ஞாயிறு, 23 ஜூலை, 2023

துணிவெய்தல்

   #1

"இது எனது வாழ்க்கை. 
என்னால் எது இயலும் 
எது இயலாது என்பதை 
நீங்கள் சொல்லாதீர்கள்."
[இரட்டைவால் குருவி]

#2
“உற்றுப் பார் அங்கே.. 
நம்பிக்கை!”
[‘நம்பிக்கை என்பது எந்தவொரு இருண்ட சூழலிலும் 
ஒளியைக் காண விழைவது.’]
[காட்டுச் சிலம்பன்]


#3
“எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்,
உங்கள் உண்மையான நிலையை 
உங்களது கவனமான செயல்பாடே தீர்மானிக்கிறது.”
_George Lucas
[குண்டுக் கரிச்சான்.. வண்ணாத்திக் குருவி..]

#4
“துணிந்து ஒரு காரியத்தில் ஆழமாக இறங்குபவர்களாலேயே 
தங்களால் எவ்வளவு தூரம் செல்ல இயலும் என்பதைக் கணிக்க இயலும்.”
_ T.S. Elliot
[இந்திய சாம்பல் இருவாச்சி]
#5
"கண்ணிலிருந்து கரை மறைவதை ஏற்றுக் கொள்ளும் துணிவற்றவராயின் 
உங்களால் ஒருபோதும் கடலைக் கடக்க இயலாது."
_ Christopher Columbus
(செம்போத்து)
#6
"சின்ன விஷயங்களில் கவனத்தைச் சிதற விடுவீர்களானால் 
பெரிய விஷயங்களை உங்களால் செய்ய இயலாது."
(மணிப்புறா)

என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 170
பறவை பார்ப்போம்.. - பாகம்: 101
**
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்.. 
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
***

13 கருத்துகள்:

  1. அழகான படங்களும், அதற்குப் பொருத்தமான வரிகளும்...  வழக்கம்போல அருமை.

    பதிலளிநீக்கு
  2. மணிப்புறாவும் வண்ணாத்திக்குருவியும் மிக அழகு!

    பதிலளிநீக்கு
  3. படங்கள் செம அழகு....அதுவும் மணிப்புறா!!! அழகு...இந்திய சாம்பல் கருவாச்சியும்....
    படத்திற்கு வரிகளும் ரொம்பப் பொருத்தமாக இருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அனைத்து படங்களும் அழகு. அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் 2008 முதல் எழுதுகிறீர்கள் வலைப்பூவில்
    மிகவும் நன்றி 🙏🙏🙏🙏

    பதிலளிநீக்கு
  6. வாசகங்கள் படங்கள் நன்று.

    நம்பிக்கை மிகவும் பிடித்தது.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin