ஞாயிறு, 9 ஜூலை, 2023

சரியான பாதை

 #1

“சில நேரங்களில் சரியான பாதை 
எளிதானதாக இருப்பதில்லை.”


#2
"தனிமை அதற்கே உரித்தான 
விசித்திரமான அழகைக் கொண்டது."

#3
"பலவீனமானவர்களின் பலமாக இருப்பது, 
பிடிவாதம்."
__Johann Kaspar Lavater 

#4
"நாம் நமது விலைமதிப்பற்ற வள ஆதாரத்தை, 
சுற்றுப்புறச் சூழலை, 
வருங்கால சந்ததியருக்காகப் பாதுகாக்க வேண்டும்."
__ Alma Adams
[5 ஜூன் 2023, 
உலகச் சுற்றுச் சூழல் தினத்தன்று 
ஃப்ளிக்கர் தளத்தில் பகிர்ந்த படம்.]

#5
"முடியாது என்பதைக் குறைத்து 
முடியும் என்பதை அதிகரியுங்கள். 
உங்களால் முடியும்."

#6
"உறுதியான பெண்ணுக்குத் தெரியும் 
பயணத்துக்குத் தேவையான வலிமை 
தன்னிடமிருப்பது, 
ஆனால் உறுதி கொண்ட பெண்ணுக்குத் தெரியும் 
பயணத்திலிருந்தே அடைகிறாள் 
தன் வலிமையை என்பது."
[8 மார்ச் 2023, 
உலக மகளிர் தினத்தன்று 
ஃப்ளிக்கர் தளத்தில் பகிர்ந்த படம்.]
*
[பெங்களூரு கண்ணமங்களா ஏரிப் பகுதியில் எடுத்த படங்கள்.. ஞாயிறு தொகுப்பாக.. எனக்கான சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும்..]
***

9 கருத்துகள்:

  1. முதல் மூன்று மற்றும் கடைசி படங்களுக்கு மிகவும் பொருத்தமான வாசகங்கள். கம்பி மேல் நடக்கும் பறவை, முறைக்கும் சேவல்.. படங்கள் பிரமாதம்.

    பதிலளிநீக்கு
  2. அனைத்து படங்களும் மிக அருமை. ஏரியில் குழாய் மேல் னின்று கொண்டு குனித்து ஏரியில் தண்ணீர் அருத்தும் படம் அருமை.

    பதிலளிநீக்கு
  3. பறவைகளும் அவை சொல்லும் வாழ்வியல் சிந்தனைகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  4. அனைத்துப் படங்களும் அழகு. குளக்கொக்கு, அதுவும் நீண்டு உணவைப் பிடிக்கும் குளக்கொக்கு...காணொளி எடுத்திருந்தேன் குளக்கொக்கு பதிவில் பகுதியில் பகிர்ந்திருந்தேன். இப்ப்டித்தான் கழுத்தை நீட்டில் இரை பிடிக்கும் அழகு.

    புள்ளி மூக்கு வாயன்/வாத்து - படங்கள் எல்லாமே ரொம்ப அழகு

    கீதா

    பதிலளிநீக்கு
  5. படங்கள் அனைத்துமே அழகு. பறவைகள் படங்கள் அதிகம் கவர்ந்தன. வாசகங்களும் சிறப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin