விதான செளதா:
#1
கர்நாடக மாநிலத்தின் சட்டசபைக் கட்டிடமான விதான செளதா, இந்தியாவின் மிகப் பெரிய சட்டசபைக் கட்டிடமும் ஆகும். மைசூர் நியோ திராவிடப் பாணியையும், இந்தோ-சராசனிக் பாணியின் சில அம்சங்கங்களையும், திராவிடப் பாணியையும் பின்பற்றிக் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 1956_ல் கட்டி முடிக்கப்பட்ட விதான செளதா தரையிலிருந்து மேலே நான்கு தளங்களையும், தரைக்குக் கீழே ஒரு தளத்தையும் கொண்டது.
2300 அடி x 1150 அடி நீள அகலம் கொண்டது.
#2
முகப்புத் தாழ்வாரத்திற்கு இட்டுச் செல்லும் 45 படிகளும் 200 அடி அகலம் கொண்டவை. கிழக்குப் பக்க தாழ்வாரம் 40 அடி உயரம் கொண்ட 12 கிரானைட் தூண்களைக் கொண்டவை. அழகான கூரைச் சித்திரங்களும் உண்டு.
#3
சமீபமாக கட்டிடத்தின் மிக அருகே செல்லும் வாய்ப்பும் நேரமும் இருக்காததால் கட்டிடத்தின் உள் அழகுகளைப் படமாக்க முடியவில்லை. இதற்காகவே ஒருமுறை செல்ல எண்ணம்.
கட்டிடத்தின் மேலிருக்கும் பிரதான குவிமாடம் (dome) 60 அடி விட்டம் கொண்டது. நமது தேசியச் சின்னமான நான்கு சிங்கங்களால் முடிசூட்டப்பட்டு அழகுடன் மிளிர்கிறது.
#4
குவி மாடத்தின் கீழ், முகப்பு வாசலுக்கு மேல் ‘அரசாங்கத்தின் வேலை என்பது ஆண்டவனின் வேலை’ (Government's Work is God's Work) என ஆங்கிலத்திலும் ‘சர்க்காரது கெலஸா தேவரு கெலஸா’ எனக் கன்னடத்திலும் வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும். அதைக் கீழ் வரும் படத்தில் காணலாம்:
#6
ஞாயிறு மற்றும் அரசாங்க விடுமுறை நாட்களில் மைசூர் அரண்மனையைப் போல இக்கட்டிடம் முழுவதும் மின்விளக்குகளால் ஒளியூட்டப் பட்டிருக்கும். பல வருடங்களுக்கு முன் ஞாயிறு மாலைப் பொழுதுகளை இங்கே கழித்திட விரும்பி வரும் மக்கள் கூட்டம் அதிகம். நாங்களும் அடிக்கடி சென்றிருக்கிறோம். இப்போது எப்படி என்பது தெரியவில்லை. பெங்களூரின் போக்குவரத்து நெரிசலில் இதுபோன்ற இன்னும் பல இடங்களுக்குப் போய் வருவது அத்தனை எளிதாகவும் இல்லை.
#5
விகாஸ செளதா:
விதான செளதாவின் பிற்சேர்க்கையாக கர்நாடக அரசு அதன் தெற்குப் பகுதியில் எழுப்பியுள்ள நகலே விகாஸ செளதா. 2005_ஆம் ஆண்டும் அப்போதைய முதல் மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. சில அமைச்சக மற்றும் சட்ட சபை இலாக்காக்கள் இங்கு இயங்கி வருகின்றன.
#7
விகாஸ செளதா சாலைகள் கூடும் இடத்தில் இருக்கிறது. போக்குவரத்தைத் தாண்டிச் செல்ல வேண்டும் ஆகையால், தொலைவிலிருந்து எடுத்த படங்கள் இவை.
#8
#1
கர்நாடக மாநிலத்தின் சட்டசபைக் கட்டிடமான விதான செளதா, இந்தியாவின் மிகப் பெரிய சட்டசபைக் கட்டிடமும் ஆகும். மைசூர் நியோ திராவிடப் பாணியையும், இந்தோ-சராசனிக் பாணியின் சில அம்சங்கங்களையும், திராவிடப் பாணியையும் பின்பற்றிக் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 1956_ல் கட்டி முடிக்கப்பட்ட விதான செளதா தரையிலிருந்து மேலே நான்கு தளங்களையும், தரைக்குக் கீழே ஒரு தளத்தையும் கொண்டது.
2300 அடி x 1150 அடி நீள அகலம் கொண்டது.
#2
முகப்புத் தாழ்வாரத்திற்கு இட்டுச் செல்லும் 45 படிகளும் 200 அடி அகலம் கொண்டவை. கிழக்குப் பக்க தாழ்வாரம் 40 அடி உயரம் கொண்ட 12 கிரானைட் தூண்களைக் கொண்டவை. அழகான கூரைச் சித்திரங்களும் உண்டு.
#3
சமீபமாக கட்டிடத்தின் மிக அருகே செல்லும் வாய்ப்பும் நேரமும் இருக்காததால் கட்டிடத்தின் உள் அழகுகளைப் படமாக்க முடியவில்லை. இதற்காகவே ஒருமுறை செல்ல எண்ணம்.
கட்டிடத்தின் மேலிருக்கும் பிரதான குவிமாடம் (dome) 60 அடி விட்டம் கொண்டது. நமது தேசியச் சின்னமான நான்கு சிங்கங்களால் முடிசூட்டப்பட்டு அழகுடன் மிளிர்கிறது.
#4
குவி மாடத்தின் கீழ், முகப்பு வாசலுக்கு மேல் ‘அரசாங்கத்தின் வேலை என்பது ஆண்டவனின் வேலை’ (Government's Work is God's Work) என ஆங்கிலத்திலும் ‘சர்க்காரது கெலஸா தேவரு கெலஸா’ எனக் கன்னடத்திலும் வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும். அதைக் கீழ் வரும் படத்தில் காணலாம்:
#6
#5
விதான செளதாவின் வலப்பக்கக் குவி மாடம்
விகாஸ செளதா:
விதான செளதாவின் பிற்சேர்க்கையாக கர்நாடக அரசு அதன் தெற்குப் பகுதியில் எழுப்பியுள்ள நகலே விகாஸ செளதா. 2005_ஆம் ஆண்டும் அப்போதைய முதல் மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. சில அமைச்சக மற்றும் சட்ட சபை இலாக்காக்கள் இங்கு இயங்கி வருகின்றன.
#7
விகாஸ செளதா சாலைகள் கூடும் இடத்தில் இருக்கிறது. போக்குவரத்தைத் தாண்டிச் செல்ல வேண்டும் ஆகையால், தொலைவிலிருந்து எடுத்த படங்கள் இவை.
#8
***
தரைக்குக் கீழேயும் ஒரு தளம் இருக்கிறதா? ஓ...
பதிலளிநீக்குசுவாரஸ்யமான தகவல்கள், அழகிய படங்கள்.
நன்றி ஸ்ரீராம்.
நீக்குபள்ளி சுற்றுலாவில் விதான செளதாவைப் பார்த்தோம். அப்போது உள்ளே விட்டார்கள்.(1970ல்)
பதிலளிநீக்குசட்டசபை நடந்து கொண்டு இருந்ததை பார்வையாளர்கள் நிற்கும் இடத்திலிருந்து பார்த்தோம்.
பெங்களூர் சுற்றுபயணம் பள்ளி பருவத்தில் தோழிகளுடன் மிகவும் இன்பமானது.
படங்கள் எல்லாம் மிக அழகு.
சட்டசபை நடக்கும் போது பார்த்தது நல்ல அனுபவமாக இருந்திருக்கும். பள்ளிக்கால சுற்றுலாக்கள் மறக்க முடியாதவையே. நன்றி கோமதிம்மா.
நீக்குவிதான சௌதா கட்டுமானப் பணியில் என்பங்கும் இருக்கிறது பகிர்ந்திருக்கிறேன்
பதிலளிநீக்குசுவாரஸ்யம். நன்றி GMB sir.
நீக்கு1980இல் இக்கட்டடத்தின் ஒரு பகுதியில் UPSC தேர்வு எழுதச் சென்றிருந்தபோது பார்த்த நினைவு. அப்போது கட்டடம் அருமையாக இருந்தது. இப்போது சாலை விரிவாக்கப்பணிகளால் கட்டடத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்கும்படியாக இல்லை. இருந்தாலும் பெங்களூர் என்றால் விதான்சௌதா அனைவரின் நினைவிற்கும் வந்துவிடும்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல விரிவாக்கப் பணிக்களுக்காக சில காலம் (ஓரிரு வருடங்கள்) சாலையின் மறுபக்கத்திலிருந்து (அதாவது நீதிமன்றத்தின் முன் இருந்து) கட்டிடத்தைப் பார்க்க முடியாமல் இருந்தது. ஆனால் இப்போது அப்படியில்லை. முழுமையாகப் பார்க்க முடியும்.
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பெங்களூரை ஜாபகப் படுத்தி விட்டீர்கள்.
பதிலளிநீக்குஅழகிய படங்கள்.
நன்றி மாதேவி.
நீக்கு