பேசும் வானம்
6.
குளிரும் மாலை
வான் ஏறும் நிலா
பரவும் இரவு!
7.
காத்திருக்கும் விண்மீன்
அடங்கும் காற்று
ஒளிரும் மௌனம்!
8.
9.
இரவு எனும் கருமண்
சிதறும் விண்மீன் விதைகள்
முளைக்கும் நம்பிக்கை!
10.
தென்னை மேல் நிலா
சாலையில் நீளும் நிழல்கள்
நடக்கும் காலம்!
11.
கண் சிமிட்டும் விண்மீன்
பிரதிபலிக்கும் நதி
வியப்பில் பூமி!
*
[படம் 1, நான் எடுத்தது;
படம் 2, AI உருவாக்கம்].
*
நன்றி பண்புடன்!



குறுங்கவிகள் யாவற்றையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குகுறுங்கவிகள் எல்லாம் அருமை. பேசும் வானம் படம் அருமை. 8 வது கவிதையும் படமும் அருமை.
பதிலளிநீக்குவாழ்த்துகள் , பாராட்டுக்கள்.
தங்கள் கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.
நீக்குகுறுங்கவிகள் அனைத்தையும் ரசித்தேன். குறிப்பாக -
பதிலளிநீக்குமேக நிழல்கள்
மண்ணில் வரையும் சித்திரங்கள்
வானமெனும் குழந்தை!
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
கருத்துகளுக்கு நன்றி வெங்கட்.
நீக்கு