வியாழன், 2 ஜனவரி, 2014

அடை மழை - என் முதல் நூல், அகநாழிகை வெளியீடாக..

அடை மழை.

எனது முதல் சிறுகதைத் தொகுப்பு, அகநாழிகை பதிப்பகத்தின் மூலமாக வெளியாக உள்ளது என்பதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.


இதை சாத்தியமாக்கியதில் நண்பர்கள் உங்களின் பங்கும் இருக்கிறது. கதைகள் வெளியாகும் ஒவ்வொரு முறையும் பின்னூட்டங்கள் மூலமாகவும், தனி மடல்கள் மூலமாகவும் கருத்துகளை, விமர்சனங்களை, நிறைகுறைகளைப் பகிர்ந்து எழுத்தைச் செதுக்கிக் கொள்ள உதவியிருக்கிறீர்கள்.
வரிசையாக மனதில் வருகிற நட்புகளின் பெயர்களைப் பகிர்ந்து கொள்ளவே ஆசை. ஆனால் கவனக்குறைவாக எவர் பெயரேனும் விட்டுப் போய் விடுமோ என்றுமொரு அச்சம். இரண்டு மூன்று ஆண்டுகளாக வலையுலகை விட்டு விலகி, பிற சமூகத் தளங்களிலும் தென்படாத நண்பர்கள் கூட, கதைகளை நான் பதியும் போது மட்டும் வாசித்துக் கருத்தைப் பகிர்ந்து கொள்ளும் போது மனதில் ஏற்படும் நெகிழ்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இது போன்ற ஊக்கமே நம் ஒவ்வொருவரின் எழுத்துக்கும் உரமாக அமைகிறது. அத்தனை பேருக்கும் என் அன்பு கலந்த நன்றி. இப்போது தொகுப்பாகவும் நூலை வாசித்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்திடக் காத்திருக்கிறேன்:)!

பத்திரிகைகளில் படைப்புகள் வெளியாகும் சமயங்களில் பாராட்டி ஊக்கம் தந்ததோடு, மதிப்புரைக்காக நான் அணுகிய சமயத்தில் தன் பல்வேறு பணிகளுக்கிடையே மனமுவந்து மதிப்புரை வழங்கி, தொகுப்பைக் கெளரவித்திருக்கும் எழுத்தாளர் ரிஷபன் அவர்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்களையும் நிகழ்வுகளையும் மற்றொமொரு செய்தியாகக் கருதிக் கடந்தும் மறந்தும் செல்லப் பழகி வரும் உலகில் எதைக் குறித்தும் எழுகிற உணர்வுகளைப் படைப்பிலக்கியமாகப் பதிவு செய்கையில் அவை காலமெனும் காற்று கடத்துகிற சிந்தனை விதைகளாய் எங்கேனும் விழுந்து துளிர் விடக்கூடுமென ஒரு நம்பிக்கை. சராசரி மனித வாழ்வின் நிதர்சனங்களையும், எளிய மக்களின் வலிகளையும் பேசுகிற என் கதைகள் குறித்த அறிமுகமாக FB-யில் அகநாழிகை பொன். வாசுதேவன்:" இவரது கதைகளை வாசிக்கையில் (கிட்டத்தட்ட நான்கு முறை பதிப்பிக்கிற ஒவ்வொரு படைப்பையும் வாசிக்கிறேன்) நான் உணர்ந்தது ஒன்றே ஒன்றுதான். புனைவுகளற்ற எளிய மொழியில் எல்லோருக்கும் சென்றடைகிற விஷயங்கள் சொல்வதற்கான எழுத்தாளர்கள் இங்கில்லை. படித்தவர்களுக்கு எழுதுவது வேறு. பாமரர்களுக்கும் புரியும்படியாக எழுதுவது வேறு. எல்லோருக்கும் புரிகிற எளிய மொழியிலான கதைகளைச் சொல்லியிருக்கிறார் ராமலஷ்மி. அவை எளிய மனங்களால் புரிந்து கொள்ளக்கூடியவை."

அறிமுகம், வெளியீடு, அட்டையில் வழங்கியிருக்கும் அணிந்துரை, அருமையான வடிவமைப்பு.. அனைத்திற்குமாக நன்றி அகநாழிகை பொன். வாசுதேவன்!  நூல் குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில் அடை மழையென வாழ்த்துகளைப் பொழிந்த நண்பர்கள் அனைவரின் அன்புக்கும் இங்கும் என் நன்றி!

சென்ற ஆண்டின் இறுதியிலேயே இத்தொகுப்புக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஓராண்டு தாமதமான இடைவெளியில் மேலும் சில நல்ல கதைகளை எழுதிச் சேர்க்க முடிந்த வகையில் மனதுக்கு திருப்தியாக உள்ளது.

நூலின் அட்டையில் இடம் பெற்றிருப்பது நான் எடுத்த ஒளிப்படம் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லத் தேவையில்லைதான்:). அவள் விகடன், தினமலர் ஆன்லைன் ஆகியவற்றில் முத்துச்சரம் மற்றும் எனது புகைப்படங்கள் குறித்த அறிமுகங்களில் வெளியாகிப் பாராட்டுகளைப் பெற்ற படமும் ஆகும்.

அடை மழை,  அகநாழிகை புத்தக உலகத்திலும்,

வருகிற சென்னை புத்தகக் கண்காட்சியில் அகநாழிகை பதிப்பக ஸ்டாலிலும், கிடைக்கும்:

அடை மழை உங்களைக் குளிர்விக்கும் எனும் நம்பிக்கையுடன்...
-ராமலக்ஷ்மி

***

45 கருத்துகள்:

 1. புத்தக வெளியீட்டிற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்......

  தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணிக்க எனது வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. மகிழ்ச்சியான செய்தி. மனம் நிறைந்த பாராட்டுக்கள். இனிய நல்வாழ்த்துகள்.

  மேலும் மேலும் பல நூல்கள் வெளியாகட்டும். ;)

  பதிலளிநீக்கு
 3. மிகவும் மகிழ்ச்சி.
  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு

 4. வணக்கம்!

  அடைமழை என்றநுால் அந்தமிழ்த் தாயின்
  உடையென மின்னும் ஒளிர்ந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு

 5. வணக்கம்!

  புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
  நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
  சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
  தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  01.01.2014

  பதிலளிநீக்கு
 6. "அடைமழை"புத்தகக்காட்டில்
  பொழிய இருப்பது குறித்த செய்தி
  மனத்தை குளிர்வித்தது.வாழ்த்துக்கள்

  அடைமழை என்றாலே தொடர் மழை
  எனத்தானே பொருள்

  தங்கள் வெளியீடுகளும் தொடர
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. பாராட்டுகளும், வாழ்த்துகளும். இது ஒரு தொடக்கமாக அமைந்து இன்னும் இன்னும் புத்தகங்கள் வெளியாக வாழ்த்துகள். உங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்களைத் தொகுத்து சிறு விளக்கங்களுடன் ஒரு புத்தகம் வெளியிடலாம் நீங்கள்.

  பதிலளிநீக்கு
 8. வாழ்த்துகள் ராமலஷ்மி.

  வெற்றிகள் மேன்மேலும் குவிய, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  அன்புடன்,
  சுபமூகா

  பதிலளிநீக்கு
 9. அடைமழைபோல் உங்கள் புத்தக் வெளியீடு தொடரட்டும்.
  ஸ்ரீராம் அவர்கள் சொன்னதையும் கவனிக்கவும்.
  மகிழ்ச்சி, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. புத்தகத்தின் தலைப்பைப் போலவே அடைமழையாய் உங்களின் படைப்புகள் தொடர்ந்து பொழியட்டும்! அவசியம் நான் வாங்கிப் படித்து விட்டு கருத்துச் சொல்கிறேன். படித்தலைவிடப் பெருமகிழ்ச்சி தருவது வேறென்ன? உஙகளுக்கு என் இதயம் நிறைந்த மகிழ்வான நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு

 11. பாராட்டுக்கள். நல்வாழ்த்துக்கள். பெயரும் புகழும் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 12. வாசிக்க காத்திருக்கிறோம்.. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 13. @ஸ்ரீராம்.,

  வாழ்த்துகளுக்கு நன்றி ஸ்ரீராம். உங்கள் ஆலோசனயையும் மனதில் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 14. @பால கணேஷ்,

  வாழ்த்துகளுக்கு நன்றி கணேஷ். வாசித்துக் கருத்துகளைப் பகிரக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 15. பெரும், மகிழ்ச்சியான வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
 16. மகிழ்ச்சி.... வாழ்த்துகள்!

  //வரிசையாக மனதில் வருகிற நட்புகளின் பெயர்களைப் பகிர்ந்து கொள்ளவே ஆசை. ஆனால் கவனக்குறைவாக எவர் பெயரேனும் விட்டுப் போய் விடுமோ என்றுமொரு அச்சம்.//

  யார் மனதும் நோகக்கூடாது என்கிற இயல்புதான் தங்கள் சிறுகதைகளில் அதிகளவில் பிரதிபலிக்கிறது. தங்கள் கதையைப் படிப்பவர்கள் நிச்சயம் யாருடைய மனதையும் நோகடிக்க விரும்ப மாட்டார்கள்.

  நல்ல சமூகத்தை உருவாக்க தங்கள் கதைகள் பயன்படும் என்பதில் சந்தேகமில்லை,

  தொடரட்டும் தங்கள் சேவை!

  பதிலளிநீக்கு
 17. இந்தப் புத்தகத்திற்கும் இன்னும் வரப்போகும் புத்தகங்களுக்குமாக மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் ராமலக்ஷ்மி..

  பதிலளிநீக்கு
 18. பாராட்டுக்கள், நல்வாழ்த்துக்கள் ராமலஷ்மி.தொடர்ந்து எழுத்துப் பணியில் அசத்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 19. மிக்க மகிழ்ச்சி... மனமார்ந்த வாழ்த்துகள்..

  அடுத்தடுத்த புத்தகங்களையும் எதிர்பார்க்கிறோம்..புகைப்படங்களுக்காகவே ஒரு புத்தகம் வெளியிடுங்கள்...

  பதிலளிநீக்கு
 20. வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி :-)

  இன்னும் பல புத்தகங்கள் நீங்கள் வெளியிட விரும்புகிறேன். இந்த முதல் புத்தகம் உங்களுக்கு நிறைய மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையும் கொடுக்கும் என்று நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 21. @அமைதிச்சாரல்,

  மிக்க நன்றி சாந்தி. தங்கள் நூல் வெளியீட்டுக்கும் என் அன்பு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 22. @கிரி,

  ஆம்:). நன்றி கிரி. வெளியாகவிருக்கும் கவிதைத் தொகுப்பு குறித்து அடுத்த பதிவில் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin