தீபாவளி சிறப்புப் பக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீபாவளி சிறப்புப் பக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 14 அக்டோபர், 2014
வியாழன், 7 நவம்பர், 2013
கதை நேரங்கள் - தினமணி தீபாவளி சிறப்புப் பக்கத்தில்..
தத்தமது அனுபவங்களைக் கலந்து
சொல்லி வந்தார்கள் கதைகளை
உற்சாகமாய் உறவுகள்
உச்சுக் கொட்டும் குழந்தைக்கு.
மாமா அத்தைகளின் கதைகளில்
சாகசங்களும் திரும்பங்களும்
அதிகமாய் இருந்தன.
அன்பாலும் பரிவாலும்
நெய்யப்பட்டப் பாசவலைகளாகப்
பாட்டிகளின் கதைகள்.
குடும்பத்தின், நாட்டின், உலகின்
வரலாற்றுக்கு முக்கியத்துவம் தந்த
தாத்தாக்களின் கதைகளில்
அவர்கள் ஆற்றிய பங்கும்
அவசியம் இடம் பெற்றிருந்தன.
லேபிள்கள்:
**தினமணி,
கவிதை,
கவிதை/வாழ்க்கை,
சமூகம்,
தீபாவளி சிறப்புப் பக்கம்
ஞாயிறு, 3 நவம்பர், 2013
அடை மழை (சிறுகதை) - ‘தி இந்து’ தீபாவளி சிறப்புப் பக்கத்தில்..
தக்காளி.. வெங்காயம், உருளக்கெழங்கு, மெளகா.., பூடு..’ வாய்க்குள் முணுமுணுத்தபடியே சின்னத் தாளில் விலையை மட்டும் எழுதிக் கொண்டே வந்த ஆறுமுகம் பூண்டில் நிறுத்தி விட்டு செல்லத்தை நிமிர்ந்து பார்த்தான்.
“இன்னிக்கு பாருங்க. வீட்டுக்காரம்மாக்கு ஒடம்பு சரியில்ல. சனிக்கிழமையானா டீச்சரம்மாக்கு பூண்டு வேணுமேன்னு அவ பொலம்புனதைக் கேட்டுட்டு, காந்திதான் உரிச்சுக் கொடுத்துச்சு. ரெண்டே பாக்கெட்தான் இன்னிக்கு. ஒளிச்சுல்லா வச்சிருந்தேன் ஒண்ண உங்களுக்கின்னே” என்றான்.
“ஆஹா. காந்தி உரிச்சதா. நல்லாப் படிக்கிறாளா குட்டி?” புன்னகைத்த செல்லம் “இதையும் சேத்துக்க” என ஒரு காலிஃப்ளவரை தூக்கிக் கூடையில் போட்டார்.
கிடுகிடுவெனெ இருபது சாமான்களுக்கும் விலையைப் போட்டுக் கூட்டி, ‘சரக்’ எனக் கிழித்து ஆறுமுகம் நீட்டிய துண்டுக் காகிதத்தை ‘வெடுக்’ எனப் பிடுங்கினார் பின்னாலேயே வந்து நின்ற செல்லத்தின் கணவர் சுந்தரம்.
“கம்ப்யூட்டரை விடல்லா வேகமாப் போடுத பில்ல? இரு.. இரு கூட்டிப் பாக்குறேன்” என்றபடி எண்கள் மேல் குறும்பாகக் கண்களை ஓட்டத் தொடங்கினார்.
“இன்னிக்கு பாருங்க. வீட்டுக்காரம்மாக்கு ஒடம்பு சரியில்ல. சனிக்கிழமையானா டீச்சரம்மாக்கு பூண்டு வேணுமேன்னு அவ பொலம்புனதைக் கேட்டுட்டு, காந்திதான் உரிச்சுக் கொடுத்துச்சு. ரெண்டே பாக்கெட்தான் இன்னிக்கு. ஒளிச்சுல்லா வச்சிருந்தேன் ஒண்ண உங்களுக்கின்னே” என்றான்.
“ஆஹா. காந்தி உரிச்சதா. நல்லாப் படிக்கிறாளா குட்டி?” புன்னகைத்த செல்லம் “இதையும் சேத்துக்க” என ஒரு காலிஃப்ளவரை தூக்கிக் கூடையில் போட்டார்.கிடுகிடுவெனெ இருபது சாமான்களுக்கும் விலையைப் போட்டுக் கூட்டி, ‘சரக்’ எனக் கிழித்து ஆறுமுகம் நீட்டிய துண்டுக் காகிதத்தை ‘வெடுக்’ எனப் பிடுங்கினார் பின்னாலேயே வந்து நின்ற செல்லத்தின் கணவர் சுந்தரம்.
“கம்ப்யூட்டரை விடல்லா வேகமாப் போடுத பில்ல? இரு.. இரு கூட்டிப் பாக்குறேன்” என்றபடி எண்கள் மேல் குறும்பாகக் கண்களை ஓட்டத் தொடங்கினார்.
லேபிள்கள்:
**தி இந்து,
சமூகம்,
சிறுகதை,
தீபாவளி சிறப்புப் பக்கம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)