#1
“பூவின் இதழ்களைப் பறிப்பதன் மூலம்
அவளது அழகினை நீங்கள் பருக முடியாது.”
_ Rabindranath Tagore
#2
“உங்கள் அமைதியான மனமே
உங்கள் சவால்களுக்கு எதிரான இறுதி ஆயுதம்.
ஆக ஆசுவாசமாகுங்கள்.”
#3
“என்னில் நீங்கள் காணும் அழகு, உங்களின் பிரதிபலிப்பே.” _ Jalaluddin Rumi
#4
“மகிழ்ச்சியோ வருத்தமோ,
மலர்கள் நமது நிரந்தர நண்பர்கள்.”
_ Okakura Kakuzo
#5
“உங்கள் தனித்துவமே உங்களது சிறப்பு,
அதுவே உங்களுக்கு அழகு.”
_ Nia Jax
#6
“மற்ற எந்த விலங்குகளை விடவும்
தேனீ அதிகமாக மதிக்கப்படுகிறது,
அவள் உழைக்கிறாள் என்பதற்காக அல்ல,
ஆனால் அவள் மற்றவர்களுக்காக உழைக்கிறாள்
என்பதற்காக.”
_ St. John Chrysostom
*
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
*
படங்கள் அனைத்தும் அருமை. தேனீயின் பங்கு மிகவும் சிறந்தது.
பதிலளிநீக்குபொன்மொழிகள் அனைத்தும் அருமை.
மலர்கள் நம் நண்பர்கள் என்பது மிக உண்மை. நம்மை மகிழ்ச்சி படுத்துவதில் அவருக்கு நிகர் அவர்களே!
கருத்துகளுக்கு மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குபடங்களுடன் வரிகள் பிரமாதம். பூவில் அமர்ந்திருக்கும் தேனீ துல்லியம்.
பதிலளிநீக்குரசித்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்களும் படங்களுக்கான வரிகளும் வெகு சிறப்பு.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குவண்ணங்களிலும், வடிவங்களிலும் தான் எத்தனை வித்தியாசம்! ஒவ்வொன்றும் தமது தனித்துவத்தால் அழகுற மிளிர்கின்றன. வாசகங்கள் சிந்தைக்கும் விருந்து:).
பதிலளிநீக்குவாசகம் 4ம், அதற்கான எருக்கம்பூ மொட்டுக்கள் - மலர்ந்த நிலையில் உள்ள படம் மிகப் பொருத்தமான தேர்வு. அதிக கவனத்தையும் ஈர்க்கிறது. நன்றி.
மிக்க நன்றி.
நீக்குஏரிக்கரையில் காணக் கிடைத்த எருக்கம்பூ மொட்டுகள்.! எனக்கும் மிகப் பிடித்தமான படம் அது.