Wednesday, December 7, 2011

ஆப்ரிக்கக் காடும் அழகுப் பறவைகளும் - ஜுராங் பூங்கா - சிங்கப்பூர் (பாகம்-6)

பீடு நடை போடும் மயில், சிறகைச் சிலிர்க்கும் வான்கோழி, வீட்டுக்கு வரும் பக்பக் புறாக்கள் கீச்கீச் மைனாக்கள் எனப் பறவைகளைப் படம் எடுப்பதென்றால் படுகுஷியாகி விடும் என்னை, 20 ஹெக்டேர் பரப்பளவிலிருக்கும் பறவைப்பூங்காவில் கொண்டு விட்டால் என்னாகும்:)? விடைதான் இப்பதிவும், வரவிருக்கும் அடுத்த பாகமும்!!

# 1.மயில் போல... புறா ஒண்ணு...

[Victoria Crowned Pigeon]

சிங்கப்பூரின் ஜூராங் பறவைகள் பூங்கா 380 வகைகளில் 5000 பறவைகளைப் பராமரிக்கிறது என்றால் ஆச்சரியமாய் இருக்கிறதில்லையா? அதுவும் இயற்கையான சூழலிலேயே என்பதுதான் விசேஷம். ஏவியரி எனப்படும் உயர்ந்த மரங்களையும் உள்ளடக்கிய பிரமாண்டக் கூண்டுகளில் பறவைகள் வெளியேறியும் விடாமல் அதே நேரம் சுதந்திரமாக இயற்கையின் மழை வெயில் இடி மின்னல் எல்லாவற்றையும் அனுபவித்தபடி வாழுகின்றன.

பூங்காவின் எந்தெந்த இடத்தில் என்னென்ன வகைப் பறவைகள் உள்ளன என்பதற்கான தெளிவான வரைபடம் நுழைவுச் சீட்டு வாங்குமிடத்தில் தந்து விடுகிறார்கள்.

# 2. பறவைகள் பலவிதம்


உள்ளே நுழைந்ததும் வரவேற்றது பேரட் பேரடைஸ். காக்கட்டூ, மக்கா, ஸ்கார்லெட், சன் பாரகீட், எலக்டஸ், ஜுவினைல் கிளிகளின் சத்தம் இடத்தையே ரம்மியமாக்கியது. வந்து கவனிக்கிறோமெனக் கையசைத்து விட்டு பனோரெயிலில் ஏறினோம்.

# 3. கிளிகள் கையில் கிளிகள்


மூன்று ஸ்டேஷன்களில் நிறுத்தம் கொண்ட இந்த பனோ ரயில் தொடர்ந்து சுற்றியபடி இருக்கிறது. ஒவ்வொரு நிறுத்தத்திலும் இறங்கி [நடக்க முடிகிற அளவு:)]அதன் சுற்று வட்டாரத்தில் இருக்கும் பறவைகளை ரசித்து விட்டு ரயில் அடுத்த ரவுண்ட் வரும் போது ஏறிக் கொள்ளலாம்.

# 4. பனோ ரயில்


முதல் நிறுத்தத்தில் இறங்கிய போது ஆச்சரியப்படுத்தியது அத்தனை வகைப் பறவைகள் நிரம்பிய இடத்தில், உலகில் எத்தனை எத்தனையோ பறவைகள் இருக்கையில் நம்ம தேசியப் பறவைக்கு செய்து வைத்திருந்த மலர் அலங்கார மரியாதை:

# 5. அட நம்ம மயிலு...


# 6. ராணி மகராணி [Victoria Crowned Pigeon]
மாடப்புறா இல்லை. மகுடம் தரித்த புறா. பிரிட்டிஷ் ராணியின் பெயரால் அழைக்கப்படுகிறது. இவை மிகப் பெரிய ‘வாக் இன்’ ஏவியரியில் பராமரிக்கப்படுவதால் நாம் உள்ளேயே சென்று இப்படி ரொம்ப அருகாமையில் இருந்து படம் எடுக்க முடிகிறது.


# 7. மகுடத்தில் வித்தியாசம்
ஆண் பெண் இரண்டுமே ஒரே மாதிரித் தோற்றத்திலிருக்குமென சொல்லப்பட்டாலும் கொண்டை அமைப்பில் வித்தியாசத்தைப் பார்க்க முடிந்தது (கவனிக்க # படம் 1: மயில் போல..).

# 8. ஹார்ன் பில்
நாலைந்து மரங்கள் அடங்கிய மாபெரும் கூண்டில் இரண்டே பறவைகள். வலைக்கம்பிக்குள் கேமராவின் லென்ஸ் நுழையவில்லை:(! எடுத்த பலவற்றில் தேறிய ஒன்றே இது.


ராட்சத பருந்து, நீந்தும் அன்னங்கள், பெலிகன்கள், கூட்டமாக ஏரியினுள் வெள்ளை மற்றும் ஆரஞ்சு ஃப்ளெமிங்கோ என எண்ணற்ற வகைப் பறவைகள். தூரம், நேரமின்மை காரணமாக அருகில் சென்று பார்க்க இயலாதவையுடன் ஏற்கனவே இறங்கிப் பார்த்தவற்றையும் பறவைப் பார்வையில் பனோரயிலில் இருந்து ரசிக்க முடிகிறது.

அதிலும் கீழ்வரும் முதல் மூன்று (# ) வேகமாய் விரைந்த மோனா ரயிலிலிருந்து எடுத்தவை:

# 9. ஆஸ்திரேலியன் பெலிகன் [உன்னைப் போல் ஒருவன்:)?]


# 10 வெள்ளை ஃப்ளெமிங்கோ கூட்டம்


# 11. ஆரஞ்சு வண்ணத்தில்..


# 12. வெள்ளையம்மா
ஒற்றைக்காலில் தவம்

# 13. அழகி (Orange Flemingo)மடை வாத்து / Wood Duck or Carolina Duck:

வட அமெரிக்காவில் அதிகமாகக் காணப்படும் வகை இவை.

# 14. அசந்த தூக்கத்தில் ஒன்று


# 15. அரைத் தூக்கத்தில் ஒன்று


# 16. அட்டென்ஷனில் ஒன்று


இவை வேறு வகை. வெள்ளை முகங்கொண்ட பழுப்பு வாத்துகள். தொலைவிலிருந்த குட்டையருகே நின்றிருந்தன. அத்தனை தெளிவில்லா விட்டாலும் பார்வைக்காகப் பதிந்துள்ளேன்:

# 17. பழுப்பு வாத்துக்கள்


ஆப்பிரிக்க நீர்வீழ்ச்சிப் பகுதியாக வடிவமைக்கப்பட்ட இடம் வெகு அழகு. இது இரண்டாவது நிறுத்தத்தில் வருகிறது.

# 18. வரவேற்கிறது


செயற்கை நீர்வீழ்ச்சி சுமார் 30 மீட்டர் அதாவது நூறடிக்கும் மேலான உயரத்திலிருந்து விழுகிறது:

# 19. தீம்தனனா தீம்தனனா
‘ச்சோ’ என அருவியின் சத்தம் அமைதியான காட்டில் எதிரொலிக்க அங்கொரு அருமையான இசைக் கச்சேரியே நடந்து கொண்டிருந்தது. மனமின்றியே நகர வேண்டியதாயிற்று.

பழங்குடி ஆப்ரிக்க மனிதர்களைத் தத்ரூபமாகக் காட்டும் சிலைகளும் ஆங்காங்கே உள்ளன:

# 20. சூரியனே கடிகாரம். கிளம்பி விட்டார்கள் வேலைக்கு..


# 21. ஈட்டியோடு காட்டு வீரன்


# 22. கூடாரத்தில் கால் நீட்டி..


# 23. போர்களத்தில் புயலாகி..


முழுப் பூங்காவையும் முழுமையாக ரசிக்க முழுநாள் போதாது. குறிப்பிட்ட நேரங்களில் கிளி ஷோவும் உண்டு. சிறுகுழந்தைகளைக் குஷிப் படுத்துக் கூடியது. ரயிலில் செல்லுகையில் அதற்காக அரங்கில் கூடியிருந்தவர்களைப் பார்க்க முடிந்தது. ஆனால் அதில் அத்தனை ஆர்வம் எங்களுக்கு இருக்கவில்லை. அந்நேரத்தில் முடிந்தவை சுற்றிப் பலவிதப் பறவைகளை அருகாமையில் ரசிப்பதையே விரும்பினோம். நேரம் செல்லச் செல்ல கால்கள் கெஞ்ச ஆரம்பித்து விட்டன.

அதைத் தவிர்க்க சிலர் கைட்கள் கொண்ட ட்ராமில் செல்கிறார்கள். சிலர் இப்படி வாடகைக்கு வண்டியை எடுத்துக் கொண்டுச் சுற்றுகிறார்கள்:

# 24. இது எப்படி இருக்கு:)?


# 25. ஓங்கி வளர்ந்த காடு


பொதுவாகப் பெங்களூர் பூங்காக்கள் பலவற்றிலும் தனிமரங்களைப் படமாக்குவதில் ஆர்வம் காட்டுகிற எனக்கு அங்கிருந்த நெடிந்துயர்ந்த மழைக்காட்டு மரங்கள் வியப்பைத் தந்தன. இதைவிடவும் அடர்த்தியான காட்டுக்குள் நீண்ட நேர இரவு நடை அனுபவம் காத்திருப்பதை அப்போது அறிந்திருக்கவில்லை. கிளம்பி நைட் சஃபாரி வந்து சேர்ந்தோம்.

(தொடரும்)

பி.கு: ‘அப்போ கிளிகள்?’ பேரட் பேரடஸைக் காண்பிக்காமல் ஜூராங் பகிர்வை முடிக்க முடியுமா? முதல் பத்தியில் சொன்னது போல அடுத்த பாகத்தில் உங்களைச் சந்திக்க வரும் அழகுக் கிளிகள்:)! பிறகே நைட் சஃபாரி.]
***

பறவை பார்ப்போம் (2)தொடர்புடைய முந்தைய பதிவுகள்:


60 comments:

 1. பதிவிற்குள்ளேயே நீண்ட நேரம் தங்கி விட்டேன். ஒவ்வொரு படமும் கண்ணைப் பறிக்க தாண்டிச் செல்ல மனம் வந்தால் தானே...! மிக்க நன்றி. அடுத்த பாகத்திற்கு ஆவலோடு வெயிட்டிங்...

  ReplyDelete
 2. வாவ்..அருகில் இருந்து பார்த்தாற்போன்ற உயிரோட்டம் ஒவ்வொரு படங்களிலும் சூப்பர்.

  ReplyDelete
 3. ஒவ்வொரு படமும் 'வாவ்' சொல்ல வைக்குது.. அசத்தல்.

  அதுவும் அந்த மயில் ச்சான்சே இல்லை. ஜூப்பர் :-)

  ReplyDelete
 4. ஆபிரிக்காக்கு போனால் நம்ம நாட்டில இருக்கிறமாதிரியே இருக்கிறமாதிரியே இருக்குமாமே.அப்பிடியா அக்கா ?படங்கள் எப்பவும்போல உங்கள் கைவண்ணம் அழகுதான் !

  ReplyDelete
 5. விதவிதமான பறவைகள்... அழகிய புகைப்படங்கள்... மனதை கொள்ளை கொண்டன. அருமையான பகிர்வு.

  ReplyDelete
 6. எல்லா படங்களுமே அசத்தலாக உள்ளது. உங்களுடனேயே பயணித்தது போல் இருந்தது. அடுத்த பகுதிக்கான ஆவலுடன் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 7. படங்களும் பதிவுகளும் அருமை!

  ReplyDelete
 8. நேரில் பார்த்தது போன்ற உணர்வு!

  ReplyDelete
 9. நானும் ஆப்பிரிக்கா சிங்கப்பூர்போயிருக்கேன் உங்க படங்கள் பார்க்கும்போதுதான் நிறைய இடங்கள் பார்க்காம வந்துட்டேன்னு புரியுது

  ReplyDelete
 10. அட்டென்ஷன் பறவை அசத்தல்.....

  ReplyDelete
 11. முழுப் பூங்காவையும் முழுமையாக ரசிக்க முழுநாள் போதாது.

  பேசும் படங்கள்!

  ReplyDelete
 12. எனது நண்பர்களும் இந்த ஜுராங் பூங்கா சென்று படமெடுத்து வந்தார்கள். ஆனால், இங்கே இருக்கிற பிரமிப்பு அப்பொழுது எனக்கு ஏற்படவில்லை.

  எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

  ReplyDelete
 13. அத்தனையும் அவ்வ்வவ்ளோ அழகா இருக்கு அக்கா.. பகிர்வுக்கு நன்றி :))

  ReplyDelete
 14. ஆஹா! அழகு, பறைவைகள்.

  பறவைகள் பல விதம் எல்லாம் மனதில் பதிந்தன ராமலட்சுமியின் கை வண்ணத்தால்.

  ReplyDelete
 15. ஒவ்வொன்னும் செம அட்டகாசமா இருக்கு .

  எல்லாத்தையும் அப்படியே சுட்டுடலாமானு யோசிச்சிட்டு இருக்கிறேன். :))

  மிக மிக ரசித்தேன்.

  ReplyDelete
 16. அழகிய துல்லியமான படங்கள். பல படங்கள் மிக அழகு. ஆனால் ஓரிரு படங்களில் உள்ள ஒரு பறவை மண்டையின் பின்னால் ஒட்டடை படிந்தாற்போல் அலங்காரம் உள்ள பறவை, படம் அழகுதான். பறவை அழகாய்த் தோன்றவில்லை! (எனக்கு):))

  ReplyDelete
 17. ஆரஞ்சு அழகி ஃப்ளெமிங்கோ ஒரு கால்லேதான் மெட்டி போட்டிருக்கு...!!!

  ReplyDelete
 18. ஆஹா..ஓஹோன்னு இருக்கு பகிர்வு..
  தொடர்ந்து இனிமே ஆன்னு வாயை பிளக்க வைத்து விடுவீங்க.

  ReplyDelete
 19. படங்கள் செமையா இருக்கு..

  இங்க இருக்கிற பறவைகள் விலங்குகள் எல்லாம் ரொம்ப புண்ணியம் செய்தவை என்று நினைக்கிறேன் :-)) காரணம் அவைகள் சுதந்திரமாக காட்டில் எப்படி இருக்குமோ அதே போல (அந்த அளவிற்கு இல்லை என்றாலும் கிட்டத்தட்ட) இங்கேயும் இருக்கும்..

  இயற்கையை அழிக்காமல் அருமையான சூழ்நிலையை ஏற்படுத்தி வைத்து இருப்பார்கள்.

  அவைகளுக்கான பராமரிப்பும் அருமையாக இருக்கும்.

  நீங்கள் இங்கே சென்றால் நிஜ காட்டிற்குள் சென்றது போலவே இருக்கும்.

  ReplyDelete
 20. Very nice and fantastic. It is really amazing. Thanks for sharing

  ReplyDelete
 21. கடவுள் ஒரு பெரிய கலைஞன்... நீங்களும்தான்...

  ReplyDelete
 22. அழகிய புகைப்படங்கள். அருமையான பகிர்வு.

  ReplyDelete
 23. superb post beautiful pictures

  www.astrologicalscience.blogspot.com

  ReplyDelete
 24. படங்கள் அனைத்தும் மிக அழகு
  சூப்ப்ராக இருக்கு

  ReplyDelete
 25. தலைப்பு மிகவும் அருமை....
  படங்கள் ஆஹா பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

  ReplyDelete
 26. சசிகுமார் said...
  /நன்றி..../

  மகிழ்ச்சியும் நன்றியும்.

  ReplyDelete
 27. கணேஷ் said...
  /பதிவிற்குள்ளேயே நீண்ட நேரம் தங்கி விட்டேன். ஒவ்வொரு படமும் கண்ணைப் பறிக்க தாண்டிச் செல்ல மனம் வந்தால் தானே...! மிக்க நன்றி. அடுத்த பாகத்திற்கு ஆவலோடு வெயிட்டிங்.../

  விரைவில் பதிவிட முயன்றிடுகிறேன். மிக்க நன்றி.

  ReplyDelete
 28. ஸாதிகா said...
  /வாவ்..அருகில் இருந்து பார்த்தாற்போன்ற உயிரோட்டம் ஒவ்வொரு படங்களிலும் சூப்பர்./

  நன்றி ஸாதிகா.

  ReplyDelete
 29. அமைதிச்சாரல் said...
  /ஒவ்வொரு படமும் 'வாவ்' சொல்ல வைக்குது.. அசத்தல்.

  அதுவும் அந்த மயில் ச்சான்சே இல்லை. ஜூப்பர் :-)/

  நன்றி சாந்தி.

  ReplyDelete
 30. ஹேமா said...
  /ஆபிரிக்காக்கு போனால் நம்ம நாட்டில இருக்கிறமாதிரியே இருக்கிறமாதிரியே இருக்குமாமே.அப்பிடியா அக்கா ?படங்கள் எப்பவும்போல உங்கள் கைவண்ணம் அழகுதான் !/

  ஆப்பிரிக்க மழைக்காடுகள் போன்றே சிங்கப்பூரில் இருந்த பகுதி இது. இத்தனை உயரமான அடர்ந்த மரங்களை நம் நாட்டில் பார்த்ததில்லை. நன்றி ஹேமா.

  ReplyDelete
 31. தமிழ் உதயம் said...
  /விதவிதமான பறவைகள்... அழகிய புகைப்படங்கள்... மனதை கொள்ளை கொண்டன. அருமையான பகிர்வு./

  நன்றி ரமேஷ்.

  ReplyDelete
 32. கோவை2தில்லி said...
  /எல்லா படங்களுமே அசத்தலாக உள்ளது. உங்களுடனேயே பயணித்தது போல் இருந்தது. அடுத்த பகுதிக்கான ஆவலுடன் காத்திருக்கிறோம்./

  மிக்க நன்றி ஆதி. விரைவில் பகிர்கிறேன்.

  ReplyDelete
 33. -தோழன் மபா, தமிழன் வீதி said...
  /படங்களும் பதிவுகளும் அருமை!/

  மிக்க நன்றி.

  ReplyDelete
 34. விச்சு said...
  /நேரில் பார்த்தது போன்ற உணர்வு!/

  மிக்க நன்றி.

  ReplyDelete
 35. Lakshmi said...
  /நானும் ஆப்பிரிக்கா சிங்கப்பூர்போயிருக்கேன் உங்க படங்கள் பார்க்கும்போதுதான் நிறைய இடங்கள் பார்க்காம வந்துட்டேன்னு புரியுது/

  நானும் இந்தப்பூங்காவில் பல இடங்களை நேரமின்றி விடவே நேர்ந்தது. நன்றி லக்ஷ்மிம்மா.

  ReplyDelete
 36. goma said...
  //அட்டென்ஷன் பறவை அசத்தல்.....//

  மிக்க நன்றி:)!

  ReplyDelete
 37. ரிஷபன் said...
  //முழுப் பூங்காவையும் முழுமையாக ரசிக்க முழுநாள் போதாது.

  பேசும் படங்கள்!//

  மிக்க நன்றி. ஆம் போதவில்லை:)!

  ReplyDelete
 38. அமைதி அப்பா said...
  /எனது நண்பர்களும் இந்த ஜுராங் பூங்கா சென்று படமெடுத்து வந்தார்கள். ஆனால், இங்கே இருக்கிற பிரமிப்பு அப்பொழுது எனக்கு ஏற்படவில்லை.

  எனது மனமார்ந்த பாராட்டுக்கள்./

  மிக்க நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 39. சுசி said...
  /அத்தனையும் அவ்வ்வவ்ளோ அழகா இருக்கு அக்கா.. பகிர்வுக்கு நன்றி :))/

  மிக்க நன்றி சுசி.

  ReplyDelete
 40. கோமதி அரசு said...
  //ஆஹா! அழகு, பறைவைகள்.

  பறவைகள் பல விதம் எல்லாம் மனதில் பதிந்தன ராமலட்சுமியின் கை வண்ணத்தால்.//

  நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 41. Kousalya said...
  //ஒவ்வொன்னும் செம அட்டகாசமா இருக்கு .

  எல்லாத்தையும் அப்படியே சுட்டுடலாமானு யோசிச்சிட்டு இருக்கிறேன். :))

  மிக மிக ரசித்தேன்.//

  மிக்க நன்றி கெளசல்யா.

  ReplyDelete
 42. ஸ்ரீராம். said...
  /அழகிய துல்லியமான படங்கள். பல படங்கள் மிக அழகு. ஆனால் ஓரிரு படங்களில் உள்ள ஒரு பறவை மண்டையின் பின்னால் ஒட்டடை படிந்தாற்போல் அலங்காரம் உள்ள பறவை, படம் அழகுதான். பறவை அழகாய்த் தோன்றவில்லை! (எனக்கு):))/

  ஒட்டடை நல்ல உவமை:)! முறைத்துப் பார்ப்பதால் இருக்கலாம்:)! நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 43. MangaiMano said...
  /Superb composition!!!!/

  நன்றி மங்கை.

  ReplyDelete
 44. goma said...
  /ஆரஞ்சு அழகி ஃப்ளெமிங்கோ ஒரு கால்லேதான் மெட்டி போட்டிருக்கு...!!!/

  அது ரேடியோ காலர். பூங்காவுக்குள் பறவைகளின் அசைவைக் கவனிக்க எல்லாப் பறவைகளுக்குமே அணிவித்திருக்கிறார்கள். ராணி மகராணி காலிலும் உள்ளது பாருங்கள்:)! ஒரு கிளியின் காலில் இன்னும் தெளிவாகத் தெரிவதால் அடுத்த பதிவில் இது குறித்து சொல்ல இருந்தேன். நன்றி கோமாம்மா.

  ReplyDelete
 45. asiya omar said...
  /ஆஹா..ஓஹோன்னு இருக்கு பகிர்வு..
  தொடர்ந்து இனிமே ஆன்னு வாயை பிளக்க வைத்து விடுவீங்க./

  நன்றி ஆசியா. இன்னும் 3 பாகம்தான்:)!

  ReplyDelete
 46. கிரி said...
  //படங்கள் செமையா இருக்கு..

  இங்க இருக்கிற பறவைகள் விலங்குகள் எல்லாம் ரொம்ப புண்ணியம் செய்தவை என்று நினைக்கிறேன் :-)) காரணம் அவைகள் சுதந்திரமாக காட்டில் எப்படி இருக்குமோ அதே போல (அந்த அளவிற்கு இல்லை என்றாலும் கிட்டத்தட்ட) இங்கேயும் இருக்கும்..

  இயற்கையை அழிக்காமல் அருமையான சூழ்நிலையை ஏற்படுத்தி வைத்து இருப்பார்கள். அவைகளுக்கான பராமரிப்பும் அருமையாக இருக்கும். நீங்கள் இங்கே சென்றால் நிஜ காட்டிற்குள் சென்றது போலவே இருக்கும்.//

  ஆம் கிரி. நைட் சஃபாரி மழைக்காடும் அவ்வாறே இருந்தது. இந்தப் பராமரிப்பைப் பாராட்டியே தொடரை முடிக்க உள்ளேன். நல்ல அனுபவம். நன்றி:)!

  ReplyDelete
 47. susila Govindaraj said...
  //WoW! Waiting for ur next post..//

  மகிழ்ச்சியும் நன்றியும்.

  ReplyDelete
 48. Latha Vijayakumar said...
  /Very nice and fantastic. It is really amazing. Thanks for sharing/

  மிக்க நன்றி.

  ReplyDelete
 49. குமரி எஸ். நீலகண்டன் said...
  /கடவுள் ஒரு பெரிய கலைஞன்... நீங்களும்தான்.../

  நன்றி நீலகண்டன்:)!

  ReplyDelete
 50. Kanchana Radhakrishnan said...
  /அழகிய புகைப்படங்கள். அருமையான பகிர்வு./

  மிக்க நன்றி.

  ReplyDelete
 51. arul said...
  /superb post beautiful pictures/

  மிக்க நன்றி.

  ReplyDelete
 52. அப்பாதுரை said...
  /breathtaking photographs!/

  மிக்க நன்றி.

  ReplyDelete
 53. Jaleela Kamal said...
  /படங்கள் அனைத்தும் மிக அழகு
  சூப்ப்ராக இருக்கு/

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜலீலா.

  ReplyDelete
 54. Diamond said...
  /தலைப்பு மிகவும் அருமை....
  படங்கள் ஆஹா பார்த்துக்கொண்டே இருக்கலாம்./

  மிக்க நன்றி.

  ReplyDelete
 55. திரட்டிகளில் வாக்களித்த நட்புகளுக்கும் என் நன்றி.

  ReplyDelete
 56. காட்டில் பறவைஅழகிகளின் அணிவகுப்பு எம்மை மயக்கமுறச் செய்கின்றது.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin