Wednesday, November 23, 2011

டால்ஃபின் காட்சி - சிங்கப்பூர் (பாகம் 5)

சென்டோசா தீவின் டால்ஃபின் காட்சியும் பெரிய அளவில் சிலாகிக்கப்படும் ஒன்று. அதற்கென ஆழமற்ற பெரிய குளத்துடனான அரங்கு. அதி புத்திசாலிகளாகக் கொண்டாடப்படும் இண்டோ-பசிபிக் பிங்க் டால்ஃபின்கள் இரண்டு உள்ளன. குச்சியை நீட்டியதும் இரண்டு முறை உயரமாய் துள்ளிக் குதித்தது ஒன்று. ஒரேயொரு முறை பெரிய உடம்பைத் தூக்க முடியாமல் தூக்கி மல்லாக்கக் நீருக்குள் விழுந்தது மற்றொன்று. பிறகு சமர்த்தாகப் பயிற்சியாளர்களிடம் மீன் வாங்கிச் சாப்பிட்டு விட்டு உல்லாசமாக நீந்தியபடி இருந்தன.

# 1. சின்ன மீனைப்போட்டு பெரிய மீன்..?

# 2.


# 3.


# 4.

# 5.

பெரிய எதிர்பார்ப்புடன் வந்த பார்வையாளர்கள் முகத்தில் அதிருப்தி அப்பட்டமாக எழுதி ஒட்டியிருந்தது. அதை ஊகித்தவர்களாக ‘இரண்டுமே இப்போதுதான் பயிற்சி பெற்று வருகின்றன’ எனத் திரும்பத் திரும்ப அறிவித்தபடி இருந்தார்கள்.

# 6. அவள் வருவாளா..?

விலங்குகளைக் காட்சிக்குப் பயன்படுத்துவதே தவறெனும் புரிதல் ஏற்பட்டுவிட்ட காலமிது. மிருக வதைச் சட்டத்தின் கீழ் அதற்குத் தடை இருப்பது போன்றவற்றையெல்லாமும் தாண்டி முணுமுணுப்புகள் என்னவோ இருக்கவே செய்தன.

அவர்களை ஆறுதல் படுத்தவே வந்தது போலிருந்தது இந்தக் கடல் சிங்கம். அதன் உற்சாக விளையாட்டுக்கள் ‘சபாஷ்’ போட வைத்ததுடன் பலத்த கைதட்டல்களையும் வாங்கிக் கொண்டது.
# 7.

# 8.

# 9.

# 10.

# 11.
# 12. ஸ்டைல்..


# 13. செண்டோசா ரிசார்ட் வொர்ல்ட்
முழுத் தோற்றம் விவோ சிடி மேல் தளத்திலிருந்து..

இந்தக் காட்சி முடிந்ததும் அறிவிப்பாகியிருந்த லேசர் ஷோ கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்றில்லையென ஏற்கனவே என் தோழியொருவர் சொல்லி அனுப்பியிருந்தார். அதற்கேற்ப ஐந்தரை மணிக்கு வெளியே வந்த நாங்கள் அக்காட்சிக்காக மேலும் இரண்டரை மணிநேரம் காத்திருக்க வேண்டுமென அறிய வந்த போது பார்க்கும் எண்ணத்தைக் கைவிட்டோம்.

(தொடரும்)தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

18 comments:

 1. சிங்கிளா வந்த கடல்சிங்கம் காட்டுற இஸ்டைல் ஜூப்பரு :-))

  ReplyDelete
 2. மிகவும் அழகான படங்கள்.
  சிங்கப்பூர் சென்று டால்ஃபின்களைக்
  கண்டு களித்த மகிழ்ச்சி ஏற்பட்டது.

  தமிழ்மணம்: 2
  vgk

  ReplyDelete
 3. //அவர்களை ஆறுதல் படுத்தவே வந்தது போலிருந்தது இந்தக் கடல் சிங்கம். அதன் உற்சாக விளையாட்டுக்கள் ‘சபாஷ்’ போட வைத்ததுடன் பலத்த கைதட்டல்களையும் வாங்கிக் கொண்டது.//
  பகிர்வு அருமை.

  ReplyDelete
 4. நட்சத்திரம் ஜொலிக்குது அக்கா !

  ReplyDelete
 5. டால்ஃபினைப் பற்றி கேள்விப் பட்டிருக்கும் விவரங்கள், கதைகள் அதன் மேல் பெரிய மதிப்பை ஏற்படுத்தியுள்ளன . உங்கள் படங்கள் அவற்றை அழகாகக் காட்டுகின்றன. பதினொன்றாவது படத்தில் குச்சி ஐஸ் போன்ற ஒன்றை கேட்ச் செய்யும் நொடியில் க.சி! அருமையான படப் பகிர்வு.

  ReplyDelete
 6. கண்ணை கவரும் டால்பின் படங்கள்...

  ReplyDelete
 7. யப்பா... (வழக்கம்போல்) பிரமிக்க வைத்தன உங்கள் மூன்றாவது கண்ணின் பதிவுகள். அருமை...

  ReplyDelete
 8. அமைதிச்சாரல் said...

  //சிங்கிளா வந்த கடல்சிங்கம் காட்டுற இஸ்டைல் ஜூப்பரு :-))//

  நன்றி சாந்தி.

  ReplyDelete
 9. வை.கோபாலகிருஷ்ணன் said...

  //மிகவும் அழகான படங்கள்.
  சிங்கப்பூர் சென்று டால்ஃபின்களைக்
  கண்டு களித்த மகிழ்ச்சி ஏற்பட்டது.//

  மிக்க நன்றிங்க vgk.

  ReplyDelete
 10. asiya omar said...
  //பகிர்வு அருமை.//

  நன்றி ஆசியா.

  ReplyDelete
 11. ஹேமா said...

  //நட்சத்திரம் ஜொலிக்குது அக்கா !//

  நன்றி ஹேமா.

  ReplyDelete
 12. ஸ்ரீராம். said...

  //டால்ஃபினைப் பற்றி கேள்விப் பட்டிருக்கும் விவரங்கள், கதைகள் அதன் மேல் பெரிய மதிப்பை ஏற்படுத்தியுள்ளன . உங்கள் படங்கள் அவற்றை அழகாகக் காட்டுகின்றன. பதினொன்றாவது படத்தில் குச்சி ஐஸ் போன்ற ஒன்றை கேட்ச் செய்யும் நொடியில் க.சி! அருமையான படப் பகிர்வு.//

  குச்சி ஐஸ் அல்ல, மீன்:)! மிக்க நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 13. தமிழ் உதயம் said...

  //கண்ணை கவரும் டால்பின் படங்கள்...//

  நன்றி ரமேஷ்.

  ReplyDelete
 14. கணேஷ் said...

  //யப்பா... (வழக்கம்போல்) பிரமிக்க வைத்தன உங்கள் மூன்றாவது கண்ணின் பதிவுகள். அருமை...//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 15. கடல்சிங்கத்தின் வீர தீர விளையாட்டுக்கள் சூப்பர்.

  ReplyDelete
 16. @ மாதேவி,

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 17. டால்ஃபின் அழகாக உங்கள் வலையில் பிடித்துப் போட்டிருக்கிறீர்கள் ...எங்கேயோ போய்ட்டீ..ங்...ங்...க

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin