குறுங்கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குறுங்கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 மே, 2026

அக்னி நட்சத்திரம் - கோடைச் சித்திரங்கள் 15 - பண்புடன் மின்னிதழில்..

 

1. 
எங்கும் வெயில்
வெப்பச் சாலைகளில் நிசப்தம்
நீளும் மதியம்.

2. 
சுருங்கி மறையும் நிழல்கள்
தலைக்கு மேல் நண்பகல்
கனக்கும் அமைதி.

3.
சுழலும் மின்விசிறி
சோம்பல் முறிக்கும் வட்டங்கள் 
கரைகிறது நேரம்.

4.
பொன்னாக மாம்பழங்கள்
பிசுபிசுக்கும் கைகள்
ஒளியாக வழிகிறது இனிப்பு.

5.
சூடான நிலம்

வெள்ளி, 3 ஏப்ரல், 2026

தென்றலோடு கண்ணாமூச்சி.. - பூனையின் பொழுதுகள் [பண்புடன் இதழ்: 10]

  


1. 
தரையில் வெயில்
சூட்டில் சுருளும் பூனை
ஓய்வெடுக்கும் நண்பகல்.

2. 
நடுநிசி சன்னல் ஓரம்
நிலவொளியில் பதியும் பாதம்
களவு போகும் இரவு.

3. 
சருகுகள் நகரும் ஒலி
தீயாகத் துடிக்கும் வால் 
வேட்டைக்காரனைத் தூண்டும் காற்று.

4. 
தீண்டப்படாத பால் கிண்ணம், 

வியாழன், 29 ஜனவரி, 2026

பேசும் வானம் [11 குறுங்கவிதைகள்] - பண்புடன் மின்னிதழில்..

 பேசும் வானம்


​1. 
இருள் தளர
நீலத்தில் தேயும் விண்மீன்கள்
விரியும் காலை!

2.
வெண்மேகம் விலக
ஒளி சிந்தும் சூரியன்
பேசும் பகல்!

3.
மேக நிழல்கள்
மண்ணில் வரையும் சித்திரங்கள்
வானமெனும் குழந்தை!

செவ்வாய், 30 டிசம்பர், 2025

பால் வாசம் - அணில் சுவடுகள் 10 - பண்புடன் மின்னிதழில்..

  

பால் வாசம் - (பத்து குறுங்கவிதைகள்)


1.
சரசரக்கும் சருகுகள்
கிளை தாவும் அணில்
காற்றின் வேகத்தில்.

2. 
அமைதியான பின்வாசல்
அணிலின் வாலசைவு விளையாட்டு  
நடனமாடும் அசைவின்மை.

3.
மரப்பட்டையைச் சூடேற்றும் வெயில்
கொட்டையைக் கொறிக்கும் அணில்
திட்டமிடும் குளிர்காலம்.

செவ்வாய், 23 டிசம்பர், 2025

சாக்பீஸ் சூரியன் - மழலைப் பூக்கள் 9 - பண்புடன் இதழில்..


1.
மிதக்கும் சோப்புக் குமிழிகள்
அருகில் வண்ணத்துப்பூச்சிகள்
பறக்கும் மகிழ்ச்சி.

2.
பாதி கடித்த ஆப்பிள்
விரியத் திறந்த கதைப்புத்தகம்
வியப்புக்கு முடிவில்லை.

திங்கள், 8 டிசம்பர், 2025

மழையின் ரீங்காரம் - (குறுங்கவிதைகள் 9) - பண்புடன் இதழ்: 7

1.
தரையில் இலையுதிர்க்கால இலை
காற்றில் சுழன்றாடும் குழந்தை
விழ அஞ்சுவதில்லை இருவரும்.

2.
ஓவிய நோட்டில் வண்ணத்துச்பூச்சி
உருளும் கிரேயான் 
சிறகுகள் பெறும் நிறங்கள்.

3.
காற்றில் உதிரும் பூவிதழ்கள்
ஆச்சரியத்துடன் சேகரிக்கும் குழந்தை 
ஓட மறக்கும் நேரம். 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin