Monday, April 12, 2010

தண்ணி காட்டறேன்- ஏப்ரல் PiT போட்டிக்கு

கொளுத்துகிற கோடையில் குளுமை வேண்டி வைத்தார்கள் தலைப்பு ‘தண்ணீர் தண்ணீர்’ என. கடல், ஏரி, குளம்,அருவி, வாய்க்கால், கிணறு, ஊற்று, பம்ப் செட் எதையும் விட்டு வைக்கவில்லை நான்:)!

[கணினித் திரையை விட்டுப் படங்கள் விலகித் தெரிந்தால் control மற்றும் minus பொத்தான்களை ஒருசேர அழுத்தி தேவையான அளவுக்கு கொண்டுவரக் கேட்டுக் கொள்கிறேன்.]


1. தீவுத் திடலா தென்னைத் திடலா2. புழக்கடையில் வாய்க்காலும்
தண்ணீருக்குத் தவிக்காத வாழ்க்கையும்
உற்றுப் பார்த்தால் விரியுதா காட்சி கவிதையாய்? குளித்து விட்டு காலை வெயிலில் உடம்பை முறுக்கும் அண்ணன். ஆனந்தமாய் அவன் கால்களைக் கட்டிக் கொண்டு தம்பி. பாசமாய் பிடித்தபடி இன்னொரு தம்பி. துணிகளை அலசும் அன்னை.

[வேம்பநாடு ஏரியிலிருந்து பிரியும் வாய்க்கால் ஒன்றில் வரிசையாகக் காணப்படுகின்றன இதுபோல வீடுகள். அருந்ததி ராய் பிறந்த வளர்ந்த கிராமம் என வரும் எல்லோரிடமும் சொல்லி மகிழ்கிறார்கள் படகோட்டிகள்.]


3. PETTY AND PARA


பெரும் மழையில் வயலுக்குள் புகுந்து விடும் நீரை வெளி இறைத்து ஏரிக்கு அனுப்ப கேரளாவில் பயன்படுத்தப் படும் முறை.


4. பாய்ச்சல்
சக்தி வாய்ந்த மோட்டருடன் நீண்ட பெல்டால் பம்ப் இணைக்கப் படுகிறது. மரத்தால் வடிவமைக்கப் பட்ட இது உள்ளூர் தச்சர்களாலேயே செய்யப்படுகிறது. மாதிரிக்காகவும், பண்ணையை சுற்றி அமைந்த வாய்க்காலில் நீர்ப்பாய்ச்சவும் வைத்திருந்தார்கள் குமரகம் தாஜ் விடுதியில்.5. உத்தி
குளத்து நீரே குழாய் வழியே மரத்து உச்சிக்கு செலுத்தப்பட, வாளி நிரம்பி சரிந்து கொடுக்க, தொடர்ந்து சலசலத்தபடி இருக்கிறது தண்ணீர். நீரானது அலையலையாய் அசைந்து அழகு காட்ட மட்டுமின்றி கொசுக்கள் மீட்டிங் போடாமலிருக்கவுமே இந்த உத்தி என்பது என் கணிப்பு.


6. கிணற்றடி
சர்ரென கயிற்றை உள் இறக்கி விர்விர்ரென நீர் இறைத்த அனுபவம் எத்தனை பேருக்கு இருக்கு?

[இந்தக் கிணறு எத்தனை ஆழம் என்று மட்டும் கேட்டு விடாதீர்கள். இதுவும் மாதிரிக்குதான்.
]


7.பொங்கி ஊற்றுது கூரை
பொய்க்காமல் ஊற்றணும் வான் கூரை.
***

8. செயற்கைக் குளம் முன்னிருக்க..
இயற்கை வளம் பின்னிருக்க..
இருக்கும் வளத்தை தக்க வைக்க சொகுசுக் குளியலைத் தள்ளி வைப்போமே. ஆயிரம் நன்மைகள் இந்தப் பயிற்சியில் என அடுக்குபவர்கள் பஞ்ச காலத்திலாவது கொஞ்சம் சிந்தியுங்களேன்.


9. நீல நிறம்...


10. வானுக்கும் ஏரிக்கும் நீல நிறம்...11. நீர் ஊற்று
நீருற்றின் ஓசையை நின்று கவனித்தால் தந்திடும் மனதுக்கு அமைதி என்பார். சுழற்சி முறையில்தான் பயன்படுத்தப்படுகிறது தண்ணீர் என்றாலும் என்றாலும்? ?

[பெங்களூர் எம்.ஜி ரோடின் பார்ட்டன் செண்டருக்கு அடிக்கடி செல்பவராயின் அதன் கீழ் தளத்தில் பார்த்த நினைவு வரக்கூடும்.]


12. பிரதிபலிப்பு
கூர்க் மாவட்டத்தின் மடிக்கேரியில் உள்ள ஓம்காரேஷ்வரா கோவில். 1820-ஆம் ஆண்டு எழுப்பப்பட்ட இக் கோவில் சொல்கிறது பாருங்கள் ‘எதுவும் எமக்கு சம்மதமே’ என இஸ்லாமிய கட்டிடக்கலையை தன்னுள் எடுத்துக் கொண்டு.

[செப்டம்பர் 2008, ‘கட்டமைப்பு’ தலைப்பின் கீழ் PiT போட்டியில் கலந்து கொண்டு முதல் சுற்றின் பத்து படங்களுள் ஒன்றாகத் தேர்வானது. கண்ணாடியாய் பிரதிபலித்துத் ‘தண்ணீர்’ தலைப்புக்கும் பொருந்துவதால் பார்வைக்காக மட்டும் இங்கே.]13. அருவி


வெள்ளிக்கம்பிகளாய்க் கொட்டும் 'அபே' அருவியும் கூர்க் மாவட்டதில் உள்ளதே. காவேரியிலிருந்து பிரிந்து காஃபி தோட்டங்களின் வழியே பயணித்து திடுமென இப்பாறைகளின் மேலிருந்து விழுகின்ற இந்த நீர் வீழ்ச்சியின் ஓசை சற்று தொலைவில் கார் நிறுத்தும் சாலையிலிருந்தே கேட்கத் தொடங்கி விடும். மழைக்காலங்களில் பாறை கண்ணுக்குத் தெரியாத அளவு இருக்கும் தண்ணீரின் ஆட்சி. நாங்கள் சென்றிருந்ததோ மே மாதம். இந்த அருவி விழுந்து ஓடும் நதியின் நேர் மேலே ஒரு தொங்கு பாலம் அமைத்துள்ளார்கள். அங்கு நின்று ரசிப்பது கண்ணுக்கும் காதுக்கும் அருமையான விருந்து.


14. பாலலைகள்


அழுந்தி ஊன்றி விட்டால்
அடங்கித் திரும்பி விடும்
அடித்து வரும் அலை போல்
எழும்பி வரும் எத்தடையும்.


15. நிச்சலனம்

கூவுது பாரு குருவியின் மனசு:
DON'T TAKE NATURE FOR GRANTED
***


எதுதான் எதுதான் உங்கள் சாய்ஸ்:)?

110 comments:

 1. துண்டு போட்டுக்கவா?

  ReplyDelete
 2. @ ராஜ நடராஜன்,

  தாராளமா:))!

  ReplyDelete
 3. அய்!நானே முதல்.நன்றி:)

  ReplyDelete
 4. அப்ரூவலா?அப்ப யாராவது கூட்டத்துல முந்தியிருப்பாங்க.

  ஒரு படம் அனுப்ப சொன்னா இப்படி தண்ணி காட்டுறீங்களே!தென்னை மரம்,படகு,ஏரி,குளம் இதுக்கெல்லாம் நான் எங்கே போவேன்?இதுக்கு பேருதான் உள்ளம் கொள்ளை கொல்லுதே?

  இந்த மாதம் தண்ணில குதிச்சாவது பார்க்கலாம்.

  ReplyDelete
 5. ராஜ நடராஜன் said...

  //அப்ரூவலா?அப்ப யாராவது கூட்டத்துல முந்தியிருப்பாங்க.//

  யாரும் முந்தவில்லை.

  //ஒரு படம் அனுப்ப சொன்னா இப்படி தண்ணி காட்டுறீங்களே!தென்னை மரம்,படகு,ஏரி,குளம் இதுக்கெல்லாம் நான் எங்கே போவேன்?இதுக்கு பேருதான் உள்ளம் கொள்ளை கொல்லுதே?//

  நன்றி நன்றி:)!

  //இந்த மாதம் தண்ணில குதிச்சாவது பார்க்கலாம்.//

  இன்னும் முழுசா இரண்டு நாள் இருக்கிறதே.

  ReplyDelete
 6. ராஜ நடராஜன் said...

  //அய்!நானே முதல்.நன்றி:)//

  முதல் வருகைக்கும் நன்றி.

  ReplyDelete
 7. படங்கள் மிகச்சிறப்பாக வந்துள்ளன. தொழில்முறை புகைப்படக்காரரைப் போன்ற திறமை உங்களுக்கு. எனக்கும் இதைப்போல புகைப்படங்கள் எடுக்க ஆசைதான். அதற்காகத்தான் காமிரா வாங்கினேன். வேலை மற்றும் சூழல் காரணமாக கற்றுக்கொள்ளத்தான் முடியவில்லை. சற்று பொறாமை எழுகிறது.

  உயரங்கள் தொட வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.!

  ReplyDelete
 8. அருமை சகோதரி... தண்ணீரை எங்கள் கிராமத்தில் மழை நாட்களில் பார்த்தது பின் உங்கள் தளத்தில்... அருமை வெற்றி நிச்சயம்.

  ReplyDelete
 9. மேடம்,
  அசத்திட்டிங்க...
  எனக்கு வார்த்தை வரல.

  ReplyDelete
 10. ஆதிமூலகிருஷ்ணன் said...

  //படங்கள் மிகச்சிறப்பாக வந்துள்ளன. தொழில்முறை புகைப்படக்காரரைப் போன்ற திறமை உங்களுக்கு.//

  நன்றி. ஆனால் டெக்னிகலா சொல்லிக்கிற மாதிரி அதிகமாய் எதுவும் தெரியாது:)!

  //எனக்கும் இதைப்போல புகைப்படங்கள் எடுக்க ஆசைதான். அதற்காகத்தான் காமிரா வாங்கினேன். வேலை மற்றும் சூழல் காரணமாக கற்றுக்கொள்ளத்தான் முடியவில்லை. சற்று பொறாமை எழுகிறது.//

  ஆரோக்கியமான போட்டி. அப்படி இருந்தால்தானே நம்மை வளர்த்துக் கொள்ள முடியும்? அழகாய் படம் எடுக்கும் நீங்கள் ஏன் PiT போட்டிகளில் கலந்து கொள்வதில்லை என எப்போதும் நினைப்பதுண்டு. அதற்கு மட்டுமாவது நேரம் ஏற்படுத்திக் கொள்ள ஆரம்பியுங்களேன். வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 11. சே.குமார் said...

  //அருமை சகோதரி... தண்ணீரை எங்கள் கிராமத்தில் மழை நாட்களில் பார்த்தது பின் உங்கள் தளத்தில்... அருமை வெற்றி நிச்சயம்.//

  இந்தப் படங்களைப் பதிந்த இக்கணம் பெங்களூரில் கோடை இடியுடன் மழை:)! வாழ்த்துக்களுக்கு நன்றி குமார்.

  ReplyDelete
 12. அமைதி அப்பா said...

  //மேடம்,
  அசத்திட்டிங்க...
  எனக்கு வார்த்தை வரல.//

  இரண்டாவது வார்த்தை போதுமே எனக்கு:)! நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 13. என்னோட சாய்ஸ் நீல நிறம்

  அந்த காத்திருக்கும் பறவை & இன்னும் சில படங்கள் டாப் டக்கர் :))

  ReplyDelete
 14. ஆயில்யன் said...

  //என்னோட சாய்ஸ் நீல நிறம்//

  எனக்கும் பிடித்ததே.

  //அந்த காத்திருக்கும் பறவை & இன்னும் சில படங்கள் டாப் டக்கர் :))//

  நன்றிகள் ஆயில்யன்:)!

  ReplyDelete
 15. அழகான படங்கள். அருமையான பகிர்வு.

  ReplyDelete
 16. அருமையான படங்கள்..

  நானும் கேமராவ வாங்கிட்டு இப்படி ஒன்னு கிடைக்குமானு பார்ர்குறேன்... ம்ம்ம்ம்ஹூம்ம்ம்..

  கேமரா முக்கியமில்ல.. மூளையும் பார்வையும்தான் முக்கியம் போலயிருக்கு..(டேய்... உனக்கேன் இந்த ஆச)

  ம்ம்ம் கலக்குங்க...

  ReplyDelete
 17. (நான் அம்முவுடய தோழி)- மைதிலி - எனக்கு பிடித்தது “புழக்கடையில் வாய்க்காலும் தண்ணீருக்குத் தவிக்காத வாழ்க்கையும்” படங்க்ள் எல்லாம் அருமை.

  ReplyDelete
 18. அக்கா, படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர்! இதில் தகவல்களும் கருத்துக்களும் சேர்ந்து, தூள் கிளப்பது.

  ReplyDelete
 19. அவ்வளவும் அழகா இருக்கு அக்கா..

  முத்து முத்தா எழுதி அசத்துறது போதாதுன்னு இப்போ படங்களும் முத்து முத்தா முத்துச்சரத்தில..

  ReplyDelete
 20. அருமையான படங்கள்

  ReplyDelete
 21. அழுந்தி ஊன்றி விட்டால்
  அடங்கித் திரும்பி விடும்
  அடித்து வரும் அலை போல்
  எழும்பி வரும் எத்தடையும்.

  படமும் பாடலும் அருமை

  ReplyDelete
 22. அன்பு ராமலக்ஷ்மி அத்தனை படங்களும் அழகுக் கவிதைகள். எதைச் சொல்வது எதை விடுப்பது!!
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அம்மா. ஆரோக்கியமும் ஆனந்தமும் நிறைந்திருக்க வாழ்த்துகள்

  ReplyDelete
 23. துபாய் ராஜா said...

  //அழகான படங்கள். அருமையான பகிர்வு.//

  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் ராஜா.

  ReplyDelete
 24. நல்லாவே தண்ணி காட்டி இருக்கீங்க..

  அழுந்தி ஊன்றி விட்டால்
  அடங்கித் திரும்பி விடும்
  அடித்து வரும் அலை போல்
  எழும்பி வரும் எத்தடையும்.
  //
  அதானே.. சீக்கிரமே அங்க வகுப்பெடுக்க ஆரம்பிக்க வாழ்த்துக்கள் ராமலக்‌ஷ்மி..:)

  ReplyDelete
 25. எல்லாமே அழகு. எதைச் சொல்வது சகோதரி? :-)

  நிச்சலனம் கவிதை போல அழகு.
  ஆனால் போட்டிக்குப் பொருந்தாதென நினைக்கிறேன்..குருவியை நோக்கி மனம் திசை திரும்புவதால் !

  ReplyDelete
 26. ஆகா.. இப்டி எல்லாருக்கும் தண்ணியக்காட்டி ஏங்க வைக்கிறீங்களே... படம்லாம் அருமையா இருக்குங்க....

  ReplyDelete
 27. எனக்க்ப் புடிச்சது, ‘செயற்கை குளமும் இயற்கை வளமும்’.
  காரணம் இரு வேறு தண்ணீர்கள்!!

  ReplyDelete
 28. கொதிக்கும் வெயிலுக்கு குளிச்சியாகப் படங்கள். எல்லாமே அழகு.

  /*புழக்கடையில் வாய்க்காலும்
  தண்ணீருக்குத் தவிக்காத வாழ்க்கையும்*/
  ம்... ஏக்கமாக இருக்கிறது....
  கோடை வெயிலும் தண்ணீர் கஷ்டமும் நினைத்தாலே!!!!

  ReplyDelete
 29. மிகவும் அருமை சகோதரி! தண்ணீரில் மீன் வந்தால் பிதித்துத்திங்க காத்திருக்கும் நாரை படம் சூப்பர்.ஆ.ஈசுவரன்,திருப்பூர்.

  ReplyDelete
 30. முதல் படம் வெள்ளை அதிகம் இருக்கும் போல இருக்கு

  நேர் படங்களை விட நீள் சதுர படங்கள் நன்றாக உள்ளது பார்க்க.. கடைசி படமே எனக்கு பிடித்தது அனைத்தும் சரியாக உள்ளது. நீங்கள் இதை இன்னும் கொஞ்சம் ஷார்ப் செய்யலாம் குறிப்பாக குருவியை, எடுப்பாக இருக்கும்.

  ReplyDelete
 31. ஈரோடு கதிர் said...

  //அருமையான படங்கள்..//

  நன்றி கதிர்.

  //நானும் கேமராவ வாங்கிட்டு இப்படி ஒன்னு கிடைக்குமானு பார்ர்குறேன்... ம்ம்ம்ம்ஹூம்ம்ம்..//

  என்ன இப்படி சொல்லிட்டீங்க. ‘கோடியில் இருவரை’ உங்கள் காமிராதானே எங்களுக்குக் காட்டியது? அதுதாங்க இப்போ அவசியமானது.

  ReplyDelete
 32. வாவ்! காலண்டர் படங்கள் போல இருக்கிறது! அருமை! :-)

  ReplyDelete
 33. மைதிலி கிருஷ்ணன் said...

  //(நான் அம்முவுடய தோழி)- மைதிலி -//

  எனக்கும் தோழிதான் நீங்கள்:)!

  //எனக்கு பிடித்தது “புழக்கடையில் வாய்க்காலும் தண்ணீருக்குத் தவிக்காத வாழ்க்கையும்” படங்க்ள் எல்லாம் அருமை.//

  அந்தப் படம் எனக்கு ஒரு கவிதை. மிக்க நன்றி மைதிலி.

  அம்முவிடம் கேட்டால் சொல்வாங்க, 80-களில் பள்ளி இறுதியிலும், கல்லூரியிலும் கூட நான் காமிராவும் கையுமா இருந்த காலத்தை:)! யாஷிகா-D எனும் காமிராவில் செல்ஃப் டைமர் உபயோகித்து நான் எடுத்த கருப்பு வெள்ளைப் படங்களை, ஓரிரு வருடம் முன்னர் ஸ்கேன் செய்து அனுப்பி வைத்திருந்தேன். பள்ளி நினைவுகளில் மூழ்கி நெகிழ்ந்து போய்ட்டாங்க.

  ReplyDelete
 34. Chitra said...

  //அக்கா, படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர்! இதில் தகவல்களும் கருத்துக்களும் சேர்ந்து, தூள் கிளப்பது.//

  மிக்க நன்றி சித்ரா!

  ReplyDelete
 35. சுசி said...

  //அவ்வளவும் அழகா இருக்கு அக்கா..

  முத்து முத்தா எழுதி அசத்துறது போதாதுன்னு இப்போ படங்களும் முத்து முத்தா முத்துச்சரத்தில..//

  படங்களை ரசித்தமைக்கு நன்றி சுசி.

  ReplyDelete
 36. திகழ் said...

  //அருமையான படங்கள்//

  மிக்க நன்றி திகழ்.

  ReplyDelete
 37. நண்டு@நொரண்டு -ஈரோடு said...

  // ம்...//

  என்ன அர்த்தம் ம்...:)?

  ReplyDelete
 38. goma said...

  //அழுந்தி ஊன்றி விட்டால்
  அடங்கித் திரும்பி விடும்
  அடித்து வரும் அலை போல்
  எழும்பி வரும் எத்தடையும்.

  படமும் பாடலும் அருமை//

  பாலலைகள்தான் என் சாய்ஸாகவும் இருக்கிறது:)! அதற்கான வாக்காக வந்த உங்கள் பாராட்டுக்கு நன்றி கோமா.

  ReplyDelete
 39. அருமையான படங்கள்.. படகு வீட்டு கேரளாவை கம்யூட்டரில் தந்துவிட்டீர்கள் .. என்னோட சாய்ஸ் நீல நிரம்.. இல்லாவிட்டால் “செயற்கை குளம்” .. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 40. 9ம் 10ம் என் சாய்ஸ் :-)

  ReplyDelete
 41. நாங்க எல்லாம், இங்க தண்ணி இல்லாம காய்ஞ்சு போய் கிடக்குறோம். இந்த படங்களைப் பார்த்ததும் இது மாதிரி ஏதாவது ஒரு ஊருக்குப்போய் தண்ணியில குதிச்சு ரெண்டு நாலாவது விளையாடிட்டு வரலாம்னு தோணுது.

  ReplyDelete
 42. வல்லிசிம்ஹன் said...

  //அன்பு ராமலக்ஷ்மி அத்தனை படங்களும் அழகுக் கவிதைகள். எதைச் சொல்வது எதை விடுப்பது!!//

  உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி.

  //இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அம்மா. ஆரோக்கியமும் ஆனந்தமும் நிறைந்திருக்க வாழ்த்துகள்//

  ஆசிகளுக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்களையும் சொல்லிக் கொள்கிறேன்.

  ReplyDelete
 43. முத்துலெட்சுமி/muthuletchumi said...

  //நல்லாவே தண்ணி காட்டி இருக்கீங்க..//

  :)!

  **/அழுந்தி ஊன்றி விட்டால்
  அடங்கித் திரும்பி விடும்
  அடித்து வரும் அலை போல்
  எழும்பி வரும் எத்தடையும்.
  //
  அதானே.. சீக்கிரமே அங்க வகுப்பெடுக்க ஆரம்பிக்க வாழ்த்துக்கள் ராமலக்‌ஷ்மி..:)/**

  நல்லா சொன்னீங்க. வகுப்பு எடுப்பதா? இன்னும் ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டல்லவா இருக்கிறேன்:)?

  ReplyDelete
 44. சூப்பர் ஆ தண்ணி காட்டி இருக்கீங்க.
  புகைப்படங்கள் அருமைங்க.

  ReplyDelete
 45. எம்.ரிஷான் ஷெரீப் said...

  //எல்லாமே அழகு. எதைச் சொல்வது சகோதரி? :-)//

  மிக்க நன்றி ரிஷான்:)!

  //நிச்சலனம் கவிதை போல அழகு.
  ஆனால் போட்டிக்குப் பொருந்தாதென நினைக்கிறேன்..குருவியை நோக்கி மனம் திசை திரும்புவதால் !//

  சரியாச் சொன்னீங்க. தண்ணீரின் நிச்சலனமும் குருவியின் தவமும் இதமான கவிதையே. ஆனால் போட்டிக்கு சரி வராதுதான்.

  ReplyDelete
 46. க.பாலாசி said...

  // ஆகா.. இப்டி எல்லாருக்கும் தண்ணியக்காட்டி ஏங்க வைக்கிறீங்களே... படம்லாம் அருமையா இருக்குங்க....//

  மிக்க நன்றி பாலாசி:)!

  ReplyDelete
 47. நானானி said...

  //எனக்க்ப் புடிச்சது, ‘செயற்கை குளமும் இயற்கை வளமும்’.
  காரணம் இரு வேறு தண்ணீர்கள்!!//

  ஆமாங்க இரு வேறு தண்ணீர் ஒரே தளத்தில் தெரிவதும் சிறப்பு. நல்ல படமே. கடல் மிகத் தொலைவில் தெரிவதால் யோசிக்கிறேன். கவர்ந்த படத்தைக் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி நானானி.

  ReplyDelete
 48. அமுதா said...

  //கொதிக்கும் வெயிலுக்கு குளிச்சியாகப் படங்கள். எல்லாமே அழகு.//

  நன்றி அமுதா:)!

  **/ /*புழக்கடையில் வாய்க்காலும்
  தண்ணீருக்குத் தவிக்காத வாழ்க்கையும்*/
  ம்... ஏக்கமாக இருக்கிறது....
  கோடை வெயிலும் தண்ணீர் கஷ்டமும் நினைத்தாலே!!!!/**

  ஆமாம் பாருங்க, கொடுத்து வைத்த மக்கள்தான்.

  ReplyDelete
 49. JAIVABAIESWARAN said...

  //மிகவும் அருமை சகோதரி! தண்ணீரில் மீன் வந்தால் பிதித்துத்திங்க காத்திருக்கும் நாரை படம் சூப்பர்.ஆ.ஈசுவரன்,திருப்பூர்.//

  உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 50. கிரி said...

  //முதல் படம் வெள்ளை அதிகம் இருக்கும் போல இருக்கு//

  ஆனால்
  இந்தப் படத்தை ஃப்ளிக்கரில்

  நான் பதிந்த போது பல அவார்டுகளையும் பாராட்டுகளையும் அள்ளியது:)! உங்கள் கருத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன்.

  //நேர் படங்களை விட நீள் சதுர படங்கள் நன்றாக உள்ளது பார்க்க..//

  பொதுவாக நீள் சதுரப் படங்களில் க்ளாரிட்டி அதிகமிருக்கும் என்பார்கள்.

  //கடைசி படமே எனக்கு பிடித்தது அனைத்தும் சரியாக உள்ளது. நீங்கள் இதை இன்னும் கொஞ்சம் ஷார்ப் செய்யலாம் குறிப்பாக குருவியை, எடுப்பாக இருக்கும்.//

  ஒரு படமாக அது முன்னிலையில் உள்ளது. தண்ணீர் என வருகையில் நிச்சலனம் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. உங்கள் கருத்துக்களுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கிரி.

  ReplyDelete
 51. சந்தனமுல்லை said...

  //வாவ்! காலண்டர் படங்கள் போல இருக்கிறது! அருமை! :-)//

  ஹை இந்தப் பாராட்டு ரொம்ப நல்லாயிருக்கே:)!

  மிக்க நன்றி முல்லை.

  ReplyDelete
 52. Rithu`s Dad said...

  //அருமையான படங்கள்.. படகு வீட்டு கேரளாவை கம்யூட்டரில் தந்துவிட்டீர்கள் .. என்னோட சாய்ஸ் நீல நிரம்.. இல்லாவிட்டால் “செயற்கை குளம்” .. வாழ்த்துக்கள்..//

  பிடித்த படங்களையும் சொல்லிப் பாராட்டியிருப்பதற்கு மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 53. "உழவன்" "Uzhavan" said...

  //9ம் 10ம் என் சாய்ஸ் :-)//

  நீங்கள் இப்படி சொல்லவும்தான் எத்தனை படங்கள் போட்டிருக்கிறேன் என்பதை எண்ணி விட்டு வந்தேன்:))!

  'நீல நிறம்ம்ம்' என ஹம் செய்தபடியே பின்னூட்டமிட்டீர்களா? நன்றி உழவன்.

  ReplyDelete
 54. திருவாரூரிலிருந்து சரவணன் said...

  // நாங்க எல்லாம், இங்க தண்ணி இல்லாம காய்ஞ்சு போய் கிடக்குறோம். இந்த படங்களைப் பார்த்ததும் இது மாதிரி ஏதாவது ஒரு ஊருக்குப்போய் தண்ணியில குதிச்சு ரெண்டு நாலாவது விளையாடிட்டு வரலாம்னு தோணுது.//

  இருக்கிற அனல் வெயிலில், முன்னர் எடுத்த படங்களையெல்லாம் பார்க்கையில், எனக்கும் அதே ஆசைதான்:)! நன்றி சரவணன்.

  ReplyDelete
 55. எம்.எம்.அப்துல்லா said...

  //:)//

  நன்றி:)!

  ReplyDelete
 56. முகுந்த் அம்மா said...

  //சூப்பர் ஆ தண்ணி காட்டி இருக்கீங்க.
  புகைப்படங்கள் அருமைங்க.//

  வாங்க முகுந்த் அம்மா. பாராட்டுக்கு மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 57. போஸ்ட் போட்ட மாதிரி போட்டோவையும் சீக்கிறம் அனுப்பிடுங்க

  எல்லாம் நல்லா இருக்கு

  ReplyDelete
 58. குளுமை...இனிமை...

  எல்லாப் படங்களும் கண்ணைக் கவர்ந்து மனத்தைக் கொள்ளை கொள்கின்றன. வெற்றி பெற வாழ்த்துக்கள். உங்கள் கைகளில் கேமிரா பேசுகிறது..

  ReplyDelete
 59. படங்கள் அத்தனையும் கொள்ளை அழகு. கண்ணுக்கு குளிர்ச்சி.

  \\ஆனால் டெக்னிகலா சொல்லிக்கிற மாதிரி அதிகமாய் எதுவும் தெரியாது:)!\\

  டெக்னிக்கலா தெரியாவிட்டாலும்,
  படங்கள் அத்தனையும் அருமை.

  வெற்றிக்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி

  ReplyDelete
 60. amazing shots.

  budget embuttu for the kerala trip?

  ReplyDelete
 61. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  ReplyDelete
 62. படங்கள் அருமை ராமலக்ஷ்மி மேடம்... படகுகள் நன்றாக இருந்தாலும் எனது சாய்ஸ் முதல் படம்தான்.. அற்புதமாக வந்திருக்கிறது.

  ReplyDelete
 63. படங்கள் ரொம்ப ரொம்ப நல்லாயிருக்குங்க ராமலக்ஷ்மி! :)

  உங்க படங்கள் எனக்கு என்ன சொல்லுதுனா..

  நம்ம ஊர் அந்தக்காலத்தில் இருந்து இந்தக்காலம் வரை பசுமையாகவும், குளுமையாகவும், அழகாத்தான் இன்னும் இருக்கு. இந்த அதிவேக "முன்னேற்றத்தில்" மக்கள் மனம்தான் என்னென்னவோ ஆகி போச்சு! :(

  ReplyDelete
 64. அக்கா, எல்லாமே அழகு. சொன்னதுபோல, கேமராவைவிட, மனசும், ஆர்வமும்தான் வேணும்போல!!

  ReplyDelete
 65. ராமலக்ஷ்மி,
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  தண்ணீர் இருக்கும் இடங்கள் அனைத்தையும் விட்டு விடாமல்
  படம் பிடித்துக் காட்டியது அருமை.

  உற்றுப் பார்த்தால் விரிந்த பாச கவிதை
  படம் அருமை.

  ReplyDelete
 66. தண்ணி காட்டறதுன்னா என்னனு இப்பாத் தான் தெரிஞ்சுகிட்டேன். லேசுப்பட்ட விஷயம் இல்ல போலவே :))

  படங்கள் அருமை. நீல நிறம் தான் என் சாய்ஸும்.

  சில பல படங்கள் முன்னரே பார்த்தது தான் என்றாலும் போஸ்ட் ப்ரொடக்ஷன் இம்ப்ரூவ்மென்ட் தெரிகின்றன.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 67. எல்லா படமும் சேரநாட்டு பக்கம் எடுத்த மாதிரி இருக்கு. ஆனா நீங்க மைசூர் நாட்டுல இருக்கிங்க. எப்படிங்க? எங்களுக்கு தண்ணி காட்டாம பதில் சொல்லுங்க.

  ReplyDelete
 68. படங்கள் அனைத்தும் அற்புதம்.அபே நீர்விழ்ச்சியில் நான் சென்ற போது வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

  ReplyDelete
 69. முதல் படம் அருமை அக்கா

  என் சாய்ஸ் கடசிய இருக்கும் அருவி படம் தான்

  வாழ்துக்கள்

  ReplyDelete
 70. எல்லாமே அழகு. காமரா ட்ரிக் பத்தியெல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாது, ஆனா என் கண்ணை ட்ரிக் பண்ணி பிடிச்சு வச்சுக்கிட்ட படங்கள் முதலும் கடைசியும்தான் :)

  கலக்குறீங்க ராமலக்ஷ்மி. முன்கூட்டிய வாழ்த்துகள்.

  ReplyDelete
 71. Jeeves said...

  //போஸ்ட் போட்ட மாதிரி போட்டோவையும் சீக்கிறம் அனுப்பிடுங்க

  எல்லாம் நல்லா இருக்கு//

  கடைசி நிமிடத்தில் மனதுக்குத் தோன்றியதைக் கொடுத்து விட்டேன்:)! நன்றி ஜீவ்ஸ்.

  ReplyDelete
 72. ஸ்ரீராம். said...

  //குளுமை...இனிமை...

  எல்லாப் படங்களும் கண்ணைக் கவர்ந்து மனத்தைக் கொள்ளை கொள்கின்றன. வெற்றி பெற வாழ்த்துக்கள். உங்கள் கைகளில் கேமிரா பேசுகிறது..//

  பகிர்வு பிடித்ததில் மகிழ்ச்சி. பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 73. அம்பிகா said...

  ***/படங்கள் அத்தனையும் கொள்ளை அழகு. கண்ணுக்கு குளிர்ச்சி.

  \\ஆனால் டெக்னிகலா சொல்லிக்கிற மாதிரி அதிகமாய் எதுவும் தெரியாது:)!\\

  டெக்னிக்கலா தெரியாவிட்டாலும்,
  படங்கள் அத்தனையும் அருமை./***

  மிக்க நன்றி அம்பிகா:)!

  ReplyDelete
 74. SurveySan said...

  // amazing shots.//

  நன்றி சர்வேசன். என்னுடைய ‘ஏரிக்கரை பூங்காற்றே’ பதிவின் லிங்கை ஒருவர் தனது கேரளா சுற்றுலா ப்ரோமோட்டிங் தளத்தில் கொடுத்துள்ளார்:)!

  கேரளா எல்லோரும் அவசியம் ஒருமுறையேனும் போக வேண்டிய இடமே. அடுத்தமுறை இந்தியா வரும் போது ப்ளான் செய்யுங்கள். விவரங்கள் தருகிறேன்.

  ReplyDelete
 75. @ www.bogy.in

  நன்றி.

  உங்களுக்கும் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்.

  ReplyDelete
 76. வெண்பூ said...

  //படங்கள் அருமை ராமலக்ஷ்மி மேடம்... படகுகள் நன்றாக இருந்தாலும் எனது சாய்ஸ் முதல் படம்தான்.. அற்புதமாக வந்திருக்கிறது.//

  மிக்க நன்றி வெண்பூ. போட்டிக்கு எதைக் கொடுப்பது என்பது ஒருபுறமிருக்க உங்கள் ஒவ்வொருவருக்கும் எது பிடித்தது என்பது அந்தந்த படத்துக்குக் கிடைத்த தனிப்பட்ட வெற்றியாக எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். அந்தப் படம் ஃப்ளிக்கர் தளத்திலும் பலரால் பாராட்டப் பட்டது.

  ReplyDelete
 77. @ கிரி,
  //முதல் படம் வெள்ளை அதிகம் இருக்கும் போல இருக்கு//

  சொல்ல மறந்து விட்டேன்:)! அது பனி விலகாத காலைப் பொழுது. அதுதான் காரணம்.

  ReplyDelete
 78. வருண் said...

  // படங்கள் ரொம்ப ரொம்ப நல்லாயிருக்குங்க ராமலக்ஷ்மி! :)//

  மிக்க நன்றி வருண்:)!

  // உங்க படங்கள் எனக்கு என்ன சொல்லுதுனா..

  நம்ம ஊர் அந்தக்காலத்தில் இருந்து இந்தக்காலம் வரை பசுமையாகவும், குளுமையாகவும், அழகாத்தான் இன்னும் இருக்கு. இந்த அதிவேக "முன்னேற்றத்தில்" மக்கள் மனம்தான் என்னென்னவோ ஆகி போச்சு! :( //

  அதென்னவோ உண்மைதான்.

  ReplyDelete
 79. ஹுஸைனம்மா said...

  //அக்கா, எல்லாமே அழகு. சொன்னதுபோல, கேமராவைவிட, மனசும், ஆர்வமும்தான் வேணும்போல!!//

  ஆமாங்க, ஆர்வமிருந்தா மனசு தானாகவே கட்சி சேர்ந்துடும்:)!

  பாராட்டுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 80. கோமதி அரசு said...

  //ராமலக்ஷ்மி,
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  தண்ணீர் இருக்கும் இடங்கள் அனைத்தையும் விட்டு விடாமல்
  படம் பிடித்துக் காட்டியது அருமை.//

  மிக்க நன்றிம்மா.

  //உற்றுப் பார்த்தால் விரிந்த பாச கவிதை
  படம் அருமை.//

  உங்களுக்கு அது பிடிக்குமென நானும் நினைத்திருந்தேன்.

  ReplyDelete
 81. சதங்கா (Sathanga) said...

  // தண்ணி காட்டறதுன்னா என்னனு இப்பாத் தான் தெரிஞ்சுகிட்டேன். லேசுப்பட்ட விஷயம் இல்ல போலவே :))//

  நான் கூட முதலில் ‘இதுக்குப் பேர்தான் தண்ணி காட்டறது’ன்னு தலைப்பு வைக்க இருந்தேன்:))!

  //படங்கள் அருமை. நீல நிறம் தான் என் சாய்ஸும்.//

  பலருக்கும் பிடித்து வாக்குகளை அள்ளிக் கொண்டுள்ளது:)!

  // சில பல படங்கள் முன்னரே பார்த்தது தான் என்றாலும் போஸ்ட் ப்ரொடக்ஷன் இம்ப்ரூவ்மென்ட் தெரிகின்றன.

  வாழ்த்துக்கள்.//

  அதற்கு நேரம் செலவழிப்பதும் உற்சாகமாய்தான் உள்ளது:)! நன்றி சதங்கா.

  ReplyDelete
 82. குறும்பன் said...

  //எல்லா படமும் சேரநாட்டு பக்கம் எடுத்த மாதிரி இருக்கு. ஆனா நீங்க மைசூர் நாட்டுல இருக்கிங்க. எப்படிங்க? எங்களுக்கு தண்ணி காட்டாம பதில் சொல்லுங்க.//

  இதென்ன வம்பாப் போச்சு? அந்தப் பக்கம் போனபோது எடுத்ததுங்க:)!
  மைசூர் நாட்டு அருவியையும் காட்டியிருக்கிறேன் பாருங்க!

  முதல் வருகைக்கு நன்றி குறும்பன்.

  ReplyDelete
 83. malarvizhi said...

  //படங்கள் அனைத்தும் அற்புதம்.//

  நன்றி மலர்விழி.

  //அபே நீர்விழ்ச்சியில் நான் சென்ற போது வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.//

  “பாறை கண்ணுக்குத் தெரியாத அளவு இருக்கும் தண்ணீரின் ஆட்சி” என நான் சொன்னது போல:)! கண் கொள்ளா காட்சியாகத்தான் இருந்திருக்கும். பகிர்வுக்கும் நன்றி.

  ReplyDelete
 84. கார்த்திக் said...

  //முதல் படம் அருமை அக்கா

  என் சாய்ஸ் கடசிய இருக்கும் அருவி படம் தான்

  வாழ்துக்கள்//

  முதல் படம் உங்களையும் கவர்ந்ததா? நன்றி கார்த்திக். கடைசிப் படம் அருவி இல்லை குருவி:)! எனக்கும் பிடித்ததே எனினும் நீரின் நிச்சலனம் தலைப்புக்கு சரியாகப் பொருந்துமா என்றொரு தயக்கம். வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 85. கவிநயா said...

  //எல்லாமே அழகு. காமரா ட்ரிக் பத்தியெல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாது, ஆனா என் கண்ணை ட்ரிக் பண்ணி பிடிச்சு வச்சுக்கிட்ட படங்கள் முதலும் கடைசியும்தான் :)//

  உங்க கண்ணை ட்ரிக் பண்ண படங்களை டக்குன்னு சொல்லிட்டீங்க:)!

  //கலக்குறீங்க ராமலக்ஷ்மி. முன்கூட்டிய வாழ்த்துகள்.//

  நன்றி கவிநயா.

  ReplyDelete
 86. ப்ரியா கதிரவன் said...

  // Excellent Ma'm.//

  முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ப்ரியா கதிரவன்.

  ReplyDelete
 87. மின் மடலில்..

  //Hi Ramalakshmi,

  Congrats!

  Your story titled 'தண்ணி காட்டறேன்- ஏப்ரல் PiT போட்டிக்கு' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 13th April 2010 02:21:02 AM GMT

  Here is the link to the story: http://www.tamilish.com/story/223961

  Thank you for using Tamilish.com

  Regards,
  -Tamilish Team//

  தமிழிஷில் வாக்களித்த 20 பேர்களுக்கும் தமிழ்மணத்தில் வாக்களித்த 8 பேர்களுக்கு என் நன்றிகள்.

  ReplyDelete
 88. நல்ல சூப்பர் படங்கள்.

  ReplyDelete
 89. Vijis Kitchen said...

  //நல்ல சூப்பர் படங்கள்.//

  மிக்க நன்றி விஜி!

  ReplyDelete
 90. சாய்ஸ்ல விடற மாதிரி ஒண்ணு கூட இல்ல...

  எல்லாமே நல்லா இருக்கு...

  ஸோ, என்னோட சாய்ஸ் எல்லாமும்..

  ReplyDelete
 91. R.Gopi said...

  //சாய்ஸ்ல விடற மாதிரி ஒண்ணு கூட இல்ல...

  எல்லாமே நல்லா இருக்கு...

  ஸோ, என்னோட சாய்ஸ் எல்லாமும்..//

  அத்தனையும் பிடித்துப் போனதா? கேட்கவே நன்றாக இருக்கிறதே:)! மிக்க நன்றி கோபி.

  ReplyDelete
 92. படங்கள் அனைத்தும் ரொம்ப அருமை, ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 93. எல்லாமே அழகு ராமலக்ஷ்மி...சாய்ஸ் சொல்லவே முடியலை..

  ReplyDelete
 94. Jaleela said...

  // படங்கள் அனைத்தும் ரொம்ப அருமை, ராமலக்ஷ்மி.//

  மிக்க நன்றி ஜலீலா.

  ReplyDelete
 95. பூவனம் said...

  //எல்லாமே அழகு ராமலக்ஷ்மி...சாய்ஸ் சொல்லவே முடியலை..//

  உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் பூவனம்.

  ReplyDelete
 96. அனைத்து படங்களும் அருமைங்க... உங்களின் உழைப்பும் ஆர்வமும் தெரிகின்றது

  ReplyDelete
 97. ஆ.ஞானசேகரன் said...

  //அனைத்து படங்களும் அருமைங்க... உங்களின் உழைப்பும் ஆர்வமும் தெரிகின்றது//

  நிறைய நேரம் எடுத்துக் கொண்டது உண்மைதான். கவனித்துப் பாராட்டியிருப்பதற்கு மிகவும் நன்றி ஞானசேகரன்.

  ReplyDelete
 98. அழகு அழகு கொள்ளையழகு கொள்ளை கொள்ளும் அழகு.

  கேமரா உமன் நீங்களாமேடம். சூப்பர்...

  ReplyDelete
 99. அன்புடன் மலிக்கா said...

  //அழகு அழகு கொள்ளையழகு கொள்ளை கொள்ளும் அழகு.

  கேமரா உமன் நீங்களாமேடம். சூப்பர்...//

  மிக்க நன்றி மலிக்கா. பெரிய கேமரா உமன் எல்லாம் இல்லை, கேமரா பிடிக்கும்:)!

  ReplyDelete
 100. அனைத்தும் நல்ல படங்கள்.
  "நீலநிறம்"
  ‘செயற்கை குளமும் இயற்கை வளமும்’. எனக்குப் பிடித்தன. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 101. @ மாதேவி,

  பிடித்த படங்களைக் குறிப்பிட்டுப் பாராட்டியிருப்பதற்கு மிக்க நன்றி மாதேவி.

  ReplyDelete
 102. அற்புதமான புகைப்படங்கள்.
  எதைச் சொல்வது எதை விடுவது என்று தெரியவில்லை.

  ReplyDelete
 103. Dr.எம்.கே.முருகானந்தன் said...
  //அற்புதமான புகைப்படங்கள்.
  எதைச் சொல்வது எதை விடுவது என்று தெரியவில்லை.//

  வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிங்க.

  வலைச்சரத்தில் இப்பதிவினைப் பகிர்ந்து கொண்ட வித்யாவுக்கும் என் நன்றிகள்!

  ReplyDelete
 104. அன்பின் ராமலக்ஷ்மி

  கண்ணுக்குக் குளிர்ச்சியாய் - மனதிற்கு இதமாய் - அருமையாய் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள். தண்ணீர் என்ற தலிப்பிற்கு இத்தனை படங்களா ? தேடித் தேடி - பிடித்து - மகிழ்ந்து - ம்ம்ம்ம் - கை வண்ணமும் - கவிதையும் பாராட்டுக்குரியவை.

  நன்று நன்று
  நல்வாழ்த்துகள் ராமலக்ஷ்மி
  நட்புடன் சீனா

  ReplyDelete
 105. @ சீனா சார்,

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 106. பாக்கும் போதே பாஞ்சு உள்ளே குதிச்சு நீச்சல் அடிக்கனும்னு பல படங்கள் பார்த்தா தோணுது

  ReplyDelete
 107. நன்றி மோகன் குமார்:))!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin