வியாழன், 29 ஜனவரி, 2026

பேசும் வானம் [11 குறுங்கவிதைகள்] - பண்புடன் மின்னிதழில்..

 பேசும் வானம்


​1. 
இருள் தளர
நீலத்தில் தேயும் விண்மீன்கள்
விரியும் காலை!

2.
வெண்மேகம் விலக
ஒளி சிந்தும் சூரியன்
பேசும் பகல்!

3.
மேக நிழல்கள்
மண்ணில் வரையும் சித்திரங்கள்
வானமெனும் குழந்தை!

4.
வானம் திறக்க
இலைகளைத் தொடும் வெயில்
மென்மையான வாழ்வு!

5.
மலை மேல் சூரியன்
குருவியின் குரல் கரைய
மறையும் ஒளி!

6.
குளிரும் மாலை
வான் ஏறும் நிலா
பரவும் இரவு!

7.
காத்திருக்கும் விண்மீன்
அடங்கும் காற்று
ஒளிரும்  மௌனம்!

8.
படிக்கட்டில் நிலவொளி
சற்றே திறந்த கதவு 
நுழையும் கனவு!

9.
இரவு எனும் கருமண்
சிதறும் விண்மீன் விதைகள்
முளைக்கும் நம்பிக்கை!

10.
தென்னை மேல் நிலா
சாலையில் நீளும் நிழல்கள்
நடக்கும் காலம்!

11. 
கண் சிமிட்டும் விண்மீன்
பிரதிபலிக்கும் நதி
வியப்பில் பூமி!

*
[படம் 1, நான் எடுத்தது; 
படம் 2, AI உருவாக்கம்].

*

நன்றி பண்புடன்!
***

6 கருத்துகள்:

  1. குறுங்கவிகள் யாவற்றையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. குறுங்கவிகள் எல்லாம் அருமை. பேசும் வானம் படம் அருமை. 8 வது கவிதையும் படமும் அருமை.
    வாழ்த்துகள் , பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. குறுங்கவிகள் அனைத்தையும் ரசித்தேன். குறிப்பாக -

    மேக நிழல்கள்
    மண்ணில் வரையும் சித்திரங்கள்
    வானமெனும் குழந்தை!

    பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin