வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

சீதையின் பாதம்.. சிற்பக் கலைக்கூடம்.. - லெபக்ஷி, ஆந்திரா (பாகம்: 2)

#1


#2

வீரபத்திரர் ஆலயத்தின் உயர்ந்த கொடிமரத்தைத் தாண்டிக் கோயிலுக்குள் நுழைந்ததும் வரவேற்கிறது நாட்டிய மண்டபம். 

#3


அரங்கின் தூண்களில் அற்புதமான ஆளுயரச் சிற்பங்கள்! சுமார் 100 தூண்களைக் கொண்ட இந்த மண்டபத்தில் 12 தூண்களில் இசைக் கருவிகளை வாசிக்கும் கலைஞர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 

#4

ஒரு தூணின் அடிப்பாகம் மட்டும் தரையிலிருந்து சுமார் 1 அங்கல அளவு உயர இடைவெளியுடன் ஒரேயொரு புள்ளியில் மட்டும் பூமியைத் தொட்டு நிற்கிறது. இதைப் பார்க்கத் தவறி விட்டோம். 

அதே போல பார்க்கத் தவறிய மற்றொரு இடம், விருபண்ணாவின் விழிகள் பிடுங்கி சுவற்றில் எறியப்பட்டதால் ஏற்பட்ட இரத்தக் கறைகள். அதாவது நிதித்துறைப் பொறுப்பிலிருந்த விருபண்ணா  இக்கோயிலைக் கட்டுவதற்காக அரசாங்கத்தின் பணத்தை ஏராளமாக விரயம் செய்து வருவதாக மன்னருக்குச் சொல்லப்பட அவரோ விருபண்ணாவின் கண்களைக் குருடாக்கி விடுமாறு உத்தரவிட்டிருக்கிறார். செய்தியை அறிந்த விருபண்ணா தன் நேர்மையை நிரூபிக்கும் வண்ணமாகத் தானே தன் விழிகளைப் பிடுங்கிக் கோயில் சுவற்றில் எறிய அப்போது வழிந்த இரத்தக் கறைகள் இங்கு ஒரு சுவற்றில் காணப்படுகின்றன.

ரே கல்லில் செதுக்கப்பட்ட மூன்றடுக்குகளாகச் சுருண்டு நிற்கும் 18 அடி உயர ஏழுதலை நாகலிங்கம்:

#5

நான்கு சகோதரர்களால் ஒரு மணி நேரத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இச்சிலைக்குப் பின்னாலும் ஒரு சுவாரஸ்யமான கதை சொல்லப்படுகிறது. சிற்பிகளின் தாய் உணவு சமைப்பதற்குச் சற்று நேரமாகும் எனச் சொல்லிச் செல்ல, அதற்குள் வேலையைப் பார்க்கலாமென சமையலறைக்கு முன்னால் இந்தச் சிலையைச் செதுக்க ஆரம்பித்து, அவர் வரும் முன் ஒரு மணி நேரத்திற்குள்ளாக  வடித்து விட்டிருக்கிறார்கள். சமையலை முடித்து விட்டு வெளியே வந்த தாய் சிலையைப் பார்த்துக் கண்கள் அகலப் பிரமித்துப் போய் நிற்க அந்த திருஷ்டியினாலேயே மூன்று இடங்களில் விரிசல் விழுந்து விட்டதாகவும் சொல்லப் படுகிறது :) !

#6
ஒற்றைக்கல் சிற்பம்.. நாகப் பிரபாவளியுடன் சிவலிங்கம்..!

ந்த ஒரு சுபகாரியத்தையும் பிள்ளையாரை வணங்கிய பின்னரே தொடங்குவது இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பாதியில் நின்று போன கல்யாண மண்டபத்திற்குள் நுழையும் முன் அவ்வாறாக வழிபட்டுச் செல்லவதற்கென எழுப்பப்பட்ட, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட, கிழக்குத் திசை பார்த்து அருள்பாலிக்கும் பிரமாண்ட விநாயகர்:

#7 

விருபண்ணாவின் மேல் எழுந்த குற்றச்சாட்டினாலும், தன் கண்களை அவர் பறித்து எறிந்து விட்டதாலும் பாதியில் நின்று போனதாகச் சொல்லப்படும், திறந்தவெளிக் கல்யாண மண்டபம்: 

#8

அற்புதமாக வடிக்கப்பட்டச் சிற்பங்களைக் கொண்ட தூண்களோடு கூரையின்றி நிற்கிறது வான் பார்த்து. 

சிவன், பார்வதி திருமண வைபவ மண்டபமாகக் கட்டப்பட்ட இங்கு சிவன், பார்வதி சிற்பங்களோடு திருமணத்திற்கு வருகை தந்த பிற தெய்வங்களின் சிற்பங்கள் ஒவ்வொரு தூண்களிலும் செதுக்கப்பட்டுள்ளன.

#9
நாங்கள் சென்றிருந்தது கிறுஸ்துமஸ் தினத்தில். விடுமுறையின் காரணமாக சரியான கூட்டம். சில பள்ளிகளிலிருந்து சிறுவர் சிறுமியர்கள் சுற்றுலாப் பயணமாகவும் வந்திருக்க ஆற அமரப் படம் எடுக்க முடியவில்லை. எல்லா இடங்களிலும், குறிப்பாக தூண்களின் சிற்பங்களை மனிதர்கள் இல்லாத ஓரிரு கண இடைவெளியில் அவசர அவசரமாக எடுக்க வேண்டியதாயிருந்தது.

# 10

#11

#12
கல்லைத் தாங்கிப் பிடிக்கிறார்களாம் :)!

எங்கெங்கும் கூட்டமாக இருந்ததால் பார்க்க வேண்டிய முக்கியமான சில இடங்கள் விட்டும் போயின. 

# 13
நீண்ட வெளிப் பிரகாரம்

அஸ்திவாரம் ஏதும் போடாமல் சிறு குன்றின் உச்சியில் அமைந்த பெரிய கருங்கல் பாறை (கிரானைட்) மேல்  கட்டப்பட்டுள்ளது இக்கோயில். பாறை ஆமை வடிவில் உள்ளதால் ‘கர்ம சைலா’ (Kurma Saila) என்றும் அழைக்கப்படுகிறது. 

நாட்டிய மண்டபத்திற்கு வெளியே காணப்படும் பாறைகளாலான திறந்த வெளி. 

#14


கோயிலுக்குச் செல்லும் முன்னரே ஒரு சில தகவல்களை அறிந்து கொண்டு சென்றிருந்ததால் சீதையின் பாதத்தைத் தேடிச் சென்று பார்த்து வந்தோம்.

சீதையின் வலது பாதம் பதிந்த இடமென நம்பப் படுகிற இந்தக் கால் தடத்தினுள் வற்றாது நீர் சுரந்து கொண்டேயிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. எங்கிருந்து நீர் சுரக்கிறது என்பதை விஞ்ஞானப்பூர்வமாக யாராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. அதே போல் ‘இவ்வளவு பெரிய பாதமா?’ எனும் கேள்வியை எழுப்புகிறது சுமார் இரண்டரை அடி நீளமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட பாதத் தடம். (இந்தப் பாதத்தின் அளவைக் கொண்டு கணிக்கும்போது சீதையின் உயரம் சுமார் 25 அடிகளாக இருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது. இராமாயணக் காலத்தில் மனிதர்களின் உயரம் 25 அடிகள் என்கின்றன சில வரலாற்றுக் குறிப்புகள். திரேதா யுகத்தில் மனிதர்களின் உயரம் 25 அடிகள் எனவும், துவாபர யுகத்தில் 15 அடிகளாகக் குறைந்து தற்போது கலியுகத்தில் ஏழிலிருந்து ஒன்பது அடிகளாகி விட்டதாகச் சொல்லப்படுகிறது. 
பெரும்பாலான வரலாற்றுத் தகவல்களையொட்டி எழும் நம் கேள்விகளுக்கு ஆதாரப்பூர்வமான விடைகள் கிடையாதுதானே!)

#15

ஜடாயுவின் இறக்கைகளை ராவணன் வெட்டியதும் இப்பாறையின் மேல் விழவும் சீதை தன் காலைப் பதித்து அதில் நீர் சுரக்கச் செய்து, ஜடாயு அந்நீரை அருந்தி ராமர் வரும் வரை உயிர்த்திருக்க வழி செய்ததாகச் சொல்லப்படுகிறது. 


கோயிலைக் கட்டிய காலத்தில் தங்களுக்கான தட்டுகளைப் பாறையிலேயே செதுக்கி உணவருந்தியிருக்கிறார்கள் சிற்பிகள்.

#16
தாளித் தட்டுகள்

# 17

#18
கோயிலுக்குள் நுழைந்ததும் கொடிமரத்திற்கு வலப்புறமுள்ள வெளிப்பிரகாரம் வழியே சென்று இடதுபக்கம் திரும்பியதும் இருக்கும் பரந்த பாறை மைதானத்தில் ஒரு ஓரத்தில் அனுமனுக்கு எழுப்பட்டிருக்கும் கீழுள்ள மண்டபத்திற்கு அருகே சீதையின் பாதமும், இந்தத் தட்டுகளும் காணக் கிடைக்கின்றன.

#19


*
தகவல்கள்: கோயில் வழிகாட்டி, சுற்றுலாப் பயணிகளுக்கு அளித்த விளக்கங்களில் இருந்து சிலவும், விக்கிப்பீடியா மற்றும் இணையத்திலிருந்து சேகரித்துத் தமிழாக்கம் செய்தவையும்.
**
அடுத்த இரு பாகங்களில் நந்தி சிலையைப் பற்றியும் மேலும் சில தூண் சிற்பங்களின் அழகையும் கண்டு இரசிக்கக் காத்திருங்கள்:)!


***
தொடர்புடைய முந்தைய மற்றும் அடுத்த பதிவுகள்:
எழு பறவையே.. - வீரபத்திரர் ஆலயம்.. - லெபக்ஷி, ஆந்திரா (பாகம்: 1)

 பிரமாண்ட நந்தி.. உலகின் 2_வது பெரிய ஒற்றைக்கல் சிற்பம்.. - லெபக்ஷி, ஆந்திரா (3)

பிரமாண்ட நந்தி.. உலகின் 2_வது பெரிய ஒற்றைக்கல் சிற்பம்.. - லெபக்ஷி, ஆந்திரா (3)


****

16 கருத்துகள்:

  1. அருமை. நல்ல பதிவு. புகைப்படங்கள் அருமை. பொருத்தமான தகவல்களையும் வழங்கியுள்ளீர்கள். சிறப்பு.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக எட்டு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது சீதையின் பாதம்… சிற்பக் கலைக்கூடம்… – லெபக்ஷி, ஆந்திரா (2) பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி.

      புதிய திரட்டி சிறப்பாகச் செயல்பட வாழ்த்துகள்.

      நீக்கு
  2. அழகான ஒரு இடம் பற்றி அழகான படங்களுடன் விளக்கியிருக்கிறீர்கள்.  சுவாரஸ்யமான இடம்.  சுவாரஸ்யமான தகவல்கள்.

    பதிலளிநீக்கு
  3. தொடர்ந்து வாசிக்கிறேன். அங்கு செல்லும் ஆசையை மிகுவித்துவிட்டீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  4. படங்கள் நன்றாக இருக்கிறது. வரலாறுகள் வியப்பை தருகிறது.
    சீதையின் பாதம் முற்றில் தெரியாத கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், வரலாற்றுச் செய்திகள் வியப்பை அளிக்கின்றன. நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  5. சிற்பங்கள் அழகு.உணவு சாப்பிடும் தட்டு அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலும் பல சிற்பங்களின் படங்களை வரும் பதிவுகளில் பகிர்ந்திடுகிறேன்.

      நீக்கு
  6. சிறப்பான தகவல்கள்.

    இந்த மாதிரி இடங்களில் படம் எடுப்பதில் உள்ள சிரமங்கள் புரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட்.

      ஆம், மக்களைத் தவிர்த்து விட்டு சிற்பங்களைப் படமெடுக்க சிரமமாகவே இருந்தது.

      நீக்கு
  7. நாகலிங்கம்...ஆஹா மிக அழகு...


    தகவல்களை குறித்துக் கொண்டேன்...விரைவில் சென்று காணும் ஆவல் வருகிறது..


    அழகான காட்சிகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் ரசித்துப் படங்களும் எடுப்பீர்கள். அவசியம் சென்று வாருங்கள்.

      நீக்கு
  8. சரித்திரம் விரிவாக அறிந்து கொண்டோம் எத்தனை புதிய புதிய இடங்கள் நாம் வாழும் பூமியில்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், நாம் செல்லாத முக்கிய இடங்கள் பல நமக்கு அருகாமையிலேயே கூட உள்ளன.

      நன்றி மாதேவி.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin