ஞாயிறு, 26 மே, 2019

கிளிப் பேச்சு

முருங்கை மரத்துக் கிளிகள்:

#1
“எங்கிட்ட மோதாதே..”

ரு காலை நேரம். தோட்டத்து முருங்கை மரத்தின் மேல் கிளிகள் கீச் மூச் என ஒரே சத்தம். சத்தத்தைக் கேட்டு நாம் அவசரமாகக் கேமராவை எடுத்துக் கொண்டு போகும் முன்னரே சிலநேரங்களில் அவை பறந்து விடுவது உண்டு. சாப்பாட்டு நேரமாகையால் தவிர்க்க நினைத்தேன். ஆனால் விடாமல் பத்து நிமிடங்களாகியும் சத்தம் நிற்காததால் கேமராவுடன் சென்றால் பலனிருக்கும் எனத் தோன்றவே கேமராவுடன் முதல் மாடிக்கு விரைந்தேன்.

#2
“எதுவானாலும் பேசித் தீத்துக்கலாம்..”
இரு கிளிகளுக்கு இடையே ஏதோ சச்சரவு. பக்கத்துக் கிளைகளில் இன்னும் பல கிளிகள் பஞ்சாயத்துக்கு. ஜன்னல் திரைக்குப் பின் சற்று மறைவாக நின்றும் கூட அவை என்னைக் கவனித்து விட்டன. வாக்குவாதத்திலிருந்த கிளிகளைத் தவிர மற்றவை பறந்து விட்டன. கோபக்கார கிளி திரும்பிப் பார்த்தது.

#3
“போதும்.. எத்தனை படம்தான் எடுப்பீங்க?”

இன்னும் ஒண்ணே ஒண்ணு.. ப்ளீஸ்..” எனக் கெஞ்சிய என் பார்வையில் மனம் இரங்கி,

#4
“சரிசரி, சீக்கிரமா ஆகட்டும்.”
என்றது.

ஆனாலும் என் மேல் அவற்றுக்கு நம்பிக்கை இருக்கவில்லை. ஆர்வக் கோளாறில் சொன்ன சொல் காக்க மாட்டேன் என அவற்றுக்குத் தெரிந்திருக்க வேண்டும். கிளம்பி விட்டன, ஆனால் ஒன்றாக சேர்ந்து,, சிறகடித்து.. பறந்து.. மறைந்தன. எது எப்படியோ, படம் எடுத்ததில் அவற்றின் பஞ்சாயத்து முடிவுக்கு வந்ததில் சந்தோஷமே:).

*
கொய்யா மரத்துக் கிளி:
“அந்தக் கிளையில் ஒரு கால்..  
இந்தக் கிளையில் ஒரு கால்.. வச்சு பாலன்ஸ் செஞ்சுகிட்டு,  
இலைகளோடு இலைகளா மறைஞ்சிகிட்டோம்னா 
ஆற அமர காய்களைக் காலி பண்ணலாம்.
அப்படியும் கண்டுபிடிச்சு
படம் எடுக்கிறவங்களைப் பத்தியெல்லாம்
எனக்குக் கவலையில்லை.”



**
படங்கள்: என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 49

14 கருத்துகள்:

  1. கிளிகளின் பஞ்சாயத்திற்கிடையே அவைகளை படம் பிடிக்க முனைந்த உங்களின் ஆர்வமும் இடையே நடந்த கற்பனை உரையாடலும் ....மிகவும் ரசித்தேன்!!!

    பதிலளிநீக்கு
  2. கிளிகள்கூட சண்டையிடுமா என்று தோன்றியது! காதலுக்கு அடையாளமாய் அல்லவா இவற்றை நாம் சொல்வோம்! அருமையான படங்கள், ரசிக்கத்தக்க கேப்ஷன்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். ஆச்சரியம்தான். ஏதோ தீவிர வாக்குவாதம் போல சண்டையிட்டுக் கொண்டன. நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. என் வீட்டுமாமரத்தில் மாம்பழங்கள் இருக்கின்றன கிளிகளும் வருகை தருவதுண்டு ஆனால் படம் எடுக்க முடிவதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மா, கொய்யா மரங்களில் அவை இலைகளுக்குள் மறைந்து கொள்ளும்.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு

  4. “சரிசரி, சீக்கிரமா ஆகட்டும்" அழகிய படங்கள்.

    பதிலளிநீக்கு
  5. அழகான கிளிகள்.
    அருமையாக படம் எடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.
    படங்களுக்கு நீங்கள் கொடுத்த வார்த்தைகள் அருமை.

    பதிலளிநீக்கு
  6. Photography தான் நீங்க...அழகா படம்புடிச்சிருக்கீங்க மா...

    எங்கள் வீட்டுத் தோட்டத்திலும் இவைகளை பார்த்த
    ஞாபகங்கள் வந்து மறைந்தன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin