#1
“நேர்மறை எண்ணங்கள் வழிநடத்தும் போது,
தடைகள் தம் வலிமையை இழக்கின்றன.”[மணிப்புறா]
#2
“நீங்கள் யாராக ஆக வேண்டுமோ,
அவ்வாறக மாற முடியும் என்று நம்புங்கள்.”[செம்மீசைச் சின்னான்]
#3
“யாரும் காணாத தருணங்களில்தான் உங்களது உண்மையான வலிமை உருவாகிறது.”
#4
"நீங்கள் செய்கிற செயல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிற எண்ணத்தோடு செயல்படுங்கள். அது நிச்சயம் மாற்றத்தை உண்டாக்கும்."
_William James[செந்தூர்ப் பைங்கிளி]
#5
"அமைதியான தருணங்களில்தான்
பெரும்பாலும் தெளிவான பதில்கள் கிடைக்கின்றன."[இந்திய சாம்பல் இருவாச்சி]
#6
“அறிவு என்பது நாம் எதைச் சேகரிக்கிறோம்
என்பதில் இல்லை,
எதைச் சேதப்படுத்தாமல் விட்டுச் செல்கிறோம்
என்பதில்தான் அளவிடப்படுகிறது.”[தேன்சிட்டு - பெண் பறவை]
#7
“உங்கள் வலிமையை ஒருபோதும்
சந்தேகிக்காதீர்கள்,
அதுதான் உங்களை இவ்வளவு தூரம்
சுமந்து வந்துள்ளது.”[பெண்குயில்]
#8
“பகிர்ந்து கொள்ளும்போது வானம்
இன்னும் பரந்ததாகத் தோன்றுகிறது.”[மணிப்புறாக்கள்] *
பறவை பார்ப்போம் - பாகம்: 142
என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம்: 234
**
படங்களைப் போலவே வரிகள் யாவுமே அருமை.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்கு