ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

பட்டாம்பூச்சிப் பண்ணை - மைசூர் நேச்சர் பார்க் - படங்கள் 17 - இறுதிப் பாகம்

#1

காராஞ்சி ஏரிக்கு உள்ளேயே ஒரு சிறிய தீவில் அமைந்திருக்கிறது பட்டாம்பூச்சிப் பண்ணை (Butterfly Park). (Nature Park) இயற்கைப்பூங்காவின் நுழைவாயிலில் இந்த இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஏரியை ஒட்டியே அமைந்தபாதையில் உள்ளே நடக்க வேண்டியுள்ளது. ஒரு சிறிய பாலம் நம்மை அந்தத் தீவுக்கு அழைத்துச் செல்கிறது.

#2 வரவேற்கிறது வண்ணத்துப்பூச்சிப்பூங்கா..


பாலத்தின் இருபக்கமும் ஏரியின் அழகும் அமைதியும் வசீகரிக்கிறது.

#3

“இயற்கையை ஆழ்ந்து நோக்குங்கள். எல்லாமே எளிதாகப் புரிபட ஆரம்பிக்கும்.”

-ஆல்பர்ட் ஐன்ஸ்டின்


Butterfly, Moth இரண்டுக்குமான வித்தியாசங்களை அறியத் தந்திருக்கிறார்கள்.

#4


தாவரவியல் வல்லுநர்களின் உதவியோடு பட்டாம்பூச்சிகளை ஈர்க்கக் கூடிய மலர் வகைகளைத் தீவெங்கும் பயிர் செய்திருக்கிறார்கள்.

#5


#6 காலைக் கதிரில்.. காட்டு மலர்கள்.. Poinsettia


#7 ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம்..

#8 வண்ண வண்ணப் பூக்கள்...

இவற்றில் பல செடிகள் கர்நாடகத்தின் மால்நாடு பகுதியிலிருந்தும், மலைப் பிரதேசங்களிலிருந்தும் கொண்டு வரப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. தோட்டம் அழகாக இருந்தாலும் செடிகளுக்கு நடுவே ஆங்காங்கே பெரிய பெரிய புற்றுகள் சற்றே அச்சத்தைத் தந்தன. ஊழியர்கள் ஒருசிலர் செடிகளுக்கு நீர்பாய்ச்சிக் கொண்டிருந்தது தைரியம் அளித்தது. பல வகை வண்ணத்துப்பூச்சிகளைக் காண இயலுமென்ற ஆசையில் மேலும் கீழுமான 4 கிலோ மீட்டர் நடை பயணத்துக்குப் பலனாகக் கண்ணுக்கும் கேமராவுக்கும் கிட்டியதென்னவோ நாலைந்துதான்.  45 வகை இருக்கும் என இணையம் சொல்வதையெல்லாம் நம்பிவிடக் கூடாது:(! போகிறது. நேச்சர் பார்க்கில் நீண்ட நேச்சர் வாக். ஏரியின் அழகையும் மரங்களையும் இரசிக்க முடிந்ததே!
போஸ் கொடுத்த பட்டாம்பூச்சிகளுக்கும் நன்றி!

#9 The Common Crow (Euploea core)

இந்த வகை தென் ஆசியாவிலேயே அதிகம் காணப்படும். இந்தியாவில் இவை “Common Indian Crow' என்றும் ஆஸ்திரேலியாவில் 'Australian Crow' என்றும் கூட அழைக்கப்படுகின்றன.

ஒருவரை எடுத்துக் கொண்டிருக்கையிலேயே இன்னொருவர் ஃப்ரேமுக்குள் வந்து நின்றார். முழுமையாக அவரை எடுக்க முயன்றிடுகையில் பறந்து விட்டார்.

#10
உட்பக்கம் பளபளப்பான கருப்பு உடலுடைய இவற்றின் மூடிய வெளிப்பாகத்தைதான் இங்கு பார்க்கிறீர்கள்.  மூடிய பாகம் இளம்பழுப்பாக ஆங்காங்கே வெள்ளைப் பொட்டுகளோடு இருக்கும்.

#11 The Viceroy (Limenitis archippus) 
 
இதன் பூர்வீகம் வட அமெரிக்கா. ஆரஞ்சும் கருப்பும் சேர்ந்த இதனை Monarch பட்டாம்பூச்சிகளோடு குழப்பிக் கொள்கிறவர்கள் உண்டு.

 Monarch Butterfly (Danaus plexippus):
வெளிப்புறம்

உட்புறம்
வைஸ்ராய்க்கு இருப்பது போல் அழுத்தமான பக்கவாட்டுக் கருப்புக் கோடுகள் மொனார்க் பூச்சிகளுக்கு கிடையாது. அவை வெளிப்புறம் மிதமான வண்ணத்திலும், உட்பக்கம் அழுத்தமான ஆரஞ்சிலும் அமைந்திருக்கும். வைஸ்ராய் இரண்டு பக்கமும் ஒரே போலவே இருக்கும். இந்த இரண்டு படங்களும் சென்ற பட்டாம்பூச்சிப் பதிவில் பகிர்ந்தவை. அப்போதும் இந்த வேறுபாட்டைக் குறிப்பிட்டிருந்தேன் என்றாலும், வைஸ்ராயைப் படமெடுத்து ஒப்பிட்டுப் பார்க்கிற வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது.

மொனார்க்கின் wing span மூன்றரையிலிருந்து நாலரை அங்குலம் என்றால் வைஸ்ராய்க்கு இரண்டரையிலிருந்து மூன்றரை.

#12 Wing span of Viceroy
‘உன்னைப் போல் ஒருவன்’ என சொன்னால் பொருட்படுத்துகிறார்களோ இல்லையோ ‘அவனைப் போல நீ’ என சொல்லப்படுவதைப் பெரும்பாலானோர் விரும்ப மாட்டார்கள். வைஸ்ரைய்கள் விதிவிலக்கு. மொனார்க் போல இருப்பதாகச் சொல்லப்படுவதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் சந்தோஷம் அடைகிறார்கள். காரணம் மொனார்க் பட்டாம்பூச்சிகளின் உடம்பு அவற்றின் உணவு வழக்கத்தால் கசப்பேறிப் போய் இருக்கும். இதனால் அவற்றை உணவாகக் கொள்ள பறவைகள் விரும்புவதில்லை. வைஸ்ராய்களையும் மொனார்க் என நினைத்துத் துரத்தாமல் விட்டு விடுகின்றன பறவைகளும் எதிரிகளும்.  குஷிதான் இதில் வைஸ்ராய்களுக்கு.

#13 தேன் குடித்த மயக்கத்தில்..
படம் ஒன்றிலும் காணப்படும் இந்தவகை பட்டாம்பூச்சியின் சரியான பெயரைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
இயற்கைக்கு இவை ஆற்றும் சேவையைப் பாராட்டி பேனரெல்லாமும் வைத்திருக்கிறார்கள், பாருங்கள்:

#14


விழுதுகள் நீரைத் தொடப் பண்ணைக்குள் பரந்து நின்றிருந்த ஆலமரம்.
#15

பூங்காவின் உள்ளே செல்லுகையில் சூரியக் கதிரில் குளித்தபடி வரவேற்ற தேவதையம்மா திரும்பி வந்த போது நிழலில் குளிர்ச்சியாகக் காட்சி தந்தார் “பிடித்திருந்ததா பூங்கா?” எனும் கேள்வியைப் புன்னகையாய் சிந்தி.

#16

மயில்களையும், மரங்களையும், பறவைகளையும், பட்டாம்பூச்சிகளையும், ஏரியழகையும் நீங்களும்தான் இரசித்து விட்டு வாருங்களேன், அடுத்தமுறை மைசூர் செல்லும் போது:)!

#17 காரஞ்சி நேச்சர் பார்க்
***


தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
*வன தெய்வங்களின் ஆசிர்வாதம் - மைசூர் காரஞ்சி ஏரி இயற்கை பூங்கா (1)
*உள்ளக் களிப்பின் ஒளியின் கற்றை.. - பறவைப் பண்ணை - மைசூர் காரஞ்சி நேச்சர் பார்க் (2)
*தோகை மயில்கள் - கைபுனையாச் சித்திரங்கள்- மைசூர் காரஞ்சி பூங்கா (3)

மற்றும்

*படபடக்கும் பட்டாம்பூச்சிகள் - அவுட்டோர் படப்பிடிப்பு

***


42 கருத்துகள்:

 1. சூப்பராக இருக்கிறது படங்கள் நல்ல பகிர்வு

  பதிலளிநீக்கு
 2. பட்டாம்பூச்சியின் மென்மையைப் படங்களிலேயே உணர முடிகிற அளவுக்கு அசத்துது படங்களெல்லாம் :-)

  பதிலளிநீக்கு
 3. வண்ணத்துப் பூச்சி பண்ணையா... அட!

  அழகிய படப் பகிர்வு.

  பதிலளிநீக்கு
 4. வாவ்! சிறகடித்துப் பறப்போம்.

  பதிலளிநீக்கு
 5. பட்டாம்பூச்சி பண்ணையும் , பட்டாம்பூச்சியும் கொள்ளை அழகு.
  பூக்கள் அழகு.
  ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்த பாடல் அருமை.
  படங்கள் எல்லாம் மிக அழகு.ஆலமரம் அழகு.
  நாங்களும் சுத்திப்பார்த்து விட்டோம்.

  பதிலளிநீக்கு
 6. வண்ணத்துப்பூச்சிகளுக்கென்று ஒரு இடம்! கண்ணைக் கட்டி நிறுத்தும் புகைப்படங்களுடன் உங்கள் பதிவு சூப்பர் ராமலக்ஷ்மி!

  மிகத் தெளிவான படங்கள். திரும்பத்திரும்ப பார்த்து ரசித்தேன். வண்ணத்துப்பூச்சிகளின் தொண்டு எத்தனை போற்றத்தக்கது! சிறப்பாகவே இயற்கையை மைசூர் காரஞ்சி பூங்காவில் ஆராதித்து வருகிறார்கள்.

  ஒரு புதிய உலகை உங்கள் பதிவு மூலம் கண்டோம்.

  பதிலளிநீக்கு
 7. appappaa..enna azaku.ungkaL keemaraavil kaawtham uLLathoo.kaNkaLai ippati izukkinRathee:)

  பதிலளிநீக்கு
 8. வண்ணத்துப் பூச்சிகள், யானையைப் போலவே, காணும்பொழுதில் எவ்வயதினரையும் குதூகலமாக்கிவிடும்.

  படங்கள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

  மொனார்க் வண்ணத்துப் பூச்சிகளைக் குறித்துச் சமீபத்தில் ஒரு பதிவில் படித்தேன். மிகுந்த ஆச்சரியமானச் செய்திகள்.

  பதிலளிநீக்கு
 9. பட்டாம் பூச்சியும், மழையும் சலிக்கவே சலிக்காத அழகுகள். இங்கயும் ரசிச்சேன். தேவதையம்மாவும் மனசைத் திருடிட்டாங்க! ‘அல்வா இனிக்கும்’னு ‌சொல்றது மாதிரி ஸ்டேட்மெண்ட் ‘உங்க படங்கள் நல்லா இருந்துச்சு’ன்னு சொல்றது. அதனால அதைச் சொல்லாம நான் கிளம்பறேன்!

  பதிலளிநீக்கு
 10. அத்தனை படங்களும் சூப்பர் ராமலக்ஷ்மி. கேட்டுக் கேட்டு அலுத்திருக்கும்.
  ஆனாலும் சொல்வதில் எங்களுக்குச் சந்தோஷமே.
  தேடிதேடி விவரங்களும் கொடுக்கிறீர்களே
  அதுதான் இன்னும் அழகு.
  மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 11. கண்ணையும்,மனதையும் கவர்கிறது படங்கள்.

  பதிலளிநீக்கு
 12. வண்ணத்துப்பூச்சி பூங்கா பற்றிய பகிர்வும் ப்டங்களும் மிகவும் நேர்த்தி.ஓ எப்படி இப்படி!

  பதிலளிநீக்கு
 13. @Ranjani Narayanan,

  மகிழ்ச்சியும் நன்றியும் ரஞ்சனிம்மா.

  பதிலளிநீக்கு
 14. @ஹுஸைனம்மா,

  ஆச்சரியமூட்டும் தகவல்கள். பதில் இல்லாத கேள்விகள். BBC வீடியோ அற்புதம். மொனார்க் பூச்சிகள் கொத்துக்கொத்தாக மரங்களில் இலைகளோ என எண்ணும் வகையில் தொங்கியபடி உறங்குவதும், நான்கு மாதங்கள் கழித்து விழிப்பதும், பறப்பதும், நீர் அருந்துவதும் பார்க்கப் பரவசம். அருமையான் பகிர்வுக்கு மிக்க நன்றி ஹுஸைனம்மா:)! பதிவையும் வீடியோவையும் ஃப்ளிக்கரிலும் பகிர்ந்து கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 15. @வல்லிசிம்ஹன்,

  அனைவரும் தரும் ஊக்கமே தொடர்ந்து படங்கள் எடுக்கும் உத்வேகத்தைத் தந்து வருகிறது. கேட்பதில் எனக்கும் சந்தோஷமே:). நன்றி வல்லிம்மா.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin