. இரு மாதம் முன்னர் வீடு மாறி வந்த போது மற்ற தொட்டிச் செடிகளை அங்கிருந்த நண்பர்களுக்கு கொடுத்து விட்டாலும் இதை மட்டும் கொண்டு வந்து இங்குள்ள தோட்ட மண்ணில் நட்டு வைத்தேன். கொடி போல் வளைந்தபடி இருந்த செடியை ஒரு முருங்கை மரக் கம்பை நட்டு அதில் கட்டியும் வைத்தேன்.

நான்கு வருடக் காத்திருப்புக்குப் பின், அட, இரண்டு மொக்குகள் விட்டிருந்தது செடி, புதிய இடத்தில்.. புதிய மண்ணில்..

 மலர் விரியும் அழகு பனிரெண்டு படங்களாக உங்கள் பார்வைக்கு..

மொக்கு, நான்கைந்து நாட்கள் முன்னர்..
#2


இன்று காலையில்..
#3
#4



அடுத்த மொட்டு. காலையில் இப்படிக் காட்சியளித்த இந்த மொட்டே இன்று பூத்தது.

#5

நேற்று ஆடிப் பவுர்ணமி நிலவைப் படம் பிடிக்க வேண்டுமென நினைத்திருந்தேன். மேக மூட்டத்தினால் முடியவில்லை. இன்றாவது முயன்றிடலாமெனப் பார்த்தால் மாலையிலிருந்தே நல்ல மழை. நிலவைப் பிடிக்க முடியாத ஏமாற்றத்தைப் போக்கி விட்டது முழு நிலவைப் போல் பிரகாசமாய் பூத்த பிரம்மக் கமலம்.

மழை தூறிக் கொண்டேயிருக்க, மெல்ல மெல்லப் பூக்கத் தொடங்கியது மலர் எட்டரை மணி அளவில்..

#6

கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து..
#7

#8


குவளை அகன்று பெரிதாகி..
 #9

முழுதாய் மலர்ந்து..

# 10


பிரகாசிக்கும் பிரம்மக் கமலம்
# 11

இந்த நிலை வரைக்கும் மலர சுமார் இரண்டு மணி நேரம் ஆயிற்று. பார்த்துக் கொண்டேயிருக்கையில் விரியும் அழகு அற்புதமாய் இருந்தது. பூவின் நறுமணம் இரம்மியமாக இருந்தது. மழை இல்லாமலிருந்தால் முக்காலியில் கேமராவை நிறுத்தி வீடியோவாக எடுத்திருக்கலாம்.

நிலவைப் போல் ஒளிர்கிறதா இல்லையா என நீங்கள்தான் சொல்ல வேண்டும்:)!
#12

***

 என் வீட்டுத் தோட்டத்தில்.. (பாகம் 1)



16 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. திருத்தி விட்டேன். Saussurea obvallata எனக் கருதப்படுவது குழப்பத்தினால் என்பதையும் இங்கே.. https://en.wikipedia.org/wiki/Saussurea_obvallata தெரிந்து கொண்டேன்:). நன்றி.

      நீக்கு
  2. என் வீட்டில் ஒரு செடி பூக்க மொட்டு விட்டிருந்தது. மலர்வதைப் பார்க்க பிரம்ம முகூர்த்தத்குக்காக காத்திருக்க முடியவில்லை. மலரைக் காணாமலேயே உதிர்ந்து விட்டது மலையாளத்தில் இதை நிஷாகந்தி என்பார்கள் இன்னொரு மொட்டு பூவாகும்போது பார்க்காமல் விடப் போவதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த முறை முயன்றிடுங்கள். இப்போது இவை பூக்கிற காலமென நினைக்கிறேன். வேறொருவரும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கக் கண்டேன்.

      நீக்கு
  3. பொறுமையாய்க் காத்திருந்து படம் பிடித்திருக்கிறீர்கள். அருமை. மண் மாறியதும் மலர்ந்து விட்டது போலும்!

    பதிலளிநீக்கு
  4. இந்த நிகழ்வை முன்பே உங்கள் பதிவில் பார்த்த ஞாபகமிருக்கிறதே என்று நினைத்துக் கொண்டே வந்தேன், விடை கிடைத்துவிட்டது. இது உங்க சொந்த தோட்டம் என்பதால் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்..

    இந்தப் பூ ஓர் இரவு மட்டுமே பூத்திருக்கும், காலையில் உதிர்ந்து விடும் என்பது உண்மையா... அதையும் பார்த்து, படம் பிடித்தீர்களா?

    பூ தலைகீழாகப் பார்த்தால்தான், அந்த பிரம்மனின் சயன நிலையும், நாகமும் தெரியும் என்று நினைக்கிறேன். இந்தப் பூ அப்படி மலர்ந்திருக்கிறது போல...

    வீடும் மாறிட்டீங்களா.... நல்லது.. வசதியாக இருக்கா... பழைய வீட்டின் வேலையாட்கள், கடைகள், போக்குவரவு வசதிகள் போல இங்கும் அமைந்ததா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சிதான். இருக்காதே பின்னே. நான்கு வருடக் காத்திருப்புக்குப் பின் மலந்ததாயிற்றே:)!



      ஆம். இது ஓர் இரவு மட்டுமே மலர்ந்திருக்கும். ஆனால் காலையில் உதிர்ந்து போவதில்லை. அப்படியே மொக்கு நிலைக்கு மூடிக் கொள்கிறது. முதல் பூவைப் பறித்து பூஜைக்கு வைத்து விட்டேன். காலையில் மூடி விட்டிருந்தது. நேற்று பூத்த இரண்டாவது மலரை செடியிலேயே விட்டிருந்தேன். அதுவும் இன்று காலையில் மூடிக் கொண்டது. மாலை வரையிலும் வாடவில்லை. உங்களுக்காக இப்போது எடுத்த படம் வந்து கொண்டேயிருக்கிறது, மெயிலில்:).

      பூவுக்கு வெகு அருகாமையில் தோட்டத்து பெடஸ்டல் மின் விளக்கு இருந்தபடியால் அதன் ஒளி, உள் பாகத்தை (நாக வடிவம் தெரிகிற மாதிரி ) எடுக்க உதவியாய் இருந்தது. பிரம்மாவின் சயன நிலையை எல்லாம் என்னால் யூகிக்க முடியவில்லை.

      வீடு மாறிய விவரத்தை சென்ற தூறல் பதிவில் அப்டேட் செய்திருக்கிறேன். இங்கே பார்த்திடுங்கள். ஆம், முதலில் சற்று சிரமமாக இருந்தாலும் இப்போது எல்லா வசதிகளும் சரிவர அமைந்து விட்டன:).

      நன்றி ஹுஸைனம்மா!

      நீக்கு
  5. எத்தனை அழகான பூ...

    உங்கள் கைவண்ணத்தில் இன்னும் அழகாக ஜொலிக்கிறது....

    ஒவ்வொரு படமும் மிக நுட்பம்....

    உங்கள் படங்களை காண காண என்னுள்ளும் இவ்வாறு படம் எடுக்க வேண்டும் என்னும் ஆசை மிளிர்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அனுராதா. பழக்கத்தை விடாமல் தொடர்ந்து எடுத்து வாருங்கள். மாமல்லபுர சிற்பங்களை அழகாக எடுத்திருக்கிறீர்கள்.

      நீக்கு
  6. மலரின் அழகை தங்கள் ரசனை விஞ்சிவிட்டது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. வாவ்..... படிப்படியாக படங்கள்... உங்களுக்கு பொறுமை மிக அதிகம் என்று தெரிகிறது.

    அனைத்துமே அழகு. நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin