வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

அதிவேகத்தில் சிறையான எழிலோவியப் படங்கள்- கிருஷ்ணகிரி மாம்பழங்கள்

தர்மபுரி, கிருஷ்ணகிரி பக்க இயற்கையெழில் காட்சிகள்.

சமீபத்தில், தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக விரைந்த எம் வாகனத்தினுள் இருந்து, ஏற்றிய கண்ணாடிகள் வழியே, ஷட்டர் ஸ்பீட் 1/800-ல் முயற்சித்த படங்கள்.

குறிப்பிடும் அளவுக்கு இது பெரிய விஷயமா எனக் கேட்டால், இதே போல விரைந்த வாகனத்தில் இருந்து நான் எடுத்த படம், [சரியாக இரண்டு வருடம் முன்னர் பிப்ரவரி 2009 PiT ] ‘கணநேரக் கண்ணாடிகள்-ஆக்‌ஷன் படங்கள்’ தலைப்புக்காக இரண்டாவது படமாக இந்தப் பதிவில்!

பார்த்து விட்டீர்களா? இப்போது புரிந்திருக்குமே ஏன் ஆர்வமாக SLR-ல் இந்த முயற்சி என்று? ஒத்தும் கொள்வீர்கள்தானே கிடைத்த ரிசல்டை நான் பகிர்ந்திட நினைத்ததில் தவறில்லை என்று:)!

1. எழிலோவியம்


2. நீல வானமும் நீண்ட மலைகளும்..

இதே படங்களை வண்டியை ஆங்காங்கே நிறுத்தியும் எடுத்திருக்கலாம்தான். ஆனால் திட்டமிட்ட நேரத்தில் ஊர் போய் சேர இயலாதென்பதோடு, நெடுஞ்சாலைகளில் திடீர் திடீரென வேகத்தைக் குறைப்பதையும், ஆங்காங்கே நிறுத்துவதையும் தவிர்ப்பதே நல்லதெனக் கருதுவேன். விரையும் பிற ஊர்திகளின் வேகத்துக்கு ஈடுகொடுத்தபடியே செல்லுவதும் தேவையான ஒன்றாக உள்ளது.


3. நெடிந்துயர்ந்த தென்னைகளும்..


4.தேசிய நெடுஞ்சாலையும்..குன்றுகள்
சன்னல் கண்ணாடியை இறக்கினால் அடிக்கிற காற்றில் எடுக்கிற படமும் கிழிந்திடும் போல:)! ஆக ஏற்றியே இருந்த கண்ணாடியின் பிரதிபலிப்பு கீழ் வரும் முதலிரண்டு படங்களில் தெரியத்தான் செய்கிறது.

5. பச்சைப் பாவாடை அணிந்து..


6. பளபளக்கும் பாறையுடன் நிமிர்ந்து..


7. உச்சியிலே கோட்டையினைச் சுமந்து..


திப்பு சுல்தானும், கிருஷ்ணகிரி மாம்பழமும்:

இப்படங்களை ஒரு ஆர்வத்தில் ‘தமிழ்வாசல்’ பல்சுவை மின்குழுமத்தில் பகிர்ந்து கொண்ட போது கிருஷ்ணகிரியை சொந்த ஊராகக் கொண்ட வடக்கு வாசல் ஆசிரியர் திரு.பென்னேஸ்வரன் ‘ எங்கள் ஊருக்கே அழைத்துச் சென்று விட்டீர்கள். மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி.’ என்றதோடு ‘இத்தனை அழகான இடத்தை விட்டு டெல்லியில் வந்து வாழ எந்த ஜென்மத்தில் எந்தப் பாவம் செய்திருக்கிறேனோ தெரியவில்லை’ என ஆதங்கப்பட்டிருந்தார். படங்களுடன் தொடர்புடையதாக சில அரிய வரலாற்றுத் தகவல்களையும் தந்திருந்தார். அவற்றை அவரது வார்த்தைகளிலே, வண்ண எழுத்துக்களில் பதிந்துள்ளேன்.

நீங்கள் புகைப்படம் எடுத்திருக்கும் இடங்களில் ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் அலைந்திருக்கிறார்கள். குலாம் அலி என்கிற மனிதர் சுமார் 103 ஆண்டுகள் உயிரோடு இருந்தவர். திப்புவால் 18ம் நூற்றாண்டின் இறுதியில் கான்ஸ்டான்டிநோபிள் அனுப்பப்பட்டார். இவர்தான் கிருஷ்ணகிரியின் முதல் முன்சீப்பாக ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்டார். அதற்கு விலையாக அவர் பின்னாளில் திப்புவைக் காட்டிக் கொடுத்தார்.

உங்கள் இரண்டாவது புகைப்படம்
[2. நீல வானமும் நீண்ட மலைகளும்] இருக்கும் குன்றில் திப்புவின் நண்பர் பசவராஜ் என்பவர் பாண்டிச்சேரிக்கு திப்புவின் உதவி கோரிய ஓலையை சுமந்து குதிரையில் பயணித்த போது அவரை சில துரோகிகள் வழிமறித்துக் கொன்று அங்கேயே புதைத்தனர். பிரான்சுப் படைக்கு திப்பு நலமாக இருப்பதாகவும் படைகள் தேவை இல்லை என்று வேறு செய்தியை அந்தத் துரோகிகள் அனுப்பினார்கள். பிரென்சுப் படைகள் நேரத்தில் வராததால் திப்பு போரில் மரணத்தைத் தழுவினார்.

மீண்டும் குலாம் அலிக்கு வருகிறேன். அவர் கான்டோன்டிநோபிள் சென்ற போது திப்புவுக்காக அங்கிருந்து ஒரு கூடை நிறைய மாம்பழங்கள் சுமந்து வந்தார். அந்தப் பழத்தில் ஒரு கொட்டையை திப்பு சந்தூர் என்கிற கிராமத்தில் (அநேகமாக உங்கள் படம் 5ல் உள்ள குன்றின் பின்புறம் உள்ள கிராமம்) புதைத்து வைத்தார். அந்த மாம்பழம்தான் சந்தூரா என்ற பெயரில் பெங்களூரிலும் கிடைக்கின்றன.

சேலத்து மாம்பழம் என்று பெயர் வாங்கியதும் இந்த மாம்பழம்தான். கிருஷ்ணகிரிக்கு சேரவேண்டிய பெருமை, அப்போது கிருஷ்ணகிரி சேலம் மாவட்டத்தில் இருந்ததால் சேலத்து மாம்பழம் என்று பெயர் வாங்கி விட்டது.


ஊர்க்காரர்களுக்கே உரித்தான உண்மையான ஆதங்கம்.

எதேச்சையாக எடுத்த படங்களுக்குப் பின்னால் இத்தனை அரிய பல தகவல்கள் இருக்குமென்று நினைத்திருக்கவில்லை. மிக்க நன்றி திரு. பென்னேஸ்வரன்!.

வன ஆண்டு:

வரலாற்று உண்மைகளுக்குப் பிறகு நிகழ்காலத் தகவல் ஒன்று:

அந்தி நேரத்து நிர்மலமான நீலவானம், மலைகள், குன்றுகள் இவற்றோடு பார்வைக்குக் கிடைத்த பசுமைகள் யாவும் ‘இருக்கிற வளமாவது காக்கப்பட வேண்டுமே’ எனும் ஏக்கத்தை ஏற்படுத்தியது. 2011 சர்வ தேச வன ஆண்டாகக் கொண்டாடப்படுகிறதாம். இப்படியான கொண்டாட்டங்களை அறிவித்துதானே விழிப்புணர்வைக் கொண்டு வரவும் மரங்களைக் காப்பாற்றவும் போராட வேண்டியிருக்கிறது.

கீழ்வருவது மட்டும் டோல் கேட் பக்கம் நின்ற சில நொடிகளின் போது...

8. மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?

அந்தப் பனை அழகா? இல்லை.., பாயும் கதிர் அழகா..?

எது அழகு:)? நீங்களே சொல்லுங்கள்!
*** *** ***

104 கருத்துகள்:

 1. சன்னல் கண்ணாடியை இறக்கினால் அடிக்கிற காற்றில் எடுக்கிற படமும் கிழிந்திடும் போல:)!

  ha ha haa ...:-)))))))))

  பதிலளிநீக்கு
 2. கதிர்தான் அழகு.
  பனையை எப்பொழுதும் பார்க்கலாம் ,இந்தக் கதிர் ,கண நேரம்தான் காட்சி தரும்.

  பதிலளிநீக்கு
 3. ||அடிக்கிற காற்றில் எடுக்கிற படமும் கிழிந்திடும் போல:||

  கவிஞருக்கு வணக்கம்!

  வாசகர் கடிதம் அருமை!

  கடைசி வரிக்கு ஒன்னு சொல்லனும்!! :)))

  பதிலளிநீக்கு
 4. சகலகலா வல்லவர் நீங்கள். கதை, கவிதை, புகைப்படம் என்று பளிச்சிடுகிறிர்கள். வாழ்த்துக்கள். அருமையான புகைப்படங்கள்.

  பதிலளிநீக்கு
 5. எல்லாமே அழகு உங்கள் ரசனையும் அழகு...

  பதிலளிநீக்கு
 6. //‘இத்தனை அழகான இடத்தை விட்டு டெல்லியில் வந்து வாழ எந்த ஜென்மத்தில் எந்தப் பாவம் செய்திருக்கிறேனோ தெரியவில்லை’//

  நிஜமான ஏக்கம்..

  பதிலளிநீக்கு
 7. மரங்களை மட்டும் அல்ல ராமலக்ஷ்மி மலைகளையும், குன்றுகளையும் கூட முடிந்தால் காப்பாற்றினால் நல்லது.

  மலைகள் குன்றுகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் அழிந்து வருகிறது.
  (அழித்து வருகிறோம்.)

  படங்கள் எல்லாம் அழகு.

  படத்தின் பின் உள்ள கதைகள் தெரிந்து கொண்டோம். நன்றி.

  கதிர் அழகு ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 8. இதில் 5 ஆம் படம் என்னை வெகுவாக கவர்ந்தது.....
  தகவல் சிலிர்க்க வைக்கிறது...

  பதிலளிநீக்கு
 9. எல்லா புகைப்படங்களுமே மிக அழகு..

  பதிலளிநீக்கு
 10. படங்களில் இருந்த் பாவையை அகற்ற மனதே வரவில்லை.கலை நயம் சொட்டுகின்றது.பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 11. மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன அழகா இருக்கு...

  மீத புகைப்படங்கள் எடுத்தவிதம் தங்களின் புகைப்படம் எடுக்கும் திறனை நிரூபிக்கின்றன..

  பதிலளிநீக்கு
 12. கதிர்தான் எனக்குப் பிடித்திருக்கிறது ..
  அழகான படங்கள்.. SLR-ல் விரைவில்
  எக்ஸ்பர்ட் ஆக வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!

  பதிலளிநீக்கு
 13. அழகு அள்ளிக்கொண்டு போகிறது ஒவ்வொரு படங்களிலும்..

  பதிலளிநீக்கு
 14. தகவலும் படமும் புதிது ஆச்சர்யமா இருக்கு சூப்பர்....

  பதிலளிநீக்கு
 15. கதிர்தான் அக்கா அழகு.

  அத்தனை படங்களும் அழகுதான்.

  2011 சர்வதேச வன ஆண்டு பற்றிய தகவலுக்கு நன்றிகள். என் பிளாக்லவும் சேர்க்கலாமா அக்கா??

  பதிலளிநீக்கு
 16. இன்னொரு தகவல். கிருஷ்ணகிரியில் உள்ள registrar office -ல் ஒரு காலத்தில் பணியிலிருந்த பிரபலம்... N T ராமா ராவ்! படங்கள் மிக அழகாக உள்ளன!

  பதிலளிநீக்கு
 17. நல்ல புகைப்பட தொகுப்புக்கள்.
  விவரங்கள் கொடுக்கும் நல்ல பின்னூட்டங்கள்.
  தங்கள் நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 18. யப்பா....! சூப்பர், கிரிஸ்டல் க்ளியர்,

  எஸெலாருக்குள் இவ்ளோ சமாச்சாரம் இருக்குதா!!!!

  பதிலளிநீக்கு
 19. படங்கள் அழகு...
  "அடிக்கிற காற்றில் எடுக்கற படமும்..." :)
  திப்பு சுல்தான் விவரங்களும் மாம்பழ விவரங்களும் சுவாரஸ்யம். பொன்னேஸ்வரன் ஏக்கம் நெகிழ்ச்சி.

  "பாயும் கதிரின் அழகைப் புரிய வைக்கும் பனைதான் அழகு."

  பதிலளிநீக்கு
 20. லஷ்மி உங்கள் ரசனையை பாராட்டுவதா திறமையை பாராட்டுவதா? ஒவ்வொரு படமும் அலாதி அழகு..இயற்கையின் அழகு படம் பிடிக்கும் போதே இன்னும் கூடுகிறதோ என தோன்றுகிறது..

  பதிலளிநீக்கு
 21. அழகான படங்கள்.... இந்த வார கல்கியில் உங்களின் சிறப்பான இன்னொரு மழலை கவிதை வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 22. படங்கள் அத்தனையும் கொள்ளை அழகு. அடிக்கடி கண்ணில் படும் பனைமரம் கூட உங்கள் மூலம் ஜொலிக்கிறது. படங்களோடு பகிர்வுகளும் சிறப்பு. நன்றி ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 23. அழகான படங்கள்
  //நிர்மலமான நீலவானம், மலைகள், குன்றுகள் இவற்றோடு//
  வெள்ளை மேகங்கள் இருந்திருந்தால் அழகாக இருக்குமே. போட்டோஷாப் கொண்டு சேர்த்துப் பாருங்களேன்.
  சகாதேவன்

  பதிலளிநீக்கு
 24. பசுமையோடு
  பழமையையும்
  படம் பிடித்து
  காட்டி இருக்கீன்றீர்கள்


  அருமை.

  பதிலளிநீக்கு
 25. காருக்குள்ள இருந்தும் சும்மா இருக்கலியே.இவ்ளோ அழகான படங்கள்.பனையும் கதிரும் சேர்ந்த காட்சியே அருமை.இரண்டும் சேர்ந்ததால்தான் இத்தனை
  அழகு அக்கா !

  பதிலளிநீக்கு
 26. வேகமகப் போகும் காரில் நிழல் விழாமல் எடுப்பதும் சிரமம்தான்.
  பழுதில்லாமல் படங்கள் ராமலக்ஷ்மியின் கைவண்ணத்தில் வெகு அற்புதமாக வந்திருக்கின்றன.
  கிருஷ்ணகிரிக்காரரின் ஆதங்கமும் ,சரித்திரமும் அருமை.

  பதிலளிநீக்கு
 27. இயற்கையை ரசிக்கத் தெரிந்த நீங்கள், மற்றவர்களையும் ரசிக்கச் செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 28. படங்கள் எல்லாம் அழகு. கிருஷ்ணகிரி தகவல்களுக்கு நன்றி. கடைசிப் படத்தில் கதிர்தான் அழகு :)

  பதிலளிநீக்கு
 29. goma said...
  ***/சன்னல் கண்ணாடியை இறக்கினால் அடிக்கிற காற்றில் எடுக்கிற படமும் கிழிந்திடும் போல:)!/

  ha ha haa ...:-)))))))))/***

  ஹி.., தாக்குப் பிடிக்க இயலாத காற்று:)!

  /கதிர்தான் அழகு.

  பனையை எப்பொழுதும் பார்க்கலாம் ,இந்தக் கதிர் ,கண நேரம்தான் காட்சி தரும்./

  காரணம் அருமை. நன்றி கோமா.

  பதிலளிநீக்கு
 30. Kathir said...
  ***||அடிக்கிற காற்றில் எடுக்கிற படமும் கிழிந்திடும் போல:||

  கவிஞருக்கு வணக்கம்!

  வாசகர் கடிதம் அருமை!

  கடைசி வரிக்கு ஒன்னு சொல்லனும்!! :)))***

  நன்றி கதிர். கடைசி வரிக்கு நிறைய பேர் சொல்லிட்டாங்க உங்களுக்கு சாதகமா! ஆனாலும் ஸ்ரீராம், ஹேமா கருத்துகளையும் கவனிக்க:)!

  பதிலளிநீக்கு
 31. shammi's blog said...
  //arumai.....//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷம்மி.

  பதிலளிநீக்கு
 32. # கவிதை வீதி # சௌந்தர் said...
  //பதிவு.. படங்கள் அருமை..
  வாழ்த்துக்கள்.../ /பதிவை பாராட்டி ஓட்டும் போட்டாச்சி../

  மிக்க நன்றி செளந்தர், வாக்களித்தமைக்கும்:)!

  பதிலளிநீக்கு
 33. தமிழ் உதயம் said...
  //சகலகலா வல்லவர் நீங்கள். கதை, கவிதை, புகைப்படம் என்று பளிச்சிடுகிறிர்கள். வாழ்த்துக்கள். அருமையான புகைப்படங்கள்.//

  அன்புக்கு மிக்க நன்றி தமிழ் உதயம்:)!

  பதிலளிநீக்கு
 34. பாரத்... பாரதி... said...
  //எல்லாமே அழகு உங்கள் ரசனையும் அழகு...//

  நன்றி பாரதி.

  பதிலளிநீக்கு
 35. மோகன் குமார் said...
  //படமும் தகவல்களும் அருமை//

  மிக்க நன்றி மோகன் குமார்.

  பதிலளிநீக்கு
 36. கோமதி அரசு said...
  //மரங்களை மட்டும் அல்ல ராமலக்ஷ்மி மலைகளையும், குன்றுகளையும் கூட முடிந்தால் காப்பாற்றினால் நல்லது.

  மலைகள் குன்றுகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் அழிந்து வருகிறது.
  (அழித்து வருகிறோம்.)

  படங்கள் எல்லாம் அழகு.

  படத்தின் பின் உள்ள கதைகள் தெரிந்து கொண்டோம். நன்றி.//

  உண்மைதான், இருக்கிற வளமேனும் காக்கப் பட வேண்டும்.

  //கதிர் அழகு ராமலக்ஷ்மி.//

  நன்றி கோமதிம்மா.

  பதிலளிநீக்கு
 37. சதங்கா (Sathanga) said...
  //Great Shots !!! coming after a long time and still feel the same freshness in your posts :)//

  நன்றி சதங்கா! நீண்ட இடைவெளி உங்கள் வலைப்பக்கத்துக்கும் தொடர்ந்தபடி உள்ளதே? மறுபடி எழுத வாருங்கள்:)!

  பதிலளிநீக்கு
 38. சி.கருணாகரசு said...
  //உங்க ஒளிமொழி பிரமிப்பு...

  இதில் 5 ஆம் படம் என்னை வெகுவாக கவர்ந்தது.....
  தகவல் சிலிர்க்க வைக்கிறது...//

  மிக்க நன்றி கருணாகரசு.

  பதிலளிநீக்கு
 39. கார்த்திக் said...
  //கடசிபடம் ரொம்ப அழகுங்க :-))//

  மகிழ்ச்சியும் நன்றியும் கார்த்திக்:)!

  பதிலளிநீக்கு
 40. S.Menaga said...
  //எல்லா புகைப்படங்களுமே மிக அழகு..//

  நன்றி மேனகா.

  பதிலளிநீக்கு
 41. ஸாதிகா said...
  //படங்களில் இருந்த பார்வையை அகற்ற மனதே வரவில்லை.கலை நயம் சொட்டுகின்றது.பாராட்டுகள்.//

  நன்றி ஸாதிகா.

  பதிலளிநீக்கு
 42. ப்ரியமுடன் வசந்த் said...
  //மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன அழகா இருக்கு...

  மீத புகைப்படங்கள் எடுத்தவிதம் தங்களின் புகைப்படம் எடுக்கும் திறனை நிரூபிக்கின்றன..//

  மிக்க நன்றி வசந்த்.

  பதிலளிநீக்கு
 43. James Vasanth said...
  //கதிர்தான் எனக்குப் பிடித்திருக்கிறது ..
  அழகான படங்கள்.. SLR-ல் விரைவில்
  எக்ஸ்பர்ட் ஆக வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி!//

  உங்கள் வாழ்த்துக்கள் பலிக்கட்டும்:)! நன்றி ஜேம்ஸ்.

  பதிலளிநீக்கு
 44. அமைதிச்சாரல் said...
  //அழகு அள்ளிக்கொண்டு போகிறது ஒவ்வொரு படங்களிலும்..//

  நன்றி சாரல்.

  பதிலளிநீக்கு
 45. MANO நாஞ்சில் மனோ said...
  //தகவலும் படமும் புதிது ஆச்சர்யமா இருக்கு சூப்பர்....//

  மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

  பதிலளிநீக்கு
 46. ஆயிஷா said...
  //படங்கள் அருமை.வாழ்த்துக்கள்.//

  நன்றி ஆயிஷா.

  பதிலளிநீக்கு
 47. சுசி said...
  //கதிர்தான் அக்கா அழகு.

  அத்தனை படங்களும் அழகுதான்.

  2011 சர்வதேச வன ஆண்டு பற்றிய தகவலுக்கு நன்றிகள். என் பிளாக்லவும் சேர்க்கலாமா அக்கா??//

  நன்றி சுசி. தாராளமாக சேர்த்திடுங்கள்.

  பதிலளிநீக்கு
 48. Kanchana Radhakrishnan said...
  //படங்கள் அருமை..வாழ்த்துகள்..//

  மிக்க நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
 49. bandhu said...
  //இன்னொரு தகவல். கிருஷ்ணகிரியில் உள்ள registrar office -ல் ஒரு காலத்தில் பணியிலிருந்த பிரபலம்... N T ராமா ராவ்! படங்கள் மிக அழகாக உள்ளன!//

  புதிய தகவலுக்கும் தங்கள் முதல் வருகைக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 50. Rathnavel said...
  //நல்ல புகைப்பட தொகுப்புக்கள்.
  விவரங்கள் கொடுக்கும் நல்ல பின்னூட்டங்கள்.
  தங்கள் நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றிங்க ரத்னவேல்.

  பதிலளிநீக்கு
 51. நானானி said...
  //யப்பா....! சூப்பர், கிரிஸ்டல் க்ளியர்,

  எஸெலாருக்குள் இவ்ளோ சமாச்சாரம் இருக்குதா!!!!//

  நன்றி நானானி. எவ்வளவோ இருக்கிறது:)!

  பதிலளிநீக்கு
 52. ஸ்ரீராம். said...
  //படங்கள் அழகு...
  "அடிக்கிற காற்றில் எடுக்கற படமும்..." :)
  திப்பு சுல்தான் விவரங்களும் மாம்பழ விவரங்களும் சுவாரஸ்யம். பென்னேஸ்வரன் ஏக்கம் நெகிழ்ச்சி.//

  நன்றி ஸ்ரீராம்.

  //"பாயும் கதிரின் அழகைப் புரிய வைக்கும் பனைதான் அழகு."//

  அப்படிப் போடுங்க:)!

  பதிலளிநீக்கு
 53. தமிழரசி said...
  //லஷ்மி உங்கள் ரசனையை பாராட்டுவதா திறமையை பாராட்டுவதா? ஒவ்வொரு படமும் அலாதி அழகு..இயற்கையின் அழகு படம் பிடிக்கும் போதே இன்னும் கூடுகிறதோ என தோன்றுகிறது..//

  நேரில் மகிழ்விக்கும் இயற்கை படங்களில் பிரமிக்க வைப்பது உண்டுதான் பல நேரங்களில். நன்றி தமிழரசி.

  பதிலளிநீக்கு
 54. குமரி எஸ். நீலகண்டன் said...
  //அழகான படங்கள்.... இந்த வார கல்கியில் உங்களின் சிறப்பான இன்னொரு மழலை கவிதை வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்//

  நன்றி நீலகண்டன்! சனிக்கிழமை காலையில் பத்திரிகையைப் பார்த்து விட்டு ‘கல்கி கவிதை கஃபேயின் இந்தவார ஸ்டார் நீங்கள்தான். ஒருபக்கம் உங்கள் படைப்புக்கு..’ என நண்பர் உழவன் தெரிவித்த சில நிமிடங்களில் வந்து சேர்ந்தது உங்கள் வாழ்த்துக்களும்:)! மிக்க மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 55. அம்பிகா said...
  //படங்கள் அத்தனையும் கொள்ளை அழகு. அடிக்கடி கண்ணில் படும் பனைமரம் கூட உங்கள் மூலம் ஜொலிக்கிறது. படங்களோடு பகிர்வுகளும் சிறப்பு. நன்றி ராமலக்ஷ்மி.//

  மிக்க நன்றி அம்பிகா.

  பதிலளிநீக்கு
 56. புகைப்படங்கள் ரொம்ப சூப்பர்ங்க.தகவலும் சூப்பர்.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 57. சகாதேவன் said...
  //அழகான படங்கள்//

  மிக்க நன்றி.

  ***//நிர்மலமான நீலவானம், மலைகள், குன்றுகள் இவற்றோடு//
  வெள்ளை மேகங்கள் இருந்திருந்தால் அழகாக இருக்குமே. போட்டோஷாப் கொண்டு சேர்த்துப் பாருங்களேன்.//***

  ஆம், அதுவும் அந்த இரண்டாவது படத்தில். ஃபோட்டோ ஷாப்பில் மேகம் சேர்ப்பது இதுவரை முயன்றதில்லை. இப்படத்துக்கு முயன்று பார்க்கிறேன். ஆலோசனைக்கும் என் நன்றி.

  பதிலளிநீக்கு
 58. சந்தான சங்கர் said...
  //பசுமையோடு
  பழமையையும்
  படம் பிடித்து
  காட்டி இருக்கீன்றீர்கள்

  அருமை.//

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 59. ஹேமா said...
  //காருக்குள்ள இருந்தும் சும்மா இருக்கலியே.இவ்ளோ அழகான படங்கள்.பனையும் கதிரும் சேர்ந்த காட்சியே அருமை.இரண்டும் சேர்ந்ததால்தான் இத்தனை
  அழகு அக்கா !//

  அதுதானே:)? ஒன்றுக்கொன்று தருகிறது அழகு. நன்றி ஹேமா!

  பதிலளிநீக்கு
 60. மாதேவி said...
  //புகைப்படங்கள் அழகு.//

  நன்றி மாதேவி.

  பதிலளிநீக்கு
 61. வல்லிசிம்ஹன் said...
  //வேகமாகப் போகும் காரில் நிழல் விழாமல் எடுப்பதும் சிரமம்தான்.//

  ஆம் வல்லிம்மா. ஷட்டர் ஸ்பீட் அதிகம் வைத்திருந்தாலும் கூட, கேமிராவில் ஆட்டம் வந்துவிடக் கூடாதென கால்களை அழுத்தமாக ஊன்றி பேலன்ஸ் செய்தபடி எடுத்தேன்:)!

  //பழுதில்லாமல் படங்கள் ராமலக்ஷ்மியின் கைவண்ணத்தில் வெகு அற்புதமாக வந்திருக்கின்றன.//

  எல்லோருக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

  //கிருஷ்ணகிரிக்காரரின் ஆதங்கமும் ,சரித்திரமும் அருமை.//

  எதிர்பாராத வகையில் கிடைத்த புதையலைப் போன்றிருந்தது, நான் எடுத்த படங்களுக்கு அவர் சொன்ன அரிய வரலாற்றுத் தகவல்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 62. கவியின் கவிகள் said...
  //இயற்கையை ரசிக்கத் தெரிந்த நீங்கள், மற்றவர்களையும் ரசிக்கச் செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.//

  முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 63. சே.குமார் said...
  //படங்கள் அருமை...
  எல்லாமே அழகு.//

  நன்றி குமார்.

  பதிலளிநீக்கு
 64. கவிநயா said...
  //படங்கள் எல்லாம் அழகு. கிருஷ்ணகிரி தகவல்களுக்கு நன்றி. கடைசிப் படத்தில் கதிர்தான் அழகு :)//

  மகிழ்ச்சியும் நன்றியும் கவிநயா.

  பதிலளிநீக்கு
 65. தமிழ்மணத்தில் வாக்களித்த பனிரெண்டு பேருக்கும், இன்ட்லியில் வாக்களித்த இருபத்து ஆறு பேருக்கும் என் நன்றி.

  பதிலளிநீக்கு
 66. ஜிஜி said...
  //புகைப்படங்கள் ரொம்ப சூப்பர்ங்க.தகவலும் சூப்பர்.வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி ஜிஜி:)!

  பதிலளிநீக்கு
 67. மிக அழகாக படம் பிடித்து இருக்கீஙக், ரொம்ப அழகு,

  பதிலளிநீக்கு
 68. அருமை ராமலெட்சுமி.. பகிர்வும் படமும்..:))

  பதிலளிநீக்கு
 69. 8th padam arumayo arumai.

  marangal, muzhusa illannaa nalla irukkaadhu. aanaal, indhap padam vidhi vilakku :)

  பதிலளிநீக்கு
 70. அழகான படங்கள் அக்கா.

  அதிலும் நீங்க ஐந்தாவது படமெடுத்த அதே இடத்தை நானும் சென்றமுறை வந்தபோது படமெடுத்திருக்கிறேன்.

  உண்மையிலேயே அந்தச் சாலைவழிப்பிரயாணமும் காட்சிகளும் மிகவும் ரசிக்கக்கூடியவைதான்.

  பதிலளிநீக்கு
 71. அருமையான படங்கள். பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 72. முன்னமே நான் சொன்னதுதான்: திறமையை தொழிலாகவோ, passion photography போலவோ மாற்றும் எண்ணம் கொள்ளுங்களேன். அட்லீஸ்ட் ஒரு கண்காட்சியாவது ஏற்பாடு செய்யுங்க.

  ஓடும் வண்டியில் இவ்வளவு தெளிவான படங்களா!! வாவ்!! (ஹூம்... - இது எனக்கு) ;-)))))

  பதிலளிநீக்கு
 73. அழகான தர்மபுரி .ஓடி விளையாடிய கிருஷ்ணகிரி என் சிறு வயது நினைவுகளை தூசி தட்டி எழுப்பிய படங்கள் .
  பல 1000 மைல்கள் தொலைவில் இருந்து ரசிக்கிறேன்
  நன்றி நன்றி நன்றி

  பதிலளிநீக்கு
 74. ஒரே கல்லில் எத்தனை மாங்கா வேணாலும் அடிப்பாங்க ராமலக்‌ஷ்மின்னு காட்டறீங்க :)

  போட்டோக்கு போட்டோ தகவலுக்கு தகவல்..பின்னாலேயே விழிப்புணர்வு..:)))

  பதிலளிநீக்கு
 75. Jaleela Kamal said...
  //மிக அழகாக படம் பிடித்து இருக்கீஙக், ரொம்ப அழகு,//

  மிக்க நன்றி ஜலீலா:)!

  பதிலளிநீக்கு
 76. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  //அருமை ராமலெட்சுமி.. பகிர்வும் படமும்..:))//

  நன்றி தேனம்மை. உங்கள் எதிர் பதிவை ரசித்தேன்:)))!

  பதிலளிநீக்கு
 77. Kalidoss said...
  //Superb..keep it up..//

  மிக்க நன்றி, முதல் வருகைக்கும்.

  பதிலளிநீக்கு
 78. SurveySan said...
  //8th arumai.

  8th padam arumayo arumai.

  marangal, muzhusa illannaa nalla irukkaadhu. aanaal, indhap padam vidhi vilakku :)//

  நன்றி நன்றி சர்வேசன்:)!

  நின்ற சில நொடிகளில் என்றாலும் கிடைத்த அவகாசம் மிகக் குறைவே. அடுத்து ஒரு ஷாட்டுக்கு முயன்றிட முடியாதபடி ஒரு பெர்ர்ரிய ட்ரக் அருகில் வந்து நின்று மறைத்து விட்டது காட்சியை. இது போலவே பனையின் முகத்தை முன் வைத்து வானின் வசீகரத்தை முன்னரும் ஒருமுறை முயன்றிருந்ததால் சட்டென இந்த ஐடியா க்ளிக்காகி காமிராவும் செவ்வனே அதை செயல் படுத்தி விட்டது:)!

  பதிலளிநீக்கு
 79. சுந்தரா said...
  //அழகான படங்கள் அக்கா.

  அதிலும் நீங்க ஐந்தாவது படமெடுத்த அதே இடத்தை நானும் சென்றமுறை வந்தபோது படமெடுத்திருக்கிறேன்.

  உண்மையிலேயே அந்தச் சாலைவழிப்பிரயாணமும் காட்சிகளும் மிகவும் ரசிக்கக்கூடியவைதான்.//

  ஆமாம், பார்க்கப் பார்க்க அழகு. ஆகையாலேயே செல்லும் போது வழியெங்கும் ரசித்ததை ஊர் திரும்பும் போது கவனமாகக் காமிராவில் சிறை பிடித்தேன். மிக்க நன்றி சுந்தரா:)!

  பதிலளிநீக்கு
 80. செ.சரவணக்குமார் said...
  //அருமையான படங்கள். பகிர்ந்தமைக்கு நன்றிகள்.//

  மிக்க நன்றி சரவணக்குமார்.

  பதிலளிநீக்கு
 81. ஹுஸைனம்மா said...
  //முன்னமே நான் சொன்னதுதான்: திறமையை தொழிலாகவோ, passion photography போலவோ மாற்றும் எண்ணம் கொள்ளுங்களேன். அட்லீஸ்ட் ஒரு கண்காட்சியாவது ஏற்பாடு செய்யுங்க.//

  மனநிறைவுக்காகவே புகைப்படங்கள் என்றிருக்கும் எனக்கு தொழிலாய் மாற்றும் எண்ணம் இல்லா விட்டாலும், கடைசியாய் சொல்லியிருக்கும் யோசனை சிந்திக்க வைக்கிறது. பிடித்தும் இருக்கிறது. நன்றி ஹுஸைனம்மா

  //ஓடும் வண்டியில் இவ்வளவு தெளிவான படங்களா!! வாவ்!! (ஹூம்... - இது எனக்கு) ;-)))))//

  ஷட்டர் ஸ்பீட் அதிகரித்து எடுத்ததால் கிடைத்த தெளிவுதானே? நீங்களும் முயன்றால் நிச்சயம் வரும்:)!

  பதிலளிநீக்கு
 82. angelin said...
  //அழகான தர்மபுரி .ஓடி விளையாடிய கிருஷ்ணகிரி என் சிறு வயது நினைவுகளை தூசி தட்டி எழுப்பிய படங்கள் .
  பல 1000 மைல்கள் தொலைவில் இருந்து ரசிக்கிறேன்
  நன்றி நன்றி நன்றி//

  இதை விட வேறென்ன வேண்டும்? பல பேருக்கும் படங்கள் பழைய நினைவுகளை மலரச் செய்ததில் மிகுந்த மகிழ்ச்சி. தங்கள் முதல் வருகைக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 83. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //ஒரே கல்லில் எத்தனை மாங்கா வேணாலும் அடிப்பாங்க ராமலக்‌ஷ்மின்னு காட்டறீங்க :)

  போட்டோக்கு போட்டோ தகவலுக்கு தகவல்..பின்னாலேயே விழிப்புணர்வு..:)))//

  ஹிஹி.. மிக்க நன்றி முத்துலெட்சுமி:)!

  பதிலளிநீக்கு
 84. சி.பி.செந்தில்குமார் said...
  //கலக்கல் படங்கள்//

  மிக்க நன்றி சி பி செந்தில்குமார்.

  பதிலளிநீக்கு
 85. ஆஹா.. மறுபடி பார்த்ததோடு, பின்னூட்டங்களும் படித்தேன். (நான் ஏற்கெனவே வந்திருக்கிறேனா என்று பார்த்துக் கொள்ள!)

  பின்னூட்டங்கள் பார்த்துக் கொண்டு வரும்போது தோன்றியது...
  தமிழ் உதயம் என்ன ஆனார்?

  பதிலளிநீக்கு
 86. @ஸ்ரீராம்.,

  நன்றி:)! நீங்கள் பார்த்த பதிவுதான். எங்கள் ப்ளாக் வாசகர்களுக்காகப்
  பகிர்ந்திருந்தேன்.

  பதிவுகள் பக்கம் அதிகம் வராவிட்டாலும்
  FB, G+ என இணையத்தில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் பலர். சொந்தக் காரணங்களால் இணையம் வருவதை நிறுத்தி விட்டவர்கள் சிலர்.

  நல்ல பதிவுகளை வழங்கியவர் தமிழ் உதயம். மீண்டும் எழுத வருவார் என நம்புவோம்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin