ஞாயிறு, 27 ஏப்ரல், 2014
சனி, 26 ஏப்ரல், 2014
தூறல் 17- நாட்டின் தலையெழுத்து; ஈஜிபுரா; AID பெங்களூரு; ITHI கண்காட்சி; கல்கி கேலரி
2014 மார்ச் 15,16 ஆகிய தினங்களில் பெங்களூர் தளம் அரங்கில் நடைபெற்ற AID ஒளிப்படக் கண்காட்சி குறித்த எனது முந்தைய பகிர்வுகள் இங்கும்.. இங்கும். போட்டியில் முதல் பரிசை வென்ற படம் இதுதான்:
#1
சேரி வாழ் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கைச் சூழலைச் சித்தரிக்கும் இந்தப் படத்தை எடுத்தது யாராக இருக்குமென்று நினைக்கிறீர்கள்?
#1
சேரி வாழ் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கைச் சூழலைச் சித்தரிக்கும் இந்தப் படத்தை எடுத்தது யாராக இருக்குமென்று நினைக்கிறீர்கள்?
லேபிள்கள்:
* கல்கி,
அனுபவம்,
சமூகம்,
தூறல் பகிர்வு,
புகைப்படத் தகவல்கள்
செவ்வாய், 22 ஏப்ரல், 2014
எழுத்தாளர் பாவண்ணன் பார்வையில்.. ‘இலைகள் பழுக்காத உலகம்’ - 'குழந்தைமையின் கவித்துவம்' திண்ணை இதழில்..
மண்ணுலக
வாழ்வை நீத்தவர்கள் வாழும் உலகத்தை இலைகள் பழுக்காத உலகம் என
மதிப்பிடுகிறது ராமலக்ஷ்மியின் கவிமனம். இன்னொருவகையில் கலைஞனின் அக
உலகத்தையும் இலைகள் பழுக்காத உலகம் என்றே சொல்லலாம். எல்லாத் தருணங்களிலும்
எண்ணங்களோடு வாழ அந்த உலகத்தில் மட்டுமே சாத்தியப்படுகிறது. குழந்தைமையின்
துடிப்போடு அவற்றை அடுக்கி அடுக்கிக் கலைத்து எல்லையற்ற ஊக்கத்தையும்
உவகையையும் அடைவதுகூட சாத்தியமாகிறது. தன் எண்ணங்களாலும் கற்பனைகளாலும்
தான் கண்டடைந்த அனுபவங்களாலும் தன் அக உலகத்தை அடர்த்திமிக்கதாக
கட்டமைத்துக்கொண்டிருக்கிறார் ராமலக்ஷ்மி. அந்த உலகத்தின் ஈர மண்ணைக்
குழைத்தெடுத்து அவர் வடித்துவைத்திருக்கும் சிற்பங்களை ’இலைகள் பழுக்காத
உலகம்’ தொகுதி வழியாகப் பார்க்கவைத்திருக்கிறார். சிற்பங்களை வடிப்பதில்
அவருக்குள்ள முனைப்பும் ஆர்வமும் பாராட்டுக்குரியவை. செய்நேர்த்தியோடு
காணப்படும் பல சிற்பங்கள் அவருடைய சொல்லாற்றலுக்குச் சாட்சியாக உள்ளன.
வெள்ளி, 18 ஏப்ரல், 2014
முரளிதரன் அழகர் - கல்கி கேலரியில்..
கடந்த
நாலைந்து ஆண்டுகளாக முரளிதரன் அழகரின் ஃப்ளிக்கர் பக்கத்தைத் தொடர்ந்து
வருகிறேன். ஒளிப்படக் கலை, ஓவியக் கலை இரண்டிலும் அசத்தி வருபவர். இன்று
வெளியாகியுள்ள கல்கி இதழின், கேலரி பக்கத்திற்காக இரு துறைகளிலும் தனது
திறனை வளர்த்துக் கொண்ட விதத்தையும், அனுபவங்களையும் அழகாகப் பகிர்ந்து
கொண்டுள்ளார்:
பொக்கிஷத்தைக் காப்பதுதான் வேலை!
லேபிள்கள்:
* கல்கி,
அனுபவம்,
கட்டுரை/அனுபவம்,
சித்திரம் பேசுதடி,
நேர்காணல்
வியாழன், 17 ஏப்ரல், 2014
தன்னந்தனியே.., அன்னபெல் லீ - எட்கர் ஆலன் போ கவிதைகள் (1,2)
லேபிள்கள்:
** மலைகள்,
கவிதை,
தமிழாக்கம்,
மொழிபெயர்ப்பு இலக்கியம்
ஞாயிறு, 13 ஏப்ரல், 2014
வியாழன், 10 ஏப்ரல், 2014
தமிழ்ப் பறவை
#1
நீர் வண்ண ஓவியங்களில் அசத்தி வரும் பரணிராஜன் சத்தியமூர்த்திக்கு சொந்த ஊர் மதுரைக்குப் பக்கத்திலிருக்கும் உசிலம்பட்டி. ஓவிய ஆர்வம் துளிர் விட்டது சினிமாவினாலும், சினிமா கட்-அவுட்டுகளினாலும்தான் என்றது சுவாரஸ்யம். அவர் வரைந்த ஓவியங்களை இரசித்தபடியே அவரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்:)!
#2
சிறுவயதில் உசிலம்பட்டியில் இருந்து மாதமொருமுறை மதுரை செல்லும் போது, பெரியார் பஸ்ஸ்டாண்ட் பக்கம், 40-50 அடியில் காணக் கிடைத்த சினிமா கட்டவுட்களே ஓவியனாகும் ஆசையை இவருக்குள் விதைத்திருக்கிறது. ஆனாலும் அதற்கான பயிற்சி என்பது பள்ளி ஓவியப் போட்டிகளில் கலந்து கொள்கிற மட்டிலேயே நின்று போயிருந்திருக்கிறது. பொறியியல் படித்து முடிக்கும்வரை அதற்கென அதிக நேரம் செலவழிக்க முடியாது போனாலும் பத்திரிக்கைகளில் வரும் மாருதி, ம.செ., ஜெ.., ராமு, அரஸ், ஷ்யாம் ஆகியோரின் ஓவியங்களை உள்வாங்கிக் கொண்டே இருந்திருக்கிறது இவரது ஓவிய ஆர்வம்.
#3
படிப்பை முடித்து பெங்களூரில் வேலைக்குச் சேர்ந்த பின்புதான், ஓவியக் கலையின் கதவு இவருக்குத் திறந்திருக்கிறது. பெங்களூரின் குளுமை, மக்களின் கலையார்வம் மேலும் தன்னைத் தூண்டியது எனத் தெரிவிக்கும் பரணி எப்படி தன்னைச் செதுக்கிக் கொண்டார் என்பதை விவரிக்கிறார்:

நேர்காணல்,
பெங்களூர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
.jpg)

.jpg)