Friday, March 14, 2014

தூறல் 16 - AID பெங்களூர் கண்காட்சியும் எனது படங்களும்; மல்லிகை மகள்; சிறு வியாபாரிகள்

AID பெங்களூர், விழிப்புணர்வுக்காக நடத்திய ஒளிப்படப் போட்டி குறித்த அறிவிப்பு விரிவாக இங்கே. கலந்து கொண்ட படங்களில் கண்காட்சிக்குத் தேர்வான படங்கள் 15 குறித்த விவரங்கள் இங்கே. அவற்றில் எனது படங்கள் இரண்டு தேர்வாகியுள்ளன என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. இவற்றோடு பெங்களூர் குறித்த மேலும் பல ஒளிப்படங்களுடன், மார்ச் 15 மற்றும் 16 தேதிகளில், பெங்களூரின் தொம்லூர் பகுதியிலிருக்கும் தளம் அரங்கில் நடைபெறவிருக்கும் கண்காட்சியில் வாய்ப்புக் கிடைக்கிறவர்கள் கலந்து கொள்ளுங்கள்!

கண்காட்சியில் இடம் பெறவிருக்கும் எனது படங்கள்:
Cleanliness is next to Godliness 
@ Ulsoor Lake


Ordinary people who pray for stronger shoulders 
than for a lighter burden 
@ Commercial Street


இதோ.. நெருங்கிக் கொண்டே இருக்கிறது தேர்தல்.

மார்ச் 2014, இந்த மாத மல்லிகை மகளில்..

எனது கவிதை ‘நோட்டு மாலைகள்’:

நன்றி மல்லிகை மகள்!
சித்துப்
பாலுக்கு அழுதபடியே இருக்கும்
பாவஜீவனாய்
எங்கோ ஒரு கைக்குழந்தை

மருந்துக்கு வழியின்றி
ஏதோவொரு வீட்டின் மூலையில்
விடாமல் இருமிக் கொண்டிருக்கும்
முதிய தாய்

உடைந்துபோன மூக்குக் கண்ணாடியின்
சட்டத்தைத் தினம்தினம்
தொட்டுப் பார்த்து
மகனிடம் புதுசுக்கு
மனுப்போட்டுக் காத்திருக்கும்
வயோதிகர்

அஸ்தமனம்வரை உழைத்து
அரைவயிற்றுக் கஞ்சிக்காவது ஆகுமென
உலைவைக்க வந்தவளிடம்
உதைத்துப் பிடுங்கிக்கொண்டவனை
நினைத்து நொந்து சுருண்டவளாய்
மனைவியெனும் ஒரு பிறவி

'பரீட்சைக்குப் பணம் கட்டினாதான்
பள்ளிக்கூடம் போவேன்'
சொன்னாதாலே அடிவாங்கி
கன்னம்வீங்கிக் கலங்கிநிற்கும்
சின்னஞ்சிறு பாலகன்

'இந்த ஒரு வருசமாவது
பொறந்த நாளைக்கி
புதுசு வாங்கித் தாப்பா'
கிழிந்த பாவாடையில்
வழிந்த கண்ணீரைத்
துடைத்துக் கொள்ளும்
பதின்ம வயது மகள்

ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்
ஒவ்வொரு நோட்டுக்குள்ளும்.
***

[மீள் பகிர்வு.]

சிறுவியாபாரிகள்

இம்மாத PiT போட்டிக்கானத் தலைப்பு.

அன்றைய வருமானத்தில்தான் அன்றைய சாப்பாடு என வாழும் மனிதர்கள்.

அன்றாட வாழ்வில் எதிர்ப்படும் இவர்களின் முகங்களில்தான் எத்தனை கவலை.. எதிர்பார்ப்பு.. நம்பிக்கை.. விடா முயற்சி..

அறிவிப்புப் பதிவு இங்கே. மேலும் சில படங்கள் மாதிரிக்காக..

#
#
 #
#

#
படங்கள் சென்று சேர வேண்டியக் கடைசித் தேதி 20 மார்ச் 2014. இதுவரை வந்திருக்கும் படங்களைக் காண இங்கே செல்லலாம்.

படத்துளி:
நகரமயமாக்கல்/ Urbanisation
***


15 comments:

 1. 2 படங்கள் இரண்டு தேர்வாகி உள்ளது மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. வாழ்த்துக்கல் ராமலக்ஷ்மி :)

  ReplyDelete
 3. மனம் நிறைந்த இனிய பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  நல்லா இருங்க.

  ReplyDelete
 4. படங்கள் மிக அருமை. படங்கள் தேர்வானதில் மகிழ்ச்சி.சிறு வியாபாரிகள் தேடல் கடினமாக உள்ளது இங்கே.

  ReplyDelete
 5. படங்கள் தேர்வானதற்கு வாழ்த்துகள். நோட்டு மாலை கவிதை சொல்லும் வேதனையான உண்மை.

  ReplyDelete
 6. கண்காட்சியில் வைக்கப்பட இருக்கும் உங்களின் இரண்டு படங்களுமே பிரமாதம். மகிழ்வான நல்வாழ்த்துகள். நோட்டு மாலை கவிதை மனதைத் தொட்டது.

  ReplyDelete
 7. மகிழ்ச்சி நிறைந்தபாராட்டுகள்.
  கவிதை அருமை.

  சிறிதுகாலம் தொடரமுடியவில்லை கடமைகள் அதிகம் மன்னித்துக் கொள்ளுங்கள்.

  ReplyDelete
 8. @துளசி கோபால்,

  வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 9. @வல்லிசிம்ஹன்,

  நன்றி. ஆம், அங்கே சற்று சிரமம்தான்.

  ReplyDelete
 10. @மாதேவி,

  வாங்க மாதேவி. இடைவெளி எல்லோருக்கும் ஏற்படுவதுதானே. மீண்டும் பதிவிட ஆரம்பித்திருப்பதும் மகிழ்ச்சி.

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.
  நோட்டுமாலைக் கவிதை மிக அருமை. மனதை கனக்க வைத்த கவிதை.
  படங்கள் எல்லாம் பேசும் சித்திரங்கள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin