ஞாயிறு, 30 ஜூலை, 2023

இயற்கை எனும் கலைவடிவம்

  #1

"உங்கள் வெளிச்சத்தின் சக்தியில் நில்லுங்கள்."

#2
“நேர்மறை எண்ணங்களைப் பரப்புங்கள். 
எவ்வளவு பெரிது, எவ்வளவு சிறிது என்பது 
ஒரு பொருட்டல்ல.” 
_ Beyoncé Knowles

#3
"ஒற்றை ரோஜா ஆகலாம் ஒரு தோட்டமாக..!" 
_ Leo Buscaglia


#4
 "சில விஷயங்கள் நடப்பதற்காக 
அழுத்தம் கொடுப்பதைக் காட்டிலும் 
பொறுமை காப்பது சிறந்தது."


#5
"உங்கள் மனம் சும்மாவேனும் 
முன்னும் நோக்கியும் பின் நோக்கியும் 
ஒரே நேரத்தில் கவனத்தைச் செலுத்த இயலாது." 
_ Daryn Kagan


#6
“தானே ஒரு கலைவடிவம், 
இயற்கை!” 
_ Nitin Namdeo

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் 171
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
**

Professional Mode In Facebook:
உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்கு இந்தத் தகவல் உபயோகமாகலாம். ஃபேஸ்புக்கில் நமது பதிவுகளை எத்தனை பேர் பார்த்தார்கள் எனும் விவரங்கள் தெரிய உதவியாக இருக்கிறது Professional Mode. அது நமக்குத் தேவையில்லை எனில் பழைய முறைக்கு எப்போது வேண்டுமாயினும் திரும்பிக் கொள்ளலாம். Professional Mode தனிப்பதிவுகளுக்கு மட்டுமின்றி, கடந்த ஒரு மாதப் பார்வையாளர்களையும் வேறு பல தகவல்களையும் காட்டும். அந்த முறைக்கு சில மாதங்களுக்கு முன்னர் மாறினேன்.  பதிவொன்றுக்கு (பெரும்பாலும் எனது ஃப்ளிக்கர் படங்களின் பகிர்வே) சராசரியாக 250 லிருந்து 300 பார்வைகள், சில படங்களுக்கு 700 வரை போல வருகின்றன. இப்பதிவின் முதல் படமான ரோஜாவுக்கு சற்று அதிக வரவேற்பு இருந்ததைக் கவனிக்க முடிந்தது. மேலும் ஒரு பெட்டூனியா மலருக்கு 18 ஆயிரம் பார்வைகள் வந்திருந்தன. அதை மற்றுமொரு ஞாயிறு பதிவில் பகிருகிறேன். ஃப்ளிக்கரில் ஆயிரக்கணக்கில் பார்வைகளைப் படங்கள் பெறுவது வழக்கமே. ஃபேஸ்புக்கிலும் அப்படிப் பார்க்கிறார்கள் என்பது எனக்கு சற்றுப் புதிதாக இருந்ததால் இந்தப் பகிர்வு :)!
***

7 கருத்துகள்:

  1. வீட்டுத்தோட்டத்தில் பூத்த பூக்கள் அழகு. அவை சொன்ன வாழ்வியல் சிந்தனைகள் அருமை.
    நேர்மறை எண்ணங்கள் பரப்புவோம்.

    பதிலளிநீக்கு
  2. ​படங்களும், வரிகளும் அருமை, வழக்கம்போல. பேஸ்புக் பற்றிய தகவல் உபயோகமானது. நான் இப்போதுதான் அறிகிறேன். அதை எப்படி செயல்படுத்துவது என்று பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. பேஸ்புக் தகவல் அருமை. நான் நண்பர்களுக்கு மட்டும் என்று வைத்து இருக்கிறேன். அப்போது பார்க்க முடியாது அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர்களுக்கு மட்டுமே என்றாலும் ப்ரொஃபஷனல் மோட் வைத்துக் கொண்டு பார்வையாளர் எண்ணிக்கையைப் பார்க்க முடியும் என இணையத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. முயன்று பாருங்கள்.

      நீக்கு
  4. வாசகங்களும் தோட்டத்தில் மலர்ந்த மலர்களும் அழகு.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin