ஞாயிறு, 17 ஜனவரி, 2016

அட்டைப் படம் - கிழக்கு வாசல் உதயம்

சென்ற மாத ‘கிழக்கு வாசல் உதயம்’ இதழின் அட்டைப் படமாக நான் எடுத்த ஒளிப்படம்.
நன்றி ‘கிழக்கு வாசல் உதயம்’!
படத்தைப் பலரும் பாராட்டியதாகத் தெரிவித்த ஆசிரியர் திரு. உத்தமச் சோழன், ஒரு சுவாரஸ்யமான தகவலையும் பகிர்ந்து கொண்டார்.
சந்தா வாசகர்களோடு தமிழகத்திலுள்ள பல நூலகங்களில் கிடைத்து வருகிறது ‘கிழக்கு வாசல் உதயம்’. கயத்தாறு நூலகத்தில், இதழைப் பார்த்து விட்டு அலைபேசியில் அழைத்திருக்கிறார் அட்டைப் படப் பெண்மணியின் சகோதரர். “என் அக்காவை இவ்வளவு அழகாகப் படம் பிடித்தவர் யார்?” எனக் கேட்டதோடு, “வியாபாரத்துக்காகப் பல ஊர்களுக்கும் செல்லுகிறவர்தான் அக்கா என்றாலும் எங்கே வைத்து படத்தை எடுத்தார்கள்?” என ஆச்சரியப்பட்டிருக்கிறார். அதே ஆச்சரியத்துடன் ஆசிரியரும் வினவினார். ‘நிச்சயமாக பெங்களூரில் இல்லை. நெல்லை சென்றிருந்தபோது எடுத்த படம்” என விளக்கம் தந்தேன்:).

எத்தனை கவலைகள் இருந்தாலும் அவற்றைத் தள்ளி வைத்து விட்டு ஒவ்வொரு தினத்தையும் உற்சாகமாக எதிர்கொள்ளும், உழைப்பை உயிர் மூச்சாக எண்ணும் இவர் போன்றவர்களின் அழகை மெச்சும் விதமான தலைப்பை அளித்து படத்தை வெளியிட்டிருக்கும் கிழக்கு வாசல் உதயத்திற்கு நன்றி!

பத்து ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் ‘கிழக்கு வாசல் உதயம்’ சிற்றிதழை சந்தா மூலமாகப் பெற்றிட விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ள விவரங்களை இத்துடன் இணைக்கிறேன்:

***

19 கருத்துகள்:

 1. இது போன்ற பாராட்டுகளை விடப் பெரிய பரிசு வேறு எது இருக்க முடியும்! பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 2. ’கிழக்கு வாசல் உதயம்’ மாத இதழினை பல்லாண்டுகளாக நான் சந்தா கட்டி தபால் மூலம் பெற்று படித்து வருகிறேன். இந்த மாத அட்டைப்படத்தினைப் பார்த்ததும் நானே மிகவும் அசந்துபோனேன்.

  ’இவள் உலக அழகியே’ என்ற அட்டைப்படத் தலைப்பினையும் ரஸித்து மகிழ்ந்தேன்.

  இது தாங்கள் எடுத்து அனுப்பிய புகைப்படம் என்ற தகவலை இந்தத்தங்களின் பதிவு மூலம் மட்டுமே அறிந்து கொண்டேன். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகிழ்ச்சி. நன்றி VGK sir. எனது பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் படத்துக்கு இடப்பக்கம் அட்டையிலேயே வெளியிட்டிருக்கிறார்கள். அத்துடன் ஆசிரியர் முன்னுரை அடங்கிய மூன்றாம் பக்கத்திலும்!

   நீக்கு
 3. உண்மையிலேயே படம் வெகு அழகு......இதில் அப்பெண்மணியின் தம்பியின் கண்ணில் பட்டு ஆசிரியருக்கே தொலைபேசிப் பாராட்டியதில் தங்களுக்கான பாராட்டு பல மடங்கு கூடிப் போனது. இதை ஏதாவது ப்கைப்படப்போட்டிக்கு அனுப்பியிருந்தால் நிச்சய வெற்றி கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துக்கள்! இப்படியொரு இதழ் வெளிவருவது இப்போதுதான் அறிகிறேன்! சந்தா செலுத்தி இதழ் வாங்க முயற்சிக்கிறேன்! படம் வெகு சூப்பர்! நன்றி!

  பதிலளிநீக்கு
 5. வெகு மேன்மையான பாராட்டு. இதற்கு மேல் என்ன இருக்க முடியும். பாட்டியின் நிறைவு,அதைப் படம் பிடித்த ராமலக்ஷ்மி, இதைக் கண்களில் வாங்கிய சகோதரர் அனைவரும் பிரமிக்க வைக்கிறார்கள். முத்துப் போன்ற படம் ராமலக்ஷ்மி.

  பதிலளிநீக்கு
 6. அழகான படம் ...வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. நிச்சயமாக அழகுதான். ஆனால் அவரின் வாய் கொள்ளாச் சிரிப்பு...கண்களிலோ மனம் கொள்ளா ஏக்கம் !அருமையான பாவம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகிய சிரிப்பால் அனைவர் மனதையும் கவர்ந்து விட்டார். நன்றி:).

   நீக்கு
 8. எத்தனையோ சாமானியர்களை மிக எளிதாகக் கடந்து செல்கிறோம். அவர்களின் அழகிய உணர்வுகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin