ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

தெரிஞ்சுக்கலாம் வாங்க.. - ஒட்டகச் சிவிங்கி

லகின் மிக உயரமான விலங்கினம் ஒட்டகச் சிவிங்கி. மைசூர் விலங்கியல் பூங்காவினுள் நுழைந்ததுமே நம்மை வரவேற்பது இவைதாம்.

#1

ஆப்பிரிக்காவில் அதிகம் காணப்படும் பாலூட்டிகளான இவை, வனத்தில் வாழ்வது போலவே சுதந்திரமாக உலாவர மிகப் பெரிய பரப்பளவிலான இடத்தை ஒதுக்கியிருக்கிறார்கள்.

#2

நான் எடுத்த படங்களுடன், ஒட்டகச்சிவிங்கி பற்றி நாம் அறிந்த.. அறியாத.. ஆச்சரியம் தரும் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

[படங்கள் திறப்பதற்கு நேரம் எடுத்தால் ஏதேனும் ஒன்றின் மேல் க்ளிக் செய்து light box_ல் வரிசையாகக் காணலாம்.]

*ஆண் ஒட்டகச் சிவிங்கிகள் 16 முதல் 18 அடி உயரமும் 900 கிலோ கிராம் வரை எடையும் கொண்டவையாக வளர்கின்றன. பெண் ஒட்டகச் சிவிங்கிகள் ஆண்களைவிடப் பொதுவாக உயரத்திலும் எடையிலும் குறைந்தவை.

* இவற்றின் பின்னங்கால்களைவிட முன்னங்கால்கள் பத்து சதவிகிதம் நீளமானவை. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்குள்ளும் 15 அடிகள் அடக்கம்!!

#3
*இவற்றின் இதயம் 10 கிலோ கிராம் நிறையுடையது.

 *ஒட்டகச் சிவிங்கிகளின் அடி வயிற்றைத் தவிர்த்து மற்ற உடல் பாகங்கள் முழுதும் புள்ளிகள் காணப்படுகின்றன. புள்ளிகளின் அமைப்பு ஒவ்வொரு ஒட்டகச் சிவிங்கிக்கும் தனித்துவமானவை என்பது படைப்பின் வியப்புகளில் ஒன்றே.

#4

 * வளைந்து கொடுக்கும் தன்மையுடைய அதன் கழுத்து  ஓடும் நதியிலும் கூட குனிந்து நீர் அருந்த உதவுகிறது.

* 27 அங்குலத்திற்கு நீண்ட நீல நிற நாக்கினைக் கொண்டவை. இந்த நீளம் இலைகளை எளிதாகப் பற்றிக் கொள்ள உதவுகிறது.

 * ஒட்டகச் சிவிங்கிகள் சராசரியாக உயிர் வாழும் வயது 25 வருடங்கள்.

#5
தீராத வாழ்க்கைப் போராட்டத்திற்கு உட்படும் விலங்குகள் அதற்காகத் தம்மைத் தயார் படுத்திக் கொள்வதும், விழிப்புணர்வோடு இயங்குவதுமாய் எப்போதும் ஆச்சரியப்படுத்துகின்றன.

இவை  14 முதல் 15 மாத கர்ப்பக் காலத்தில் குட்டியை ஈனுகின்றன. குட்டிகள் 1.8 மீட்டர் உயரமுடையவையாக இருப்பதோடு பிறந்து சில மணிநேரத்திலேயே எழுந்து ஓடக்கூடியவை. அந்த விந்தை எப்படி நிகழ்கிறதெனப் பார்ப்போம்:

ஒட்டகச் சிவிங்கிகள் நின்றபடியே குட்டியை ஈன்றிடும் இயல்புடையவை.  இதனால் குட்டி மிக உயரத்திலிருந்து ' பொத்'தென்று தரையில் விழுகின்றன. தாயின் இதமான வயிற்றில் சொகுசாக இருந்து விட்டு வெளியே வந்ததும் வராததுமாக ஏற்படும் இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அவற்றுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருக்கும். எழுந்து நிற்கும் முயற்சியில், முழங்கால்களைத் தரையில் உறுதியாகப் பதிக்கக் கூட இயலாத நிலையில் இருக்கும் குட்டியைத் தம் பலம் கொண்ட மட்டும் கால்களால் தாய் சிவிங்கி எட்டி உதைக்க ஆரம்பிக்கும் . புதிதாகப் பிறந்த குட்டியைத் தாய் விலங்கு இப்படித் திருப்பித் திருப்பிப் பலமுறை எட்டி உதைப்பது பார்ப்பவருக்கு ‘என்ன கொடுமை சரவணா...’ எனத் தோன்ற வைக்கலாம். ஆனால் குட்டி பிழைத்திருக்க வேண்டும், நெடு நாள் உயிருடன் வாழ வேண்டும் என்பதற்காகவே, தன் உள்ளுணர்வால் உந்தப்பட்டு அவ்வாறு செய்கிறது. சற்று வளர்ந்த ஒட்டகச் சிவிங்கிகளைக் கொன்றுண்ணிகளால் தாக்க முடிவதில்லை. சிறு குட்டிகளை சிங்கம், சிறுத்தை, கழுதைப்புலி மற்றும் ஆப்ரிக்கக் காட்டுநாய்கள் போன்றவை வேட்டையாடக் காத்துக் கிடக்கின்றன. குட்டி நாலுகால்களையும் ஊன்றிச் சீக்கிரமாக ஓட ஆரம்பிக்கவில்லை என்றால் அவை பிழைக்க வழியில்லை என்கிற பதட்டத்திலேயே தாய்ச் சிவிங்கி அவ்வாறு நடந்து கொள்கிறது.

அப்படியும்,  25% முதல் 50% வரையான ஒட்டகச் சிவிங்கிகளே வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து உயிர்தப்பி முழு வளர்ச்சியடைகின்றன. இவை தம்மைத் தாக்கும் விலங்குகளிடமிருந்து தப்பிக்கக் கால்களையே பயன்படுத்துகின்றன. உதைத்து உதைத்துத் தாக்குகின்றன. இதன் ஓங்கிய ஓர் உதை சிங்கத்தையே கொல்லும் வலிமை வாய்ந்ததெனத் தெரிகிறது.

 உணவுப் பழக்கம்:


*வனங்களில் வசிக்கும் இவற்றின் பிரதான உணவு இலைகளும் கிளைகளும். பெரும்பாலும் உணவினை அதிகாலையில் உட்கொள்ளவே விரும்புகின்றன. தினம் 29 கிலோ எடையிலான இலைதளைகளை உட்கொண்டாலும் பிற மேய்ச்சல் விலங்குகளோடு ஒப்பிடுகையில் இந்த அளவு குறைவானதாகவே இருக்கிறது. ஆனாலும் அதிக சத்துள்ளவையாக இருப்பதால் அவற்றின் தேவைக்குப் போதுமானதாகி விடுகிறது.

*பழங்கள், பூக்கள், முட்கள், படரும் தாவரங்கள், ஆப்ரிகாட் மரங்கள் ஆகியவற்றையும் விரும்பி உண்ணும் இவை நல்ல செரிமான சக்தியைக் கொண்டுள்ளன. அசைபோடும் விலங்கினமான ஒட்டகச்சிவிங்ககள் முதலில் உணவை நன்கு மென்று விழுங்கி விடுகின்றன. அதில் செரிக்காமல் தங்குபவற்றை மீண்டும் வாய்க்குக் கொண்டுவந்து அசை போடும் ஆற்றல் பெற்றிருக்கின்றன.

*இன்னும் ஆச்சரியமான ஒரு விஷயம் என்னவெனில் அடிக்கடி இவை நீர் அருந்துவதில்லை. ஒருவாரம் வரைக்கும் நீர் அருந்தாமல் சமாளிக்கக் கூடியவையாக உள்ளன.

#7

[தகவல்கள்: ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இணையத்தில் கிடைத்த குறிப்புகளின் அடிப்படையில்...]
***

24 கருத்துகள்:

  1. அழகிய படங்களும் ஆச்சர்யத் தகவல்களும்!

    பதிலளிநீக்கு
  2. ஒட்டகச்சிவிங்கி பற்றி அறியாத தகவல்களுக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  3. தெரியாத தகவல்களுடன் அழகான புகைப்படம்,நன்றிக்கா!!

    பதிலளிநீக்கு
  4. லகத்திலேயே உயர்ந்த ஒட்டகச் சிவிங்கியா. உயரமான செய்திதான். இதுவரை அறிந்திராத தகவல்களும் ,சிறந்த படங்களும். பகிர்வுக்கு மிக நன்றி.ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்

    ஒட்டகச்சிவிங்கி பற்றிய தகவல் தங்களின் பதிவுவழி அறியக்கிடைத்துள்ளது... படங்கள் மிக அழகாக உள்ளது.. வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. ஆஹா! அருமை!
    ஒட்டகச் சிவிங்கி தகவல் பெட்டக சிமிழ்!

    பதிலளிநீக்கு
  7. அழகான புகைப்படங்கள் தகவல்களுடன்.

    பதிலளிநீக்கு
  8. அட்டகாசமான படங்களுடன் பல அறியாத தகவல்களைத் தந்து அசத்திவிட்டீர்கள். பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  9. அருமையான படங்கள். விநோதமான விவரங்கள்.

    பதிலளிநீக்கு
  10. அருமையான படங்கள்.... இறைவனின் படைப்பில் எத்தனை எத்தனை அதிசயங்கள்.....

    தகவல்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. படைப்புக்களின் விந்தையை நினைத்தி பெருமைப்படுகின்றேன். மனிதன் மட்டுமா சிறப்பு படைப்புக்கள் அனைத்தும் சிறப்பு

    பதிலளிநீக்கு
  12. ஒட்டகச்சிவிங்கியின் தகவல்களுக்கு மிக்க நன்றி மேலும் ஒட்டகத்தின் கண்ணில் இரண்டு இமைகள் உள்ளன ஒன்று கண்ணாடியைப் போன்றது பாலைவனத்தில் செல்லும் பொழுது காற்று அடித்தால் திரையை மூடிக்கொள்ளும் அதன்மூலம் பாதை தெரியும் கண்ணில் மண் விழுகாது இதுவும் இறைவனுடைய அருட்கொடை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவலுக்கும் கருத்துக்கும் நன்றி.

      கூகுள் ஐடி இல்லா விட்டாலும் கருத்தின் கீழ் தங்கள் பெயரைக் குறிப்பிடலாமே.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin