வெள்ளி, 30 அக்டோபர், 2009

சிரிக்கும் சீனப் புத்தர்கொள்ளைச் சிரிப்பில்
உள்ளம் தொலைத்து,
வரவேற்பரையை
அலங்கரிக்கவெனக்
கொண்டு வைத்தாலும்-
உழைப்பவர் வீடெனில்
அதிர்ஷடப் பொம்மையாய்
அருள்புரிவார் அங்கு
அழகாய்ச் சிரித்தபடி புத்தர்!

கொள்ளை கொள்ளையாய்
கொட்டும் பணமென
வாங்கி வைத்துவிட்டு-
உறங்குபவர் வீட்டிலோ
அலங்காரப் பொம்மையாகவே
வீற்றிருப்பார் என்றும்
எள்ளி நகைத்தபடி புத்தர்!
*** *** ***


இரண்டு வரி வாசகமாய் 'பொம்மை[அக்டோபர் PiT]' இடுகையில் நான் பதிந்த கருத்து, பதிவர் கோமாவின் பின்னூட்டக் கேள்வியால் ‘க்ளிக்’ கவிதையாய் மலர்ந்து விட்டுள்ளது 28 அக்டோபர் 2008 யூத் விகடனில். நன்றி கோமா!

இக்கவிதைக்கு விகடன்.காம் முகப்பிலும் இணைப்பு தரப் பட்டுள்ளது. நன்றி விகடன்!


2-4/11 யூத்ஃபுல் விகடனின்
‘அதிகம் படித்தவை’ பட்டியலிலும்:

92 கருத்துகள்:

 1. why maa nandri kindri yellaam..

  .bloggerkku blogger ithu kuuda seyyalennaa....eppadi

  anyway nandri

  பதிலளிநீக்கு
 2. நானும் இவர்ல ஒருத்தரை வாங்கி வீட்டுல வைக்கறேன். :)

  பதிலளிநீக்கு
 3. // goma said...

  why maa nandri kindri yellaam..

  .bloggerkku blogger ithu kuuda seyyalennaa....eppadi//

  ரிப்பிட்டேய்ய்ய்ய் :))))

  பதிலளிநீக்கு
 4. எனக்கு ரொம்ப புடிச்ச பொம்மைகளில் இதுவும் உண்டேய்ய்! கவலையா அப்படின்னா இன்னான்னு கேக்கிற மாதிரியான ஒரு கேரக்டர்:)

  பதிலளிநீக்கு
 5. மொத்தத்துல உழைப்புதான் முக்கியம்னு அழகா சொல்லிருக்கீங்க.

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. திருவள்ளுவர் ,மடி இன்மை குறளில்

  ”மடியை மடியா ஒழுகல் குடியைக்
  குடியாக வேண்டு பவர்.”

  தாம் பிறந்த குடியைச் சிறந்த குடியாக உயர்த்த விரும்புவர் சோம்பலை விட்டு முயற்சியோடு வாழ்ந்தால் குடி உயரும் என்கிறார்.

  அதிர்ஷ்ட பொம்மை உழைக்காதவன் வீட்டில் அதிர்ஷ்டத்தை அள்ளி தராது
  என்பது நிச்சியமான உண்மை ராமலக்ஷ்மி.

  கவிதை அருமை.

  பதிலளிநீக்கு
 7. முதலில் வாழ்த்துகள்.. வரிகளும் கருத்தும் மிக அழகு....

  பதிலளிநீக்கு
 8. /உறங்குபவர் வீட்டிலோ
  அலங்காரப் பொம்மையாகவே
  வீற்றிருப்பார் என்றும்
  எள்ளி நகைத்தபடி புத்தர்!/

  LOL!

  பதிலளிநீக்கு
 9. திறமை உறங்கும் வீட்டில்
  வறுமை விழித்திருக்கும்

  என்பது தான் நினைவிற்கு வருகிறது.
  தங்களின் வரிகளைப் படிக்கையில்

  ப‌ட‌த்திற்கு வ‌ரியா
  வ‌ரிக்குக் க‌விதையா
  என்று அற்புத‌மாக‌ உள்ள‌து
  த‌ங்க‌ளின் க‌விதையும் வார்த்தைகளும்

  பதிலளிநீக்கு
 10. //திறமை உறங்கும் வீட்டில்
  வறுமை விழித்திருக்கும்//

  திகழ் எழுதிய வார்த்தை நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 11. தெய்வீக சிரிப்புங்க, இந்த "சீன புத்தருக்கு"!

  ***********
  "உழைப்பவருக்கு அருள் புரிவார். அதிர்ஷ்டத்தை நம்புபவரைப் பார்த்து எள்ளி நகையாடுவார்" என்று சொல்லும் உங்கள் கவிதையைப்பார்ர்த்து ஆனந்தகூத்தடுவார் னு நான் சொல்லலாமா?

  அருமையான பொம்மை, அதையும் மிஞ்சிய அர்த்தமான கவிதை உங்கள் கவிதை! :)

  வாழ்த்துக்கள், ராமலக்ஷ்மி! :)

  பதிலளிநீக்கு
 12. சூப்பர் ராமலக்‌ஷ்மி...
  பொம்மையில் என்ன இருக்கு ?
  நல்ல கருத்து.அதை அழகாவும் சொல்லிட்டீங்க..

  பதிலளிநீக்கு
 13. கவிதைக்கு வணக்கம் & யூத் புல்க்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. அதிர்ஷ்டத்தை கூடவே வைத்து கொண்டாலும், "உழைப்பு" இல்லையென்றால், அந்த அதிர்ஷ்டமே அவரை பார்த்து சிரிக்கும்...

  இப்படி சொல்வது போல் உள்ளது இந்த "லாஃபிங் புத்தா"....

  சிம்ப்ளி சூப்பர்ப் ராமலக்ஷ்மி மேடம்....

  பதிலளிநீக்கு
 15. அவரவர் மனநிலைக்கெற்றவாறு அர்த்தம் மாறுபடும் மோனாலிசாவோ புன்னகையா - சீன புத்தரும்!!?

  நல்ல கவிதைக்குப் பின், வேறொரு subtle கவிதையும் காண முடிந்தது.

  பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 16. காசுக்கு சிரிக்கவில்லை அவர்..
  அது கள்ளமற்ற சிரிப்பு.

  செல்வத்தை தருவதற்கல்ல அவர்..
  அது தெய்வத்தின் சிரிப்பு.

  அள்ளி எடுத்தாலும் ஆறடியே மிச்சமென்று..
  துள்ளி சிரித்தாலும் துகில்கூட
  மிஞ்சாதென்று..
  எள்ளி நகையாடி எல்லாம் அறிந்ததாய்..
  சிரிக்கிறது..அவர் சிரிப்பு!!

  பதிலளிநீக்கு
 17. மிக அருமையான கவிதை, மேடம்!

  This reminds me of one famous Quote (But I don't know the author)

  "Only in Dictionary, you can find success before work.
  Even in Dictionary, success comes only after hard-work."

  பதிலளிநீக்கு
 18. akka வரிகளும் கருத்தும் மிக அழகு....

  பதிலளிநீக்கு
 19. எனக்கு சிரிக்கும் புத்தரை ரொம்ப பிடிக்கும். கவிதையும் அழஅகாய், அருமையாய் இருக்கிறது. வாழ்த்துக்கள். நூறாவது நபராய் தொடர்வது சந்தோஷமாயிருக்கிறது.

  பிரபாகர்.

  பதிலளிநீக்கு
 20. ராமலக்ஷ்மி உங்களை பின்தொடர்பவர்கள் 100 நபர்கள் ஆகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது :-)

  இந்த எண்ணிக்கை உயர்வு என்பது ஒரு சாதனை இல்லை என்றாலும் இது நம்மை நம் உழைப்பை அங்கீகரிக்கும் ஒரு செயலாகவே உள்ளது.

  பதிவுலகில் ஒருவர் எந்த ஒரு பெரிய வெறுப்பையும் சந்திக்காமல் அனைவரிடமும் பாசத்தை பெரும் பதிவர்களில் உங்களை முக்கியமாக குறிப்பிடலாம், குறிப்பாக அனைவருக்கும் பிடித்த பதிவர் என்று உங்களை கூறுவதே சரியானது! :-)

  உங்களின் சிறப்பே மற்றவர்களின் மனம் கோணாமல் அன்பாக நடந்து கொள்வதே!

  உங்களின் பதிவுடன் சேர்ந்து உங்களின் ரசிகர்களும் இந்த 100 ல் உள்ளார்கள் என்பதே என் எண்ணம்.

  தலைவர் மாதிரி ஒன்று கூறுகிறேன்..

  கண்ணா! 100 பின்தொடர்பவர்களை பெறுவது பெரிய விசயமல்ல... அதை எப்படி பெறுகிறோம் என்பது தான் முக்கியம்.

  "நியாயமாக" 100 ஐ தொட்ட உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள் மேலும் பல சிறப்புகளை பெறவும் என் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 21. 100 followers! Vaazththukkal akka. Ungalathu alattal illatha unmaiyana ezujhukkuna oru vetri.... :)

  பதிலளிநீக்கு
 22. கிரி said...
  ராமலக்ஷ்மி உங்களை பின்தொடர்பவர்கள் 100 நபர்கள் ஆகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது :-)

  பதிவுலகில் ஒருவர் எந்த ஒரு பெரிய வெறுப்பையும் சந்திக்காமல் அனைவரிடமும் பாசத்தை பெரும் பதிவர்களில் உங்களை முக்கியமாக குறிப்பிடலாம், குறிப்பாக அனைவருக்கும் பிடித்த பதிவர் என்று உங்களை கூறுவதே சரியானது! :-)

  உங்களின் சிறப்பே மற்றவர்களின் மனம் கோணாமல் அன்பாக நடந்து கொள்வதே!

  உங்களின் பதிவுடன் சேர்ந்து உங்களின் ரசிகர்களும் இந்த 100 ல் உள்ளார்கள் என்பதே என் எண்ணம்.

  தலைவர் மாதிரி ஒன்று கூறுகிறேன்..

  கண்ணா! 100 பின்தொடர்பவர்களை பெறுவது பெரிய விசயமல்ல... அதை எப்படி பெறுகிறோம் என்பது தான் முக்கியம்.

  "நியாயமாக" 100 ஐ தொட்ட உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள் மேலும் பல சிறப்புகளை பெறவும் என் வாழ்த்துக்கள்.

  //

  கிரி சொன்னதை அப்படியே வழிபொழிகிறேன் அக்கா. நீங்கள் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன்.
  -கடையம் ஆனந்த்.

  பதிலளிநீக்கு
 23. உண்மை உணர்த்தும் அழகான கவிதை!வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!

  பதிலளிநீக்கு
 24. அடடா...நூறுக்கு ஒரு பூங்கொத்தும் கவிதைக்கு ஒரு பூங்கொத்தும் ஆக ரெண்டு பூங்கொத்து!!

  பதிலளிநீக்கு
 25. 'உழைப்பே உயர்வு' என்ற வாசகங்களை மனதில் நிறுத்தும் உங்கள் கவிதை வரிகளுடன் ...

  திகழ், சக்திபிரபா, ரங்கன் இவர்களின் கருத்துக்களை வழி மொழிகிறேன்.

  பதிலளிநீக்கு
 26. நல்ல முற்போக்கு கவிதை...பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 27. நூறுக்கு வாழ்த்துக்கள் அக்கா...

  அருமையான கவிதை. எளிமையா உழைப்பை உயர்வா காட்டி இருக்கீங்க.

  பதிலளிநீக்கு
 28. எனக்கும் ஒண்ணு வீட்ல வைக்க ஆசை. ஆனா நாமளா வாங்கி வைச்சா பணம் கொட்டாதாம் யாராவது குடுத்தாதானாம் கொட்டுமாம்னாங்க. இது என்ன புது வம்புன்னு விட்டுட்டேன் :))))

  பதிலளிநீக்கு
 29. @ நவநீதன்,
  தேவதை பத்திரிகை குறித்த தங்கள் பின்னூட்டம் கிடைக்கப் பெற்றேன். தங்கள் ஈ.மெயில் ஐடி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவித்திட வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 30. goma said...

  //why maa nandri kindri yellaam..//

  சொல்வதில் கிடைக்கிறது ஒரு நிறைவு:)!

  //.bloggerkku blogger ithu kuuda seyyalennaa....eppadi

  anyway nandri//

  You are welcome:)!

  பதிலளிநீக்கு
 31. சின்ன அம்மிணி said...

  //நானும் இவர்ல ஒருத்தரை வாங்கி வீட்டுல வைக்கறேன். :)//

  அழகாய்ச் சிரித்தபடி அருள்புரிய வாழ்த்துக்கள் சின்ன அம்மிணி.

  பதிலளிநீக்கு
 32. ஆயில்யன் said...

  // goma said...

  why maa nandri kindri yellaam..

  .bloggerkku blogger ithu kuuda seyyalennaa....eppadi//

  ரிப்பிட்டேய்ய்ய்ய் :))))./***

  உண்மைதான் ஆயில்யன், நன்றியை எதிர்பார்க்காமல் அடுத்தவருக்கு நல்லது செய்து படியே நகர்கிறது வலைநட்பெனினும் சொல்லுவதில் இருக்கும் மகிழ்ச்சியை நெகிழ்ச்சியையும் விட்டு விட முடியாதல்லவா:)?

  பதிலளிநீக்கு
 33. ஆயில்யன் said...

  //எனக்கு ரொம்ப புடிச்ச பொம்மைகளில் இதுவும் உண்டேய்ய்!//

  எனக்கும் பிடித்ததாலேதான் என் வீட்டில்:)!

  //கவலையா அப்படின்னா இன்னான்னு கேக்கிற மாதிரியான ஒரு கேரக்டர்:)//

  சரிதான், இப்படிச் சிரிக்கத் தெரிந்திருந்தால் எல்லாக் கவலையையும் கால்தூசு எனக் கடந்து விட முடியும்தான்:)!

  பதிலளிநீக்கு
 34. புதுகைத் தென்றல் said...

  //மொத்தத்துல உழைப்புதான் முக்கியம்னு அழகா சொல்லிருக்கீங்க...

  அதுவேதான், வாழ்த்துக்களுக்கும் நன்றி தென்றல்.

  பதிலளிநீக்கு
 35. கோமதி அரசு said...

  //திருவள்ளுவர் ,மடி இன்மை குறளில்

  ”மடியை மடியா ஒழுகல் குடியைக்
  குடியாக வேண்டு பவர்.”

  தாம் பிறந்த குடியைச் சிறந்த குடியாக உயர்த்த விரும்புவர் சோம்பலை விட்டு முயற்சியோடு வாழ்ந்தால் குடி உயரும் என்கிறார்.//

  குறளை மேற்கோளாகக் காட்டி சொல்லியிருக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கோமதி அரசு.

  பதிலளிநீக்கு
 36. ஆ.ஞானசேகரன் said...

  //முதலில் வாழ்த்துகள்.. வரிகளும் கருத்தும் மிக அழகு....//

  வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி ஞானசேகரன்.

  பதிலளிநீக்கு
 37. சந்தனமுல்லை said...

  ***/ /உறங்குபவர் வீட்டிலோ
  அலங்காரப் பொம்மையாகவே
  வீற்றிருப்பார் என்றும்
  எள்ளி நகைத்தபடி புத்தர்!/

  LOL!/***

  :))! சரிதானே முல்லை?

  பதிலளிநீக்கு
 38. தண்டோரா ...... said...

  //சிம்பிள் & சூப்பர்//

  நன்றி தண்டோரா.

  பதிலளிநீக்கு
 39. திகழ் said...

  //திறமை உறங்கும் வீட்டில்
  வறுமை விழித்திருக்கும்
  என்பது தான் நினைவிற்கு வருகிறது.
  தங்களின் வரிகளைப் படிக்கையில்//

  அழகான மேற்கோள் திகழ்.

  //ப‌ட‌த்திற்கு வ‌ரியா
  வ‌ரிக்குக் க‌விதையா
  என்று அற்புத‌மாக‌ உள்ள‌து
  த‌ங்க‌ளின் க‌விதையும் வார்த்தைகளும்//

  உண்மையில் பிட் போட்டிக்காக எடுத்த படத்துக்காகப் பிறந்த வரிகள்தாம் திகழ். வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 40. கோமதி அரசு said...

  ***/ //திறமை உறங்கும் வீட்டில்
  வறுமை விழித்திருக்கும்//

  திகழ் எழுதிய வார்த்தை நன்றாக இருக்கிறது./***

  ஆம்:), அழகாகச் சொல்லி விட்டிருக்கிறார் தங்களைப் போலவே. மீள்வருகைக்கு நன்றி கோமதி அரசு.

  பதிலளிநீக்கு
 41. வருண் said...

  //தெய்வீக சிரிப்புங்க, இந்த "சீன புத்தருக்கு"!//

  தருமி நினைவுக்கு வருகிறார்:)))!
  ---------------------------
  //"உழைப்பவருக்கு அருள் புரிவார். அதிர்ஷ்டத்தை நம்புபவரைப் பார்த்து எள்ளி நகையாடுவார்" என்று சொல்லும் உங்கள் கவிதையைப்பார்ர்த்து ஆனந்தகூத்தடுவார் னு நான் சொல்லலாமா?//

  அப்படித்தான் வாய் கொள்ளாமல் சிரிக்கிறார் இவர், அந்த அழகில் மயங்கித்தான் வாங்கினேன்:)!
  ----------------------------

  //அருமையான பொம்மை, அதையும் மிஞ்சிய அர்த்தமான கவிதை உங்கள் கவிதை! :)//

  பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி வருண்.

  பதிலளிநீக்கு
 42. முத்துலெட்சுமி/muthuletchumi said...

  //சூப்பர் ராமலக்‌ஷ்மி...
  பொம்மையில் என்ன இருக்கு ?//

  அதேதான்.

  //நல்ல கருத்து.அதை அழகாவும் சொல்லிட்டீங்க..//

  நன்றி முத்துலெட்சுமி:)!

  பதிலளிநீக்கு
 43. T.V.Radhakrishnan said...

  //வாழ்த்துக்கள்//

  வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க டி.வி.ஆர்.

  பதிலளிநீக்கு
 44. ஆதிமூலகிருஷ்ணன் said...

  //எளிமையான, நல்ல கவிதை.//

  மிக்க நன்றி தாமிரா. இந்த வார ஆனந்த விகடனில் உங்கள் குட்டிக் கவிதைகள் யாவும் அற்புதம்.

  பதிலளிநீக்கு
 45. பிரியமுடன்...வசந்த் said...

  //வாழ்த்துக்கள் மேடம்//

  நன்றி வசந்த்:)!

  பதிலளிநீக்கு
 46. நசரேயன் said...

  //கவிதைக்கு வணக்கம் & யூத் புல்க்கு வாழ்த்துக்கள்//

  நன்றி நன்றி நசரேயன்:)!

  பதிலளிநீக்கு
 47. தாமிரா, இந்த வார ஆனந்த விகடனில் உங்கள் குட்டிக் கவிதைகள் யாவும் அற்புதம்//

  அய்யய்யோ.. நான் அவரில்லை.! ஏற்கனவே அவரோடு நடந்த வெட்டுகுத்துலதான் நான் பேரை மாத்தியிருக்கேன்.. ஹிஹி.

  அவர் வரப்போகும் 'ரெட்டைச்சுழி' படத்தின் இயக்குனர் (மற்றும் எழுத்தாளர் + கவிஞர்).

  நீங்க இன்னும் என் பெயரை ஆதிமூலகிருஷ்ணன்னு சொல்லாம தாமிரான்னு அன்போடு கூப்பிட்டுக் கொண்டிருப்பதால் வரும் பிரச்சினை இது.

  என் படைப்புகள் 'ஆதிமூலகிருஷ்ணன்' என்ற பெயரில் மட்டும்தான் வெளியாகும் என்பதை இங்கே ஆணித்தரமாக சொல்லிக்கொள்கிறேன். (எப்போன்னு கேட்கப்படாது ஹிஹி.!)

  பதிலளிநீக்கு
 48. @ ஆதிமூலகிருஷ்ணன்,

  ஐயகோ, அப்படியா:)? சாரி சாரி. ரைட் இன்றிலிருந்து நானும் மாறிக் கொள்கிறேன் அப்போதுதான் சரிவரும்.
  தகவலுக்கு நன்றி ஆதி.

  ஆனாலும் நம்ம தாமிரபரணியை நினைவூட்டும் ஊர் வாசம் மிக்க பெயரை இப்படி விட்டுக் கொடுத்து விட்டீர்களே:(! ம்ம், பரவாயில்லை, ஆதிமூலக்கிருஷ்ணனாகவே அடுத்தடுத்து வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துக்கள்:)!

  பதிலளிநீக்கு
 49. ராமலக்ஷ்மி அவர்களே ... உங்களை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 100 நபர்கள் ஆகி இருக்கிற‌து...

  அத‌ற்காக‌ ஒரு ஸ்பெஷ‌ல் வாழ்த்துக்க‌ள்....

  கிரி சொன்ன‌ மாதிரி, 100 பின்தொடர்பவர்களை பெறுவது பெரிய விசயமல்ல... அதை எப்படி பெறுகிறோம் என்பது தான் முக்கியம்.

  பதிலளிநீக்கு
 50. கவிதை வடித்த விதம் அழகு

  வாழ்த்துக்கள் கவிதைக்கும் நூறுக்கும்

  விஜய்

  பதிலளிநீக்கு
 51. R.Gopi said...

  //அதிர்ஷ்டத்தை கூடவே வைத்து கொண்டாலும், "உழைப்பு" இல்லையென்றால், அந்த அதிர்ஷ்டமே அவரை பார்த்து சிரிக்கும்...

  இப்படி சொல்வது போல் உள்ளது இந்த "லாஃபிங் புத்தா"....//

  அழகாய் சொல்லி விட்டீர்கள்:)!
  -------------------

  //சிம்ப்ளி சூப்பர்ப் ராமலக்ஷ்மி மேடம்....//

  நன்றி கோபி.

  பதிலளிநீக்கு
 52. Shakthiprabha said...

  //அவரவர் மனநிலைக்கெற்றவாறு அர்த்தம் மாறுபடும் மோனாலிசாவோ புன்னகையா - சீன புத்தரும்!!?//

  அப்படியேதான்:)!
  ----------------------

  //நல்ல கவிதைக்குப் பின், வேறொரு subtle கவிதையும் காண முடிந்தது.

  பாராட்டுக்கள்//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷக்தி.

  பதிலளிநீக்கு
 53. அத்திரி said...

  //அருமை//

  நன்றி அத்திரி!

  பதிலளிநீக்கு
 54. ரங்கன் said...

  //காசுக்கு சிரிக்கவில்லை அவர்..
  அது கள்ளமற்ற சிரிப்பு.

  செல்வத்தை தருவதற்கல்ல அவர்..
  அது தெய்வத்தின் சிரிப்பு.

  அள்ளி எடுத்தாலும் ஆறடியே மிச்சமென்று..
  துள்ளி சிரித்தாலும் துகில்கூட
  மிஞ்சாதென்று..
  எள்ளி நகையாடி எல்லாம் அறிந்ததாய்..
  சிரிக்கிறது..அவர் சிரிப்பு!!//

  அழகு அழகு. நன்றி ரங்கன் கவித்துவமான கருத்துக்கு!

  பதிலளிநீக்கு
 55. பெயர் சொல்ல விருப்பமில்லை said...

  // மிக அருமையான கவிதை, மேடம்!//

  நன்றி, பெயர் சொல்ல விருப்பமில்லை.
  --------------------

  //This reminds me of one famous Quote (But I don't know the author)

  "Only in Dictionary, you can find success before work.
  Even in Dictionary, success comes only after hard-work."//

  அருமையான வாசகத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 56. கடையம் ஆனந்த் said...

  // akka வரிகளும் கருத்தும் மிக அழகு....//

  நல்வரவு ஆனந்த். திருமணம் முடிந்து மறுபடி வலைப்பக்கம் வந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்:)! கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 57. பிரபாகர் said...

  //எனக்கு சிரிக்கும் புத்தரை ரொம்ப பிடிக்கும். கவிதையும் அழஅகாய், அருமையாய் இருக்கிறது. வாழ்த்துக்கள்.//

  பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  //நூறாவது நபராய் தொடர்வது சந்தோஷமாயிருக்கிறது.

  பிரபாகர்.//

  முத்துச் சரத்துக்கு தந்திருக்கும் முதல் வருகைக்கும் நூறாவது நபராய் தொடர்வதற்கும் ஸ்பெஷல் நன்றிகள்:)!

  பதிலளிநீக்கு
 58. கிரி said...

  //ராமலக்ஷ்மி உங்களை பின்தொடர்பவர்கள் 100 நபர்கள் ஆகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது :-)//

  நன்றி:)!
  ----------------

  //இந்த எண்ணிக்கை உயர்வு என்பது ஒரு சாதனை இல்லை என்றாலும் இது நம்மை நம் உழைப்பை அங்கீகரிக்கும் ஒரு செயலாகவே உள்ளது.//

  என் எண்ணத்தையே பிரதிபலித்துள்ளீர்கள். இதை ஊக்கமாகவும் உழைப்புக்கான அங்கீகாரமாகவுமே எடுத்துக் கொள்ளும் வேளையில், மேலும் பொறுப்பாக இருக்க வேண்டும் என்கிற உணர்வும் ஏற்படுகிறது.
  -----------------

  // உங்களின் பதிவுடன் சேர்ந்து உங்களின் ரசிகர்களும் இந்த 100 ல் உள்ளார்கள் என்பதே என் எண்ணம்.//

  உண்மைதான் தொடரும் நூறில் நானும் ஒருவரே. [நம்மை நாமே தொடர்ந்தால்தானே சரியாகச் செய்கிறோமா எனக் கண்காணிக்க இயலும்:))?] அது போல follower-ஆக இல்லாமலே தொடர்ந்து உங்களைப் போல வருகை தருபவர்களும் உள்ளனர்தான். எல்லோருக்குமே என் நன்றிகள்.
  ----------------

  //தலைவர் மாதிரி ஒன்று கூறுகிறேன்..

  கண்ணா! 100 பின்தொடர்பவர்களை பெறுவது பெரிய விசயமல்ல... அதை எப்படி பெறுகிறோம் என்பது தான் முக்கியம்.//

  NICE:)
  -----------------

  உங்கள் மனமார்ந்த பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கிரி.

  பதிலளிநீக்கு
 59. @ கடையம் ஆனந்த்,

  //கிரி சொன்னதை அப்படியே வழிபொழிகிறேன் அக்கா. நீங்கள் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன்.
  -கடையம் ஆனந்த்.//

  உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கும் நன்றி ஆனந்த்.

  பதிலளிநீக்கு
 60. பா.ராஜாராம் said...

  //உண்மை உணர்த்தும் அழகான கவிதை!வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!//

  பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ராஜாராம்.

  பதிலளிநீக்கு
 61. அன்புடன் அருணா said...

  //அடடா...நூறுக்கு ஒரு பூங்கொத்தும் கவிதைக்கு ஒரு பூங்கொத்தும் ஆக ரெண்டு பூங்கொத்து!!//

  உங்கள் அன்புக்கு நூறு நன்றிகள்.
  வாழ்த்துக்களுக்கு நூறு நன்றிகள்:)!

  பதிலளிநீக்கு
 62. சி. கருணாகரசு said...

  //நல்ல முற்போக்கு கவிதை...பாராட்டுக்கள்.//

  முதல் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி கருணாகரசு.

  பதிலளிநீக்கு
 63. சதங்கா (Sathanga) said...

  //'உழைப்பே உயர்வு' என்ற வாசகங்களை மனதில் நிறுத்தும் உங்கள் கவிதை வரிகளுடன் ...

  திகழ், சக்திபிரபா, ரங்கன் இவர்களின் கருத்துக்களை வழி மொழிகிறேன்.//

  ஆமாம் சதங்கா, அருமையாகச் சொல்லியிருக்கிறார்கள் மூவரும். உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.

  பதிலளிநீக்கு
 64. தமிழ் பிரியன் said...

  //100 followers! Vaazththukkal akka. Ungalathu alattal illatha unmaiyana ezujhukkuna oru vetri.... :)//

  எண்ணங்களைப் பகிர்ந்திட என ஆரம்பித்த வலைப்பூ அப்படி இப்படி என நூறு பேரைத் தொடர வைத்திருப்பது எழுத்துக்குக் கிடைத்த ஊக்கமாகவே பார்க்கிறேன். மிகவும் நன்றி தமிழ் பிரியன்.

  பதிலளிநீக்கு
 65. சுசி said...

  // நூறுக்கு வாழ்த்துக்கள் அக்கா...

  அருமையான கவிதை. எளிமையா உழைப்பை உயர்வா காட்டி இருக்கீங்க.//

  நன்றி சுசி.

  //எனக்கும் ஒண்ணு வீட்ல வைக்க ஆசை. ஆனா நாமளா வாங்கி வைச்சா பணம் கொட்டாதாம் யாராவது குடுத்தாதானாம் கொட்டுமாம்னாங்க. இது என்ன புது வம்புன்னு விட்டுட்டேன் :))))//

  வம்பான நம்பிக்கைகள்தான்:)! பயப்படாம நீங்களேதான் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். உழைப்பு இருக்கிற நம் உள்ளத்தில் இந்த அச்சம் தேவையற்றதுதானே:)?

  பதிலளிநீக்கு
 66. ரங்கன் said...

  //Followers 100 great..!!

  My Heartly Wishes!//

  Thanks a lot Rangan:)!

  பதிலளிநீக்கு
 67. R.Gopi said...

  // ராமலக்ஷ்மி அவர்களே ... உங்களை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 100 நபர்கள் ஆகி இருக்கிற‌து...

  அத‌ற்காக‌ ஒரு ஸ்பெஷ‌ல் வாழ்த்துக்க‌ள்....//

  தங்கள் வாழ்த்துக்களுக்கும் கிரி சொல்லியிருப்பதை வழி மொழிந்திருப்பதற்கும் என் நன்றிகள் கோபி. உங்கள் போன்றவர்களின் தொடர் வருகையே என் எழுத்துக்கான ஊக்கம் என்றால் அது மிகையன்று.

  பதிலளிநீக்கு
 68. கவிதை(கள்) said...

  //கவிதை வடித்த விதம் அழகு

  வாழ்த்துக்கள் கவிதைக்கும் நூறுக்கும்

  விஜய்//

  என் நன்றிகள் விஜய்.

  பதிலளிநீக்கு
 69. பித்தனின் வாக்கு said...

  //நல்ல கவிதை. நன்றி.//

  தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 70. http://vidhoosh.blogspot.com/2009/11/blog-post_04.html

  Please accept this gift from me with deep appreciation for your blog.

  -vidhya

  பதிலளிநீக்கு
 71. @ Vidhoosh,

  நீங்கள் அன்புடன் வழங்கியிருக்கும் விருதுகளுக்கு மிக்க நன்றி வித்யா.

  பதிலளிநீக்கு
 72. உங்களுக்கு ஓர் அழைப்பு

  http://tamiluzhavan.blogspot.com/2009/11/blog-post.html

  பதிலளிநீக்கு
 73. அருமையா சொல்லி இருக்கீங்க!

  //
  உறங்குபவர் வீட்டிலோ
  அலங்காரப் பொம்மையாகவே
  வீற்றிருப்பார் என்றும்
  எள்ளி நகைத்தபடி புத்தர்!
  //

  இந்த வரிகளில்தான் எவ்வளவு யதார்த்தம்!

  யாரு வைத்திருந்தாலும் அவர்களின் செயல்களுக்குதானே பலன் கிடைக்கும் இல்லையா சகோதரி?

  ஆனால் சிலர் இந்த பொம்மையை வைத்திருந்தாலே பணம் வந்து கொட்டும் என்று கூறுகிறார்கள்.

  பணம் கொட்ட உழைக்க வேண்டாமா?

  மொத்தத்தில் கவிதை அபாரம்.

  பதிலளிநீக்கு
 74. " உழவன் " " Uzhavan " said...

  //உங்களுக்கு ஓர் அழைப்பு//

  அழைத்திருக்கும் அன்புக்கு நன்றி உழவன்:)!

  பதிலளிநீக்கு
 75. RAMYA said...
  // யாரு வைத்திருந்தாலும் அவர்களின் செயல்களுக்குதானே பலன் கிடைக்கும் இல்லையா சகோதரி?//

  அதேதான் ரம்யா:)! வருகைக்கும் ரசித்துப் பாராட்டியிருப்பதற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 76. ம்ம்ம்...ஒரு சிக்கல்ல மாட்டிவிட்டுட்டேன்!வந்து பாருங்க!

  பதிலளிநீக்கு
 77. @ அருணா,
  பார்த்தேன் அருணா:)! உழவனும் இன்னொரு தொடருக்கு அழைப்பு வைத்துள்ளார்! தொடர் பதிவுகள் என்றாலே களத்தில் குதிக்காமல் தொடர்ந்து நல்லா வேடிக்கை மட்டும் பார்க்கிறேன் காலரியில் இருந்து பதிவிடுபவர்களை உற்சாகப் படுத்தியபடி:)! அழைத்த உங்கள் அன்புக்கு என் நன்றிகள்!

  பதிலளிநீக்கு
 78. @ சிங்கக்குட்டி,

  வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 79. அதிர்ஷ்ட புத்தரென்று சொன்னாலும் 'அதிர்ஷ்டம்' எதில் என்று 'நச்'சென்று காட்டிய விதம் அருமை. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!

  பதிலளிநீக்கு
 80. @ கவிநயா,

  நல்வரவு கவிநயா:)! கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 81. 'சத'த்துக்கு வாழ்த்துக்கள் :)

  பதிலளிநீக்கு
 82. பணம் வருமென "அதிர்ஷ்டப் பொம்மைகள்" வாங்கி வைப்போரைச் சிந்திக்க வைக்கும்! கவிதை அருமை.

  பதிலளிநீக்கு
 83. @ மாதேவி,

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி.

  பதிலளிநீக்கு
 84. Very nice. Just today only I joined in your blog.Very interesting photos. Iam also love in photography.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin