ஞாயிறு, 11 டிசம்பர், 2016

தூறல்: 28 -பட்டம், வல்லமை, சாரல்

தினமலர் பட்டம், மாணவர் பதிப்பில்.. (5)

22 நவம்பர் 2016 இதழில்..

சூப்பர் நிலாக்களைப் படமாக்கிப் பகிர்ந்த போது சேகரித்த தகவல்கள்...

அருகில் வந்த அழகு நிலா..

சென்ற மாதம் எடுத்த சூப்பர் மூன் இங்கே.  வெறொரு அபெச்சர் அளவில் (f/9) எடுத்த படம் பார்வைக்கு:எக்ஸ்ட்ரா சூப்பர் மூனை சென்ற மாதம் தவற விட்டவர்கள், நாளை மறுநாள், 13 நவம்பர் 2016 அன்று மீண்டும் கண்டு இரசிக்கலாம் என்கிறார்கள். முயன்று பாருங்கள். அதே போல இரண்டே மணி நேரத்தில் பூரண ஒளியை அள்ளித் தருமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

***

ல்லமை மின்னிதழில் நான்காவது முறையாக, கவி படைக்கத் தேர்வான எனது படம்:
வல்லமை ஆசிரியர் குழுவினருக்கு நன்றி.

படத்துக்கு வந்த கவிதைகள் இங்கே. போட்டி முடிவு இங்கே.
கலந்து கொண்டவர்களுக்கும் வெற்றி பெற்றவருக்கும் வாழ்த்துகள்!

***
ஆல்பம்:
சென்ற வாரயிறுதியில் மும்பையிலிருந்து இரண்டே நாள் பயணமாக பெங்களூர் வந்திருந்த தோழி சாந்தி மாரியப்பன், நேரம் ஒதுக்கி தனது மற்றும் தம்பி குடும்பத்தினருடன் என் வீட்டுக்கு வருகை தந்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.

அன்புச் சாரலில் நனைந்தபடி..
அவரது “சிறகு விரிந்தது” கவிதைத் தொகுப்பை கையெழுத்திடக் கேட்டுப் பெற்றுக் கொண்டேன். எனது நூல்களையும் அவருக்கு அளித்தேன். நாட்டு நடப்பு, நலம் விசாரிப்பு என அளவளாவியதில் நேரம் சென்றதே தெரியவில்லை. புதிய வீட்டுக்கு முதல் வருகை தரும் பதிவுலக நண்பர் சாந்திதான். மற்ற நண்பர்களைச் சந்திக்க அவருக்கு நேரம் இருக்கவில்லை. அடுத்த முறை முன்னதாக திட்டமிட்டு அனைவரும் சந்திப்போம், சாந்தி. வருகைக்கு என் அன்பு நன்றி :).

நான்காண்டுகளுக்கு முன் சாந்தி பெங்களூர் வந்திருந்த போது நடைபெற்ற சந்திப்பு குறித்த பகிர்வும், படங்களும் தூறல் 5 மற்றும் தூறல் 26_ல்.
***

படத்துளி:

ஆறு வருடங்களாக உபயோகித்து வந்த cropped sensor camera_விலிருந்து full frame dslr_க்கு மாற விரும்பி கடந்த சில மாதங்களாக பல கட்டுரைகள் வாசித்து ஆய்ந்து, நண்பர்களின் ஆலோசனைகளைப் பெற்று, ஒருவாறாக முடிவெடுத்து விட்டாலும் கேமரா மற்றும் லென்சுகளின் எடை... எனக்கிருக்கும் சில உடல்நலக் குறைவுகளால், ஒரு அச்சுறுத்தலாகவே இருந்தது. இருப்பினும் எண்ணி துணிக கருமம் என்பதன்படி துணிந்து விட்டேன்:). பயந்த அளவுக்கு சமாளிக்க முடியாத எடை இல்லை. 
தொடருகிறது பயணம் புதிய கருவிகளுடன், புதிய புதிய காட்சிகளைத் தேடி...

புதிய வானம்.. புதிய பயணம்..
***

4 கருத்துகள்:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin