ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

பட்டாம்பூச்சிப் பண்ணை, ஜூப்ளி பூங்கா - ஜம்ஷெட்பூர் (4)

#1
ட்டாம்பூச்சிகளைப் படமாக்குவது ஒரு சுவாரஸ்யமான சவால். ஓரிடத்தில் நில்லாது பூவுக்குப் பூ தாவியபடி இருப்பவற்றை சத்தமின்றிப் பின் தொடர்ந்து, அவை பூவில் தேனை உறிஞ்சும் போதோ, இலைகளின் மேல் இளைப்பாறும் போதோ கேமராவில் சிறைப்பிடிப்பது பரவசமானது.

#2

#3

ஜூப்ளி பூங்காவில் பட்டாம்பூச்சிகள் வெளியே பறந்து விட முடியாதபடி கூரையைக் கொண்ட ஒரு அரங்கில் ஒரு சிறு பண்ணை அமைத்திருந்தார்கள். திறந்த வெளித் தோட்டங்களில் அவற்றுக்குப் பின் பதுங்கிப் பதுங்கி விரைய வேண்டும். குறிப்பாகக் காலை பத்து, பதினொரு மணியளவில் அவை மிக சுறுசுறுப்பாகி விடும்.
மீபமாக என் வீட்டுத் தோட்டத்தில் எடுத்துப் பகிர்ந்தவை எல்லாம் காலை 10 மணிக்கு முன்னால் எடுத்த படங்களே. மற்ற நேரங்களில் அவற்றைக் கண்டாலும் கேமராவைக் கையில் எடுக்க மாட்டேன். நம்மைக் களைப்படைய வைத்து விடும். 6 வருடங்களுக்கு முன் முதல் முறை அப்படி ஏற்பட்ட அனுபவம் இங்கே:


படபடக்கும் பட்டாம்பூச்சிகள் - அவுட்டோர் படப்பிடிப்பு

மைசூர் காரஞ்சி இயற்கைப் பூங்காவில் ஒரு பட்டாம்பூச்சிப் பண்ணை இருந்தது. ஆனால் அது பட்டாம் பூச்சிகளை ஈர்ப்பதற்காக ஏராளமான வண்ண மலர்களைக் கொண்ட திறந்தவெளிப் பூங்கா. அதிகாலை நேரமென்பதால் சற்று கிறக்கத்தில் இருந்தன பூச்சிகள். அதனால் அதிக சிரமமின்றி படமாக்க முடிந்தது. அந்தப் பகிர்வு இங்கே:

பட்டாம்பூச்சிப் பண்ணை - மைசூர் நேச்சர் பார்க் - படங்கள் 17 
https://tamilamudam.blogspot.com/2013/02/17.html
[அட, ஏதேச்சையாக 2013_ல்
இதே நாளில் பகிர்ந்திருக்கிறேன் :)!]

ஜூப்ளி பூங்காவிலும் அதிக சிரமம் இருக்கவில்லை. மூடிய கூடம் என்பதால் நின்ற இடத்திலிருந்தே சுழன்று சுழன்று எடுக்க முடிந்தது என்றாலும் அதிக வகையிலான பூச்சிகள் இல்லை. அறிவிப்புப் பலகையில் இருந்த வகைகள் அனைத்தையும் கண்டு பிடிக்க முடியவில்லை. 

#4


 #5

கோடை காலத்தில் இவற்றின் தாகம் தணிக்க இயற்கை மலர்களுக்கு நடுவே ஆங்காங்கே இது போன்ற செயற்கை மலர்கள்.. நடுவில் தண்ணீர் குப்பியுடன்...!  ஏற்பாடு பார்க்கப் புதுவிதமாக இருந்தது.

#6

#7

பெங்களூரின் பனர்கட்டா நேஷனல் பூங்காவிலும் ஒரு பண்ணை உள்ளது. 3 முறைகள் இந்தப் பூங்காவிற்குப் போயிருக்கிறேன் என்றாலும், பட்டாம்ப்பூச்சிப் பண்ணை அங்கே 2002-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதன் பின் போக வாய்க்கவில்லை. இப்போது இதைப் பகிரும் போது அங்கே செல்லும் எண்ணம் எழுகிறது. பார்க்கலாம்.
***

12 கருத்துகள்:

  1. பட்டாம் பூச்சி படங்கள் அழகு.
    விவரங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  2. படங்களை ரசித்தேன். செயற்கை மலர்கள், நடுவே தண்ணீர்க்குப்பிகள்... கருணைத்துளிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். யோசனையோடு செய்திருக்கிறார்கள்.

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. ஒவ்வொன்றும் வெகு அழகு ..

    இங்கு பன்னர்கேட்டா பூங்காவில் உள்ள பட்டாம் பூச்சி பண்ணையில் நாங்கள் சென்ற போது பல வண்ணங்களில் நம்மை சுற்றி பறந்தன..மறக்க இயலா நிகழ்வு அது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல அனுபவமாக இருந்திருக்கும். பன்னர்கட்டா பண்ணைக்கு இனிதான் செல்ல வேண்டும். நன்றி அனுராதா.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin