#1
ஜம்ஷெட்பூரின் மிக அழகிய கட்டிடங்களில் ஒன்றான ருஸ்ஸி மோடி மையம் Russi Modi Centre of Excellence (Tata Steel Museum) ஜூப்ளி பூங்காவிற்கு அடுத்தாற்போல் அமைந்துள்ளது. ஹஃபீஸ் ஒப்பந்தக்காரர்களால் வடிவமைக்கப்பட்டது.
#2
#3
இது ஜம்ஷெட்பூர் நகரின் வரலாற்றுத் தகவல்களின் சேமிப்புக் கூடமாக விளங்குகிறது.
வரிசையாக உயர்ந்து நிற்கும் வெண்ணிறத் தூண்கள்,
பிரமிட் வடிவ கட்டிடத்தின் சிகரம் ஆகியன எப்போதும் நேர்த்தியை நோக்கியதான டாட்டா நிறுவனத்தின் குறிக்கோளை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
#4
#5
உலகின் மிகப் பெரிய மற்றும் வெற்றிகரமான தொழிற்சாலைகளில் ஒன்றான டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தொடக்கம்,
வளர்ச்சி எப்படி நகரின் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்ததாக இருக்கிறதென்பதை அறியத் தருகிறது இந்த அருங்காட்சியகம்.
டாட்டா குழுமத்தை உருவாக்கிய ஜம்ஷெட்ஜி டாட்டாவின் பெயரே இந்த நகருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.
#6
#7
#
#8
#9
டாடா ஸ்டீல் நிறுவனம் பிறந்த கதை:
நூறாண்டுகளுக்கு முன், ஜம்ஷெட்ஜி டாட்டா இந்தியாவில் இரும்பு ஆலையை நிறுவ வல்லுநர்களின் ஆலோசனையைப் பெறவும் புதிய தொழில்நுட்பங்களை அறியவும் வேண்டி அமெரிக்காவிற்குப் பயணித்தார். அங்கே பல இடங்களுக்கும் சென்று இது நிமித்தமான தகவல்களைச் சேகரித்தார். இறுதியாக பிட்ஸ்பெர்க் நகரில் இருந்த கென்னடி, சஹ்லின் அண்ட் கம்பெனி நிறுவனத்தின் பங்குதாரரும் உலோகவியல் வல்லுநருமான ஜூலியன் கென்னடியைச் சந்தித்தார். அவர் ஆலை நிறுவுவதில் வரக்கூடியச் சிரமங்களையும் தேவைப்படும் பண முதலீட்டையும் பற்றி எடுத்துச் சொல்லியும் ஜம்ஜெட்ஜி உறுதியாக இருப்பதைப் பார்த்து வியந்து, சார்ல்ஸ் பேஜ் பெர்ரின் எனும் சர்வதேச புகழ்பெற்ற ஆய்வாளரிடம் அனுப்பி வைத்தார்.
நியூயார்க் நகரில் ஒரு சிறிய அலுவலகத்தில் நிகழ்ந்த அந்த சந்திப்பைப் பின்னாளில் நினைவு கூர்ந்திருக்கிறார் , சார்ல்ஸ் இவ்வாறாக:
#10
“என் மேசையில் குவிந்து கிடந்த நோட்டுப் புத்தகங்களுக்கு நடுவில் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது கதவைத் திறந்து கொண்டு நுழைந்தார், நான் முன்பின் பார்த்திராத அந்தப் புதிய நபர். உள்ளே நுழைந்தவர் மேசை முன் குனிந்து நின்று மெளனமாக என்னை உற்றுப் பார்த்தபடி நின்றிருந்தார் ஒரு நிமிடம் வரை. பின் ஆழமான குரலில் கேட்டார், “நீங்கள்தானே சார்ல்ஸ் பேஜ் பெர்ரின்?” என. “ஆம்” என்றேன். மீண்டும் சில கணங்கள் என்னை வெறித்து நோக்கி நின்றவர், “நான் இதுகாலமும் தேடிக் கொண்டிருந்த நபரைக் கண்டு பிடித்து விட்டதாக நம்புகிறேன். இந்தியாவில் இரும்பு ஆலையை நான் நிறுவப் போவதாக ஜூலியன் கென்னடி தங்களுக்கு எழுதியிருக்கிறார் அல்லவா?
நீங்கள் என்னோடு இந்தியா வர வேண்டுமென விரும்புகிறேன். அங்கு வந்து உகந்த இரும்புத் தாது, கரி ஆகியவற்றை நீங்கள் ஆய்ந்து அறிந்து சொல்ல வேண்டும். எனது ஆலோசகராகப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். திரு கென்னடி இரும்பு ஆலையை நிர்மாணிப்பார். நான் செலவுகளை ஏற்றுக் கொள்வேன். என்னோடு இந்தியா வருவீர்களா?” எனக் கேட்டார்.
நான் பேச்சிழந்து போனேன். ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள் என்னவொரு உறுதி அவரது முகத்தில் ஒளிர்ந்ததென்பதை. ‘நல்லது. நான் வருகிறேன்’ என்றேன். அவ்வாறே செய்தேன்.”
படிப்படியான திட்டமிடல்கள், வேலைக்கான அடித்தளங்கள் இடப்பட்டு பிறந்தது டாட்டா ஸ்டீல்.
26 ஆகஸ்ட் 2007_ல் நூற்றாண்டினையும் பூர்த்தி செய்தது.
#11
டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் பங்களிப்பில் உருவான எத்தனையோ திட்டப்பணிகளில் முக்கியமானது கொல்கத்தாவின் ஹெளரா பாலம். 1940_ல் அதற்குத் தேவைப்பட்ட 26500 டன் இரும்பில், 23000 டன் டாடா ஸ்டீல் நிறுவனத்தால் வழங்கப் பட்டிருக்கிறது. 1943_ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டக் காலத்தில் உலகிலேயே மூன்றாவது நெடும்பாலமாக இருந்திருக்கிறது.
#12
மும்பை தாஜ் விடுதி தோன்றிய வரலாறு:
#13
நெசவுத் துறையிலும் ஈடுபாடு கொண்டு பல ஆலைகளை வாங்கிய வரலாறு:
#14
இன்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயன்ஸ் (Indian Institute of Science) தோன்றிய வரலாறு:
அறிவியல் ஆய்வுக்கான கல்வி நிறுவனத்தை அமைக்க வேண்டியதன் அவசியத்தை ஜம்ஷெட்ஸி 1898_ல் கர்சன் பிரபுவிடம் எடுத்துரைக்க, அவர் முன் மொழிந்ததின் பேரில் இங்கிலாந்தின் ராயல் சொஸைட்டி சர். வில்லியம் ராம்சே எனும் நோபல் பரிசு பெற்ற அறிஞரின் ஆலோசனைகளைக் கோரியிருக்கிறது. 1904_ஆம் ஆண்டு ஜம்ஷெட்ஜி டாட்ட இந்த கல்வி நிறுவனத்தை நிர்மாணிக்க மூன்று கோடி மதிப்புள்ள சொத்துக்களை அதற்காக எழுதி வைத்திருக்கிறார்.
#15
ஜம்ஷெட்ஜி டாட்டா சுவாமி விவேகானந்தருக்கு எழுதிய கடிதம்:
1893_ல் ஜப்பானிலிருந்து சிகாகோ நகருக்கு ஒரே கப்பலில் பயணம் சென்றிருக்கிறார்கள் இருவரும். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு 23 நவம்பர் 1898_ல் தேதியிடப்பட்ட இந்தக் கடிதம், ஆய்வு நிறுவனத்திற்கு அவரது ஆதரவை நாடி எழுதப்பட்டதாகும்.
#16
இந்தக் கூடத்தில் புகழ்பெற்ற ஓவியர்கள் வரைந்த ஓவியங்களும் ஒருபக்கம் இடம் பெற்றிருந்தன. அவற்றில் சிலவற்றை ‘சித்திரம் பேசுதடி’ பகுப்பின் கீழ் மற்றொரு பதிவாகப் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த அருகாட்சியக மையம் தொழில் நேர்த்தி மற்றும் மேம்பாட்டுக்காகக் கருத்தரங்கம் நடத்த விரும்பும் அமைப்புகளுக்கு இடம் அளிக்கிறது. அறிவியல், தொழில் நுட்பம், கலை, இலக்கியம், கலாச்சாரம் மற்றும் மனித நேய அமைப்புகள் என எல்லாத் துறைகளின் மேம்பாட்டுக்கான கூட்டங்களுக்கும் ஆதரவளித்து வருகிறது.
#17
*
தகவல்கள்: இணையத்தில் சேகரித்துத் தமிழாக்கம் செய்யப்பட்டவை.
**
[பாகம் இரண்டாக, “ஜயந்தி சரோவர், ஜூப்ளி பூங்கா”.. விரைவில்..]
***

படங்கள், தகவல்கள் அசர வைக்கிறது...
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
நீக்குபிரமிப்பான தகவல்களும், படங்களும் ...வாவ்
பதிலளிநீக்குநன்றி அனுராதா.
நீக்குஅருங்காட்சியம் படங்கள் மிக அழகு. விவரங்கள் எல்லாம் மிக அருமை.
பதிலளிநீக்குஜம்ஜெட்பூர் அருங்காட்சியம் நான் உங்கள் பதிவின் மூலம் சுற்றிப்பார்த்து விட்டேன்.
ஜயந்தி சரோவர் ஜூப்ளி பூங்கா பார்க்க ஆவல்.
மகிழ்ச்சி. அடுத்த பாகம் விரைவில் பகிர்ந்திடுகிறேன். நன்றி கோமதிம்மா.
நீக்குவியப்புமிகு தகவல்கள்
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குஅருமையான தகவல்கள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குருஸ்ஸி மோடி - சார்ல்ஸ் பேஜ், உரையாடல் ஒரு தீர்க்கமான தரிசனம் நிறைந்த ஆளுமையை கண்முன் நிறுத்துகிறது.
நீக்குஉண்மைதான். மிக்க நன்றி.
நீக்குதொடர்ந்து எழுதுங்கள்!
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு