திங்கள், 8 டிசம்பர், 2025

மழையின் ரீங்காரம் - (ஒன்பது குறுங்கவிதைகள்) - பண்புடன் இதழ்: 7

1.
தரையில் இலையுதிர்க்கால இலை
காற்றில் சுழன்றாடும் குழந்தை
விழ அஞ்சுவதில்லை இருவரும்.

2.
ஓவிய நோட்டில் வண்ணத்துச்பூச்சி
உருளும் கிரேயான் 
சிறகுகள் பெறும் நிறங்கள்.

3.
காற்றில் உதிரும் பூவிதழ்கள்ஆச்சரியத்துடன் சேகரிக்கும் குழந்தை 
ஓட மறக்கும் நேரம். 

4.
அந்திப் பூங்கா 
கடைசி சிரிப்பைத் துரத்தும் எதிரொலி
ஆளற்று அசையும் ஊஞ்சல்.

5.
மழலையின் பள்ளி முதல் நாள் 
ததும்பும் கண்ணீரும், சிறு புன்னகையும்
தைரியம் ரிப்பன்கள் அணியும்.

6.
பாதி அழிந்த மணற்கோட்டை
இரக்கமற்ற அலைகள் 
சிரித்தபடி மீண்டும் துவங்கும் குழந்தை.

7.
மழை நீர் குட்டை
பிரதிபலிப்பைத் தொடும் சிறு கைகள் 
அலை அலையாய் விழிக்கும் கனவுகள்.

8.
ஓடையில் மிதக்கும் காகிதப் படகுகள் 
வட்டங்களைத் தைக்கும் மழைத்துளிகள் 
பயணிக்கும் கனவுகள். 

9.
கூரையில் முணுமுணுக்கும் மழை
திருப்பி முணுமுணுக்கும் குழந்தை 
ஒப்புக் கொள்கின்றன வானமும் பாடலும்.

*

நன்றி பண்புடன்!
***







4 கருத்துகள்:

  1. மூன்று வரிக் கவிதைள் கவர்கின்றன.

    பதிலளிநீக்கு
  2. ஹைக்கூக்கள் எல்லாமே நன்றாக இருக்கின்றன.

    கொட்டியது மழை
    கப்பல் விட்டு மகிழ்ந்த சிறுவன்
    வீடே மிதந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin