செவ்வாய், 10 மார்ச், 2020

பிரமாண்ட நந்தி.. உலகின் 2_வது பெரிய ஒற்றைக்கல் சிற்பம்.. - லெபக்ஷி, ஆந்திரா (3)

லெபக்ஷியில், வீரபத்திரர் கோயிலை அடுத்து, முக்கியமான மற்றுமோர் ஈர்ப்பு ஒரேக் கருங்கல்லில் செதுக்கப்பட்ட நந்தி.

#1


20 அடி உயரமும் 32 அடி நீளமும் கொண்டது. இந்த பிரமாண்டமான அளவுக்காக நுணுக்கமான வேலைப்பாடுகளில் எந்த சமரசம் செய்து கொள்ளாதது சிறப்பு.

#2

இந்த பிரமாண்டமான நந்தி, வீரபத்திரர் கோயிலுக்குச் சென்றடைவதற்கு அரைக் கிலோ மீட்டர் முன்னதாகவே சாலைக்கு வலப்பக்கத்திலிருக்கும் அழகிய பூங்காவின் நடுவே கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. 

#3


உலகின் மிகப் பெரிய ஒற்றைக்கல் சிற்பங்களில் இதற்கு இரண்டாவது இடம் என சொல்லப்படுகிறது. (உலகின்.., நாட்டின் மிகப் பெரிய நந்தியும் கூட.)

#4


ஷ்ராவணபெலகுலாவிலிருக்கும் 57 அடி உயர  கோமதீஸ்வரர் முதலாமிடத்தில் உள்ளது. பன்னிரெண்டு வருடங்களுக்கொருமுறை நடத்தப்படும் மகாமஸ்தக அபிஷேகத்தையொட்டி 2006_ஆம் ஆண்டு சென்றிருந்த போது எடுத்த படம்:
மேலும் இரு படங்கள்:


ழகிய மணிகளால் ஆன மாலை உட்பட நந்தியின் கழுத்தில் வரிசையாக அணிவிக்கப்பட்டிருக்கும் அணிகலன்கள் பார்த்துப் பார்த்து மிக அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளன.

#5

பொதுவாக  சிவன் முன்னால் பணிவாகக் காணப்படும் நந்தி சிலைகளைப் போல் அல்லாமல் இது தனது கழுத்தை சற்றே பெருமையுடன் தூக்கி இருப்பது போலச் செதுக்கப்பட்டுள்ளது. 

#6

வீரபத்திரர் கோயிலில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில், தனியாக ஒரு பூங்கா நடுவே இருந்தாலும், கோயிலில் உள்ள 18 அடி உயர நாகலிங்கத்தை நேர் நோக்கி இந்நந்தி அமர்ந்திருப்பது கவனிக்க வேண்டியது. 

#7

#8

தகவல்கள்: அங்கிருந்த அறிவிப்புப் பலகை மற்றும் இணையத்திலிருந்து சேகரித்துத் தமிழாக்கம் செய்தவை.
*
லெபக்ஷி வீரபத்திரர் கோயிலில் எடுக்கப்பட்ட மேலும் சில சிற்பங்களின் படங்களை இறுதிப் பாகமாக அடுத்த பதிவில் பகிர்ந்திடுகிறேன்.


**
தொடர்புடைய முந்தைய, அடுத்த பதிவுகள்:
எழு பறவையே.. - வீரபத்திரர் ஆலயம்.. - லெபக்ஷி, ஆந்திரா (பாகம்: 1)

சீதையின் பாதம்.. சிற்பக் கலைக்கூடம்.. - லெபக்ஷி, ஆந்திரா (பாகம்: 2) 

*கதை சொல்லும் கற்சிற்பங்கள் - லெபக்ஷி, ஆந்திரா (4)
***

12 கருத்துகள்:

  1. இதுதான் இரண்டாவது பெரிய சிலையென்பது சற்றே ஆச்சர்யம்.  விவரங்கள் சுவாரஸ்யம்.  படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒற்றைக் கல் சிற்பத்தில் இரண்டாவதாக இருக்க வாய்ப்புள்ளதே. உலகின் பெரிய நந்தியும் என்கிறார்கள்.

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. நந்தியின் சிலை மிக அருமை. நல்ல வேலைப்பாடு.படங்கள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
  3. இதோடு இணைத்துப் பேசப்படுகின்ற தஞ்சாவூர் பெரிய கோயில் நந்தி, மைசூர் சாமுண்டீஸ்வரி மலையில் உள்ள நந்தி ஆகியவற்றைப் பார்த்துள்ளேன். இந்த நந்தியைக் காணும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் வாய்க்கட்டுமாக.

      மைசூர் நந்தியும் இதே போல திறந்த வெளியில் அமைந்ததே.

      மிக்க நன்றி.

      நீக்கு
  4. நந்தி கம்பீரமாகத்தான் இருக்கிறார்.

    முதலாமிடத்தில் இருக்கும் ஷ்ரவணபெலகுலா கோமதீஸ்வரர் நேரில் தரிசித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதீஸ்வரரைப் பார்த்திருக்கிறீர்கள் என்பதறிந்து மகிழ்ச்சி.

      நன்றி மாதேவி.

      நீக்கு
  5. கம்பீரமான நந்திதேவர்.

    படங்களும் தகவல்களும் சிறபு.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin