Thursday, March 29, 2012

‘மேக் மை ட்ரிப்’ வாங்கிய எனது படம்.. - சுற்றுலா வளர்ச்சிக்கு உதவணுமா நீங்கள் எடுத்த படங்கள்?Picsean.com சென்ற வருடம் Flickr (mail) வழியாகத் தொடர்பு கொண்டு, இப்படத்தை என்னிடம் விரும்பிக் கேட்டு வாங்கி Make My Trip.com_யிடம் விற்றுக் கொடுத்தது. எவ்வளவுக்கு என்பது முக்கியமில்லை, எவ்வளவு பிடித்திருந்தது அவர்களுக்கு என்பது உங்களுடன் பகிர்ந்திடக் கூடிய ஒன்றாகவே எண்ணுவதால் இந்தப் பதிவு. மேலும் அறிந்த தகவல்களைப் பரிமாறிக் கொள்வது உங்களில் ஆர்வம் உள்ளவருக்குப் பயனாகும் என எண்ணுகிறேன்.

டிஸ்கவர் இன்டியா, மிஸ்டிகல் கேரளா, பேரடைஸ் காலிங் எனத் தனது ‘பல’ பேக்கேஜ் டூர்களுக்காக மேக் மை ட்ரிப் டாட் காம் எனது இந்தப் படத்தினைப் பயன்படுத்தி வருகிறது:

அனுமதி இல்லாமல், பதிவுகளுக்குச் சரியான சுட்டியும் அளிக்காமல் ‘நவசக்தி’ தளம் என் சிங்கப்பூர் பயணக் கட்டுரைகள் மற்றும் படைப்புகளை அப்படியே வெளியிட்டிருந்தது குறித்து தூறல் ஒன்றில் வருத்தப்பட்டிருந்த போது, அப்பாத்துரை அவர்கள் மேலும் ஒரு தகவலைத் தந்திருந்தார், இரண்டு வருடங்கள் முன் மலேசியா சென்றிருந்தபோது தமிழ்மணம் விருது பெற்ற என் புகைப்படப் பதிவொன்று சஞ்சிகை ஒன்றில் மேலும் சிலரது பதிவுகளுடன் அச்சாகி அரை டாலருக்கு விற்கப்பட்டுக் கொண்டிருந்ததைக் காண நேர்ந்ததாக. இப்படி அனுமதியின்றி எங்கெங்கோ உபயோகப்படுத்தப் படுகையில், நம்மிடம் முறையாகக் கேட்டு பயன்படுத்த விரும்புவருக்குக் கொடுப்பதில் திருப்தியே.

சரி, அவர்களுக்குத் தேவையானதை மட்டுமேதான் நாம் கொடுக்க வேண்டுமா? அவர்களின் தேவையை எப்படி அறிவது? எடுத்த எந்தப்படங்களையும் கொடுக்கலாமா? எனும் கேள்விகள் உங்களில் பலருக்கு வரக்கூடும். சற்று விரிவாகப் பார்ப்போம்.

அடிக்கடி சுற்றுலா செல்பவர்களா நீங்கள்? உங்கள் படங்கள் சுற்றுலா வளர்ச்சிக்கு உதவ வேண்டுமா? உதவி செய்யக் காத்திருக்கும் தளமே http://www.picsean.com/ . இதில் ஒரு கணக்கை உருவாக்கிக் கொண்டு நம் படங்களை சமர்ப்பித்து வரலாம். தேவையைச் சொல்லி எனது படத்தை வாங்கியிருந்தாலும் தொடர்ந்து எனது படங்களை தங்கள் தளத்தில் சமர்ப்பிக்கக் கேட்டுக் கொண்டிருந்தது பிக்ஸியன். சமீபத்தில் மீண்டும் கர்நாடக, தமிழக கோவில் படங்கள் சிலவற்றை அங்கு பதிந்து வைத்தேன். படம் எடுத்த இடம், விவரங்கள் ஆகியவற்றையும் கூடவே அளித்திடல் நன்று. Landscape image எனில் அகலமும், Portrait image எனில் உயரமும் [அதாவது உயர அகலத்தில் எது அதிகமோ அது] 2200 பிக்ஸல் இருக்குமாறும்; dpi 300 இருக்குமாறும் படங்களை அங்கு வலையேற்ற வேண்டும்.

நம் படங்களுக்கானத் தேவையை அவர்களாகக் கண்டறிந்தோ அல்லது தேவைப்படுகிறவருக்கோ விற்றுத் தருகிறார்கள். இணையதள உபயோகத்திற்கு 10$ எனில் அச்சுப் பத்திரிகைகளின் அரைப் பக்க உபயோகத்துக்கு 50$ முழுப்பக்கத்துக்கு 100$ என்பதாகத் தெரிவித்திருந்தார்கள். பணத்தை நமது paypal கணக்குக்குச் செலுத்தி விடுகிறார்கள். முகப்புத்தகத்தில் http://www.facebook.com/picsean இவர்களைத் தொடர்வதும் அவ்வப்போதைய தேவைகள்,போட்டிகளை அறிய உதவும்.
மேலும் ஒரு புகைப்படத் தகவல்:

ஆனால் புகைப்படத் துறையில் ஆர்வமுள்ள பெண்களுக்கு மட்டும்:)!
இந்தத் தளத்தில்அறிவிப்பாகியிருக்கும் EVA '12 புகைப்படப் போட்டியில் விருப்பமானவர் கலந்து கொள்ளுங்கள். மார்ச் 31ஆம் தேதியே படங்களை அனுப்பக் கடைசித் தேதி.

75 comments:

 1. வாழ்த்துகள் மேடம்

  ReplyDelete
 2. ஜூப்பரு ராமலக்ஷ்மி,

  உங்க புகழ் இன்னும் திக்கெட்டும் பரவட்டும் :-)

  ReplyDelete
 3. மகிழ்ச்சி :))

  ReplyDelete
 4. //இரண்டு வருடங்கள் முன் மலேசியா சென்றிருந்தபோது தமிழ்மணம் விருது பெற்ற என் புகைப்படப் பதிவொன்று சஞ்சிகை ஒன்றில் மேலும் சிலரது பதிவுகளுடன் அச்சாகி அரை டாலருக்கு விற்கப்பட்டுக் கொண்டிருந்ததைக் காண நேர்ந்ததாக. இப்படி அனுமதியின்றி எங்கெங்கோ உபயோகப்படுத்தப் படுகையில், நம்மிடம் முறையாகக் கேட்டு பயன்படுத்த விரும்புவருக்குக் கொடுப்பதில் திருப்தியே.//


  அட்லிஸ்ட் அவர்கள் உங்கள் படத்தை போட்டாவது செய்தியை போட்டிருக்கிறார்களே என்று சந்தோஷப்படுங்கள்.

  நம் தமிழ்நாட்டில் குமுதம் ரிப்போர்ட்டர் என்ற பத்திரிக்கை ( மார்ச் 18 2012) யில் எனது அனுமதி ம்ற்றும் எனது பெயர் போடாமல் எனது பதிவை திருடி போட்டு இருப்பாதாக சக பதிவர்கள் எனக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.

  ReplyDelete
 5. பயனுள்ள தகவல்களை தந்த உங்களுக்கு நன்றி & வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்...

  ReplyDelete
 6. அருமை அக்கா :)

  ReplyDelete
 7. எனது வாழ்த்துகளும் !

  ReplyDelete
 8. மிக்க மக்ழ்ச்சி!மனமார்ந்த வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி,

  ReplyDelete
 9. Good to know that ur photoes are being used widely.

  Naanum pala ooril edutha photoes anuppalaamaa? Unga alavu en photos nallaa irukkaathu.

  ReplyDelete
 10. வாழ்த்துகள். பாராட்டுகள்.

  ReplyDelete
 11. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டுகள்.வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. பாராட்டுக்களும் வாழ்த்துகளும்

  ReplyDelete
 13. சூப்பர் ::)


  இது போன்ற அங்கீகாரங்கள் போட்டோகிராஃபியினை தொழில்முறையில் செயல்படுத்தாத பலருக்கும் உபயோகமானதாக இருக்கும் + ஊக்கமாகவும் இருக்கும்

  ReplyDelete
 14. மிகவும் பயனுள்ள தகவல்கள்.. நன்றிகள்..

  ReplyDelete
 15. காமிரா கோணம் பிரமாதம்! பரிசுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. ரொம்ப சந்தோஷம்.

  மனமார்ந்த இனிய பாராட்டுகள்.

  உங்க படங்கள் பேசுது!!!!

  ReplyDelete
 17. வாழ்த்துகள் ரா.ல. உங்க பதிவில் இருக்கும் அந்தப் படம் ராஜஸ்தானில் நாங்க இருந்த அரசு ராணுவக்குடியிருப்பு வீட்டை நினைவூட்டியது.

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள்.தொடர்ந்து உங்கள் படங்கள் தேர்வாகி உழைப்பிற்கு பலன் கிட்டட்டும்.பாராட்டுக்கள் பல.

  ReplyDelete
 19. கலக்கல்.. எழுத்து வகையில் உங்களுக்கு பலர் அங்கீகாரம் கொடுத்து இருந்தாலும் படத்தில் கமர்சியலாக இதுவே முதல் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

  இந்தப்படம் ரொம்ப சிறப்பாக எடுக்கப்பட்டு இருக்கிறது இந்தப்படத்திற்கு புல் வெளியும் அந்த வீட்டின் அமைப்பும் ஆள் அரவம் இல்லாததும் மிக முக்கியமாக உள்ளது.

  ReplyDelete
 20. மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள்.

  ReplyDelete
 21. அருமையான மற்றும் ஊக்கம் தரும் பதிவு...

  //இரண்டு வருடங்கள் முன் மலேசியா சென்றிருந்தபோது தமிழ்மணம் விருது பெற்ற என் புகைப்படப் பதிவொன்று சஞ்சிகை ஒன்றில் மேலும் சிலரது பதிவுகளுடன் அச்சாகி அரை டாலருக்கு விற்கப்பட்டுக் கொண்டிருந்ததைக் காண நேர்ந்ததாக. இப்படி அனுமதியின்றி எங்கெங்கோ உபயோகப்படுத்தப் படுகையில்....//

  வேதனையான விஷயம் தான்....தங்களிடம் ஒரு விஷயத்தை பகிர விரும்புகிறேன்.மைக்ரோசாப்டின் இயங்குதளமான விண்டோஸ் எக்ஸ்பிக்கு அடுத்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனம் Longhorn என்ற ஒரு இயங்குதளத்தை அறிமுகம் செய்ய இருந்தது,ஆனால் அந்த சிடி எப்படியோ வெளியே வர தாய்வான் மற்றும் சிங்கப்பூரில் 20 டாலருக்கு கூவி கூவி பிளாட்பாரத்தில் போட்டு விற்றார்களாம்.அதன் பின் மைக்ரோசாப்ட் நிறுவனம் அதனை வெளியிடாமல் அதில் சில பல மாற்றங்களை செய்து 2007 ஆம் ஆண்டு விஸ்டா என்ற பெயரில் ரிலீஸ் செய்தது...மைக்ரோசாப்டுக்கே இந்த நிலைன்னா நாமெல்லாம் எம்மாத்திரம்?

  நல்ல பதிவு இராமலஷ்மி..

  ReplyDelete
 22. சந்தோஷமாயிருக்கு அக்கா.அழகான படமும்கூட !

  ReplyDelete
 23. உங்களின் மற்றும் பல பதிவர்களின் நல்ல பதிவுகள் முறையான அனுமதி பெறாமல் பயன்படுத்தப்படுவது மிக வேதனையான விஷயம். நீங்கள் வெளியிட்டுள்ள அருமையான புகைப்படத்தினால் உங்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் கண்டு உங்கள் ரசிகன் என்ற முறையில் மிகமிக மகிழ்கிறேன்.

  ReplyDelete
 24. எல்லாம் மகிழ்ச்சி தருகிறது... உரிய அனுமதியின்றி உங்கள் ஆக்கத்தை பயன்படுத்தியவர்களைத் தவிர்த்து...

  ReplyDelete
 25. நான் படங்களை அங்கே போட்டால் அதை வாங்க பலர் அடிதடி சண்டை போடுவார்களேன்னு நினச்சி இதுவரை போடவில்லை ...

  ReplyDelete
 26. வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 27. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //க்ரேட்!... ராமலக்‌ஷ்மி.. :)//

  நன்றி முத்துலெட்சுமி:)!

  ReplyDelete
 28. Gopi Ramamoorthy said...
  //வாழ்த்துகள் மேடம்//

  மிக்க நன்றி கோபி.

  ReplyDelete
 29. அமைதிச்சாரல் said...
  //ஜூப்பரு ராமலக்ஷ்மி,//

  நன்றி சாந்தி:)!

  ReplyDelete
 30. 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
  //மகிழ்ச்சி :))//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 31. Avargal Unmaigal said...
  //பயனுள்ள தகவல்களை தந்த உங்களுக்கு நன்றி & வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்...//

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  /உங்கள் படத்தை போட்டாவது செய்தியை/

  அவை நான் எடுத்த படங்கள். பெயருடன் வந்ததா என்பது பற்றித் தெரியவில்லை. பத்திரிகையில் உங்கள் பதிவு வெளியானது போல வேறு சிலருக்கும் நிகழ்ந்திருப்பதை அறிந்திருக்கிறேன். தடுக்க எந்த வழியும் இல்லைதான்.

  ReplyDelete
 32. சுசி said...
  /அருமை அக்கா :)/

  நன்றி சுசி.

  ReplyDelete
 33. ரிஷபன் said...
  /எனது வாழ்த்துகளும் !/

  மிக்க நன்றி.

  ReplyDelete
 34. வெங்கட் நாகராஜ் said...
  /பாராட்டுகள்...../

  நன்றி வெங்கட்.

  ReplyDelete
 35. ஸாதிகா said...
  /மிக்க மக்ழ்ச்சி! மனமார்ந்த வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி,/

  நன்றி ஸாதிகா.

  ReplyDelete
 36. அப்பாவி தங்கமணி said...
  /Great info..thank you.. & all the best to win this contest/

  மிக்க நன்றி புவனா. Eva '12 போட்டியில் இதுவரை எங்கும் வெளியாகாத படங்களாக இருக்க வேண்டுமென்கிறது விதிமுறை. நான் எல்லாவற்றையுமே உடனுக்குடன் ஃப்ளிக்கரில் பதிந்து விடுவது வழக்கம்:). எனவே கலந்து கொள்ளவில்லை.

  ReplyDelete
 37. மோகன் குமார் said...
  //Good to know that ur photoes are being used widely.

  Naanum pala ooril edutha photoes anuppalaamaa? Unga alavu en photos nallaa irukkaathu.//

  நன்றி மோகன் குமார். கண்டிப்பாக அனுப்பலாம். முயன்றிடுங்கள்.

  ReplyDelete
 38. ஸ்ரீராம். said...
  /வாழ்த்துகள். பாராட்டுகள்./

  நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 39. தமிழ் உதயம் said...
  /மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டுகள்.வாழ்த்துகள்./

  நன்றி ரமேஷ்.

  ReplyDelete
 40. Lakshmi said...
  /பாராட்டுக்களும் வாழ்த்துகளும்/

  நன்றி லக்ஷ்மிம்மா.

  ReplyDelete
 41. ஆயில்யன் said...
  /சூப்பர் ::)

  இது போன்ற அங்கீகாரங்கள் போட்டோகிராஃபியினை தொழில்முறையில் செயல்படுத்தாத பலருக்கும் உபயோகமானதாக இருக்கும் + ஊக்கமாகவும் இருக்கும்/

  நிச்சயம் இந்த அங்கீகாரம் எனக்குப் பெரிய ஊக்கமே:)! நன்றி ஆயில்யன்.

  ReplyDelete
 42. Vasudevan Tirumurti said...
  //:-))
  வாழ்த்துகள்!//

  நன்றி திவா சார்:)!

  ReplyDelete
 43. இராஜராஜேஸ்வரி said...
  //மிகவும் பயனுள்ள தகவல்கள்.. நன்றிகள்..//

  நன்றி இராஜராஜேஸ்வரி.

  ReplyDelete
 44. கே. பி. ஜனா... said...
  //காமிரா கோணம் பிரமாதம்! பரிசுக்கு வாழ்த்துக்கள்!//

  மகிழ்ச்சியும் நன்றியும்.

  ReplyDelete
 45. துளசி கோபால் said...
  //ரொம்ப சந்தோஷம்.

  மனமார்ந்த இனிய பாராட்டுகள்.

  உங்க படங்கள் பேசுது!!!!//

  மகிழ்ச்சியும் நன்றியும் மேடம்.

  ReplyDelete
 46. geethasmbsvm6 said...
  //வாழ்த்துகள் ரா.ல. உங்க பதிவில் இருக்கும் அந்தப் படம் ராஜஸ்தானில் நாங்க இருந்த அரசு ராணுவக்குடியிருப்பு வீட்டை நினைவூட்டியது.//

  நன்றி கீதா மேடம். இது குமரகத்தில் உள்ளது. விக்டோரியன் ஸ்டைலில் பேக்கர் எனும் ஆங்கிலேயப் பிரபு கட்டியது. நீங்கள் சொல்லும் குடியிருப்பும் கூட ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டதாக இருக்கலாமென எண்ணுகிறேன்.

  ReplyDelete
 47. புதுகைத் தென்றல் said...
  //congrats :))//

  நன்றி தென்றல்:)!

  ReplyDelete
 48. Asiya Omar said...
  //வாழ்த்துக்கள்.தொடர்ந்து உங்கள் படங்கள் தேர்வாகி உழைப்பிற்கு பலன் கிட்டட்டும்.பாராட்டுக்கள் பல.//

  நன்றி ஆசியா.

  ReplyDelete
 49. கிரி said...
  //கலக்கல்.. எழுத்து வகையில் உங்களுக்கு பலர் அங்கீகாரம் கொடுத்து இருந்தாலும் படத்தில் கமர்சியலாக இதுவே முதல் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.//

  ஆம், தமிழ்மணம் விருது மற்றும் தேவதை, கல்கி பத்திரிகைகளின் பாராட்டாக புகைப்படங்களுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பினும் கமர்ஷியலாக இதுவே முதன் முறை.

  //இந்தப்படம் ரொம்ப சிறப்பாக எடுக்கப்பட்டு இருக்கிறது இந்தப்படத்திற்கு புல் வெளியும் அந்த வீட்டின் அமைப்பும் ஆள் அரவம் இல்லாததும் மிக முக்கியமாக உள்ளது.//

  நன்றி கிரி. குமரகம் தாஜ் ரிசார்டில் தங்கியிருந்த போது எடுத்தது. மதிய நேரம் என்பதால் அதிக நடமாட்டம் இருக்கவில்லை. ஆட்கள் இல்லாமல் எடுக்க முடிந்தது முக்கிய ப்ளஸ் இப்படத்துக்கு. நன்கு அவதானித்திருக்கிறீர்கள்! ஃப்ளிக்கரில் பெரிய அளவில் ரசித்திடலாம் இங்கு: http://www.flickr.com/photos/ramalakshmi_rajan/4585936256/sizes/l/in/photostream/

  ReplyDelete
 50. RAMYA said...
  //Super... Congrats akka..:)//

  நன்றி ரம்யா.

  ReplyDelete
 51. கோவை2தில்லி said...
  //மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள்.//

  நன்றி ஆதி.

  ReplyDelete
 52. Nithi Clicks said...
  //அருமையான மற்றும் ஊக்கம் தரும் பதிவு.

  ....மைக்ரோசாப்டுக்கே இந்த நிலைன்னா நாமெல்லாம் எம்மாத்திரம்?

  நல்ல பதிவு இராமலஷ்மி..//

  நன்றி நித்தி. ஆம் நாமெல்லாம் எந்த மூலைக்கு:)? நீங்கள் சொல்வது சரியே.

  ReplyDelete
 53. ஹேமா said...

  //சந்தோஷமாயிருக்கு அக்கா.அழகான படமும்கூட !//

  நன்றி ஹேமா.

  ReplyDelete
 54. கணேஷ் said...
  //நீங்கள் வெளியிட்டுள்ள அருமையான புகைப்படத்தினால் உங்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் கண்டு உங்கள் ரசிகன் என்ற முறையில் மிகமிக மகிழ்கிறேன்.//

  நன்றி கணேஷ்.

  ReplyDelete
 55. குமரி எஸ். நீலகண்டன் said...
  //எல்லாம் மகிழ்ச்சி தருகிறது...//

  மகிழ்ச்சியும் நன்றியும் நீலகண்டன்.

  ReplyDelete
 56. Kanchana Radhakrishnan said...

  //வாழ்த்துகள்//

  நன்றி மேடம்.

  ReplyDelete
 57. தருமி said...

  //நான் படங்களை அங்கே போட்டால் அதை வாங்க பலர் அடிதடி சண்டை போடுவார்களேன்னு நினச்சி இதுவரை போடவில்லை ...//

  சார்:)!

  ReplyDelete
 58. பாச மலர் / Paasa Malar said...

  //வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.//

  நன்றி மலர்.

  ReplyDelete
 59. அருமையான பதிவு. அற்புதமான படங்கள்.
  இந்த பதிவை எனது மகனுக்கு இணைப்பு அனுப்பியிருக்கிறேன். சரவணனுக்கு புகைப்படக்கலையில் மிக்க ஆர்வம்.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 60. அருமை ராமலெக்ஷ்மி..:) நான் புகைப்படங்கள் சேர்ந்த ஃபைலை எப்படி அனுப்புவது..?

  ReplyDelete
 61. அன்பு ராமலக்ஷ்மி இன்னுமொரு சேவை உங்களிடமிருந்து.
  அரிய படங்களைப் பரிசாகப் பிரசுரிக்கும் உங்களுக்கு பரிசும் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. நானும் மெம்பர் ஆகியிருக்கிறேன். பதிலை எதிர்ப்பர்த்துக் காத்திருக்கணும்:) நன்றி மா.

  ReplyDelete
 62. வாவ். மனமார்ந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!

  ReplyDelete
 63. Rathnavel Natarajan said...
  //அருமையான பதிவு. அற்புதமான படங்கள்.
  இந்த பதிவை எனது மகனுக்கு இணைப்பு அனுப்பியிருக்கிறேன். சரவணனுக்கு புகைப்படக்கலையில் மிக்க ஆர்வம்.
  வாழ்த்துகள்.//

  மகிழ்ச்சியும் நன்றியும் சார்.

  ReplyDelete
 64. Thenammai Lakshmanan said...
  //அருமை ராமலெக்ஷ்மி..:) நான் புகைப்படங்கள் சேர்ந்த ஃபைலை எப்படி அனுப்புவது..?//

  நன்றி தேனம்மை:)! தனித் தனிப் படங்களாகவே பிக்ஸியன் தளத்தில் வலையேற்ற வேண்டும். கணக்கை உருவாக்கிக் கொண்டு நுழைந்தீர்களானால் எளிதில் விவரங்கள் தெரிய வரும்.

  ReplyDelete
 65. வல்லிசிம்ஹன் said...
  //அன்பு ராமலக்ஷ்மி இன்னுமொரு சேவை உங்களிடமிருந்து.
  அரிய படங்களைப் பரிசாகப் பிரசுரிக்கும் உங்களுக்கு பரிசும் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. நானும் மெம்பர் ஆகியிருக்கிறேன். பதிலை எதிர்ப்பர்த்துக் காத்திருக்கணும்:) நன்றி மா.//

  மகிழ்ச்சியும் நன்றியும் வல்லிம்மா:)! நீங்கள் சுவிஸ்ஸர்லாந்தில் எடுத்த படங்கள் யாவும் அருமையாக இருந்தன. அவற்றை அங்கு பதிந்து வையுங்கள்.

  ReplyDelete
 66. கவிநயா said...
  //வாவ். மனமார்ந்த வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!//

  நன்றி கவிநயா:)!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin