ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

அட்டைப்படமாக நான் எடுத்த ஒளிப்படம்

ஜூலை 2019, சென்ற மாத ‘கிழக்கு வாசல் உதயம்’ இதழின் அட்டைப் படமாக நான் எடுத்த ஒளிப்படம்.“நல்ல காலம் பொறக்குமா?”

தம்மை வணங்குபவர்களுக்கு நல்ல காலம் பிறக்குமெனத் தலையாட்டும் பூம்பூம் மாட்டினை..
‘எனக்கு நீ துணை. உனக்கு நான் துணை’ எனப் பராமரித்து வரும் இந்தப் பெண்ணின் வாழ்வும் மேம்படட்டுமாக!*

14 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் ‘கிழக்கு வாசல் உதயம்’
ஆசிரியர் உத்தமச் சோழன் அவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் ‘தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்’ தமது 17_வது மாநில மாநாட்டில் ‘மூத்த பத்திரிகையாளர் விருது’ கொடுத்துச் சிறப்பித்துள்ளது. ஆசிரியருக்கு நல் வாழ்த்துகள்!

‘கிழக்கு வாசல் உதயம்’சிற்றிதழை சந்தா மூலமாகப் பெற்றிட விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ள முகவரி:


**
இந்தச் சிற்றிதழில் இரண்டாவது முறையாக நான் எடுத்த படம் அட்டையில் இடம் பெற்றுள்ளது.

நன்றி கிழக்கு வாசல் உதயம்!

தொடர்புடைய முந்தைய பதிவு:
அட்டைப் படம் - கிழக்கு வாசல் உதயம் - https://tamilamudam.blogspot.com/2016/01/blog-post_17.html

***

16 கருத்துகள்:

 1. அழகான படம்.

  கிழக்கு வாசல் உதயம் சிற்றிதழில் நீங்கள் எடுத்த நிழற்படம் வெளியானதில் மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. கிழக்கு வாசல் உதயத்தில் நீங்கள் எடுத்த புகைப்படம் இடம்பெற்றதற்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 3. நீங்கள் எடுத்த நிழற்படம் 'கிழக்கு வாசல் உதயம்' இதழின் ஒளிப்படமாக வெளி வந்திருப்பதற்காக மனமார்ந்த பாராட்டுக்கள்! நல்வாழ்த்துக்களும்கூட! நிழற்படம் மிக அழகாக உள்ளது!

  பதிலளிநீக்கு
 4. தங்களுக்கும் ...

  மூத்த பத்திரிக்கை ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர் உத்தம சோழன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. பல்வேறு தளங்களில் விடாமல் இயங்குபவர் நீங்க்ள். கிழக்கு வாசல் அட்டைபடம் அழகாக உள்ளது.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin