சனி, 30 ஆகஸ்ட், 2025

கோபுர தரிசனம் - வடபழநி ஆண்டவர் கோயில்

#1

#2

#3

டபழனி முருகர் கோயில் சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒன்றாகும். முருகரின் சிலை தமிழகத்தின் தெற்குப் பகுதியில் உள்ள பழனி கோயிலில் உள்ள சிலையைப் போலவே இருப்பதால், இது வடபழனி கோயில் என்று அழைக்கப்படலாயிற்று.

#4 தல வரலாறு:

முருகப் பெருமானின் தீவிர பக்தரான அண்ணாசாமி நாயக்கர் முருகரை வழிபட்ட இடத்தில், இக்கோயில் நிறுவப்பட்டது. அவர் ஆண்டவரின் ஆசிகளையும், தனது நீண்ட கால நோய்க்கு நிவாரணமும் தேடி பல இடங்களுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு சாது அவரது கனவில் தோன்றி, தனது சொந்த வீட்டில் கடவுளைத் தேடுமாறு வழிகாட்டினார்.

அறுபடை வீடுகளில் ஒன்றான பழநிக்கு முருகரை வழிபட அண்ணாசாமி சென்றார். வீடு திரும்பும் போது முருகரின்  திரு உருவப் படம் ஒன்றைக் கண்டார். அதன் விலையைக் கேட்டு விட்டு வாங்க வசதியின்றி திரும்பிச் சென்ற நிலையில், முருகர் அக்கடைக்காரரின் கனவில் தோன்றி அப்படத்தை அண்ணாச்சாமி கைக்குக் கிடைக்கச் செய்ததாக அறியப்படுகிறது. அண்ணாச்சாமி அப்படத்தை வீட்டிற்குக் கொண்டு வந்து வழிபட ஆரம்பித்தார். ஆண்டவருக்கு ஓலைக் கூரை ஒன்றை அமைத்தார். அவர் பக்தர்களுக்கு வழங்கிய அருள்வாக்குகள் பலிக்கவும் புகழ் பரவி, மக்கள் வருகை பெருகியது. அவர் முருகரை வழிபட்டு வந்த இடமே  இன்றைய கோயிலாக வளர்ச்சி பெற்றுள்ளது. 

1920 ஆம் ஆண்டு ராஜகோபுரம் எழுப்பப்பட்டு உள்வட்டச் சாலையும் கட்டப்பட்டது. அண்ணாச்சாமியின் மறைவுக்குப் பின்னர் ரத்தினசாமி செட்டியார் இக்கோயிலின் பொறுப்பை ஏற்று நடத்தி வந்தார்.

#5

#6

#7

க்கோயிலில் நான்கு அடி உயரத்தில் அருள்பாலிக்கிறார் மூலவர். முருகரின் இச்சிலையில் காலணிகள் அணிந்து, ஒரு காலை முன்னோக்கி வைத்துக் காட்சி அளிக்கிறார். முருகப்பெருமான் செவ்வாய் கிரகத்தின் கடவுள் என்பதைக் குறிக்கும் வகையில் செவ்வாய் கிரகத்திற்கான ஒரு சன்னதியும் இங்கு உள்ளது. விநாயகர், வள்ளி மற்றும் தேவயானையுடன் கூடிய சண்முக பகவான், சிவன், காளி, பைரவர், சொக்கநாதர், தக்ஷ்ணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் மற்றும் மகாலக்ஷ்மி உட்பட பல சன்னதிகள் உள்ளன.

ராஜகோபுரம் ஸ்கந்த புராணத்தின் கதைகளைச் சித்தரிக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது. கோயிலின் முன்புறத்தில் பெரிய குளம் அமைந்துள்ளது. கிழக்கு கோபுரம் வழியாக வளாகத்திற்குள் நுழைகையில் துவஜஸ்தம்பம் அல்லது கொடி மரம் என்று அழைக்கப்படும் கொடிக்கம்பத்தைக் காணலாம்.

#8

#9

#10

பழமையான இந்த வழிபாட்டுத் தலத்தைத் தேடி ஏராளமான பக்தர்களால் வருகின்றனர். இக்கோயில் வளாகத்தில் ஆண்டுக்கு சுமார் 7000 திருமண விழாக்கள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

***


4 கருத்துகள்:

  1. சமீபத்தில் கூட வடபழனி கோவிலுக்கு சென்று வந்தோம்.  நல்ல மழை நாள்.  கோவிலின் இந்த முறையான வழியை, தோற்றத்தை காண முடியவில்லை.  ஆக்கிரமிப்புகள்.  குளம் கண்ணில் படவில்லை.  கோவில் பற்றிய விவரங்கள் படித்தேன்.  கோவில் ரொம்பப் பழமையானது அல்ல என்று தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  2. கோபுரத்தில் சிலைகள் ரொம்பவும் அழகு!

    பதிலளிநீக்கு
  3. ஆலயம் குறித்த தகவல்கள் அனைத்தும் நன்று. உங்கள் கைவண்ணத்தில் படங்கள் மிளிர்கின்றன...... அனைத்தும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. வ்டபழனி முருகன் கோயில் தலவரலாறும், படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin