அளவற்றதும் அளக்க முடியாததுமான காலத்தை நீங்கள் அளக்கக் கூடும்.
மணித்தியாலங்களுக்கும் பருவங்களுக்கும் ஏற்ப உங்களது நடத்தையை அனுசரிக்க நேரும், உங்களது ஆன்மாவின் வழியை இயக்கக் கூடும்.
ஒரு வேளை நீங்கள் ஒரு ஓடையை உருவாக்கி அதன் கரையில் அமர்ந்து அதன் ஓட்டத்தை கவனிக்கக் கூடும்.
இருப்பினும் உங்களுள் இருக்கும் காலமின்மை வாழ்க்கையின் காலமற்றதன்மையை உணர்ந்திருக்கிறது,
நேற்றென்பது இன்றைய தினத்தின் நினைவுகளேயன்றி வேறில்லை என்பதையும்
நாளையென்பது இன்றைய தினத்தின் கனவென்பதையும் தெரிந்து வைத்திருக்கிறது.
உங்களுள் யாருக்குதான் தெரியாது, அவனது அன்பின் சக்தியானது எல்லைகளற்றது என்பதை?
உங்களுக்குள் பாடிய படியும் ஆழ்ந்து சிந்தித்த படியும் இருக்கின்ற அது, பெருவெளியில் நட்சத்திரங்கள் சிதறிய அந்த முதல் தருணத்தின் எல்லைக்குள்ளேயேதான் தங்கியிருக்கிறது.
இருப்பினும், அன்பின் சிந்தனையிலிருந்து அன்பின் சிந்தனைக்கு நகராமல், அன்பின் செயல்பாடுகளிலிருந்து அன்பின் செயல்பாடுகளுக்கு நகராமல், யார் அந்தப் பேரன்பை உணராதிருக்கிறீர்கள், எல்லைகளற்றதாக இருந்த போதிலும், அவனது இருப்பின் மையத்துள் சூழ்ந்திருப்பினும்?
காலமும் இந்த அன்பைப் போல, பகுக்க முடியாததும் வரையரையற்றதும் அல்லவா?
ஆனால் உங்கள் சிந்தனையில் நீங்கள் காலத்தைப் பருவங்களால் அளக்க வேண்டியிருப்பின், ஒவ்வொரு பருவமும் மற்ற பருவங்களைச் சூழட்டுமாக,
இன்றைய தினம் நேற்றைய தினத்தை நினைவுகளாலும் நாளைய தினத்தை ஏக்கங்களுடனும் அணைத்துக் கொள்ளட்டுமாக.
*
மூலம்: On Time from “The Prophet”
By Kahlil Gibran (1883 – 1931)
**
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
மகிழ்ச்சியும் துயரமும் - கலீல் ஜிப்ரான் (1)
சுயம் அறிதல் - கலீல் ஜிப்ரான் (2)
***

அருமை. சில வரிகளை இரண்டு முறை படிக்கவேண்டி இருந்தது.
பதிலளிநீக்குகவிஞர் சொல்ல வருவதை உள் வாங்க நானும் கூட தமிழாக்கம் செய்யும் போது மூலக் கவிதையின் சில வரிகளை கவனமாகப் பலமுறை படிக்க வேண்டியிருந்தது. நன்றி ஸ்ரீராம் :).
நீக்குசுயம் அறிதல் அருமை.
பதிலளிநீக்குமொழிபெயர்ப்பு அருமை.
பகிர்வுக்கு நன்றி.
சுயம் அறிதல் கவிதைக்கான கருத்துக்கும் நன்றி கோமதிம்மா. மேலும் சில கவிதைகளைத் தமிழாக்கம் செய்ய எண்ணியுள்ளேன்.
நீக்குபிரபஞ்ச பெருவெடிப்பில் நட்சத்திரங்கள் மத்தியில் பிரகாசித்த அந்த மாபெரும் அன்பு அதே குன்றாத தன்மையுடன் இன்றும் நம்முள் பாடி ஜொலிக்கின்றது என்பது ஆழ்ந்த சத்தியம்.
பதிலளிநீக்குகாலம் மட்டுமல்ல: அந்த மாபெரும் அன்பும் கூட பகுக்கப்பட இயலாததும் வரையறுக்க கூடாததாகவும் இருக்கிறது.
உலகப் புகழ் பெற்ற கவிதைகளை தமிழில் வாசிக்கக் கொடுக்கும் உங்கள் முயற்சிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
தொடர்ந்து வாசிக்கக் காத்திருக்கிறோம்.
விரிவான கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. தொடருகிறேன்.
நீக்கு