புதன், 12 ஜூலை, 2023

எல்லைக்கோடு - புன்னகை இதழ்: 81

  

எல்லைக்கோடு

ச்சங்களை வென்று
அடைகிறான் எல்லைக்கோட்டை.
மற்றவர் மீதான அச்சம்
தன்னைக் குறித்த அச்சம்
அவற்றின் மேல் படர்ந்த
அடர்ந்த இருள் 
ஆகியன கடந்து
அடைகிறான் எல்லைக்கோட்டை.
அங்கே நிறைவுறுகிறது
அறிந்தன யாவும்.
அதுவரை கேளாதவையும்
அதுவரை காணாதவையும்
மயக்கும் மர்மமாக
மறுபக்கத்தில்.
அதுவரை அடையாதவையும்
அதுவரை அனுபவிக்காதவையும்
தித்திக்கும் வாய்ப்புகளாக
தெரிகின்றன தூரத்தில்.
அறியாதவற்றை அறிய
ஆயத்தமாகின்றவன்
தனது ஆசைகளை அங்கே
புனிதமாக்குகின்றான்.
அனைத்திற்கும் மேலாக
புரிந்து வைத்திருக்கிறான்:
எல்லைக்கோட்டைக் கடக்கும் பொழுது
காத்திருப்பது இரண்டே முடிவுகள்தாம்
ஒன்று சிக்கி அழிதல்
மற்றொன்று, அதன் பின் என்றென்றும்
மகிழ்ச்சியாக வாழ்தல்.

*

படம்: இணையத்திலிருந்து.. நன்றியுடன்..
*
மே 2023, புன்னகை இதழ் 81_ல்..
நன்றி புன்னகை!

***

8 கருத்துகள்:

  1. ​// எல்லைக்கோட்டைக் கடக்கும்போது காத்திருப்பது ரியாண்டே முடிவுகள்தான்... ஒன்று சிக்கி அழிதல், மற்றொன்று அதன்பின் என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ்தல் //


    நம்மூர் தமிழ்ப்படங்களில் காதல் கைகூடி திருமணம் ஆன கையேடு சுபம், நிறைவு என்று ஸ்லைட் போடுவது போல...!

    பதிலளிநீக்கு
  2. நன்றாக இருக்கிறது கவிதை. எல்லைக்கோட்டை தெரிந்து கொண்டு என்றென்றும் மகிழ்ச்சியாக வாழட்டும்.

    பதிலளிநீக்கு
  3. மிக மிக ஆழமான அர்த்தம், தத்துவம் பொதிந்த கவிதை வரிகளை ரசித்தேன். மிகப் பெரிய சவால்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அச்சம் முடிவடைகையில் வாழ்க்கை பயணம் துவங்குவது உலகப் புகழ் பெற்ற "Ithaca" கவிதையை நினைவூட்டுகிறது.

    //சிக்கி அழிதல் - என்றென்றும்
    மகிழ்ச்சியாக வாழ்தல்//, இவற்றுள் எது வாழ்வில் அமையும் என்பதை "தெரிவு செய்தல் (choice/decision making)" முடிவு செய்கிறது எனத் தோன்றுகிறது.

    தெரிவு செய்தல் என்பதை, மனதில் பதிவாகியுள்ள அனுபோக உணர்வுகள் ( experienced enjoyment emotions) வலிமையுடன் கட்டுப்படுத்துவதாக அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களது மனவளக்கலை நூலில் வாசித்த நினைவு.

    வாழ்க்கை பயணத்தில் பல எல்லைக்கோடுகள். ஒவ்வொரு சந்திப்பிலும் இரு வழிகள். பயணப்பட்ட பின்னர் தான் பல சமயங்களில் அவை வீண் அலைச்சல் எனப் புரிகிறது:)

    மிக ஆழ்ந்த மறைபொருள் வாழ்க்கை பாடத்தை வரிகளுக்குள் மறைத்து வைத்து, வாசிப்பவர் உணர்ந்து கொள்ளும் படி அவர்களது முடிவுக்கே விட்டுவிட்டீர்கள்:)

    புன்னகை இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin