கலீல் ஜிப்ரான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலீல் ஜிப்ரான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 ஏப்ரல், 2019

நட்பு - கலீல் ஜிப்ரான் (4)


ங்கள் நண்பன் உங்களது தேவைகளுக்குக் கிடைத்த பதில்.
வன் நீங்கள் அன்பை உழுது நன்றி நவிலுதலை அறுவடை செய்யும் உங்களது நிலம்.
வன் நீங்கள் இளைப்பாறும் குளிர்காயும் இடம்.
நீங்கள் அவனை நாடி உங்கள் பசியோடு வருகிறீர்கள், அமைதிக்காக அவனைத் தேடுகிறீர்கள்.

சனி, 2 பிப்ரவரி, 2019

காலம் - கலீல் ஜிப்ரான் (3)

ளவற்றதும் அளக்க முடியாததுமான காலத்தை நீங்கள் அளக்கக் கூடும்.
ணித்தியாலங்களுக்கும் பருவங்களுக்கும் ஏற்ப உங்களது நடத்தையை அனுசரிக்க நேரும்,  உங்களது ஆன்மாவின் வழியை இயக்கக் கூடும்.
ரு வேளை நீங்கள் ஒரு ஓடையை உருவாக்கி அதன் கரையில் அமர்ந்து அதன் ஓட்டத்தை கவனிக்கக் கூடும்.

ருப்பினும் உங்களுள் இருக்கும் காலமின்மை வாழ்க்கையின் காலமற்றதன்மையை உணர்ந்திருக்கிறது,
நேற்றென்பது இன்றைய தினத்தின் நினைவுகளேயன்றி வேறில்லை என்பதையும்

வியாழன், 25 ஜூன், 2015

சுயம் அறிதல் - கலீல் ஜிப்ரான் (2)


கல்களின், இரவுகளின் இரகசியங்களை
அமைதியில் அறிகின்றன உங்கள் உள்ளங்கள்.
உள் மனதின் ஞான ஒலிக்காக
தாகத்தில் தவிக்கின்றன உங்கள் செவிகள்.
சிந்தனைக்கு எந்நாளும் தெரிந்தே இருப்பவற்றை
வார்த்தைகளாலும் அறிந்தே இருக்கிறீர்கள்.
உங்கள் கனவுகளின் நிர்வாண உடலை
உங்கள் விரல்களால் தொடவும் முடிகிறது.

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

மகிழ்ச்சியும் துயரமும் - கலீல் ஜிப்ரான் (1)

உங்கள் மகிழ்ச்சி, முகமூடியைக் கழற்றிய உங்கள் வருத்தமே.
உங்கள் சிரிப்பு கிளம்பிய அதே கிணறுதான் நிரப்பப்படுகிறது அடிக்கடி உங்கள் கண்ணீராலும்.
வேறெந்த விதமாய் இருக்க முடியும்?
எத்தனை ஆழமாக அந்தத் துயரால் நீங்கள் செதுக்கப்படுகிறீர்களோ, அத்தனை அதிகமாய் மகிழ்ச்சி உங்களுள் நிறைகிறது.

உங்கள் திராட்சை இரசத்தை ஏந்தும் அதே கோப்பை, குயவனின் அடுப்பில் சுட்டெடுக்கப் படவில்லை?
உங்கள் ஆன்மாவை வருடி ஆறுதலளிக்கும் யாழ்.. அதன் மரம், கத்திகளால் குடையப்படவில்லை?

நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்கும்போது, உங்கள் இதயத்தை உற்று நோக்குங்கள், உங்களுக்குத் துயரைக் கொடுத்த இதயமே இப்போது மகிழ்ச்சியையும் கொடுக்கிறது என அறிய வருவீர்கள்.
நீங்கள் வருத்தமாக இருக்கும்போது மீண்டும் இதயத்தைப் பாருங்கள், உங்களுக்குக் குதூகலத்தைத் தந்த ஒன்றிற்காகவே இப்போது கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறீர்கள் எனும் உண்மை புரியவரும்.

உங்களில் சிலர் சொல்வீர்கள், “துயரை விட மகிழ்ச்சி உயர்ந்தது,” என, மற்ற சிலர், “இல்லை, துயரே உயர்ந்தது” என.
ஆனால் நான் உங்களுக்கு சொல்வேன், அவை பிரிக்க இயலாதவை.
சேர்ந்தே அவை வரும், ஒன்று தனியாக உங்கள் அருகே இருக்கையில் அமரும் போது, இன்னொன்று உங்கள் படுக்கை மேல் உறங்கிக் கொண்டிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சொல்லப்போனால் ஒரு தராசாகத் தொங்குகின்றீர்கள் உங்கள் மகிழ்ச்சிக்கும் உங்கள் துயருக்கும் மத்தியில்.
காலியாக இருக்கும் போது மட்டுமே நிலையாகவும் சமனாகவும் இருக்கிறீர்கள்.
பொக்கிஷ அதிகாரி தன் தங்கத்தையும் வெள்ளியையும் அளக்க உங்களைத் தூக்கும் போது, நிகழ்ந்தே தீருகிறது உங்கள் மகிழ்ச்சியோ வருத்தமோ உயர்வதும் தாழ்வதும்.
***

மூலம்: On Joy and Sorrow from “The Prophet
By Kahlil Gibran (1883 – 1931)

லெபனானில் பிறந்தவர். குடும்பம் அமெரிக்காவுக்குக் குடிபெயர, அங்கே கலைப்பிரிவில் சேர்ந்து பயின்று எழுத்தாளராகவே வாழ்க்கையைத் தொடங்கினார்.  ஆங்கிலம், அரபு இரண்டு மொழிகளிலும் எழுதி வந்தார்.  அரபு நாடுகளில் இவர் எழுத்தாளராக மட்டுமின்றி ஆட்சி எதிர்ப்பாளராகவும் அறியப்பட்டார். லெபனானில் இவரையே தலைசிறந்த இலக்கியவாதியென இன்றளவிலும் கொண்டாடுகிறார்கள்.

1923-ல் ஆங்கிலத்தில் வசன கவிதையாக இவர் எழுதிய “The Prophet” புனைவு
உலகை இவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. கடுமையான விமர்சனங்களுக்கு நடுவே விற்பனையிலும் சாதனை படைத்தது. ஷேக்ஸ்பியர், Laozi ஆகியோருக்குப் பிறகு மூன்றாம் இடத்தில் இருக்கின்றன உலகளாவிய விற்பனையில் இவரது புத்தகங்கள். கவிஞர், எழுத்தாளர், தத்துவஞானி மட்டுமின்றி சிறந்த சிற்பியும் ஓவியருமாவார் கலீல் ஜிப்ரான்.
***


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin