செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

தலையங்க வாசம் - முகப்பு அட்டையாக நான் எடுத்த ஒளிப்படம்..

முகப்பு அட்டையாக நான் எடுத்த ஒளிப்படம்..

கடந்த பத்தாண்டுகளாக ‘நமது மண்வாசம்’ இதழில் அதன் ஆசிரியர் ப. திருமலை அவர்கள் எழுதி வந்த தலையங்கங்களின் தொகுப்பாக வெளி வந்திருக்கும் ‘தலையங்க வாசம்’ நூலுக்கு! 

கூவும் தூங்கணாங்குருவியும்.. அதன் கூடும்..!

கல்கி தீபாவளி மலரில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் வெளி வந்த இப்படம் மறக்க முடியாதபடி மனதில் பதிந்து விட்டதாக ‘நமது மண்வாசம்’ ஆசிரியர் கேட்டு வாங்கி பெற்றுக் கொண்டதை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பின் அட்டையில் இடம் பெற்றிருக்கும் அணிந்துரையை வழிமொழிகிறேன். நூலை பெற்றிடத் தொடர்புக்கான மின்னஞ்சல் முகவரி: 

*

பத்திரிகை மற்றும் நூல் அட்டை முகப்பில் என் ஒளிப்படம் இடம் பெறுவது, இத்துடன் ஒன்பதாவது முறை. 

**

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

*வடக்கு வாசல் (2012)

அடைமழைஇலைகள் பழுக்காத உலகம் - எனது நூல்கள் (2013)

*கலைமகள் (2015)

*கிழக்குவாசல் உதயம் (2016)

*கலைமகள் (2018)

*கிழக்குவாசல் உதயம் (2019)

*அப்பாவின் வேட்டி - கவிதைத் தொகுப்பு (2019)

***

8 கருத்துகள்:

  1. ஒன்பது முறை அடடைப்படமாக உங்கள் புகைப்படங்கள் வந்ததற்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.  கலைமகளில் இரண்டு முறை வந்திருக்கிறதே...   இந்த ஒன்பது அட்டைப்படங்களையும் பத்திரிகை முகப்போடு ஒரு பதிவாக வெளியிட வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறுதியில் குறிப்பிட்ட பதிவுகளுக்கான இணைப்பைத் தந்துள்ளேன். ஒரு பதிவாகவும் பகிரலாம்தான். பத்தாவது படம் வரும் போது செய்து விடுகிறேன்:). நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. நீங்கள் எடுத்த படம் ஒரு நூலின் அட்டைப்படமாக.... வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகளும், பாராட்டுக்களும் ராமலக்ஷ்மி.
    இந்த புத்தகத்தின் அட்டைப்படம் மிக அழகு.
    உண்மையில் பேசும் படங்கள் தான்

    பதிலளிநீக்கு
  4. வடக்கு வாசல் வண்ணமயம், கிழக்கு வாசல் எளிய மனிதர்களின் இயல்பான முகங்கள், கலைமகளில் கலாச்சார முகங்கள் மற்றும் நான்கு நூல்களிலும் கவனம் ஈர்க்கும் அழகிய படங்கள், ஆயினும் அடைமழை கூடுதல் அழகு:).

    அங்கீகாரமும், கவனம் பெறுதலும், உங்களது தொடர்ந்த அயராத பணியார்வத்திற்கும், சிரத்தை மிகு உழைப்பிற்கான வெகுமதி.

    வாசகர்களாகிய எங்களுக்கும் மகிழ்ச்சி மற்றும் மனநிறைவு. வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு இணைப்பிலும் சென்று பார்த்து விட்டுள்ளீர்கள்:)! மிக்க நன்றி! அடை மழை அட்டைப் படத்தை அவள் விகடனில் எனது வலைப்பூ அறிமுகத்தின் போதும் பயன்படுத்தியிருந்தார்கள்.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin