#1
"நாம் மற்றவருக்காகவோ
அல்லது மற்றதொரு நேரத்திற்காகவோ
காத்திருப்போமாயின்
மாற்றங்கள் வருவதில்லை.
நாம் காத்திருப்பது நமக்காகவே.
நாம் தேடும் மாற்றம் நாமே."
_ Barack Obama
#2
"உட்கார்ந்து காத்துக் கொண்டிருக்காதே.
வெளியேறு,
வாழ்வை உணர்ந்திடு."
_ Rumi
#3
"செல்லும் பாதையை நம்புங்கள்.
#4
"தாத்தாக்களும் பாட்டிகளும்
நமது சின்னஞ்சிறு கைகளைப் பிடித்திருப்பது
சிறிது நேரமாகவே இருக்கலாம்,
ஆனால்
நம் நெஞ்சங்களை
நிரந்தரமாகப் பிடித்துக் கொள்கிறார்கள்."
#5
"மற்ற அனைவரும் அவரவர் வேலையில் மும்முரமாக இருக்கையில்,
தாத்தாக்களுக்கு உங்களுடன் இருக்க
எப்போதும் இருக்கும் நேரம்."
#6
"தனிமை என்பது தனித்து இருப்பதன்று,
தனக்காக அக்கறை கொள்ள
எவருமில்லை என்கிற உணர்வு."
படங்கள்: கண்ணமங்களா ஏரிப் பகுதியில் எடுக்கப்பட்டவை.
*
பொன்மொழிகளின் தமிழாக்கத்துடன்
எனக்கான சேமிப்பாகவும் உங்களுடனான பகிர்வாகவும்..
படங்களைத் தொகுப்பது தொடருகிறது.
**
கவனச் சிதறல்களால் பாதை மாறாமல், பற்றிய கைகளை விடாமல், பேரனை பாசத்துடன் அழைத்துச் செல்லும் தாத்தா. கண்டிப்பும் கனிவும் கலந்த உருவம்.
பதிலளிநீக்குஆறாவது படத்தில் செல்லத்தின் கண்களில் உண்மையாகவே தெரிகிறது வாசகத்துக்கான ஏக்கம்.
வரிகளுடன் படங்கள் பிரமாதம்.
கருத்துகளுக்கு நன்றி ஸ்ரீராம்.
நீக்குபொருத்தமான வரிகளுடன் படங்கள் மிக அழகு! அதுவும் தாத்தா பேரன் படம் கொள்ளை அழகு! ஸ்ரீராமே அழகாய் விவரித்து விட்டார்!!
பதிலளிநீக்குநன்றி மனோம்மா.
நீக்குபடங்களும் படங்களுக்கான வரிகளும் சிறப்பு. தொடரட்டும் பதிவுகள்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குபடங்கள் எல்லாம் கதை சொல்கிறது.
பதிலளிநீக்குகடைசி படம் தனிமை மனதை என்னவோ செய்கிறது.
நேற்று சுற்றுலாவில் பார்த்த காட்சிகள் நாய்களை குழந்தைகளை போல அழைத்து வந்த காட்சி தான். அதை பற்றி அவர்கள் மற்றவர்களிடம் பேசும் போது குழந்தையை பற்றி சொல்லும் தாயின் பெருமிதம் இருந்ததை பார்த்தேன். அதை எல்லாம் பார்த்து விட்டு இந்த நாயின் தனிமை படம் பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது.
ஆம், நாய்களைச் செல்லமாக வளர்ப்பவர்களுக்கு அவை குழந்தைகள்தாம். கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.
நீக்கு#4-5: உண்மை உணர்ந்த நிதர்சனம், வண்ணம் சூழ்ந்த கனவிற்கு ஓர் சிறந்த வழி காட்டி.
பதிலளிநீக்கு#6 உண்மை. ஒரு பிரபலமாக இருப்பவர் சொன்னது நினைவுக்கு வருகிறது, " எப்போதும் பெரும் கூட்டத்தின் மத்தியில் வாழ்ந்தாலும், நான் தனிமையாகவே வாழ்கிறேன். வியாபார உறவு இன்றி உண்மையாக நட்பு பாராட்டும் நண்பர்கள், அல்லது உறவுகள் சூழ செலவிடப்படும் இனிமையான வார விடுமுறை நாட்கள் எனக்கு இல்லை".
சில படங்கள் பொழுது போக்காகப் பார்த்தாலும் கூட, அடர்த்தியான கருத்துகளைப் போகிற போக்கில் சொல்லி விட்டுச் செல்லுகிறது. நன்றி.
Alone in the crowd.. அருமை, பகிர்வுக்கும் கருத்துகளுக்கும் நன்றி.
பதிலளிநீக்கு