வியாழன், 25 ஜூன், 2015

சுயம் அறிதல் - கலீல் ஜிப்ரான் (2)


கல்களின், இரவுகளின் இரகசியங்களை
அமைதியில் அறிகின்றன உங்கள் உள்ளங்கள்.
உள் மனதின் ஞான ஒலிக்காக
தாகத்தில் தவிக்கின்றன உங்கள் செவிகள்.
சிந்தனைக்கு எந்நாளும் தெரிந்தே இருப்பவற்றை
வார்த்தைகளாலும் அறிந்தே இருக்கிறீர்கள்.
உங்கள் கனவுகளின் நிர்வாண உடலை
உங்கள் விரல்களால் தொடவும் முடிகிறது.
ல்லது, அது நீங்கள் செய்ய வேண்டியதே.
உங்கள் ஆன்மாவினுள் மறைந்திருக்கும் ஊற்று எழும்ப வேண்டும்,
சமுத்திரத்தை நோக்கி முணுமுணுத்து ஓட வேண்டும்.
அள்ளக் குறையாத பொக்கிஷமாக ஆழ்ந்த ஞானம்
அப்போது உங்கள் கண்களுக்குப் புலப்படும்.
ஆனால் அறிந்திராத அப்பொக்கிஷத்தை
தராசுகளால் எடை போடாதீர்கள்
அளவு கோலால் அளக்கவோ ஆழங்காணவோ முயன்றிடாதீர்கள்.
ஏனெனில் சுயம் என்பது சமுத்திரத்தைப் போல் எல்லைகளற்றது, அளப்பரியது.

நான் உண்மையைக் கண்டு பிடித்து விட்டேன்’ என்று சொல்லாதீர்கள்,
‘ஒரு உண்மையைத் தெரிந்து கொண்டேன்’ என்று சொல்லுங்கள்.
‘என் ஆன்மாவின் பாதையைக் கண்டு பிடித்து விட்டேன்’ என்று சொல்லாதீர்கள்,
‘என் பாதையில் நடக்கும் ஆன்மாவைச் சந்தித்தேன்’ என்று சொல்லுங்கள்.
ஏனெனில் ஆன்மா அனைத்துப் பாதைகளிலும் உலவுகிறது.
அது ஒரு கோட்டின் மேல் நடப்பதில்லை, ஒரு நாணலைப் போல் வளர்வதுமில்லை.
எண்ணற்ற இதழ்களைக் கொண்ட தாமரையைப் போல் ஆன்மா தானாகக் கட்டவிழ்கிறது.
*

படம் நன்றி: இணையம் 

மூலம்: Self-Knowledge from “The Prophet
By Kahlil Gibran (1883 – 1931)
சுய ஓவியம்
**

தொடர்புடைய முந்தைய பதிவு:
மகிழ்ச்சியும் துயரமும் - கலீல் ஜிப்ரான்

10 கருத்துகள்:

  1. ம்...ம்... நன்று.
    'எண்ணற்ற இதழ்களைக் கொண்ட தாமரையைப் போல..." ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல மொழியாக்கம்.....

    சிறப்பான கவிதை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நன்றாகவே இருக்கிறது. உண்மையைத் தெரிந்து கொண்டேன்... நல்ல நுட்பம். கடை பிடிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. அருமை...

    சுயம் தேடுவது அவ்வளவு எளிதில்லை...

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin