வெள்ளி, 17 மே, 2019

ஆதியும் நீயே - 'வளரி' வைகாசி இதழில்..

கிலமெங்கும்
ஆதிப்பெண்கள்,
ஆங்காங்கே 
மலர்களைக் கொண்ட
முட்கிரீடங்கள் தரித்து.
மாறவில்லை எதுவும்.
எட்டுத் திக்கிலிருந்தும்
அழுத்துகிறது சமூகம்
இன்னும் ஆழமாய்
தலைக்குள் முட்களை.
துயரில் கசியும் குருதி
நெஞ்சுக் குழிக்குள்
வேர் விட்டு விரிய,
எவரும் அறியாமல்
விழி சிந்தும் 
வெம்மையான நீரை 
உறிஞ்சிக் குடிக்கும்
வேரிலிருந்து
நெற்றிப் பொட்டுக்கு
பாய்கின்ற உறுதியில்
சூரியனாய்த் தகித்து
சுடர் விடுகிறது பெண்மை.
உலகப் பெண்கள்
உதிர்க்கின்ற
கண்ணீர்த் துளிகளை
உள்ளங்கையில் தாங்கி
உருவாக்குகிறாள்
சூலாயுதத்தை
ஒவ்வொரு பெண்ணும்
ஆதிபராசக்தியாய்!
**

ஓவியம்:
என் அக்கா ராமலக்ஷ்மியின் பேத்தி (13 வயது) அன்கிதா வரைந்தது.
கவிதை: ஓவியத்தால் ஈர்க்கப்பட்டு நான் எழுதியது.



**
ஓவியத்தோடு வெளியிட்ட 
வளரி இதழுக்கு நன்றி!


**

8 கருத்துகள்:

  1. மனதை தொட்ட கவிதை.
    அழகிய ஓவியம் வாழ்துகள் அன்கிதா.

    பதிலளிநீக்கு
  2. அழகான கவிதை, வாழ்த்துகள் மேலும் சிறந்தோங்க...!
    ஓவியம் அருமை,பாப்பாவுக்கும் வாழ்த்துகள் ...!

    பதிலளிநீக்கு
  3. அக்கா பெயரும் ராமலக்ஷ்மியா? அவர் பேத்திக்கு வாழ்த்துகள், அழகிய திறமையான ஓவியம்.

    கவிதையை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், பெரியப்பாவின் மகள். முன்னரும் சில பதிவுகளில் இவரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன்.

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. என்னதான் பெண் படித்து இருந்தாலும் உயர் பதவியில் இருந்தாலும் உன்ன பத்தி தெரியாதா என்ற ஒரே வார்த்தையில் முறிந்தாள்.உங்கள்நடை தெளிவாக வும் இலகுவாக வரும் உள்ளது வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கு நன்றி. ப்ரொஃபைலில் தங்கள் பெயர் வேறாக உள்ளதே.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin