முக்தி
அடர்ந்த மரத்திலிருந்து
உதிர்ந்த இலையொன்று
காற்றின் போக்கில் பயணித்து
நதிக்கரையோரத்து
புதர்ச் செடி மேல் அமர்கின்றது.
கீழிருக்கும் நீரில் மிதக்கின்றது
மூழ்கி விட முனைந்த இலை
சுட்டு விடுமோ சூரியன் என
சற்றே அஞ்சி, பின்
வீழ்ந்து மூழ்கவும் இல்லை
வளிதனில் மிதந்து
வேறிடம் தேடவும் இல்லை
காய்ந்து சருகாகிக் காத்திருக்கிறது
காலத்திடம் தனை ஒப்படைத்து.
**
[படம்: AI உருவாக்கம்]
நவீன விருட்சம் இதழ் 130_ல்..
மற்றும் அதன் மின்னிதழில்..
நன்றி நவீன விருட்சம்!
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக